Wednesday, October 31, 2012
இலங்கை::இலங்கை அரசாங்கத்தின் கடன் 2012 ஆம் ஆண்டு ஜுலை மாத முடிவில்; 6161 பில்லியன் ரூபாவாக காணப்பட்டது. ஒரு வருடத்துக்கு முன்னர் இது 4975.2 பில்லியன் ரூபாவாக இருந்தது என்று மத்திய வங்கியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை அரசாங்கம் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை அரசாங்க உத்தரவாதம் கொண்ட பிணைகளை விற்றதன் மூலும் பெற்றுக்கொண்டதே இந்த படுகடன் அதிகரிப்புக்கு காரணமாகும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதில் 500 மில்லியன் டொலர் முதிர்ச்சி அடைந்த பிணைகளை விற்றதன் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டது. இவ்வாறான கடனானது படுகடனை செலுத்துவதற்கு ஒப்பானதாகும்.
இலங்கையில் தற்போதைய கடனில் உள்நாட்டு படுகடன் 3185.7 பில்லியன் ரூபாவாகவும் வெளிநாட்டு படுகடன் 2975.3 பில்லியன் ரூபாவும் ஆகும்.
இலங்கை சீன எக்ஸிம் வங்கியிலிருந்தும் சீன அபிவிருத்தி வங்கியிலிருந்தும் பெருமளவு கடனை பெற்றுள்ளது.
கூடுதல் கடனை பெறுவது சென்மதி நிலுவையிலும், பொருளாதாரத்திலும் பாதகங்களை தோற்றுவிக்கும் என பொருளியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

No comments:
Post a Comment