Tuesday, January 27, 2015

இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்ற முதல் அமெரிக்க அதிபர் ஒபாமா: டெல்லியில் நடந்த கோலாகல குடியரசு தின விழா!

Tuesday, January 27, 2015
புதுடெல்லி::இந்திய ராணுவத்தின் பலத்தை பறைசாற்றும் வகையிலும், நமது பாரம்பரியம் கலாச் சாரத்தை விளக்கும் வகை யில் நடைபெற்ற சுந்திர  தின அணிவகுப்பை கண்டு வியந்தார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. நாட்டின் 66வது குடியரசு தினவிழாவுக்கு சிறப்பு விருந்தினராக அமெரிக்க  அதிபர் ஒபாமா அழைக்கப்பட்டிருந்தார். டெல்லியில் குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நேற்று காலை 9.20 மணிக்கு தொடங்கியது.
 
இந்தியா கேட்  அருகேயுள்ள அமர்ஜவான் நினைவிடத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், பிரதமர் மோடி ஆகியோர் மலர்வளையம் வைத்து  மரியாதை செலுத்தினர். விழா மேடைக்கு ராஜஸ்தான் டர்பன் அணிந்து பிரதமர் மோடி வந்தார். அமெரிக்க அதிபர் ஒபாமா, மிச்செல் ஆகியோர் பீஸ்ட்  காரில் விழா மேடைக்கு வந்தனர். அப்போது மழை பெய்ததால், ஒபாமாவுக்கு ரெயின் கோட் வழங்கப்பட்டது. திறந்தவெளி விழா மேடை யில்  அமர்ந்திருந்த வி.ஐ.பி.க் களுக்கு சிறிது நேரம் குடை பிடிக்கப்பட்டது.
 
வழக்கமாக குடியரசு தினவிழாவில் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர்கள், ஜனாதிபதி காரில் உடன் வருவர். அமெரிக்க அதிபர் பீஸ்ட் காரில் வர  வேண்டும் என முடிவு செய்யப்பட்டாதல் அவர் ஜனாதிபதிக்கு முன்பாகவே விழா மேடைக்கு வந்தார். குதிரை வீரர்கள் அணிவகுப்புடன்  விழாமேடைக்கு காலை 9.30 மணிக்கு வந்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். ராணுவ பேண்ட்  தேசிய கீதம் இசைக்கும்போது 21 பீரங்கி குண்டுகள் முழங்கின. அதன்பின்னர் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் மனைவிகளுக்கு அசோக சக்ரா  உள்ளிட்ட விருதுகளை பிரணாப் முகர்ஜி வழங்கினார். அதன்பின் ராணுவ அணிவகுப்புகள் தொடங்கின.

தலையாட்டி ரசித்தார் ஒபாமா: முப்படைகளைச் சேர்ந்த ராணுவ வீரர்கள், பேண்ட் இசைக் குழுவுடன் அணிவகுத்து வந்தனர். ராணுவ இசைக்குழுவின்  ‘லெப்ட், ரைட், லெப்ட்’ டிரம் பீட்களை தலையசைத்தபடி நீண்ட நேரம் ரசித்துக் கொண்டிருந்தார் ஒபாமா. சுவி¢ங்கம் மென்றபடி ராணுவ  அணிவகுப்புகளை ரசித்து பார்த்தார் ஒபாமா. முப்படையை சேர்ந்த பெண்களின் தனி அணி வகுப்புகளும் முதல் முறையாக இந்த குடியரசு  தினவிழாவில் இடம் பெற்றன. ராணுவ டேங்குகள், ஏவுகணைகளும் அணி வகுத்து வந்தன.
 
துணை ராணுவ படையினர், டெல்லி போலீசார், என்.சி.சி  மாணவர்களும் வீர நடைபோட்டு வந்தனர். ஒவ்வொரு மாநிலத்தின் கலாச்சார ஊர்திகளும் அணி வகுப்பில் தொடர்ந்து வந்தன. புதிய மாநிலமான  தெலங்கானா சார்பிலும் கலாச்சார ஊர்தி அணிவகுப்பில் கலந்து கொண்டது. அதில் வந்தவர்கள் கலாச்சார நடனமாடி பார்வையாளர்களை கவர்ந்தனர்.  பள்ளிச் சிறுவர், சிறுமியர்கள் நடனம் ஆடியபோது மிச்சேல் ஒபாமா கைதட்டி பாராட்டினார்.
 
பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா, ஜன் தன் யோஜனா, பெண் குழந்தைகளை காப்போம் போன்ற திட்டங்களுக்கும் அணிவகுப்பில்  முக்கியத்துவம் அளிக்கப்பட்டன. எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் பைக் சாகசங்கள் அதிபர் ஒபாமாவை வெகுவாக கவர்ந்தன. அவர்களை நோக்கி  பெருவிரலை தூக்கி காட்டி உற்சாகப்படுத்தினார் ஒபாமா. அணிவகுப்பின் இறுதியில் விமானப்படை விமானங்களின் சாகச நிகழ்ச்சிகள் நடந்தது.சுமார் இரண்டரை மணி நேரம் நடந்த அணிவகுப்பு நிகழ்ச்சிகளை அதிபர் ஒபாமா பார்வையிட்டார். வெளிநாட்டு நிகழ்ச்சியில், அதுவும் திறந்த  வெளியில் அமெரிக்க அதிபருக்கு நீண்ட நேரம் பாதுகாப்பு அளித்தது அவரின் சீக்ரெட் சர்வீஸ் படையினருக்கு புது அனுபவமாக இருந்தது.  அணிவகுப்பு நடந்த இடத்தை சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்து 7 அடுக்கு பாதுகாப்பில் 45 ஆயிரம் போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர்  ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
மோடி-ஒபாமா நெருக்கம் அதிகரிப்பு
 
குடியரசு தினவிழா அணிவகுப்பிலும் மோடி-ஒபாமா இடையேயான நெருக்கம் மேலும் அதிகரித்தது. விழா மேடைக்கு வந்த ஒபாமாவிடம், மிக நெருங்கிய நண்பர் போல் அவரது வலது கையை பிடித்தபடி கை குலுக்கினார் மோடி. மேடையில் இருவரும் அருகருகே அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். அணிவகுப்பு பற்றி ஒபாமாவுக்கு மோடி விளக்கி கொண்டிருந்தார்.

1 குடியரசு தின விழாவில் பங்கேற்கும் முதல் அமெரிக்க அதிபர் ஒபாமா. 2 முறை இந்தியாவுக்கு வந்த அமெரிக்க அதிபரும் இவரே.

2 பாதுகாப்பு காரணங்களுக்காக, வெளிநாட்டில் திறந்தவெளியில் 45 நிமிடங்களுக்கு மேல் எந்த நிகழ்ச்சியிலும் அமெரிக்க அதிபர்கள் பங்கேற்க  மாட்டார்கள். முதல் முறையாக நேற்றுதான் அதிபர் ஒபாமா இரண்டரை மணி நேர குடியரசு தின விழாவில் பங்கேற்றார்.

3  குடியரசு தின விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்பவர்கள் ஜனாதிபதியுடன் சேர்ந்து வருவது வழக்கம். முதல் முறையாக அதிபர்  ஒபாமா, அவரது மனைவி மிச்செல் இருவரும் அவர்களது பாதுகாப்பு வாகனமான பீஸ்ட்டில் தனியாக வந்தனர்.

4 பெண்களுக்கு அதிகாரமளித்தல்‘ என்பதே இந்தாண்டு குடியரசு தின அணிவகுப்பின் மையக்கருத்தாகும். எனவே, இந்திய ராணுவத்தில் பெண்களின்  சக்தியை வெளிப்படுத்தும் வகையில், முதல் முறையாக பெண்களின் முப்படை வீரர்களின் அணிவகுப்புக்கு 154 பெண் அதிகாரிகள் தலைமை ஏற்று  நடத்தி வந்தனர். 25 வயதாகும் கேப்டன் திவ்யா அஜித் குமார் தலைமையில் இந்த அணிவகுப்பு நடைபெற்றது.

5 புதிய மாநிலமாக உருவான தெலங்கானா முதல் முறையாக குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்றது.

6 வெளிநாட்டிலிருந்து இந்திய கடற்படைக்காக வாங்கப்பட்ட நீண்ட உளவுப்பணி மற்றும் நீர்மூழ்கி கப்பலை தாக்கும் விமானமான பி-
8ஐ, நீண்ட தூர  இலக்கை தாக்கக் கூடிய மிக்-29கே போர் விமானம் ஆகியவை முதல் முறையாக அணிவகுப்பில் இடம் பெற்றன.

1 comment: