Tuesday,30th of October 2012
சென்னை::இளையராஜா இதற்கு முன் ரசிகர்கள் விஷயத்தில் எப்படியோ? எதிர்ப்பு கிளம்பியிருக்கும் சூழலில் ரசிகனுக்காக எதையும் செய்வேன் என்று துணிந்து இறங்கியிருக்கிறார்.
கனடாவில் நவ.3 ஆம் தேதி இளையராஜா இசை நிகழ்ச்சி நடத்துகிறார். நவம்பர் மாவீரர் தினம் வருகிற மாதம் என்பதால் ஆடம்பர நிகழ்ச்சிகள் எதையும் நவம்பர் மாதத்தில் வைத்துக் கொள்வதில்லை.. தமிழ்நாட்டில் எப்போதும் போல ஆர்ப்பாட்டங்கள் தங்கு தடையில்லாமல் நடக்கும். படங்களும் கண்டபடி வெளியாகும், தீபாவளி மாதமல்லவா.
இந்த வருடம் சில (புலி பயங்கிரவாதிகள்) திடீரென்று நவம்பர் மாதத்தில் ஆரும் பேசப்படாது ஆரும் பாடக் கூடாது என்று நாட்டாமை செய்ய ஆரம்பித்தனர். அதன் விளைவாக கனடாவில் நவ.3 ஆம் தேதி இளையராஜா நடத்தயிருக்கும் இசை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சிறு (புலி)குழுக்களின் எதிர்ப்புதான் இது.
இளையராஜாவிடம் இதுபோன்ற சென்டிமெண்ட்கள் எடுபடாது. இனத்துக்குப் பதில் ஆன்மீகத்தின் பெயரில் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலாவது செவி கொடுத்திருப்பார். மானுட ஜந்துவான தமிழனுக்காக தெய்வீக இசையை நிறுத்த முடியுமா? ஒரேயொரு ரசிகன் வந்தால்கூட கனடாவில் ஐந்து மணி நேரம் வாசிப்பேன் என்று சூளுரைத்து சிங்கம் பிளைட் ஏறியிருக்கிறதாம். அதனால் நவ.3 கச்சேரி களைகட்டுவது திண்ணம்.

இசையில்லாமல் சினிமா இல்லை இரண்டும் பிரிக்க முடியாதவை இசைஞானி இளையராஜா!
இசையில்லாமல் சினிமா இல்லை இரண்டும் பிரிக்க முடியாதவை என்றார் இசைஞானி இளையராஜா.
சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசிய இளையராஜா, "என்னை இங்கே எல்லோரும் பாராட்டி பேசினார்கள். பாட்டு நன்றாக போட்டு இருக்கிறீர்கள் என்று என்னைப் பாராட்டுவது, 'நீங்க நல்லா மூச்சு விடறீங்க' என்று சொல்வது போல் இருக்கிறது.
சினிமா என் மீது வந்து போகிறது. நான், 'ஸ்கிரீன்.' ஸ்கிரீன் இல்லாமல், சினிமா ஓட்ட முடியாது. இசை இல்லாமல், சினிமா இல்லை.
ரஜினிகாந்த் எனக்கு நல்ல நண்பர். சமீபத்தில் நானும், ரஜினியும், மோகன்பாபுவும் ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.
எனக்கு ஞாபகம் இல்லாத விஷயங்களை எல்லாம் ரஜினி ஞாபகப்படுத்தினார். அந்தக் காலத்தில் ஒரு முறை ரஜினிகாந்துக்கு ஒரு குறிப்பிட்ட படத்தில் நடிக்க விருப்பம் இல்லை. அந்த படத்தில் அவரை நடிக்கும்படி, நான் சொல்லி அனுப்பினேன். அதன்பிறகு அவர் அந்த படத்தில் நடித்தார்.
சாமி (இளையராஜா சொன்னதால்தான் அந்த படத்தில் நடித்தேன். படம் வெற்றி பெற்றது'' என்று பழைய சம்பவங்களை எல்லாம் ரஜினி எனக்கு ஞாபகப்படுத்தினார்.
இப்படிச் சொல்வதால், நான் அவரை விட பெரிய ஆள் என்று அர்த்தம் அல்ல. ரஜினி பெருந்தன்மையானவர் என்பதுதான் உண்மை!'' என்றார்.
No comments:
Post a Comment