Monday, February 02, 2015
புலிகளுடன் தொடர்புடைய சில தமிழ் புலம்பெயர் அமைப்புக்களுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்பட மாட்டாது என புதிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
புலிகள் இயக்கத்தை மீள ஒருங்கிணையச் செய்ய முயற்சிப்பதாக குற்றம் சுமத்தி மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் சில புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு தடை விதித்திருந்தது.
புலிகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட்ட இயக்கங்களின் தடையை நீக்க எவ்வித திட்டங்களும் கிடையாது என பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
க்ளோபல் தமிழ் போராம், பிரித்தானிய தமிழர் பேரவை, நாடு கடந்த தமிழீழ இராச்சியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்கள் இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளன.
அமைப்புக்களின் தடைகளை நீக்க எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment