Wednesday, October 31, 2012
சென்னை::சென்னை அருகே இன்று மாலை புயல் கரையை கடக்கிறது. அப்போது சூறாவளி காற்றுடன் மழை பெய்யும் என்பதால் சென்னை விமான நிலையத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
புயல் கரையை கடக்கும் போது சென்னை வரும் விமானங்களை வேறு நகரங்களுக்கு திருப்பிவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மெரீனா மற்றும் கடற்கரையோர பகுதிகளில் மக்கள் நடமாட போலீசார் தடை விதித்துள்ளனர்.

'நீலம்' புயல் தாக்கத் தொடங்கினால் சென்னை விமான நிலையத்தில் உள்ள ஓடுபாதைகள் உடனடியாக மூடப்படுவதோடு, சர்வதேச விமானங்களை வேறு மாநிலத்திற்கு திருப்பிவிடப்படுகிறது.
தற்போது சென்னையில் நீலம் புயல் கரையை கடக்கும்முன் காற்றின் வேகம் கடுமையாக இருந்து வருகிறது. இதனால் விமானங்களை தொடங்கி இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை விமான நிலைய இயக்குனர் சுரேஷ் தலைமையில் இன்று அவசர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சென்னையில் புயல் தாக்கினால் விமானங்களை வேறு மாநிலத்துக்கு திருப்பிவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை வரும் உள்நாட்டு விமானங்களை மதுரை, பெங்களூர், ஹைதராபாத் திருப்பிவிட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதேபோல் சர்வதேச விமானங்களை திருவனந்தபுரம், ஹைதராபாத், கொழும்புக்கு திருப்பி விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment