Wednesday, October 31, 2012

ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் இந்துக் கோயில்கள் புனரமைப்பு!.

Wednesday, October 31, 2012
இலங்கை::ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்று 7 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டும்- ஜனாதிபதியின் 67 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டும் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இந்துக் கோயில்கள் தமிழ் மக்களின் பூஜை வழிபாட்டுக்காக புனரமைக்கப்படவுள்ளதாக நீர்பாசன அபிவிருத்தி மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று மொபிடல் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறுகையில்:

30 வருடகால பயங்கரவாத நடவடிக்கை காரணமாக சீரழிந்துபோயிருந்த நாட்டை ஒரே தேசமாக- ஒரே குடையின்; கீழ் ஒன்றுபடுத்தி வரலாற்றுச் சாதனை புரிந்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

அவர் ஜனாதிபதியாகப் பதவியேற்று 7 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டும் ஜனாதிபதியின் 67 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டும் நாடு முழுவதிலும் சகல சமய வழிபாடுகளை 'கிருவாபத்துவென் தல் அருணட்ட" என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள சகல மாவட்டங்களிலும் சர்வ சமய வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அத்துடன் தமிழ் மக்களின் சமய வழிபாட்டுக்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இந்துக் கோயில்;;;;;;;களை புனரமைக்கவும் நடவடிக்கை எடுதக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தெற்கில் மாத்தறையில் இருந்து வடக்கில் வவுனியா வரையில் 705 கிலோ மீற்றர் தூரம் கொண்ட சைக்கிள் சவாரியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் முன்னணி சைக்கிளோட்ட வீரர்கள் கலந்துகொள்வார்கள் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கார்த்திகை மாதம் மாவீரர் மாதமா? (புலிபினாமி)சீமானுக்கு ஓர் கடிதம்-ரொறொன்ரோ ஐயாத்துரை

Wednesday, October 31, 2012
ரொறொன்ரோ எனக்காக ஒரே ஒரு ரசிகன் அந்தப் பிரமாண்டமான றொஜேர்ஸ்மண்டபத்தில் காத்திருந்தாலும்                                                                   அவனுக்காக ஐந்து மணி நேரம் அவன் எழுந்து போகும்வரை ஐந்து மணி நேரம் இசை நிகச்சி நடத்துவேன்!
-இசைஞானி இளையராஜா


சீமான் அவர்களே கார்த்திகை மாதத்தை மாவீரர் மாதம் என்று யார் பிரகடனம் செய்தது? எமது இலங்கை மக்களுக்கு எது செய்ய வேண்டும் செய்யக்கூடாது என்று கட்டளையிட நீர் யார்? நீர் தமிழ் மக்களின்பிரதி நிதியா? புலிகளால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் உற்வினர்கள் மாவீரர்கள் ஏறுக் கொள்வார்களா? இளையராஜாவின் நிகழ்ச்சியைத் தவிர கனடாவிலும் சரி ஏனைய நாடுகளிலும் சரி தமிழ் மக்கள் கார்த்திகை மாதத்தில் விழாக்கள் நடாத்துவதில்லையா? இங்கு அரங்கேற்ற நிகழ்ச்சிகள், ஊரவர்களின் நிகழ்ச்சிகள் கார்த்திகை மாதம் முழுவதும் நடைபெறுகிறது.யூத இனத்தையும் தமிழர்களையும் ஒப்பிடுகிறீர்! யூத இனம் தனது இனத்தைக் கொலை செய்ததாக வரலாறு உண்டா? இலங்கை நாட்டில் தமிழர்களுக்கு விடுதலை வேண்டிப் புறப்பட்ட இயக்கங்கள் தங்கள் போராட்டத்தை ஆரம்பித்ததே சக தமிழர்களைக் கொன்றுதான் என்ற வரலாறு சீமான் அவர்களே உமக்குத் தெரியுமா? அரசாங்கத்தையும் ஏனைய இயக்கங்களையும் விட புலிகள் இயக்கம்தான் தமிழர்களை அதிகம் கொன்றார்கள் என்பது உமக்குத் தெரியாதா? புலிகளால் கொல்லப்பட்ட தமிழர்களின் பட்டியல் உமக்கு வேண்டுமென்றால் அனுப்பி வைக்கிறோம். ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்றவர்களுக்காக தமிழ் மக்கள் கார்த்திகை மாதம் முழுவதும் சாப்பிடாமல் இருக்க வேண்டுமா? புலிகளால் கடத்திச் செல்லப்பட்டு இன்றுவரை தங்கள் உறவுகள் இருக்கிறார்களா?இல்லையா? என்று தவித்துக் கொண்டிருக்கும் எத்தனை குடும்பங்களை எங்களால் காட்ட முடியும். தங்கள் உறவுகளுக்கு இறுதிக் கிரியைகள் கூட அவர்களால் செய்ய முடியாத உணர்வுகளை சீமான் அவர்களே உமக்குத் தெரியுமா? அந்தக் குடும்பங்கள் கார்த்திகை மாதத்தை புனித மாதமாக கொண்டாடுவார்களா? யூத இனத்தை கொலை வெறியுடன் அலையும் தமிழ் இனத்துடன் ஒப்பிட்டால் உம்மை விட முட்டாள் உலகத்தில் வேறு யாராக இருக்க முடியும்! புலிகள் இயக்கம் அழிந்தபின் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் அதையிட்டுக் கவலைப்படுவதாக அறிந்தீரா? உம்மால் முடிந்தால் ஒருமுறை இலங்கை சென்று தமிழ் மக்களைச் சந்தித்துவிட்டு வாரும். வன்னிக்குச் சென்றால் அங்கு யுத்தத்தின்போது தப்பிச் செல்ல முற்பட்டபோது புலிகளால் கொல்லப்பட்ட தமிழர்களின் உறவுகளைச் சந்தித்தால் அவர்களிடமிருந்து உண்மைகளை அறிந்து கொள்ளலாம். உம்மால் இலங்கை செல்ல முடியாது என்பது எங்களுக்குத் தெரியும். சீமான் அவர்களே நீர் கனடா வந்தபோது உமது கொலை வெறியை கண்ட கனடா அரசாங்கம் உம்மை நாடு கடத்தியது. அந்த வயித்தெரிச்சலில்தான் நீர் உந்தக் குரைப்புக் குரைக்கிறீர்.
புலிகளிடமிருந்து பிரிந்து சென்று கருணாவுடன் இணைந்ததால் நித்திரைப்பாயில் வத்தும் மட்டக்களப்பில் வெருகல் ஆற்றங்கரையில் வைத்தும் புலிகளால் கொல்லப்பட்ட பிள்ளைகளை நீங்கள் மாவீரர் வரிசையில் சேர்க்கிறீர்களா? அல்லது துரோகிகள் வரிசையில் சேர்க்கிறீர்களா? பல இளைஞர்கள், யுவதிகள் தமிழீழம் கிடைக்கும் என்று பிரபாகரனை நம்பி தங்கள் உயிர்களைத் தியாகம் செய்தார்கள் என்பதை நாங்கள் மறுக்கவேயில்லை. அதற்காக வன்னியில் ஏற்பட்ட பேரழிவிற்கு இலங்கை அரசாங்கத்தின் மேல் மட்டும் பழியைப் போட்டு தமிழர்களின் அடிப்படைச் சுதந்திரங்களை எதிர்ப்பது உமது முட்டாள்த்தனம் என்பதை அறியத் தருகிறோம்.

கார்த்திகை மாதம் மாவீரர் மாதமா? (புலிபினாமி) சீமானுக்கு ஓர் கடிதம்-ரொறொன்ரோ ஐயாத்துரை:


எனக்காக ஒரே ஒரு ரசிகன் அந்தப் பிரமாண்டமான றொஜேர்ஸ்மண்டபத்தில் காத்திருந்தாலும் அவனுக்காக ஐந்து மணி நேரம் அவன் எழுந்து போகும்வரை ஐந்து மணி நேரம் இசை நிகழ்ச்சி நடத்துவேன்!

-இசைஞானி இளையராஜா

தமிழ் மக்கள் இராணுவத்தினரை எதிரிகளாக பார்த்த காலம் மாறி சகோதரர்களாக கருதும் காலம் மாறிவிட்டது - யாழ். மாநகரசபையின் மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா!

Wednesday, October 31, 2012
இலங்கை::தமிழ் மக்கள் இராணுவத்தினரை எதிரிகளாக பார்த்த காலம் மாறி சகோதரர்களாக கருதும் காலம் மாறிவிட்டது என்று யாழ். மாநகரசபையின் மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா கூறியுள்ளார்.

இராணுவத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசில் வழங்கும் நிகழ்விலேயே இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழ் மக்கள் ஏதிரிகளாகப் பார்த்த இலங்கை இரானுவத்தினரை தற்போது காலம் மாறியுள்ளதால் சகோதரர்களாகவே தான் பார்ப்பதாகவும் அவ்வாறே தமிழ்மக்களும் கருத வேண்டும் என்றார்.

நாம் இலங்கைத்தீவில் தமிழர்களாகவும் இலங்கையர்களாகவும் வாழவேண்டும். கடந்த காலத்தில் புலிகளின் கருத்துக்களை மக்கள் செவி சாய்த்தபடியால் சிங்கள மக்களை நாம் எதிரிகளாக பார்க்கவேண்டிய கட்டாயம் எற்பட்டது. இதனால் தமிழ் மக்களின் எதரிகளாக இராணுவத்தினர் சித்தரிக்கப்பட்டிருந்தனர்.

தமிழ் மக்களும் சகோதரர்களாக ஏற்றுக்கொண்டு இணைந்து வாழப்பழகிக் கொள்ள வேண்டும். அதே நேரம் தமிழர்கள், சிங்களவர்கள் என்றதற்கப்பால் அனைவரும் இலங்கையராகவே வாழவும் வேண்டும் என்றார். அத்துடன் இலங்கையில் எந்த ஒரு நாட்டிலும் இல்லாத இலவசக்கல்வி முறை இருக்கின்றது இதனால் மாணவர்கள் இங்கு கல்வி கற்று எமது நாட்டுக்குச் சேவை செய்யவேண்டும் என்றும் கூறினார்.

யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ள பொது மக்கள் சிவில் தொடர்பு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு, யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க, வடமாகாண கல்வி அமைச்சின் பிரதிச் செயலாளர் விக்னேஸ்வரன், யாழ். அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், யாழ். மாநகர சபை மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோர் கொண்டு 26 மாணவர்களுக்கு பரிசில்கள் மற்றும் வைப்பு புத்தகங்கள் என்பன வழங்கினர்.

புயலா‌ல் செ‌ன்னை ‌விமான ‌நிலைய ஓடுபாதை மூட‌ல்- ‌‌‌வேறு மா‌நில‌த்து‌க்கு ‌விமான‌ம் ‌‌திரு‌ப்‌பி‌விட முடிவு!

Wednesday, October 31, 2012
சென்னை::சென்னை அருகே இன்று மாலை புயல் கரையை கடக்கிறது. அப்போது சூறாவளி காற்றுடன் மழை பெய்யும் என்பதால் சென்னை விமான நிலையத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

புயல் கரையை கடக்கும் போது சென்னை வரும் விமானங்களை வேறு நகரங்களுக்கு திருப்பிவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மெரீனா மற்றும் கடற்கரையோர பகுதிகளில் மக்கள் நடமாட போலீசார் தடை விதித்துள்ளனர்.
'நீல‌‌ம்' புய‌ல் தா‌க்க‌‌த் தொட‌ங்‌கினா‌‌ல் செ‌ன்னை ‌விமான ‌நிலைய‌த்த‌ி‌ல் உ‌ள்ள ஓடுபாதைக‌ள் உடனடியாக மூட‌ப்படு‌வதோடு, ச‌ர்வதேச ‌‌விமான‌ங்களை வேறு மா‌நில‌த்‌தி‌ற்கு ‌‌திரு‌ப்‌பி‌விட‌ப்படு‌கிறது.

த‌ற்போது செ‌ன்னை‌யி‌ல் ‌‌நீல‌ம் புய‌ல் கரையை கட‌க்கு‌ம்மு‌ன் கா‌ற்‌றி‌ன் வேக‌ம் கடுமையாக இரு‌‌ந்து வரு‌கிறது. இதனா‌ல் ‌விமான‌ங்களை தொட‌‌ங்‌கி இ‌ய‌க்க முடியாத ‌‌நிலை ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் செ‌ன்னை‌‌ விமான ‌நிலைய இய‌க்குன‌ர் சுர‌ே‌ஷ் தலைமை‌யி‌ல் இ‌ன்று அவசர கூ‌ட்ட‌‌‌ம் நடைபெ‌ற்றது. இ‌ந்த கூ‌ட்ட‌த்‌தி‌ல், செ‌ன்னை‌யி‌ல் புய‌ல் தா‌க்‌கினா‌ல் ‌விமான‌ங்களை வேறு மா‌நில‌த்து‌க்கு ‌திரு‌ப்‌பி‌விட முடிவு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

செ‌ன்னை வரு‌ம் உ‌ள்நா‌ட்டு ‌விமான‌ங்களை மதுரை, பெ‌ங்களூ‌ர், ஹைதராபா‌த் ‌திரு‌ப்‌பி‌விட கூ‌ட்ட‌த்த‌ி‌ல் முடிவு செ‌ய்ய‌ப்ப‌ட்டது.

இதேபோ‌ல் ச‌ர்வதேச ‌விமான‌ங்களை ‌திருவன‌ந்தபுர‌ம், ஹைதராபா‌த், கொழு‌ம்பு‌க்கு ‌திரு‌ப்‌பி ‌விட முடிவு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.
27-7-12_findyour_INNER_468x60.gif

துபாய் ஷாப்பிங் மாலில் ஜட்டி ஆசாமி கைது!

Wednesday, October 31, 2012
துபாய்::துபாயில் உள்ள ஷாப்பிங் மாலில் வெறும் ஜட்டி மட்டும் அணிந்து ஷாப்பிங் செய்ய வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். துபாயில் உள்ள ஷாப்பிங் மாலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பக்ரீத் விடுமுறையை முன்னிட்டு ஷாப்பிங் செய்வதற்காக ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது வெறும் ஜட்டி, ஷூ மட்டும் அணிந்து கொண்டு அங்கும் இங்கும் திரிந்து 20 வயது வாலிபர் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தார்.

பெண்கள் அவரை பார்த்து முகம் சுளித்தபடி சென்றனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் ஓடோடி சென்று வாலிபரை மடக்கினர். அவர் போதையில் இல்லை என்பது தெரிந்தது. ‘ஜாலிக்காக இப்படி வந்தேன்’ என்று கூறிய அவரை கைது செய்தனர். ‘பொது இடங்களில் இதுபோன்ற செய்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது. ஜாலிக்காக யாராவது இப்படி செய்தால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்’ என போலீசார் தெரிவித்தனர்.

அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு இன்று நாடு கடத்தப்படவிருந்த தமிழர் இறுதிநேரத்தில் வெற்றி!

Wednesday, October 31, 2012
மெல்போன்::அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு இன்று நாடு கடத்தப்படவிருந்த தமிழர் இறுதிநேரத்தில் நீதிமன்றத்தில் அவசர மனு மூலம் வெற்றிப்பெற்றுள்ளதாக அவுஸ்திரேலிய வானொலி தெரிவித்துள்ளது
42 வயதான இந்த இலங்கை தமிழர், அவுஸ்திரேலிய நேரப்படி இன்று பிற்பகல் 3 மணிக்கு நாடு கடத்தப்படவிருந்தார்
எனினும் சிட்னியின் பிராந்திய நீதிமன்றம் அவரின் நாடுகடத்தலுக்கு தடையுத்தரவை பிறப்பித்துள்ளது
இந்தநிலையில் குறித்த அகதி இன்று தாக்கல் செய்த அவசரமனு விசாரணை முடியும்வரை அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்கமுடியும் 
இந்த அகதி  கடந்த இரண்டு வருடக்காலமாக மேல்போன் தடுப்பு முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அண்மையில் சமூகத்துடன் சேர்க்கப்பட்டார்
எனினும் சில தினங்களில் அவரை அழைத்த அவுஸ்திரேலிய குடிவரவு அதிகாரிகள், நாட்டில் இருந்து அவர் வெளியேற்றப்படவுள்ளதாக அறிவித்தனர்
இந்தநிலையில் இன்று நாடு கடத்தப்படவிருந்த அவர் தற்கொலை முயற்சி ஒன்றில் ஈடுபட்டார்
இதனையடுத்து அவரை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுக்கும் மெல்போன் காவல்துறையினருக்கும் இடையில் மோதல் ஒன்றும் இடம்பெற்றது
இதற்கிடையிலேயே சிட்னி நீதிமன்றத்தில் அவரது நாடு கடத்தலுக்கு எதிராக தடையுத்தரவு விதிக்கப்பட்டது

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் உரையாற்றவுள்ளார் மஹிந்த சமரசிங்க!

Wednesday, October 31, 2012
ஜெனீவா::ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் மஹிந்த சமரசிங்க உள்ளிட்ட இலங்கை பிரதிநிதிகள் குழுவினர் சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகருக்குச் சென்றுள்ளனர்.

அமைச்சர் மஹிந்த சமரசிங்க நாளைய தினம் கூட்டத்தொடரில் உரையாற்றவுள்ளதாக வெளிவிவகார செயலாளர் கருணாரத்ன அமுணுகம தெரிவித்தார்.
இந்த கூட்டத்தொடரில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிவிவகார அமைச்சு, நீதி அமைச்சு, சட்டமா அதிபர்கள் திணைக்களம் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக இலங்கை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க நாளைய தினம் சர்வதேச சமூகத்தை தெளிவுபடுத்தவுள்ளார்.
கடந்த 4 வருடங்களில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக சர்வதேச நாடுகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும் இந்த கூட்டத்தொடரில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் கருத்துக்களுக்கு பதிலளிப்பதற்கு எதிர்வரும் 5ஆம் திகதி ஏனைய நாடுகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார செயலாளர் மேலும் தெரிவித்தார்.

அமெரிக்காவை துவம்சம் செய்த ‘சாண்டி’ புயல் : பலி எண்ணிக்கை 45 ஆக உயர்வு!

Wednesday, October 31, 2012
நியூயார்க்::அமெரிக்காவில் ‘சாண்டி’ புயல் தாக்குதலால் பலியானவர்கள் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. கரீபியன் கடலில் உருவான சாண்டி புயல், நேற்று அதிகாலை அமெரிக்காவின் கிழக்கு கடலோர பகுதியை தாக்கியது. பலத்த மழையுடன் சூறை காற்று சுழன்றடித்ததால் நியூயார்க், நியூஜெர்சி உள்ளிட்ட கிழக்கு மாநிலங்கள் கடும் பாதிப்பை சந்தித்தன. போக்குவரத்து, தொலைதொடர்பு வசதிகள் முடங்கின. புயலால் கடல் அலைகள் பொங்கி கடற்கரையோர நகரங்களை பதம் பார்த்தது. ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. கிழக்கு மாநிலங்களில் புயல் மழைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. நியூயார்க் நகரில் மட்டும் 18 பேர் இறந்துள்ளனர். பல பகுதிகளில் மரங்கள் வேரோடு பிய்த்து கொண்டு சரிந்தன.

இவை மின்சார லைன்கள் மீது விழுந்ததால் மின்சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. 80 லட்சம் வீடுகள், வியாபார நிறுவனங்கள் இருளில் மூழ்கியுள்ளன. மின்சேவையை சரிசெய்யும் பணியில் ஏராளமான ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சாண்டி புயலால் பாதிப்புக்கு ஆளான கிழக்கு கடற்கரை நகரங்களான வாஷிங்டன், பிலடெல்பியா, பாஸ்டன் நகரங்களில் இன்றைக்குள் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என தெரிகிறது. நியூயார்க் நகரம் மற்றும் நியூஜெர்சி மாநிலத்தில் பல பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதால் அங்கு இயல்பு நிலை திரும்ப பல நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது. அமெரிக்காவில் வரும் 6-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேர்தலுக்குள் வாக்கு சாவடிகளை அமைக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒட்டுமொத்த நாட்டையும் புயல், சோகத்தில் ஆழ்த்திவிட்டதாக கூறியுள்ள அதிபர் ஒபாமா, இன்று புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட உள்ளார்.

சூறாவளி காற்றுடன் பலத்த மழை 45 கிராமங்கள் இருளில் மூழ்கின!

Wednesday, October 31, 2012
ஏற்காடு::ஏற்காட்டில் இரவு 1 மணி முதல் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. இரவு முழுவதும் மின்சாரம் தடை செய்யப்பட்டதால், 45 கிராமங்கள் இருளில் மூழ்கின. வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘நிலம்’ புயல் இன்று மாலை கல்பாக்கம் அருகே கரையை கடக்கிறது. அப்போது 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கமாக, சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நேற்று மதியம் முதல் மழை பெய்து வந்தது.

இன்று அதிகாலை 2 மணி முதல் சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டி வருகிறது. அதே நேரத்தில், ஏற்காடு பகுதியில் மின்சாரம் தடை செய்யப்பட்டதால், 45 கிராமங்கள் இருளில் மூழ்கின. மழை காரணமாக, கடுமையான குளிரும் நிலவி வருகிறது. இதனால் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வராதபடி முடங்கி கிடக்கின்றனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்துள்ளது. டவுன் பகுதி ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஏற்காடு முழுவதும் இருட்டாக காணப்படுவதால் வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றன. தொடர்ந்து மழை பெய்து வருவதால் காபி எஸ்டேட்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.

இலங்கை அரசாங்கத்தின் கடன் 2012 ஆம் ஆண்டு ஜுலை மாத முடிவில்; 6161 பில்லியன் ரூபாவாக காணப்பட்டது. ஒரு வருடத்துக்கு முன்னர் இது 4975.2 பில்லியன் ரூபாவாக இருந்தது!

Wednesday, October 31, 2012
இலங்கை::இலங்கை அரசாங்கத்தின்  கடன் 2012 ஆம் ஆண்டு ஜுலை மாத முடிவில்; 6161 பில்லியன் ரூபாவாக காணப்பட்டது. ஒரு வருடத்துக்கு முன்னர் இது 4975.2 பில்லியன் ரூபாவாக இருந்தது என்று மத்திய வங்கியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை அரசாங்கம் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை அரசாங்க உத்தரவாதம் கொண்ட பிணைகளை விற்றதன் மூலும் பெற்றுக்கொண்டதே இந்த படுகடன் அதிகரிப்புக்கு காரணமாகும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதில் 500 மில்லியன் டொலர் முதிர்ச்சி அடைந்த பிணைகளை விற்றதன் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டது. இவ்வாறான கடனானது படுகடனை செலுத்துவதற்கு ஒப்பானதாகும்.

இலங்கையில் தற்போதைய கடனில் உள்நாட்டு படுகடன் 3185.7 பில்லியன் ரூபாவாகவும் வெளிநாட்டு படுகடன் 2975.3 பில்லியன் ரூபாவும் ஆகும்.

இலங்கை சீன எக்ஸிம் வங்கியிலிருந்தும் சீன அபிவிருத்தி வங்கியிலிருந்தும் பெருமளவு கடனை பெற்றுள்ளது.

கூடுதல் கடனை பெறுவது சென்மதி நிலுவையிலும், பொருளாதாரத்திலும் பாதகங்களை தோற்றுவிக்கும் என பொருளியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

அக்கரைப்பற்று, கண்ணகிபுரம் பகுதியில் மோட்டார்குண்டு ஒன்று வெடித்ததில் 14 வயது சிறுவன் காயம்!

Wednesday, October 31, 2012
இலங்கை::அக்கரைப்பற்று, கண்ணகிபுரம் பகுதியில் மோட்டார்குண்டு ஒன்று வெடித்ததில் 14 வயது சிறுவன் ஒருவன் படுகாமயடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில், ரவிக்குமார் கௌரிகரன் என்ற பாடசாலை மாணவனே காயடைந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
மேற்படி சிறுவன், கண்ணகிபுரம் பகுதியில் மூடப்பட்ட விசேட அதிரடிப்படை முகாம் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவ்விடத்தில் போத்தல் ஒன்று கிடப்பதை கண்ட அச்சிறுவன் அதனை எடுத்து எறிவதற்கு முயற்சித்துள்ளார். அதன்போதே இந்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. 
போத்தலில் அடைக்கப்பட்ட நிலையிலிருந்த டொம்பா 4 ரக மோட்டார் குண்டே இதன்போது வெடித்துள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அக்கரைப்பற்று காவற்துறையினர் மேலும் தெரிவித்தனர். 

'சண்டி'சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவிலுள்ள இலங்கையர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்க சவேந்திர சில்வாவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்!

Wednesday, October 31, 2012
இலங்கை::அமெரிக்காவைத் தாக்கியுள்ள சாண்டி புயலால் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குமாறு நியூயோர்க்கில் உள்ள இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வாவிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளார்.

அமெ‌ரி‌க்காவை அச்சுறுத்தி வரும் சாண்டி புயல் அ‌ங்கு‌ள்ள கிழக்கு கடலோரப் பகுதியை நாச‌ப்படு‌த்‌தியு‌ள்ளது. இ‌ந்த புயலா‌ல் 15 கோடி பே‌ர் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான சாண்டி புயல் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் 130 கிலோமீட்டர் வேகத்தில் கரையைக் கடந்தது. அப்போது, பலத்த காற்று வீசியதுடன் கனமழையும் பெய்தது. சுமார் 14 அடி உயரத்திற்கு அலை எழும்பியதால் கடல் நீர், நகரங்களுக்குள் புகுந்தது.

சாண்டி புயலால் நியூயார்க், நியூ ஜெர்சி, பென்சில்வேனியா, மேரிலாண்ட் உள்பட 12 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தலைநகர் வாஷிங்டன், பால்ட்டிமோர், பிலடெல்பியா உள்ளிட்ட நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. புயல் கரையைத் தொட்ட அட்லாண்டிக் சிட்டியில் நிலைமை மிக மோசம்.

சாண்டி புயல் அமெரிக்காவில் இதுவரை 39 பேரை பலி கொண்டுள்ளது. சுமார் 5 கோடி பேரின் அன்றாட வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளது. 80 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. அமெரிக்காவின் வடகிழக்கு கடலோர நகரங்களில் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

உலகில் அதிகம் பேர் பயன்படுத்தும் நியூயார்க்கில் உள்ள கென்னடி சர்வதேச விமான நிலையமும் மூடப்பட்டுள்ளது. இதனால், ஏர் இந்தியா உள்பட சுமார் 15 ஆயிரம் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 125 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது, நியூயார்க் பங்குச்சந்தை தொடர்ந்து இரண்டாவது நாளாக செயல்படவில்லை

இதுவரை சுமார் இரண்டரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சேதத்தையும், பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தியுள்ள சாண்டி புயல், அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் மேலும் பாதிப்பை உருவாக்க வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க சூறாவளி கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் மக்களுக்கு சீரான எரிபொருள் விநியோக சேவையை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

» 2ம்இணைப்பு-முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைச் சம்பவத்துடன் முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தொடர்பா?

Wednesday, October 31, 2012
புதுடில்லி::முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி புலிகளின் படுகொலைச் சம்பவத்துடன்  முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தொடர்பு உண்டா என முன்னாள் சீ.பி.ஐ அதிகாரியொருவர் கேள்வி எழுப்பியுள்ளார். ராஜீவ் காந்தி படுகொலைச் சம்பவம் n;தாடர்பில் கே. ராகுதாமன் என்ற சீ.பி.ஐ. அதிகாரி புத்தகமொன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புத்தகத்தில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் திகதி கருணாநிதியும், ஸ்ரீபெரம்பத்தூரில் கூட்டமொன்றை ஒழுங்கு செய்திருந்ததகாக் குறிப்பிட்டுள்ளார். எனினும், இறுதி நேரத்தில் இந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக அவர் இந்தப் புத்தகத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருணாநிதி ஏன் இந்தக் கூட்டத்தை ரத்து செய்தார் என்பது பற்றி இதுவரையில் விசாரணைகள் நடத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீபெரம்பத்தூர் கூட்டத்திற்கு செல்ல வேண்டாம் என கருணாநிதி ஆலேசானை வழங்கியிருந்ததாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கார்த்திகேயன் என்ற அதிகாரி இது தொடர்பான விசாரணைகளை நடத்த வேண்டாம் என தம்மிடம் கோரியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பிரச்சார நோக்கில் முன்னாள் சி.பி.ஐ. அதிகாரி ரகுதாமன் இவ்வாறான போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக உயர் அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை ராஜீவ் காந்தியின் கொலை தொடர்பான முக்கியமான சாட்சியமாக இருந்த வீடியோ நாடாவை, புலனாய்வு பிரிவின் தலைவராக இருந்த எம்.கே. நாரயணன் காணாமல் போக செய்துள்ளதாகவும் புதிய நூலில்; தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தியை கொலை செய்த புலிகளின் தாணு உள்ளிட்ட குழுவினர் இரண்டரை மணிநேரம் ஸ்ரீபெரம்புத்தூரில் கூட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்துள்ளமை அந்த வீடியோ நாடாவில் பதிவாகியுள்ளது.

இந்திய புலனாய்வு பிரிவினர், வீடியோ பிரதியின் மூலப் பிரதியை பெற்று கொண்டு வேறு ஒரு பிரதியை காவற்துறையினருக்கு வழங்கியிருப்பதாக நூலை எழுதியுள்ள கே.ர. கௌதமன் தகவல் வெளியிட்டுள்ளார். வீடியோ பிரதி காணாமல் போனமைக்கு பொறுக் கூற வேண்டிய நாராயணன் தற்போது மேற்கு வங்கத்தின் ஆளுநராக பணியாற்றி வருகிறார்.

திவிநெகும சட்ட மூலம் தொடர்பிலான உயர் நீதிமன்றத்தின் சட்ட விளக்கம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிற்கும் அனுப்பிவைப்பு!

Wednesday, October 31, 2012
இலங்கை::திவிநெகும சட்ட மூலம் தொடர்பிலான உயர் நீதிமன்றத்தின் சட்ட விளக்கம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் திவிநெகும சட்ட மூலத்திற்கு மாகாண சபைகளின் அனுமதியினைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

பாராளுமன்றத்தினால் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றிக் கொள்ளப்பட்ட திவிநெகும சட்ட மூலத்திற்கு எதிராகவும் ஆதரவாகவும் 14 மனுக்கள் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டன. இம் மனுக்களை பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக தலைமையிலான மூவரடங்கிய விசேட நீதியமைச்சர் குழு விசாரணைகளை முன்னெடுத்தது.

இதன் போது மாகாண சபைகளில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் திவிநெகும சட்ட மூலம் தொடர்பாக முன் வைத்த நிலைப்பாடுகள் ஆராயப்பட்டன. வடமாகாணத்தை தவிர ஏனைய மாகாணங்களில் நிறைவேற்றிக் கொள்ளப்பட்ட மேற்படி சட்ட மூலத்திற்கு வடமாகாணத்தின் முக்கியத்துவம் குறித்து முன் வைக்கப்பட்ட வாத, பிரதிவாதங்கள் தொடர்பில் உன்னிப்பாக உயர் நீதிமன்ற குழுவினரால் அவதானிக்கப்பட்டது.

அவுஸ்திரேலியாவில் இருந்து இன்று நாடுகடத்தப்படவுள்ள நிலையில் இலங்கை தமிழர் ஒருவர் தற்கொலை முயற்சி!:-கடந்த மூன்று மாத காலப்பகுதியினில் கைது செய்யப்பட்ட அகதிகள் மற்றும் வர்த்தகர்களில் 12 முன்னாள் புலி போராளிகள் - அவுஸ்திரேலியா!

Wednesday, October 31, 2012
மெல்போன்::அவுஸ்திரேலியாவில் இருந்து இன்று நாடுகடத்தப்படவுள்ள நிலையில் இலங்கை தமிழர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவரை நாடு கடத்தக்கூடாது என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இறுதிநேர சட்ட நடவடிக்கைகளும் தோல்வியடைந்த நிலையிலேயே இந்த தற்கொலை முயற்சியில் அவர் ஈடுப்பட்டுள்ளார்.

42 வயதான குறித்த இலங்கை தமிழர் அவுஸ்திரேலியாவில் இருந்து இன்று பிற்பகல் 3 மணிக்கு நாடுகடத்தப்படவுள்ளார்.

இந்தநிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் அவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

தற்கொலை முயற்சியை அடுத்து ரோயல் மெல்போன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவர், சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் மாரிபிநோங் தடுப்பு சிறைக்கு கொண்டுச் செல்லப்பட்டவுள்ளதாக அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தை அடுத்து, அங்கு கூடிய 50க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், குறித்த இலங்கை அகதியை நாடு கடத்தப்படக்கூடாது என்று கோரிக்கை விடுத்தனர்.

எனினும் இந்த கோரிக்கையை அவுஸ்திரேலிய அதிகாரிகள் கருத்திற்கொள்ளவில்லை என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன...

கடந்த மூன்று மாத காலப்பகுதியினில் கைது செய்யப்பட்ட அகதிகள் மற்றும் வர்த்தகர்களில் 12 முன்னாள் புலி போராளிகள் - அவுஸ்திரேலியா!

இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா நோக்கி வரும் சட்டவிரோத குடியேறிகளில் முன்னாள் புலி உறுப்பினர்களும் உள்ளடங்குவதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புலிகளுடன் பல்வேறுப்பட்ட உடன்படிக்கைகளை மேற்கொண்டிருந்தவர்களே இவ்வாறு வருகை தருவதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது

இந்தநிலையில், கடந்த மூன்று மாத காலப்பகுதியினில் கைது செய்யப்பட்ட அகதிகள் மற்றும் வர்த்தகர்களில் 12 முன்னாள் புலி போராளிகள் அடங்குவதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறானவர்கள் தொடர்பில் எதிர்காலத்தில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து ஒன்றினைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் புலிகளின் தடைநீக்கம் - இறுதி விசாரணை!

Wednesday, October 31, 2012
சென்னை::புலிகளுக்கு இந்தியாவில் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி நடத்தப்பட்டு வரும் மக்கள் தீர்ப்பாயத்தின் இறுதி விசாரணைகள் நவம்பர் 3 ஆம் திகதி புதுடில்லியில் இடம்பெறவுள்ளன.

இந்த விசாரணையின் போது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக செயலாளர் (புலி)வைகோ  வாதிடுவார் என்று அந்தக்கட்சியின் சட்டத்துறை செயலாளர் ஜி.தேவதாஸ் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வந்தன.

இறுதியாக மூன்றுநாள் தொடர் விசாரணை கடந்த திங்கட்கிழமை முடிவடைந்தது.

இந்த விசாரணைகளில் தமிழக காவல்துறையினர் உட்பட்ட பலர் சாட்சியமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சென்னை அருகே "நிலம்' இன்று கரையைக் கடக்கும்!

Wednesday, October 31, 2012
சென்னை::வங்கக் கடலில், சென்னையிலிருந்து 400 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள "நிலம்' புயல், சென்னை அருகே புதன்கிழமை பிற்பகலில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 25ஆம் தேதி அந்தமான் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவடைந்து திங்கள்கிழமை புயல் சின்னமாக உருவெடுத்தது. இந்நிலையில், அது மேலும் தீவிரமடைந்து செவ்வாய்க்கிழமை வடமேற்காக நகர்ந்து வருகிறது. இந்த புயலுக்கு "நிலம்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் புதன்கிழமை இரவு ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையே கரையைக் கடக்கும் என முதலில் தெரிவிக்கப்பட்டது.

தற்போது "நிலம்' புயல் சென்னைக்கு அருகே தென்பகுதியில் புதன்கிழமை பிற்பகலில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் மற்றும் புதுவையில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும், கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் சூறாவளிக்காற்று வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

புயல் எச்சரிக்கைக் கூண்டு: புயல் உருவானதைத் தொடர்ந்து துறைமுகங்களில் எச்சரிக்கைக் கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன. சென்னையில் 7ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாகப்பட்டினம், கடலூர் துறைமுகங்களில் 5ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. பாம்பன், தூத்துக்குடி, காரைக்கால் துறைமுகங்களிலும் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை: புயல் தீவிரமடைந்துள்ளதால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை காசிமேடு கடற்கரையில் 1500 படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதுபோல் கடலோர மாவட்டங்களில் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.

புயலை எதிர்கொள்ள அதிகாரிகளை மாநில அரசு முடுக்கிவிட்டுள்ளது. தாழ்வானப் பகுதியில் இருப்பவர்கள் பாதுகாப்பான பகுதிக்குச் செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

வருவாய்த் துறை, மின்துறை அதிகாரிகள், தீயணைப்புத் துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக உருவானதால் கடல் சீற்றம் அதிகரித்துள்ளது. சென்னை, பாம்பன், கடலூர், தூத்துக்குடி, கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் கடல் சீற்றம் அதிகரித்துள்ளது. சாதாரணமாக 2 அடி வரை எழும்பும் கடல் அலைகள், புயல் காரணமாக 6 அடி வரை எழுகின்றன.

கட்டுப்பாட்டு அறை: மழை பாதிப்பு மற்றும் அவசர உதவிகளுக்கு மாவட்டங்களில் 24 மணிநேர மழை கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு மழை, வெள்ளம் குறித்த தகவல்கள் மற்றும் புகார்களைப் பதிவு செய்யலாம். மழை நிவாரண உதவிகளுக்காக தொடங்கப்பட்டுள்ள இந்த கட்டுப்பாட்டு அறை மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுகிறது.

மின்உற்பத்தி பாதிப்பு: தொடர் மழையின் காரணமாக நெய்வேலி அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. சுரங்கங்களில் மழை நீர் தேங்கி நிற்பதால் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தேங்கிய மழை நீரை வெளியேற்ற துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நிலக்கரி வெட்டி எடுக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மின் உற்பத்தி 700 மெகாவாட் குறைந்துள்ளதாக அனல் மின்நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வானிலை முன்னறிவிப்பு: "நிலம்' புயல் கரையைக் கடப்பதால் மாநிலம் முழுவதும் புதன்கிழமை மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது. கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். மாநிலத்தின் வடக்கு கடலோரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மிக பலத்த மழை பெய்யும்.

சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடியுடன் கூடிய மழையோ அல்லது கனமழையோ பெய்யலாம் என வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரை பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்):

நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளிடம் - 150; வேதாரண்யம் - 120; சிதம்பரம், சீர்காழி - 110; காரைக்கால் - 100; நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி - 80.

27 புலிகளின் முன்னாள் போராளிகள் இன்றைய தினம் சமூகத்துடன் மீள இணைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது!

Wednesday, October 31, 2012
இலங்கை::27 புலிகளின் முன்னாள் போராளிகள் இன்றைய தினம் சமூகத்துடன் மீள இணைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த 27 உறுப்பினர்களுக்கும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட உறுப்பினர்கள் குடும்ப உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மொத்தமாக 12090 முன்னாள்  புலி உறுப்பினர்கள் சரணடைந்ததாகவும் இதில் 11012 பேருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது 782 முன்னாள்  புலி உறுப்பினர்களுக்கு நான்கு முகாம்களில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இதில் 19 பெண் உறுப்பினர்களும் அடங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

அதிக மழை காரணமாக 49ஆயிரத்து 788 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது!

Wednesday, October 31, 2012
இலங்கை::அதிக மழை காரணமாக 49ஆயிரத்து 788 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழையினால் 13 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

இதன் காரணமாக 65 வீடுகள் முற்றாகவும் 488 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்திலேயே அதிகளவிலான மக்கள் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்தார்.

நாளை முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவைவையின் இலங்கை பற்றிய அனைத்துலக ஆவர்தன பரிசீலனை - பிராட் அடம்ஸ்!

Wednesday, October 31, 2012
இலங்கையின் மனித உரிமை நிலைமை மோசமடைந்து வருவது தொடர்பாக இலங்கையை கேள்விக்கு உள்ளாக்க அனைத்துலக ஆவர்த்தன பரிசீலனையை அரசாங்கங்கள் ஓர் அரங்கமாக பயன்படுத்த வேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற சர்வதேச சிவில் சமூக குழுக்களிடமிருந்து கடும் அழுத்தங்கள் வருகின்றன' என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பணிப்பாளர் பிராட் அடம்ஸ் கூறினார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை அரசாங்கம் எவ்வளவு தூரம் நிறைவேற்றியுள்ளது என்பதையும் மனித உரிமைகளை மேம்படுத்துவதிலும் பாதுகாப்பதிலும் இலங்கை என்ன சாதித்துள்ளது என்பதையும் பொறுத்தே ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இடம்பெறவுள்ள இலங்கை பற்றிய அனைத்துலக ஆவர்தன பரிசீலனையை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் சிபாரிசுகள் அமையும் என நம்புவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்தது.

நாளை முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவைவையின் இலங்கை பற்றிய அனைத்துலக ஆவர்தன பரிசீலனைக்கு இலங்கை அரசாங்கம், சிவில் சமூக குழுக்கள் மற்றும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு ஆகியன தங்களது அறிக்கைகளை அனுப்பியுள்ளன.

இந்த அறிக்கைகளை இந்தியா, பெனின், ஸ்பெய்ன் ஆகிய நாடுகள் ஆராய்ந்து தங்களது பரிந்துரைகளை மேற்கொள்ளும். இந்த மூன்று நாடுகளும் எழுமாற்று முறையில் தெரிவு செய்யப்பட்டவை. துரதிர்ஷ்டவசமாக இந்த மூன்று நாடுகளும் இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வாக்களித்தவையாகின்றன.

மனித உரிமைகளுக்கென ஜனாதிபதியின் விசேட தூதுவரான அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ஜெனீவா செல்லும் தூதுக்குழுவுக்கு தலைமை தாங்குவார். இலங்கையில் பல்வேறு பொறுப்புகள் இருப்பதனால் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அங்கு போகமாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு;ள்ள இளைஞர் ஒருவர் நீதிமன்றில் மனு தாக்கல்!

Wednesday, October 31, 2012
இலங்கை::பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு;ள்ள இளைஞர் ஒருவர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தர்மதாச நிருபன் என்ற இளைஞரே இவ்வாறு அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகளுக்கு மேல் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார். நிருபனின் தந்தை தர்மதாச, சட்டத்தரணி கே.கணேசயோகனின் ஊடாக அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

பொரளை காவல் நிலையப் பொறுப்பதிகாரி லொக்குஹெட்டிஹேவா, புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர், காவல்துறை மா அதிபர் என்.கே. இளங்கக்கோன், பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, மேலதிக பாதுகாப்புச் செயலாளர் எம்.எஸ். ரட்நாயக்க, சட்ட மா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

வெளிநாடு ஒன்றுக்கு செல்வதற்காக கணனிப் பயிற்சி நெறியொன்றை பூர்த்தி செய்து கொழும்பில் காத்திருந்த நிருபனை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைது செய்திருந்தனர். எந்தவிதமான குற்றச்சாட்டுக்களையும் சுமத்தாது மூன்று ஆண்டுகளுக்கு மேல் தடுத்து வைத்திருப்பதாக நிருபன் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கைது செய்யப்பட்ட காலத்தில் மோசமான முறையில் தாக்கப்பட்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். அதிகாரிகள் பலவந்தமான முறையில் பல்வேறு ஆவணங்களில் தம்மிடம் கையொப்பம் பெற்றுக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முகம், பின், முன்அழகை அதிகரிக்க கும்மாங்குத்து மசாஜ் : அமெரிக்காவில் சக்கை போடு!

Wednesday, October 31, 2012
சான்பிரான்சிஸ்கோ::முகம் அழகாக வேண்டுமா? முன்னழகு, பின்னழகு இன்னும் அதிகமாக வேண்டுமா? சர்ஜரி தேவையில்லை. தாய்லாந்தின் பாரம்பரிய ‘கும்மாங்குத்து’ டெக்னிக் போதும் என்கிறார் மேக்கப் கலைஞர். தாய்லாந்தை சேர்ந்த தம்பதியர் மாவன் - தடா சொம்பந்தம். (இந்தியாவில் இருந்து போன யாரோ ஒரு சம்பந்தத்தின் வம்சாவளியா? என்பது பற்றி தகவல் இல்லை.) தாய்லாந்தின் பாரம்பரிய ‘குத்து’ அழகு கலையை முறைப்படி பயின்ற இவர், கணவருடன் சேர்ந்து அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் கடந்த வாரம் மசாஜ் பியூட்டி பார்லர் தொடங்கியிருக்கிறார். அழகுபடுத்திக் கொள்பவர் தாடையை ரிலாக்சாக வைத்துக் கொண்டு உட்கார வேண்டும். குத்துச்சண்டை வீராங்கனை கணக்காக முட்டியை மடக்கிக் கொண்டு மசாஜை ஆரம்பிக்கிறார் சொம்பந்தம்.


மசாஜா அது..? அடியும் குத்தும் இடி போல சரமாரியாக விழுகிறது. புரோட்டா மாவு பிசைவது போல கன்னத்தை இப்படி அடித்து, குத்தி துவைப்பதால் தோல் சுருக்கம் மறைகிறது. சின்னச் சின்ன மேடுகள் கரைந்து பள்ளங்கள் அடைபடுகின்றன. உட்காரும் பகுதி மற்றும் மார்பகத்தை பெரிதாக்க விரும்பும் பெண்களும் இந்த சிகிச்சை செய்துகொள்ளலாம். சர்ஜரி இல்லாமல் தோல் இறுகி, இளமை திரும்புகிறது என்று விளக்கம் தருகிறார் சொம்பந்தம். ‘ரத்தம் ஓட்டம் சீராவதால் சதை பகுதிகளுக்கு புத்துணர்ச்சி கிடைக்குமே தவிர, மருத்துவ ரீதியாக இந்த மசாஜ் முறை அங்கிகரிக்கப்படவில்லை’ என்கின்றனர் அமெரிக்க டாக்டர்கள்.

ஆனாலும், சொம்பந்தத்தின் பியூட்டி பார்லருக்கு அமெரிக்கர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கால் மணி நேர குத்து மசாஜுக்கு ரூ.18 ஆயிரம் கட்டணம். ‘குத்து மசாஜ்’ மூலம் மார்பகத்தை பெரிதாக்கும் டெக்னிக்கை தன் பாட்டியிடம் இருந்து கற்றுக்கொண்ட தாய்லாந்து பெண் குன்யிங் தப்னம் (44) என்பவர் இதற்கான பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். முக அழகு குறித்து கற்றுத் தர ரூ.88 லட்சம், மார்பக அழகு பயிற்சிக்கு ரூ.1.42 கோடி, உடல் அழகு பயிற்சிக்கு ரூ.1.78 கோடி என கட்டணம் நிர்ணயித்திருக்கிறார். உலகிலேயே குத்து மசாஜ் டெக்னிக்கை சொல்லித் தரும் ஒரே ஆள் நான்தான் என்று பெருமையாக கூறும் அவர், குத்து சிகிச்சை மூலம் மார்பக அளவை 2 இஞ்ச் அதிகரிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

எம்.கே.நாராயணன் மீது "திடுக்' ராஜிவ் கொலை வீடியோவை மறைத்தாரா?.

Wednesday, October 31, 2012
புதுடில்லி::புலிகளின் ராஜிவ் படுகொலை தொடர்பான, முக்கிய வீடியோவை, ஐ.பி., உளவு படையின் முன்னாள் தலைவரும், மேற்கு வங்க கவர்னருமான, எம்.கே.நாராயணன் வேண்டுமென்றே மறைத்தார் என்று வெளியான தகவலால், ராஜிவ் இறந்து, 21 ஆண்டுகள் ஆன பிறகு, மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க கவர்னராக, கடந்த இரண்டு ஆண்டுகளாக பதவி வகிப்பவர், எம்.கே.நாராயணன். முன்னதாக அவர், தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும், அதற்கு முன், ஐ.பி., உளவுப் பிரிவின் தலைவராகவும் இருந்தார்.கேரளாவைச் சேர்ந்த நாராயணன், ஐ.பி., தலைவராக இருந்தபோது, 1991 மே, 21ல், ஸ்ரீபெரும்புதூரில், தேர்தல் பிரசாரம் செய்ய வந்த ராஜிவ், படுகொலை செய்யப்பட்டார். புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த, தற்கொலைப் படை பெண், தனு, மனித வெடிகுண்டாக செயல்பட்டு, ராஜிவை கொன்றார்.

உலகையே உலுக்கிய இந்த படுகொலை வழக்கு, அவ்வப்போது வெளியாகும் தகவல்களால், பரபரப்படைவது வழக்கம். அந்த வகையில், 21 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராஜிவ் கொலை வழக்கை விசாரித்த, சி.பி.ஐ., அதிகாரி, கே.ரகோத்தமன், "ராஜிவை கொல்லச் சதி - சி.பி.ஐ., ஆதாரங்கள்' என்ற பெயரில், சமீபத்தில், தமிழில், புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டார்.அந்த புத்தகத்தில், ரகோத்தமன் தெரிவித்திருந்த தகவல்களில், எம்.கே.நாராயணன் குறித்த, சில விவரங்கள், டில்லி, மும்பை நகரங்களில் வெளியாகும், டி.என்.ஏ., என்ற நாளிதழில் நேற்று வெளியாகியுள்ளது.

டி.என்.ஏ., நிருபருக்கு, ரகோத்தமன் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:ஸ்ரீபெரும்புதூரில், ராஜிவ், பொதுக் கூட்ட மேடைக்கு வரும் போது, அந்த கூட்டத்தில் ஊடுருவிய, ராஜிவ் கொலையாளி தனு, மனித வெடிகுண்டை வெடிக்கச் செய்தார் என, தமிழக அரசால் தெரிவிக்கப்பட்ட தகவல் தவறு. பொதுக்கூட்டம் நடப்பதற்கு, இரண்டரை மணி நேரத்திற்கு முன்பே, தனு அந்த இடத்திற்கு வந்திருந்தாள்.

கொலையாளி தனு, சிலருடன் பேசிக் கொண்டிருந்தாள் என்பதற்கான, வீடியோ ஆதாரம், எம்.கே.நாராயணனுக்குக் கிடைத்தது. அந்த வீடியோவை, வேண்டுமென்றே மறைத்த எம்.கே.நாராயணன், வேறு ஒரு வீடியோவை, வழக்கில் இணைத்து விட்டார்.இதன் மூலம் அவர், யாரையோ காப்பாற்ற முயன்றுள்ளார். தான் மறைத்த வீடியோ பற்றி, முன்னாள் பிரதமர், சந்திரசேகருக்கு, எம்.கே.நாராயணன், ரகசிய கடிதம் ஒன்றை எழுதினார் எனவும், இந்தத் தகவல்களை அறிந்த பிறகும், ராஜிவ் கொலை வழக்கின் விசாரணை அதிகாரி, டி.கார்த்திகேயன், உண்மைகளை மறைத்துவிட்டார். இவ்வாறு அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக கண்டி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவருகின்ற கடும் மழையினால் 261 பேர் காயங்களுக்குள்ளாகி இருப்பதுடன், 54 வீடுகள் சேதம்!

Wednesday, October 31, 2012
இலங்கை::கடந்த சில தினங்களாக கண்டி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவருகின்ற கடும் மழையினால் 261 பேர் காயங்களுக்குள்ளாகி இருப்பதுடன், 54 வீடுகள் சேதமடைந்திருப்பதாக கண்டி மாவட்ட அரசாங்க அதிபர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.

உடுநுவர, ஹாரிஸ்பத்துவ, கங்கவட்டகோரளை ஆகிய பிரதேசங்களிலேயே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கரல்லியத்த எனுமிடத்தில் இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்கு அருகிலுள்ள மின்கம்பம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் இருவர் காயமடைந்து தெல்தெனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டிருப்பதாகவும் கண்டி மாவட்ட அரசாங்க அதிபர் கூறினார்.

இன்னும் சில பகுதிகளில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் நிலவுவதாக குறிப்பிட்ட மாவட்ட அரசாங்க அதிபர் காமினி செனவிரத்ன, மண்சரிவு ஏற்படக்கூடிய இடங்களை அடையாளம் காண்பதற்காக தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

திவிநெகும சட்டமூலம் தோற்றாலும் வெற்றிப்பெற்றாலும் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் கட்டாயம் நீக்கப்பட வேண்டும்:இந்தியா எமக்கு பெரும் தலைவன் இல்லை - கலாநிதி குணதாச!

Wednesday, October 31, 2012
இலங்கை::திவிநெகும சட்டமூலம் தோற்றாலும் வெற்றிப்பெற்றாலும் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் கட்டாயம் நீக்கப்பட வேண்டும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஒருமைப்பாடு, மாகாண சபை முறைமை, திவிநெகும சட்டமூலம் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

திவிநெகும தோற்றாலும் வெற்றிப்பெற்றாலும் 13வது அரசியல் அமைப்புத் திருத்தத்தை தோற்கடிக்க வேண்டும். இந்த சட்டமூலம் பலவந்தமாக கொண்டு வரப்பட்டது. இதனை நீக்க எவருக்கும் அச்சமடைய தேவையில்லை. இந்தியா எமக்கு பெரும் தலைவன் இல்லை எனவும் குணதாச அமரசேகர கூறியுள்ளார்.

Tuesday, October 30, 2012

இளையராஜாவின் இனிப்பு செய்தி!!!

Tuesday,30th of October 2012
சென்னை::இளையராஜா இதற்கு முன் ரசிகர்கள் விஷயத்தில் எப்படியோ? எதிர்ப்பு கிளம்பியிருக்கும் சூழலில் ரசிகனுக்காக எதையும் செய்வேன் என்று துணிந்து இறங்கியிருக்கிறார்.

கனடாவில் நவ.3 ஆம் தேதி இளையராஜா இசை நிகழ்ச்சி நடத்துகிறார். நவம்பர் மாவீரர் தினம் வருகிற மாதம் என்பதால் ஆடம்பர நிகழ்ச்சிகள் எதையும் நவம்பர் மாதத்தில் வைத்துக் கொள்வதில்லை.. தமிழ்நாட்டில் எப்போதும் போல ஆர்ப்பாட்டங்கள் தங்கு தடையில்லாமல் நடக்கும். படங்களும் கண்டபடி வெளியாகும், தீபாவளி மாதமல்லவா.

இந்த வருடம் சில (புலி பயங்கிரவாதிகள்) திடீரென்று நவம்பர் மாதத்தில் ஆரும் பேசப்படாது ஆரும் பாடக் கூடாது என்று நாட்டாமை செய்ய ஆரம்பித்தனர். அதன் விளைவாக கனடாவில் நவ.3 ஆம் தேதி இளையராஜா நடத்தயிருக்கும் இசை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெ‌ரிவித்தனர். சிறு (புலி)குழுக்களின் எதிர்ப்புதான் இது.

இளையராஜாவிடம் இதுபோன்ற சென்டிமெண்ட்கள் எடுபடாது. இனத்துக்குப் பதில் ஆன்மீகத்தின் பெய‌ரில் எதிர்ப்பு தெ‌ரிவித்திருந்தாலாவது செவி கொடுத்திருப்பார். மானுட ஜந்துவான தமிழனுக்காக தெய்வீக இசையை நிறுத்த முடியுமா? ஒரேயொரு ரசிகன் வந்தால்கூட கனடாவில் ஐந்து மணி நேரம் வாசிப்பேன் என்று சூளுரைத்து சிங்கம் பிளைட் ஏறியிருக்கிறதாம். அதனால் நவ.3 கச்சே‌ரி களைகட்டுவது திண்ணம்.

இசையில்லாமல் சினிமா இல்லை இரண்டும் பிரிக்க முடியாதவை  இசைஞானி இளையராஜா!

இசையில்லாமல் சினிமா இல்லை இரண்டும் பிரிக்க முடியாதவை என்றார் இசைஞானி இளையராஜா.
சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசிய இளையராஜா, "என்னை இங்கே எல்லோரும் பாராட்டி பேசினார்கள். பாட்டு நன்றாக போட்டு இருக்கிறீர்கள் என்று என்னைப் பாராட்டுவது, 'நீங்க நல்லா மூச்சு விடறீங்க' என்று சொல்வது போல் இருக்கிறது.

சினிமா என் மீது வந்து போகிறது. நான், 'ஸ்கிரீன்.' ஸ்கிரீன் இல்லாமல், சினிமா ஓட்ட முடியாது. இசை இல்லாமல், சினிமா இல்லை.
ரஜினிகாந்த் எனக்கு நல்ல நண்பர். சமீபத்தில் நானும், ரஜினியும், மோகன்பாபுவும் ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.
எனக்கு ஞாபகம் இல்லாத விஷயங்களை எல்லாம் ரஜினி ஞாபகப்படுத்தினார். அந்தக் காலத்தில் ஒரு முறை ரஜினிகாந்துக்கு ஒரு குறிப்பிட்ட படத்தில் நடிக்க விருப்பம் இல்லை. அந்த படத்தில் அவரை நடிக்கும்படி, நான் சொல்லி அனுப்பினேன். அதன்பிறகு அவர் அந்த படத்தில் நடித்தார்.
சாமி (இளையராஜா சொன்னதால்தான் அந்த படத்தில் நடித்தேன். படம் வெற்றி பெற்றது'' என்று பழைய சம்பவங்களை எல்லாம் ரஜினி எனக்கு ஞாபகப்படுத்தினார்.

இப்படிச் சொல்வதால், நான் அவரை விட பெரிய ஆள் என்று அர்த்தம் அல்ல. ரஜினி பெருந்தன்மையானவர் என்பதுதான் உண்மை!'' என்றார்.

பத்திரிகையாளரை தாக்கிய பிரச்சனை - முன் ஜாமீன் கோரி விஜயகாந்த் மனு தாக்கல்!

Tuesday, October 30, 2012
சென்னை::பத்திரிகையாளரை தாக்கியது தொடர்பான பிரச்சனையில் தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்றார். அப்போது அவருடைய கட்சியைச் சார்ந்த எம்.எல்.ஏக்கள் முதல்வரை சந்தித்தது தொடர்பாக கேள்வி கேட்டனர். இதைத் தொடர்ந்து வியஜகாந்த் நிருபர்களை திட்டியதாகவும், பிறகு அந்த நிருபர் கீழே தள்ளி விடப்பட்டார். கீழே விழுந்த அந்த நிருபர் மீனம்பாக்கம் போலீசில் புகார் செய்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் விஜயகாந்தின் மீது, கொலை மிரட்டல் 506(ப்), தரக்குறைவாக பேசுதல் (294பி), தன்னிச்சையாக சிறு காயம் ஏற்படுத்துதல் (323), முறையற்று தடுத்தல் (341) ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனால் விஜயகாந்த் கைது செய்யப்படலாம் என கூறப்பட்டது. இந்த நிலையில் விஜயகாந்த் முன் ஜாமீன் கேட்டி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், "என்னுடைய தனிப்பட்ட வேலை காரணமாக மதுரைக்கு செல்ல அவசரமாக விமான நிலையம் சென்று கொண்டு இருந்தேன். அப்போது விமான நிலையத்தில் இருந்த பத்திரிக்கையாளர்கள் அத்துமீறி கேள்வி கேட்டனர். அவர்களை விலக்கி கொண்டு உள்ளே சென்றேன்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது பொய்யான புகார் கொடுக்கப்பட்டு அதன்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நான் கைது செய்ய நேரிடலாம் என்று அஞ்சுகிறேன். எனவே இந்த வழக்கில் எனக்கு முன் ஜாமீன் கொடுக்க வேண்டும்." என்று விஜயகாந்த் கூறியிருந்தார்.

(புலிகள் ஆதரவு) டெசோ தீர்மானங்களை ஐ.நா விடம் சமர்ப்பிக்க நாளை மு.க.ஸ்டாலின் அமெரிக்கா பயணம்!

Tuesday, October 30, 2012
சென்னை::(புலிகள் ஆதரவு) டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஐ.நா சபையில் சமர்ப்பிப்பதற்காக நாளை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா பயணிக்கிறார்.

இலங்கை தமிழர் (புலிகள் ஆதரவு) நலன் கருதி கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையில் திமுக சார்பில் டெசோ மாநாடு நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஐ.நா சபையினரிடம் சமர்ப்பிப்பது என முடிவு எடுக்கப்பட்டு, அந்த தீர்மானங்களை ஐ.நா சபையினரிடம் ஒப்படைக்க திமுக கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் டி.ஆர்.பாலு ஆகியோர் அமெரிக்க செல்வார்கள் என்றும் கூறப்பட்டது.

அதன்படி, இது தொடர்பாக மு.க.ஸ்டாலினும், டி.ஆர்.பாலுவும் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து, ::(புலிகள் ஆதரவு) டெசோ மாநாட்டு தீர்மானங்கள் குறித்த வரவு மனுவிற்கு கருணாநிதியிடம் ஒப்புதல் பெற்றனர்.

நாளை மாலை இருவரும் அமெரிக்கா செல்கிறார்கள். ஐ.நா சபையில் டெசோ சார்பில் மனு அளித்துவிட்டு திரும்பும் இவர்கள், அப்படியே நவம்பர் 6ஆம் தேதி லண்டனில் நடைபெற இருக்கும் பிரிட்டன் தமிழர் பேரவை உலக தமிழ் மாநாட்டிலும் கலந்துகொள்கிறார்கள்

தமிழா! நீ மீண்டும் மீண்டும் ஏமாளியா??

Tuesday, October 30, 2012
கனடா::இக்கட்டுரையை எழுதுவதன் நோக்கம் அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பால் புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ஒரு வேண்டுகோளாகும். அதாவது இலங்கையில் தற்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதை சர்வதேசம் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருப்பதாகவும், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் இலங்கையில் உள்ள தங்களின் உறவுகளை த.தே.கூ.க்கு வாக்களித்து தமிழ் மக்களின் பலத்தைக் கூட்டும்படி வற்புறுத்தும்படியும் கேட்டிருந்தார்கள்.
இதே த.தே.கூ இலங்கை சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகளைக் கடந்து கொண்டிருக்கிற இன்று வரை தமிழரசு என்றும், சமஸ்டி என்றும், தமிழ் ஈழம் என்றும் வெவ்வேறு முகங்களில் தோன்றி மக்களை ஏமாற்றியுள்ளனர். இவர்களின் இப்படியான பல முகங்களை மக்கள் அறிவார்கள். எனவே மீண்டும் இவர்களின் ஏமாற்றுப் பேச்சுக்கு மக்களின் ஆதரவு இல்லை என்று தெரிந்தவுடன், புலம்பெயர் தமிழ் மக்களின் ஆதரவை நாடியுள்ளனர்.கடந்த 30 ஆண்டுகளாக எமது நாட்டில் தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்கள் அனைவரும் அனுபவித்து வந்த நிம்மதியற்ற பயங்கரமான வாழ்க்கைக்கு 2009ஆம் ஆண்டுடன் முற்றுப்புள்ளி வைத்து, கொலைகளும் அழிவுகளும் இடப்பெயர்வுகளுமற்ற ஒரு வாழ்க்கை எமது மக்களுக்கும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருப்பதை நாம் மறைத்து நாடகமாட முடியாது.
தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டமாக ஆரம்பிக்கப்பட்டு, ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து. மனிதனைக் கடிப்பது போல, தனது இனத்தையே அழித்து பயங்கரவாதிகள் என்ற பட்டத்தைச் சுமந்தவர்களை, தமிழ் மக்களின் இரட்சகர்கள் என்றும், அவர்களால் தான் தமிழ் மக்களுடைய உரிமைகள் வென்றெடுக்கப்படும் என்றும், அரசியல் ஆய்வரங்குகள் செய்தவர்களும், 2004 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களின் பலத்தைக் காட்டவும், தமிழ் ஈழத்திற்கான ஏகோபித்த குரலை பாராளுமன்றத்தில் ஒலிக்கச் செய்யவும் த.தே.கூ.விற்கே தமிழ் மக்கள் எல்லோரும் ஏகோபித்து வாக்களிக்க வேண்டுமென்றும், அரசாங்கத்திற்கு ஆதரவானவர்கள் துரோகிகள் என்றும் மேடைகளில் வாய் கிழியக் கத்தி 22 கூட்டமைப்பு அங்கத்தவர்கள் பாராளுமன்றம் சென்றார்கள்.
இவர்களின் வீராவேசப் பேச்சுகளுக்கு கடைசியில் நடந்தது என்ன? மன்னாரில் இருந்து கிளிநொச்சி ஈறாக முள்ளிவாய்க்கால் வரை ஆட்டு மந்தைகள் போல் பச்சை மட்டைகளால் மக்கள் அடித்தத் துரத்திச் செல்லப்பட்டுக் கொண்டிருந்த பொழுதும், அதை மீறி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் போக முற்பட்ட மக்களை நோக்கி புலி வீரர்களின் துப்பாக்கிகள் நீணட பொழுதும், இந்த 22 தமிழ் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராவது புலிகளைப் பார்த்து “மக்களைத் துன்புறுத்தாதீர்கள், ஆயுதங்களைக் கீழே போட்டு பேச்சுவார்த்தைக்குப் போங்கள்” என்று சொன்னார்களா? இல்லையே? பதிலுக்குக் கடைசிவரை மக்களின் அழிவை ரசித்துக் கொண்டிருந்தார்கள்.
துன்பத்துக்குள்ளான மக்கள் தங்களுடைய உயிர்களைக் காப்பாற்ற இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்று, அகதி முகாம்களில் தங்கி, அடிப்படை வசதிகள் இன்றி சொல்லொணாக் கஸ்டங்களை அனுபவித்து, தற்பொழுது அரசாங்கத்தால் மீளக் குடியமர்த்தப்பட்டு ஓரளவு நிம்மதிப் பெருமூச்சு விட்டடுக் கொண்டிருக்கும் அப்பாவி மக்களை, இனவாதம் பேசி அதே சேற்றில் மீண்டும் அமிழ்த்திவிட வந்துள்ளார்கள் த.தே.கூட்டமைப்பினர். எனவே மக்களே இவர்களையிட்டு விழிப்பாக இருங்கள்.
த.தே.கூட்டமைப்பினர் ஒவ்வொருவரின் பேச்சுகளிலும் புலம்பெயர் தமிழர்களின் ஆதரவு தங்களுக்கு உண்டென்றும், உலக நாடுகளின் ஆதரவு உண்டென்றும் கூறி வருகிறார்கள். புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்கள் எல்லோரும் புலிகளுக்கோ அழிவுக்கோ ஆதரவானவர்கள் அல்ல. ஒரு சிறு கும்பலைத் தவிர ஏனையோர் புலிகளின் அடாவடித்தனங்களை அழிவுப்போக்கை எதிர்த்தவர்கள். இப்படியானவர்களை கூட்டமைப்பினர் “துரோகிகள்” என்று வாய் கூசாமல் சொன்னார்கள்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் துரோகிகள் எனத் தூற்றப்பட்டவர்கள் தான், அரசாங்கத்துடன் முரண்பட்டுக் கொள்ளாமல் நின்று, இந்தக் கொடிய யுத்தத்தால் விலை மதிக்க முடியாத உயிர்களையும் உடமைகளையும் இழந்து தவித்துக் கொண்டிருந்த மக்களுக்கு பல வகையான உதவிகளைச் செய்து கொடுத்ததுடன், இன்று வடக்கு கிழக்கு மாகாணங்களுக்குப் பல அபிவிருத்திப் பணிகளை அரசாங்கத்தின் உதவியுடன் செய்து வருகிறார்கள் என்பதை ஒவ்வொரு தமிழ் மகனும் கட்டாயமாக சிந்திக்க வேண்டும்.
தமிழ் தலைமைகள் இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இன்றுவரை ஆட்சியிலிருந்த முற்போக்கான அரசுகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்கள் அல்ல. மாறாக ஏகாதிபத்திய சக்திகளுக்கு ஆதரவான ஐக்கிய தேசியக் கட்சிக்கே ஆதரவாகச் செயற்பட்டு வந்துள்ளனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, தமிழ் மக்கள் ஒரு சிறுபான்மை இனமென்றும், அவர்கள் இலங்கையில் தங்கியிருக்கலாமே தவிர உரிமைகள் கோரி போராடக்கூடாது என்றும், இனவாதத் திமிருடன் ஆணவமாகப் பேசிய முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை எங்களுடைய தமிழ் மக்களின் இரட்சகர்களான கூட்டமைப்பினர் ஆதரித்து மேடைகளில் முழங்கியதை மக்கள் மறந்துவிடவில்லை. அந்தத் தேர்தலில் சரத் பொன்சேகா வென்றிருந்தால் தமிழ் மக்களுக்கு என்ன நடந்திருக்கும் என்பது சிந்திக்கத் தெரிந்த ஒவ்வொரு தமிழனும் நன்கறிந்த விடயம். இது தமிழனுடைய அழிவில் சுகபோக வாழ்க்கை வாழ நினைக்கும் கூட்டமைப்பினருக்கு ஒன்றும் புதுமையல்ல.
1956இல் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க காலத்திலிருந்து, அவரது மனைவி சிறீமாவோ பண்டாரநாயக்க, மகள் சந்திரிகா குமாரதுங்க ஈறாக இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வரை, தமிழ் மக்களுக்கான உரிமைகளை ஏதோ ஒரு விதத்தில் வழங்க முன்வந்தார்கள். இவர்களால் எடுக்கப்பட்ட முயற்சிகள் எல்லாவற்றிற்கும் பாராளுமன்றத்திற்குள்ளும், வெளியிலும் தமிழ் தலைமைகள் தடையாக இருந்ததுடன், ஐ.தே.கவுடன் சேர்ந்து குழப்பங்களை உண்டாக்கி தீர்வு நகல்களை கிழித்தெறிந்தும் எரித்தும் உள்ளார்கள்.
தற்பொழுதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஐ.தே.கவின் கூட்டாளிகள் தான். ஒரு சிறு உதாரணம். இந்த ஆண்டு ஐ.தே.க கொழும்பிலிருந்து கொண்டுவரப்பட்டவர்களால் யாழ்ப்பாணத்தில் நடாத்திய மேதின ஊர்வலத்திலும் கூட்டத்திலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் கலந்துகொண்டு தங்களுடைய ஆதரவை வெளிப்படுத்தினார்களே! அது ஒன்றே போதாதா, மக்கள் இவர்கள் யார் என்று தெரிந்து கொள்வதற்கு? பின்னர் அதற்கு மன்னிப்பும் கேட்டிருந்தார்கள்.
ஐ.தே.க மேதின ஊர்வலத்தில் ஐ.தே.க.வுடன் கொடியைப் பிடித்ததிற்கு மக்களிடம் மன்னிப்புக் கேட்டவர்கள், முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான மக்களின் அழிவுக்குக் காரணகர்த்தாக்களாக இருந்தவர்கள் என்ற வகையில் அதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்டார்களா? இல்லையே! ஏனெனில் அந்த அழிவை அவர்கள் எதிர்பார்த்தார்கள். மக்களின் அழிவை வெளிநாடுகளுக்குக் காண்பிப்பதின் மூலம் அரசியல்லாபம் பெறலாம் என நினைத்தார்கள். எனவேதான் அரசியலில் இவர்கள் செல்லாக்காசாகி விட்டார்கள்.
அடுத்த விடயம், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளில் சில உதிரிக் கட்சிகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியா செல்லும் வேளைகளில் கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்வதெல்லாம், அவர்கள் எமது நாட்டில் உள்ள தமிழ் மக்களின் மேல் உள்ள அனுதாபத்தினால் அல்ல. அவர்கள் ஒவ்வொருவரும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் புலிப் பினாமிகளிடமிருந்து வாங்குகின்ற பணத்திற்கு விசுவாசம் தெரிவிக்கவே அவ்வாறு செயல்படுகிறார்கள். இந்தப் பித்தலாட்டக்காரர்களின் செயல்களால் எமது நாட்டில் தற்பொழுது நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்கள் தொடர்ந்தும் கஸ்டங்களை அனுபவிக்கும் சூழ்நிலையே உருவாகும்.
இந்த தமிழின பிழைப்புவாதிகள் 25 இலட்சம் இலங்கைத் தமிழ் மக்களுக்குத் தமிழ் ஈழம் பெற்றுக் கொடுப்பதை விடுத்து, வேண்டுமானால் 6 கோடி தமிழ் மக்கள் வாழும் தமிழ்நாட்டில் ஒரு தனிநாடு அமைக்கப் போராடுவது வரவேற்கக்கூடியது. வேண்டுமானால் நாங்களும் உதவலாம். இந்த உதிரிக் கட்சிகளின் தலைவர்கள்தான் இலங்கையிலிருந்து செல்லும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை விமான நிலையத்தில் வரவேற்பவர்கள். இந்த விடயம் குறித்து தமிழ் மக்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட ஒவ்வொரு தமிழ் மகனும் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய காலம் வந்துள்ளது.
அத்துடன் தமிழ் மக்களாகிய நாங்கள், கடந்த காலங்களில் இனரிதியாகப் பட்ட கஸ்டங்களைப் பார்க்கிலும், சமூக ரீதியான ஒடுக்குமுறைக் கஸ்டங்களையும் அனுபவித்துள்ளோம். இவைகள் எல்லாவற்றிற்குமாக களத்தில் நின்று போராடி அந்த மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுத்தவர்கள் இடதுசாரிகளும் முற்போக்கு சிந்தனை கொண்டவர்களும் தான். இன்று நம்மத்தியில் பலர் அனுபவிக்கும் உரிமைகள் இடதுசாரிகளின் போராட்டத்தால் கிடைத்த வெற்றிகளாகும்.
எனவே தமிழ் மக்களாகிய நாங்கள், இலங்கையர்கள் என்று பெருமையுடன் வாழ வேண்டுமானால், இனவாதம் பேசி மக்களை ஏமாற்றுபவர்களை துர்க்கி எறிந்துவிட்டு, இடதுசாரிகளையும், முற்போக்கு சிந்தனை கொண்டவர்களையும் ஆதரிப்பதின் மூலம், சகல மக்களுடனும் இணைந்து சுபீட்சமாக வாழலாம். இதுவே புலம்பெயர்நது கனடாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் முற்போக்கு சிந்தனையாளர்களின் கருத்தாகும். எனவே தமிழ் மக்களே சிந்தியுங்கள்!

எஸ்.வீரசிங்கம் (கனடா)