Wednesday, October 31, 2012
இலங்கை::27 புலிகளின் முன்னாள் போராளிகள் இன்றைய தினம் சமூகத்துடன் மீள இணைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த 27 உறுப்பினர்களுக்கும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட உறுப்பினர்கள் குடும்ப உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மொத்தமாக 12090 முன்னாள் புலி உறுப்பினர்கள் சரணடைந்ததாகவும் இதில் 11012 பேருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது 782 முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு நான்கு முகாம்களில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இதில் 19 பெண் உறுப்பினர்களும் அடங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment