Sunday, September 30, 2012

புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டமைக்கான காரணங்களை உறுதிப்படுத்தும் ஆதாரங்களை தமிழக அரசாங்கம் நேற்று சமர்ப்பித்துள்ளது!

Sunday, September 30, 2012
சென்னை::புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டமைக்கான காரணங்களை உறுதிப்படுத்தும் ஆதாரங்களை தமிழக அரசாங்கம் நேற்று சமர்ப்பித்துள்ளது.

 புலிகளின் தடை தொடர்பில் பரிசீலிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள தீர்ப்பாயத்தின் இரண்டாம் கட்ட விசாரணை நேற்று இடம்பெற்றது.

இதன் போது தமிழக அரசாங்கம் தரப்பில் முன்னிலையான அதிகாரி, இந்த ஆதாரங்களை சமர்ப்பித்தார்.

இதில் தமிழ் தேசிய மீளமைப்பு குழு, தமிழ் நாடு விடுதலை முன்னணி, தமிழ் நாடு விடுதலை போhளிகள் போன்ற புலிகளுக்கு ஆதரவான அமைப்புகள் குறித்த ஆதாரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த அமைப்புக்களின் உறுப்பினர்கள் இலங்கையில் பயிற்சி பின்னர் மீண்டும் தமிழகம் திரும்பி இருப்பதாகவும் இந்த ஆவனத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கு எதிராக மறுமலர்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொது செயலாளர் வை.கோபாலசாமியால் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த தீர்ப்பாயத்தின் விசாரணை எதிர்வரும் 20ம் மற்றும் 21ம் திகதிகளில் கொடைக்கானலில் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று நாளைய தினம் இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தாவை சந்திக்கும்!

Sunday, September 30, 2012
இலங்கை::தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று நாளைய தினம் இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தாவை சந்திக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொது செயலாளர் மாவை சேனாதிராஜா இதனைத் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் போன்றோர் கலந்துக் கொள்வர் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதன் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது இந்திய விஜயத்தின் போது, மேற்கொள்ளவுள்ள சந்திப்புகள் தொடர்பிலும், இந்தியாவிடம் முன்வைக்கவுள்ள யோசனைகள் தொடர்பிலும் இந்திய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்திய பிரதமர் மன்மோகன்சிங், வெளியுறவுகள் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் போன்றோரை சந்திக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டீருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களை இலங்கையில் இரண்டாம் குடிமக்கள் என்று கருத முடியாது:தமிழ் மக்கள் இரண்டாம் குடி மக்கள் என்ற பிரசாரத்தை முன்வைத்தே புலிகள் தமது இயக்கத்தை வளர்த்துக் கொண்டனர். - ரொஹான் குணரத்ன!

Sunday, September 30, 2012
இலங்கை::தமிழ் மக்களை இலங்கையில் இரண்டாம் குடிமக்கள் என்று கருத முடியாது என்று சிங்கபூரில் உள்ள சர்வதேச பயங்கரவாத ஆராய்சி மையத்தின் தலைவர் ரொஹான் குணரத்ன தெரிவித்துள்ளார்.


ஏசியன் ட்ரிபியுன் இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் இரண்டாம் குடி மக்கள் என்ற பிரசாரத்தை முன்வைத்தே  புலிகள் தமது இயக்கத்தை வளர்த்துக் கொண்டனர்.

எனினும் இலங்கையில் தமிழ் மக்கள் பல்வேறு துறைகளில முக்கிய வகிபாகத்தை கொண்டுள்ளனர்.

கொழும்பில் 80 சதவீதமான தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களே வர்த்தக செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர்.

இவ்வாறான நிலையில் தமிழ் மக்களை இரண்டாம் குடி மக்கள் என்று கூற முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 13ம் திருத்தச் சட்டம் என்பது இந்தியாவின் தினிப்பு என்றும், இந்தி இராணுவம் இலங்கையில் இருந்த போது சந்தித்த தோல்வியை சரி செய்வதற்காகவே இந்த திருத்தம் முன்வைக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் பேசும் பிரதேச செயலகங்களுக்கு தனிச் சிங்களத்தில் வரும் கடிதங்களால் அதிகாரிகள் திண்டாட்டம்!

Sunday, September 30, 2012
இலங்கை::அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ், முஸ்லிம் பகுதிகளிலுள்ள பிரதேச செயலகங்களுக்கு அம்பாறை மாவட்ட செயலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும் சுற்றறிக்கைகள் மற்றும் கடிதங்கள் யாவும் தனிச் சிங்களத்தில் அனுப்பி வைக்கப்படுவதால் அதிகாரிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகுவதாக கவலை தெரிவிக்கப்படுகின்றது.

சிங்கள மொழியில் கிடைக்கின்ற சுற்றறிக்கைகள், கடிதங்களை தமிழில் மொழிபெயர்ப்பு செய்ய பிரதேச செயலகங்களில் மொழி பெயர்ப்பாளர்கள் இல்லாத நிலையில் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்த நிலைமையைச் சுட்டிக் காட்டி மாவட்ட செயலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும் சுற்றறிக்கைகள், கடிதங்களை தமிழ் மொழியில் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி அகில இலங்கை அரச பொது ஊழியர் சங்கம், அம்பாறை மாவட்ட செயலாளருக்கு மனு ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது;

அம்பாறை மாவட்டத்தின் தமிழ், முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள பிரதேச செயலகங்களுக்கு அம்பாறை மாவட்ட செயலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படுகின்ற சுற்றறிக்கைகள், கடிதங்கள் யாவும் தனிச் சிங்கள மொழியிலேயே அனுப்பப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக நிர்வாக ரீதியாகப் பிரதேச செயலகங்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகுவதுடன், மொழி பெயர்ப்பாளர்களும் இல்லாத நிலையில் பெரும் சிரமங்களும் ஏற்பட்டு வருகின்றன.

அதேபோல் பிரதேச அபிவிருத்தித் திட்டங்கள் சம்பந்தமான விடயங்கள், விபரங்கள் யாவும் இங்கு சிங்கள மொழியில் கோரப்படுவதனாலும், அபிவிருத்திக்குப் பொறுப்பான அதிகாரிகள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் போன்றோரும் பல சிரமங்களுக்கும் ஆளாகி வருகின்றனர்.

தமிழ் மொழி அரச கரும மொழியாக சட்ட அமுலாக்கம் செய்யப்பட்டிருந்தும் கூட அம்பாறை மாவட்ட செயலகத்திலிருந்து தற்போது அனுப்பி வைக்கப்பட்டு வரும் சகல ஆவணங்களும் சிங்கள மொழியிலேயே அமைந்திருப்பதும் இங்கு கவலை தரக்கூடியாகவுள்ளது. இது நிர்வாக ரீதியான செயற்திட்டங்களுக்கு பின்னடைவையே ஏற்படுத்தும்.

எனவே இந்த விடயத்தில் முக்கிய கவனம் செலுத்தி மாவட்ட செயலகத்தில் அனுபவம் வாய்ந்த ஒரு தழிழ் மொழி பெயர்ப்பாளரை நியமித்து தமிழ் மொழியில் சுற்றறிக்கைகள், கடிதங்களை அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மனுவின் பிரதியொன்று பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதென தொரிவிக்கப்படுகின்றது.

ஆட்சி அமைக்க முடியாத ஆதங்கத்தில் மு. கா மீது சரமாரியான கண்டன தாக்குதல்: மாகாண சபையை நிராகரிக்கும் TNA ஆட்சியை மட்டும் எதிர்பார்ப்பது ஏன்?

Sunday, September 30, 2012
இலங்கை::கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைக்க முடியவில்லையே என்ற கூட்டமைப்பின் ஆதங்கம் முஸ்லிம் காங்கிரஸ் மீது கண்டனக் கணைகளாக வெளிப்படுகின்றது. மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் இதற்காக நிச்சயம் பாடம் படிப்பார் என்று சுரேஷ் பிரேமச்சந்திரனும், முஸ்லிம்கள் அளித்த மக்களாணைக்கு முஸ் லிம் காங்கிரஸ் துரோ கம் செய்துவிட்டது என்று சம்பந்தனும் மாறி மாறி குற்றஞ்சாட்டி வருகின்றனர். இவர்களது இக்குற்றச் சாட்டில் எவ்வளவு நியாயம் இருக் கின்றது என்பதற்கு அப் பால் இவர் களுக்கு மு.காவை சிறிதளவேனும் குற்றம்சாட்ட முடியாத அளவிற்குக் காரணங்களும் உள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாண சபையை நிராகரிக்கின்ற ஒரு கட்சி. மாகாண சபை என்பது எவ்வித அதிகாரமும் இல்லாத பொம்மை அமைப்பு என்று இன்று வரை கூறுகின்றது. தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக தமிழ்க் கூட்டமைப்பின் பின்னால் நிற்கின்றார்கள் என்பதைச் சர்வதேச சமூகத்துக்கு எடுத்துக் காட்டுவதற்காகவே தேர்தலில் போட்டியிடுவதாகப் பகிரங்கமாகக் கூறியது. சுரேஷ் பிரேமச்சந்திரன் ஒரு காலத்தில் மாகாண சபையை ஆதரித்த போதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்த பின் அவருடைய நிலைப்பாடும் மாறிவிட்டது. ஒட்டுமொத்தமாக மாகாண சபையை நிராகரிப்பவர்கள் அதன் ஆட்சி யதிகாரம் கிடைக்கவில்லையே என்பதற்காக ஆத்திரப்படுவதில் என்ன நியாயம் இருக்கின்றது?

வழக்குகளில் ஆஜராகும் சட்டத்தரணிகள் பாதகமாக எத்தனை காரணிகள் இருந்தாலும் சாதகமான ஒரு பொயின்ரை மாத்திரம் தூக்கி வைத்து மணிக்கணக்காக வாதம் செய்வார்கள். சம்பந்தனும் ஒரு முன்னணி சட்டத்தரணி. அந்தப் பாணியில் முஸ்லிம்கள் வழங்கிய மக்களாணை பற்றிப் பேசுகின்றார். முஸ்லிம் காங்கிரஸ் அதன் தேர்தல் பிர சாரத்தில் அரசாங்கத்துக்கு எதிராகப் பேசிய பேச்சுகளுக்காகவே மக்கள் அத ற்கு வாக்களித்தார்கள் என்றும் இப்போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்கள் அந்த மக்களாணைக்குத் துரோகமிழைத்து விட்டார்கள் என்றும் சம்பந்தன் கூறுவது அப்பட்டமான சட்டத்தரணி வாதம்.

முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் பிரசாரத்தின் போது அரசாங்கத்துக்கு எதிரான கருத் துக்களை மாத்திரம் கூறவில்லை. தமிழ்த் தேசியமும் முஸ்லிம் தேசியமும் சேர்ந்து செயற்பட முடியாது என்றும் கூறினார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முஸ் லிம் காங்கிரஸ் ஆதரவளிக்கப் போவதில்லை என்றும் கூறினார்கள். தேர்தலில் தனியாகப் போட்டியிடுகின்ற போதிலும் அரசாங்கத் தோடு சேர்ந்தே ஆட்சி அமைப்போம் என்றும் கூறினார்கள். இதுவும் முஸ்லிம்கள் வழங்கிய மக்களாணைதானே.

பிரசாரத்தின்போது அரசாங்கத்துக்கு எதிராகப் பேசியவர்கள் அரசாங்கத்தோடு ஆட்சியில் பங்கேற்பது துரோகத் தனமானது என்றால் நிராகரித்திருக்க வேண்டும். ஜனாதிபதி அழைப்பு விடுத்தால் பரிசீலிப்போம் என்று கூறியிருக்கக்கூடாது. முஸ்லிம் காங்கிரஸ் எவ்வளவுக்கு அரசாங்கத்தை விமர்சித்ததோ அதனிலும் கூடுதலாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விமர்சித்தது. பரிசீலிப்போம் என்பது சம்மதத்துக்கு முதல் படி என்று எல்லோருக்கும் தெரியும். எங்கள் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால் ஆட்சியில் இணையச் சம்மதம் என்பதே எங்கள் நிலைப்பாடு என்று அடைக்கலநாதன் சம்பந்தனைப் பிணை எடுக்க முயற்சித்தது வெறுமனே ஒரு நாடகமே. சம்பந்தன் பரிசீலிப்போம் என்று கூறுவதற்கு முன்னரே கிழக்கில் தேசிய அரசாங்கம் என்றும் கூட்டமைப்பும் பங்குபற்றும் என்றும் கூட்டமைப்பிற்குச் சாதகமான யாழ்ப்பாண சிறுபத்திரிகை செய்தியை வெளியிட்டுவிட்டது.

முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் மக்களை ஏமாற்றிவிட்டதோ இல்லையோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களைத் தொடர்ச்சியாக ஏமாற்றி கொண்டிருக்கின்றது. சர்வதேச சமூகம் தீர்வைப் பெற்றுத் தரும் என்று கூறும் இவர்கள் எவ்வாறான தீர்வைப் பெற்றுத் தரும் என்பதைக் கூறுவதில்லை. அவர்களால் அதைச் சொல்ல முடியாது. சர்வதேச சமூகம் இனப்பிரச்சினையின் தீர்வில் பெரிதாக அக்கறை கொள்ளவில்லை என்பது கூட்டமைப்புத் தலைவர்களுக்குத் தெரியும். ஆனால், சர்வதேச சமூகம் தீர்வைப் பெற்றுத் தரும் என்று கூறுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி இல்லை.

சர்வதேச சமூகம் எவ்வாறான தீர்வைப் பெற்றுத் தரும் என்பது பற்றி எதுவும் கூறக்கூடாது என்பதில் கவனமாக இருந்த கூட்டமைப்புத் தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தின்போது கோட்டைவிட்டு விட்டார்கள். முழுமையான அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட அரசியல் தீர்வைச் சர்வதேச சமூகம் பெற்றுத் தரும் என்று மக்களுக்கு நம்பிக்கையூட்டினார்கள். அந்த நம்பிக்கை இவர்களுக்கு வாக்குகளாகக் குவிந்தது. இது இவர்களுக்குக் கிடைத்த மக்களாணை. மற்றவர்கள் பற்றி விமர்சித்துக் கொண்டி ராமல், சர்வதேச சமூகத்தின் மூலம் அரசியல் தீர்வைப் பெற்றுத் தருவது தான் மக்களாணைக்கு விசுவாசமான செயற்பாடு.

எஸ்.சுரேஷ்

'சப்றா' நிதி நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தாக்கல்? பாதிக்கப்பட்டு யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து சென்ற மக்கள் நாடு திரும்பி அதிரடி நடவடிக்கை!

Sunday, September 30, 2012
இலங்கை::இதுவரையில் சரியாக எண்ணிக்கை தெரியவராத பலநூறு உழைப்பாளிகள் வர்க்க ஏழை மற்றும் நடுத்தர மக்களின் சேமிப்பை ஏமாற்றிப் பெற்று ஈவிரக்கமின்றி ஏமாற்றிய சப்ரா என்றழைக்கப்படும் நிதி நிறுவனத்தில் 1993 ஆம் ஆண்டுவரை தமது பணத்தை வைப்பிலிட்ட மக்கள் அந்நிறுவனத்திற்கெதிராக வழக்குத் தொடர நடவடிக்கைகளை எடுத்து வருவதாக நம்பகரமாக தெரியவந்துள்ளது.

இந்நிதி நிறுவனத்தில் தமது உழைப்பை வைப்பிலிட்டுப் பின்னர் ஏமாற்றப்பட்ட நிலையில் 1990 களில் யுத்தம் காரணமாகப் புலம் பெயர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்று குடியேறிய மக்களே இப்போது திரும்பி வந்து வழக்குத் தொடரும் அலுவல்களில் ஈடுபட்டு வருவதாகத் தெரிய வருகிறது.

அக்காலத்தில்  புலிகளின் ஆதிக்கம் வடக்கில் மேலோங்கிக் காணப் பட்டதால் வாய்மூடியிருந்த மக்கள் இன்று சமாதானம் திரும்பி வந்துள்ள நிலையில் உரிமையாளரை குறிவைப்பதில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக கொழும்பிலுள்ள பிரபல சட்டத்தரணிகளுடன் இவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட் டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இவ்விடயத்தில் முனைப்புடன் செயற் பட்டுவரும் பெருந்தொகை பணத்தை இழந்த சிலர் இவ்வாறு மேற்படி நிதி நிறுவனத்தில் பணத்தை வைப்பிலிட்டு ஏமாற்றப்பட்டவர்கள் எங்கிருந்தாலும் தம்முடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

சர்வதேச மனித உரிமை நிறுவனங்களின் அறிக்கைகளில் இந்நிறுவனத்தில் ஓய்வூதியர் கள் வைப்பிலிட்டிருந்த ஏறத்தாழ 60 மில் லியன் ரூபாய்கள் சூறையாடப்பட்டதாகவும், இதைவிட திருமணமாகாத தமது பெண் பிள்ளைகள் பெயரிலும், குழந்தைகள் பெயரிலும் பல ஏழைப் பெற்றோர்கள் வைப்பிலிட்டிருந்த ஏறத்தாழ 46 மில்லியன் ரூபாவுடன் அக்காலகட்டத்தில் அதன் உரிமையாளர் தலைமறைவாகியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் விடுதலைப் புலிகள் இருந்த காரணத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களால் அதன் உரிமையாளரைச் சட்டத்தின் முன் நிறுத்தியிருக்க முடியவில்லை. இந்த மோசடியால் பாதிக்கப்பட்ட பலர் தற்கொலை செய்து கொண்டிருந்ததாகவும் அப்போது செய்திகள் வெளியாகியிருந்தன.

யாழ்ப்பாண வரலாற்றில் முதல் பெரு பண மோசடி இந்த நிதி நிறுவன மோசடியே என கூறப்படுகிறது. இந்தப் பண மோசடிப் பிரச்சினைகள் பல தற் போது நீதிமன்றின் முன் கொண்டுவரப்படு கின்றன எனினும் இதுவரையில் எவரும் குற்றவாளியாகக் காணப்பட்டு தண்டிக்கப் பட்டிருக்கவில்லை. இந்த நிலையில் இதன் உரிமையாளர்களைச் சட்டத்தின் முன் கொண்டுவருதல் மூலம் யாழில் அதிகரித்துவரும் இந்த பணமோசடிப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளிவைக்க முடியும் என சமூக அக்கறையுள்ள பல தமிழ் புத்திஜீவிகள் கருதி செயற்படத் தொடங்கியுள்ளனர் என தெரியவருகிறது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சப்றா நிதி நிறுவனம் பற்றி அண்மையில் பாராளுமன்றத்தில் பிரஸ்தாபித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1993ம் ஆண்டு மூடப் பட்ட சப்றா நிதி நிறுவனம் தற்போது தமிழ்க் கூட்ட மைப்பிலுள்ள ஒரு முக்கிய உறுப்பினரின் குடும்பத்தினராலேயே நிர்வகிக்கப்பட்டு வந்திருந்தது பரகசியமானது என்றும் அமைச்சர் டக்ளஸ் தெரிவித்திருந் தமை குறிப்பிடத்தக்கது.

எஸ்.சுரேஷ்.

பிரபல நடிகையுடன் உல்லாசம் சீன தலைவர் பதவி பறிப்பு!

Sunday, September 30, 2012
பீஜிங்::ஊழல், செக்ஸ் புகாரில் சிக்கிய சீன தலைவர் போ ஷிலாயின் பதவிகள் பறிக்கப்பட்டன. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட தலைவர்களில் ஒருவராக இருந்தவர் போ ஷிலாய். செல்வாக்கு மிக்கவர். அடுத்த பிரதமர் என்ற அளவில் பரபரப்பாக பேசப்பட்டவர். இந்நிலையில் அவர் மீது அடுக்கடுக்காக ஊழல் புகார்கள் எழுந்தன. இங்கிலாந்து தொழிலதிபர் நெயில் என்பவரை கொலை செய்ததில் தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. ‘பிரபல சீன நடிகை ஷாங் ஷியிக்கு அரசியல் செல்வாக்கு உள்ள தலைவர்களுடன் தொடர்பு உள்ளது. போ ஷிலாய்க்கும் அவருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இந்த உறவின் மூலமாக ஷியி ரூ.530 கோடிக்கும் மேல் சொத்து குவித்துள்ளார்’ என சீன பத்திரிகையில் தொடர்ந்து செய்திகள் வெளியாயின.
இந்நிலையில், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பதவியில் இருந்து போ ஷிலாய் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
 
 அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். சீன பாராளுமன்றமான தேசிய மக்கள் காங்கிரசில் இருந்து ஒரு வாரத்தில் நீக்கப்படுவார் என்று தெரிகிறது. சீனாவில் மாசே துங் தலைமையிலான புரட்சியின் மூலம் மக்கள் சீன அரசு அமைக்கப்பட்டு 63 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதற்கான விழா 2 நாட்களில் தொடங்கவுள்ள நிலையில், போ ஷிலாயின் பதவிகள் பறிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன் மீது அபாண்டமாக புகார் கூறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகை ஷியி கூறியுள்ளார். ஹாங்காங்கில் வசித்து வரும் இவர் கிரவுச்சிங் டைகர், கிட்டன் டிராகன் உள்பட பல படங்களில் நடித்தவர்.

யுத்தத்தின் பின்னரான நல்லிணக்க முனைப்புக்களை சீர்குலைக்க இந்தியா முயற்சித்து வருவதாக இலங்கை குற்றம் சுமத்தியுள்ளது!

Sunday, September 30, 2012
இலங்கை::யுத்தத்தின் பின்னரான நல்லிணக்க முனைப்புக்களை சீர்குலைக்க இந்தியா முயற்சித்து வருவதாக இலங்கை குற்றம் சுமத்தியுள்ளது.

இந்திய ஊடகங்கள் இவ்வாறான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக இலங்கை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும், ஜனாதிபதியின் முயற்சியை கடந்த கால முயற்சிகளுடன் ஒப்பீடு செய்வது தவறானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

80 களில் தமிழ் ஆயுதக் குழுக்களுக்கு இந்தியாவே பயிற்சி அளித்ததாகக் குற்றம் சுமத்தியுள்ளது.

2009ம் ஆண்டு வன்னி யுத்த முன்நகர்வுகளை தடுத்து நிறுத்த இந்தியா, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகள் முயற்சி செய்ததாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பிரபாகரனோ, பொட்டு அம்மானோ அல்லது சூசையோ உயிருடன் இருந்திருந்தால் சர்வதேச சமூகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறித்து கவனம் செலுத்தியிருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் எப்போது தேர்தல் நடத்த வேண்டும் என்பது பற்றி இந்திய ஊடகங்களின் ஆலோசனை அவசியமற்றது என இலங்கை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அண்மையில் இலங்கை விவகாரம் தொடர்பில் தி ஹிந்து உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய ஊடகங்களில் கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் சாலை கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.2,262 கோடி ஒதுக்கீடு: முதல்வர் உத்தரவு!

Sunday, September 30, 2012
சென்னை::தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிக்கை: இந்த ஆண்டு ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் சாலை உள்கட்டமைப்பு பணிகளுக்காக 2,262 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதில், மாநில நெடுஞ்சாலைத்துறையின் 248 கி.மீ. நீள இடைவழித்தட மாநில நெடுஞ்சாலைகளை இருவழித்தடமாக அகலப்படுத்தும் பணிகள், 895 கி.மீ நீள சாலைகளின் கட்டமைப்பின் தரம் மற்றும் திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் பணிகள், நில ஆர்ஜித பணிகள், 27 பாலங்கள் மற்றும் சிறு பாலங்கள் புதுப்பிக்கும் பணிகள் என 397 பணிகளுக்காக ரூ.903.80 கோடி செலவில் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், இந்த பணிகளில் சென்னை நகரத்தின் முக்கிய சாலைகளை உலக தரத்திற்கு உயர்த்திடும் பணிகளும், விமான நிலையம் அருகே உள்ள மேம்பாலம், கோயம்பேட்டில் உள்ள மேம்பாலம், கத்திப்பாராவில் உள்ள மேம்பாலம், ஆகியவைகளில் பசுமைநிற பூங்காக்கள் அமைத்து அழகுபடுத்தும் பணிகளும், அண்ணா சாலையில் அண்ணா சிலை அருகில் உள்ள சுரங்கப்பாதை, சாந்தி திரை அரங்கம் அருகில் உள்ள சுரங்கப்பாதை, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள சுரங்கப்பாதை ஆகியவைகளை அழகுப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்த இடம்பெயர் மக்கள் யாரும் கிடையாது - பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ!

Sunday, September 30, 2012
இலங்கை::யுத்த இடம்பெயர் மக்கள் யாரும் கிடையாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வடக்கு யுத்தத்தினால் இடம்பெயர்ந்த சகல மக்களும் மீள்குடியேற்றப்பட்டு விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

200க்கும் குறைந்த  புலிகளின் முன்னாள் போராளிகளே தற்போது புனர்வாழ்வு பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.

விரைவில் இந்த முன்னாள் போராளிகள் சமூகத்துடன் மீள இணைக்கப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் புலிபோராளிகளின் குடும்ப உறுப்பினர்களை பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

80 வீதமான நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

யுத்த வலயங்களில் 6000 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 7000 வீடுகள் புனர்நிர்மானம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

போலியான பிரச்சாரங்களை மேற்கொள்ளாது நேரடியாக வடக்கிற்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரில் பார்வையிடுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டிலுள்ள அகதி முகாம்களில் வாழ்ந்துவரும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசாங்கம் எடுக்க வேண்டும் -ஸ்ரீ ரவிசங்கர்!

Sunday, September 30, 2012
சென்னை::தமிழ்நாட்டிலுள்ள அகதி முகாம்களில் வாழ்ந்துவரும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசாங்கம் எடுக்க வேண்டுமென வாழும் கலையமைப்பின் ஸ்தாபகரும் ஆன்மீகத் தலைவருமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நேற்று  தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சுமார் 25 – 30 வருடங்களாக இலங்கைத் தமிழர்கள் வாழ்ந்துவருகின்ற நிலையில், இதனையிட்டு தமிழ்நாடு பெருமையடைவதற்கு ஒன்றுமில்லையெனவும் அவர் கூறினார்.

பெருமளவான பங்களாதேஷ் மற்றும் நேபாள பிரஜைகளுக்கு குடியுரிமை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். இலங்கையைச் சேர்ந்த தமிழர்களுக்கு எங்களால் ஏன் குடியுரிமை வழங்க முடியாது? எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு இந்தியா மத்தியஸ்தம் வகிக்காது!

Sunday, September 30, 2012
சென்னை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு இந்தியா மத்தியஸ்தம் வகிக்காது என அறிவிக்கப்படுகிறது.

எவ்வாறெனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் மீளவும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான களத்தை அமைத்துக் கொடுக்கும் முனைப்புக்களில் இந்தியா ஈடுபடும் என தெரிவிக்கப்படுகிறது.

தேசிய இனப்பிரச்சினைக்கு காத்திராமன தீர்வுத் திட்டமொன்று எட்டப்பட வேண்டுமென்பதே இந்தியாவின் நோக்கமாக அமைந்துள்ளது எனக் குறிப்பிடப்படுகிறது.

எதிர்வரும் 10ம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகவும் இதன் போது அரசியல் தீர்வுத் திட்டம் குறித்து கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, எதிர்வரும் நவம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அகில கால மீளாய்வு அமர்வுகளின் போது இலங்கைக்கு ஆதரவளிப்பதாக இந்தியா உறுதியளித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ கிழிநொச்சியில் கோவிலொன்றை திறந்துவைத்தார்!

Sunday, September 30, 2012

இலங்கை::பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ நேற்று (செப். 29) கிழிநொச்சிக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்ரை மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்தின் போது செயலாளர் மஹாதேவ ஆசிரம சிறுவர் இல்லத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கோவிலை திறந்துவைத்த்துடன் அவரது வருகையை உறுதிப்படுத்தும் வகையில் பதிக்கப்பட்டிருந்த கல்வெட்டொன்றையும் திறந்துவைத்தார்.

இங்கு வருகைதந்த செயலாளரை ஆசிரம மாணவர்கள் தமிழர்களின் பாரம்பரிய கலாச்சார நிகழ்வுகளுடன் வரவேற்றனர்.பாதுகாப்புச் செயலாளர் தேசிய கொடியேற்றியதைத் தொடர்ந்து மாணவர்கள் தேசிய கீதத்தையும் இசைத்தனர்.

இந் நிகழ்வின் போது செயலாளர் ஆசிரமம் தொடர்பான ஆவணங்களை ஆசிரமத்தின் தலைவரிடம் வைபப ரீதியாக கையளித்தார்.

இக் கோவிலானது எல்.ரீ.டீ.ஈ யினரின் பயங்கரவாத நடவடிக்கைகளின் போது முற்றாக சேதமடைந்திருந்த நிலையில் ஆசிரமத்தின் அதிபரின் வேண்டு கோளுக்கினங்க பாதுகாப்புப் படையினரால் இக் கோவில் நிர்மாணிக்கப்பட்டது.அத்துடன் இதற்கான நிதி கொழும்பு சிபிங் லைன் நிருவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு.எரிக் அம்பலாங்கொட அவர்களால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஆசிரமத்தில் 323 மாணவ மாணவியர் கல்விகற்கின்றனர் இவர்களில் 146 மாணவர்களும் 177 மாணவியரும் அடங்குவர்.

பிள்ளையான் கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கு பெரும் துரோகம் இழைத்துள்ளார்-பாராளுமன்ற உறுப்பினரர் ஹரீஸ்!

Sunday, September 30, 2012
இலங்கை::கிழக்கு மாகாண முதலமைச்சராக தமிழர் ஒருவர் இடம்பெறாமைக்கு முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் தான் காரணமாவார். ஏனெனில் கிழக்கு மாகாணத்தில் தன்னை விடுத்து வேறொரு தமிழர் அமைச்சராவதை அவர் விரும்பவில்லை. இதன் மூலம் பிள்ளையான் கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கு பெரும் துரோகம் இழைத்துள்ளார் என்று திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரர் ஹரீஸ் தெரிவித்தார்.

நேற்று சனிக்கிழமை கல்முனைகுடி பர்ஜீஸ் மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பாராளுமன்ற உறுப்பினரர் ஹரீஸ் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:-

சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேரம் பேசும் சக்தியினால் தான் கிழக்கில் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இல்லையென்றால் கிழக்கில் மீண்டும் தமிழர் ஒருவரே முதலமைச்சர் பதவியில் அமர்த்தப்பட்டிருப்பார்.

கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவரை முதலமைச்சராக நியமிக்க வேண்டுமென இந்தியா, அமெரிக்கா, நோர்வே உட்பட சர்வதேச நாடுகள் அரசுக்கு பாரியளவில் அழுத்தம் கொடுத்து வந்த போதிலும் முஸ்லிம் காங்கிரசின் பலத்தினால அவற்றையெல்லாம் முறியடித்து முஸ்லிம் முதலமைச்சர் என்ற கனவை நனவாக்கியுள்ளோம்.

எமது முஸ்லிம் காங்கிரசைப் பொறுத்தளவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் போன்று செயற்பட முடியாது. அவர்களுடைய இலக்கு வேறு, நமது அரசியல் பாதை வேறு.

கிழக்கு மாகாண சபை ஆட்சி அமைப்புக்கு மு.கா. அரசுக்கு ஆதரவு வழங்குவதென மேற்கொண்ட தீர்மானத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு விமர்சித்து வருகிறது. ஆனால் அதில் எந்த நியாயமும் இல்லை.

கிழக்கு மாகாணத்தில் த.தே.கூட்டமைப்புடன் இணைந்து மு.கா. ஆட்சியமைத்திருந்தால் முஸ்லிம்கள் நாட்டைக் காட்டிக் கொடுத்து விட்டதாக சிங்களப் பேரினவாதிகள் கிளர்ந்தெழுவார்கள். அது நமது ஒட்டு மொத்த சமூகத்திற்கும் பெரும் பாதிப்பாக அமையும்.

கிழக்கு மாகாண தேர்தலை மாத்திரம் முன்வைத்தே தமிழ் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம்கள் குறித்துப் பேசி வந்தது. அதற்கு முன்னர் அவர்கள் முஸ்லிம் சமூகத்தைப் பற்றி கணக்கில் எடுத்து பேசவில்லை.

அது ஒரு புறம் இருக்க தமிழ் இளைஞர்களுடைய தியாகம்தான் இலங்கையில் மாகாண சபை முறைமை ஏற்படுவதற்கு காரணமாகும். ஆனாலும் மாகாண முறைமையினை பெறுவதற்குக் காரணமாக இருந்த தமிழ் சமூகத்துக்கு கிழக்கு மாகாண சபையில் ஓர் அமைச்சு கூட ஒதுக்கப்படவில்லை என்பது எமக்கு கவலையளிக்கிறது. தமிழர் ஒருவர் அமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் என்று அரசை மு.கா. வலியுறுத்திய போதிலும் அது வெற்றியளிக்கவில்லை.

கிழக்கு மாகாண அமைச்சரவையில் தமிழர் ஒருவர் இடம்பெறாமைக்கு முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் தான் காரணமாவார். ஏனெனில் கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவர் அமைச்சராவதை அவர் விரும்பவில்லை. இதன் மூலம் பிள்ளையான் தமிழ் மக்களுக்கு பெரும் துரோகமிழைத்துள்ளார்.

அதேவேளை கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களில் யார் யாருக்கு அமைச்சுப் பதவிகளைக் கொடுப்பது என்று தலைவர்தான் தீர்மானித்தார். அதற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.

ஆனால் மு.கா. மாகாண சபை உறுப்பினரொருவர் தனக்கு அமைச்சுப் பதவி கிடைக்காமைக்கு ஹரீஸ் எம்.பி.யும், கல்முனை மேயருமே காரணம் என்று குற்றம் சுமத்தியுள்ளார். இது அபாண்டமான குற்றச்சாட்டாகும். என்றாலும் இது குறித்து நான் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை” என்றும் ஹரீஸ் எம்.பி.குறிப்பிட்டார்.

Saturday, September 29, 2012

கோல்லம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் 3ஆம் திகதி கைது செய்யப்பட்ட ஆட்கடத்தலுடன் தொடர்புடைய 15 இலங்கையர்கள் இன்று நாட்டிற்கு திருப்பியனுப்பப்படவுள்ளனர்!

Saturday, September 29, 2012
திருவனந்தபுரம்::கோல்லம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் 3ஆம் திகதி கைது செய்யப்பட்ட ஆட்கடத்தலுடன் தொடர்புடைய 15 இலங்கையர்கள் இன்று நாட்டிற்கு திருப்பியனுப்பப்படவுள்ளனர்!

 கோல்லம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் 3ஆம் திகதி கைது செய்யப்பட்ட ஆட்கடத்தலுடன் தொடர்புடைய 15 இலங்கையர்கள் இன்று நாட்டிற்கு திருப்பியனுப்பப்படவுள்ளனர்.
தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவர்கள் கடந்த 17ஆம் திகதி நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டதை அடுத்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவதாக த ஹிந்து ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த 15 இலங்கையர்களும் திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து இன்று திருப்பி அனுப்பப்படுவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட போதிலும் அவர்களைத் திருப்பி அனுப்புவதற்கான நடைமுறைகள் நிறைவடையும் வரை நலன்புரி நிலையமொன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் 15 பேரும் இந்த நாட்டு குடிவரவு குடியகல்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய குடிவரவு சட்டத்திற்கமைய உரிய ஆவணங்கள் இன்றியும் சிறுவர்கள் மற்றும் பெண்களுடன் 151 பேரை சட்டவிரோதமாக மீன்பிடி படகொன்றில் அவுஸ்திரேலியாவுக்கு கடத்தியதாகவும் இவர்கள் மீது குற்றஞ் சுமத்தப்பட்டிருந்தது.

திவிநெகும சட்டமூலத்தை ௭திர்த்து கூட்டமைப்பு வாக்களிக்கும் இரா. சம்பந்தன்!

Saturday, September 29, 2012
இலங்கை::உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் மாகாண சபைகளின் அங்கீகாரம் பெறுவதற்காக சமர்ப்பிக்கப்படும் திவிநெகும சட்டமூலத்தை கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பிக்கும் போது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ௭திர்த்து வாக்களிக்கும் ௭ன அக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார்.

13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபைகளினால் மேற்கொள்ளப்படவிருக்கும் அபிவிருத்தி திட்டங்களை மத்திய அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் மேற்கொள்ளப்படுவதற்கு திவிநெகும சட்டம் அனுமதிக்கின்றது. மாகாண சபைகளுக்கு 13ஆவது திருத்தத்தின் படி வழங்கப்பட வேண்டிய அதிகாரங்களை பெறுவதற்காக போராடுவோம் ௭ன்று கூறும் முஸ்லிம் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர்கள் கிழக்கு மாகாண சபையில் திவிநெகும சட்ட மூலத்தை ௭திர்த்து வாக்களிப்பார்களா? ௭னவும் சம்பந்தன் கேள்வி ௭ழுப்பியுள்ளார் .

தமிழகத்திற்கான பயண எச்சரிக்கையை தளர்த்துவது குறித்து ஆராய நடவடிக்கை - நியோமல் பெரேரா!

Saturday, September 29, 2012
இலங்கை::இலங்கையர்கள் தமிழகத்திற்கான பயணங்களை மேற்கொள்வது குறித்து தற்காலிகமாக விடுக்கப்பட்டிருந்த பயண எச்சரிக்கையை தளர்த்துவது குறித்து வெளிவிவகார அமைச்சு ஆராயவுள்ளது.
தமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையை ஆராய்ந்த பின்னரே தற்காலிக பயண எச்சரிக்கையை தளர்த்தவுள்ளதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்துள்ளார்.

சில வாரங்களுக்கு முன்னர் தமிழகத்திலுள்ள தேவாலயம் ஒன்றிற்கு யாத்திரை மேற்கொண்டிருந்த இலங்கையர்களுக்கு இடையூறு விளைவிக்கப்பட்ட சம்பவம் குறித்து இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடியுள்ளதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

புலம்பெயர் தமிழர்கள் அமைப்புடன் தொடர்புடைய இடதுசாரி உறுப்பினர்களால் இலங்கையர்களுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டிருந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமான முறையில் தங்கக்கட்டிகளைக் கடத்திச் செல்ல முயன்ற இரண்டு நபர்கள் கைது!

Saturday, September 29, 2012
இலங்கை::இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமான முறையில் தங்கக்கட்டிகளைக் கடத்திச் செல்ல முயன்ற இரண்டு நபர்கள் நேற்று கட்டுநாயக்க விமானநிலைய சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் இருவரும் சென்னையைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
 இவர்கள் கடத்திச் செல்ல முயன்ற தங்கத்தின் நிறை 858 கிராம் என்பதுடன் அதன் மொத்தப் பெறுமதி ரூபா 60 இலட்சம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
 இருவரும் முறையே நேற்று நள்ளிரவு 12.25 மணி, அதிகாலை 5.30 மணி அளவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்....

இலங்கையை மையமாக வைத்து தங்க கடத்தல்கள் இடம்பெற்று வருவதாக  செய்தி வெளியிடடுள்ளன.

டுபாய் மற்றும் சிங்கபூர் போன்ற நாடுகளில் இருந்து இலங்கை ஊடாக இந்தியாவுக்கு தங்கங்கள் கடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒருமாத காலப்பகுதியில் இலங்கையில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்திய 13 பேர் இவ்வாறு சென்னை வானூர்தி நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து 3.5 கிலோகிராம் தங்கம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படடுள்ளது.

இதற்கிடையில், 60 லட்சம் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளை சென்னைக்கு கடத்திச் செல்ல முற்பட்ட இந்தியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒருவர் இன்று அதிகாலை ஒரு மணி அளவிலும், மற்றையவர் இன்று காலை 5 மணி அளவிலும் கைது செய்யப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து 10 தங்க பிஸ்கட்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

நவுரு தீவுக்கு செல்ல விரும்பாத இலங்கை அகதிகளின் இரண்டாவது குழு இன்றைய தினம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது!

Saturday, September 29, 2012
நவுரு தீவுக்கு செல்ல விரும்பாத இலங்கை அகதிகளின் இரண்டாவது குழு இன்றைய தினம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் கிரிஸ் போவன் இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் இவ்வாறு 28 பேர் அவுஸ்திரேலியாவில் இருந்து கொழும்புக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே நவுரு தீவிற்கு மாற்றப்பட்டிருந்த இரண்டு பேரும், கிறிஸ்மஸ் தீவில் இருந்த 20 பேரும் அவர்களுடன், விலாவுட் தீவில் இருந்த ஆறு பேரும் இவ்வாறு நாடு திரும்ப விருப்பம் வெளியிட்டதைத் தொடர்ந்து, இலங்கைக்கு திருப்பி அனுப்ப்பட்டுள்ளனர்.
அங்கிருந்து நாடு திரும்ப விரும்பும் அகதிகளுக்கு ஆறு லட்சம் ரூபாய் பணம் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்க்பபடுகிறது.

ஐ.நா சபையில் டெசோ (புலி ஆதரவு) தீர்மானம்: மு.க.ஸ்டாலின் 6-ந்தேதி நியூயார்க் பயணம்!


Saturday, September 29, 2012
சென்னை::தி.மு.க தலைவர் கருணாநிதி ஆகஸ்டு மாதம் சென்னையில் நடந்தது. இதில் இலங்கை தமிழர்கள் நலனை காக்கும் வகையில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானங்களை ஐ.நா.சபையிடம் கொடுக்க தி.மு.க முயற்சி செய்தது. ஆனால் மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்ததால். ஐ.நா சபையிடம் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டது.

தற்போது தி.மு.க சார்பில் டெசோ (புலி ஆதரவு)  மாநாட்டு தீர்மானங்களை ஐ.நா சபையில் கொடுக்க மத்திய அரசு அனுமதி அளித்து இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் டெசோ (புலி ஆதரவு)  அமைப்பின் கலந்துரையாடல் கூட்டம் வருகிற 3-ந்தேதி தி.மு.க  (புலி ஆதரவு) தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னையில் நடக்கிறது.

கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீர பாண்டியன், முன்னாள் மத்திய மந்திரி சுப்புலட்சுமி ஜெகதீசன், வக்கீல் ராதாகிருஷ்ணன், ஹசன் முகமது ஜின்னா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

காவிரியில் கர்நாடகா தண்ணீர் திறந்து விட வற்புறுத்தி சிதம்பரத்தில் இருந்து திருச்சிக்கு திருமாவளவன் வேன் பயணம் செய்வதால் டெசோ கூட்டத்தில் அவர் கலந்து கொள்வாரா என்பது தெரியவில்லை.

இலங்கை போரில் நடந்த மனித உரிமை மீறல் குறித்து ஐ.நா.சபையின் மனித உரிமை ஆணையம் அக்டோபர், நவம்பரில் ஆய்வு நடத்த உள்ளது. இந்த ஆய்வு பொறுப்பை ஏற்க இருக்கும் இந்தியா, மனித நேயத்துடன் நடக்க வேண்டும் என்று 3-ந்தேதி நடக்கும் கூட்டத்தில் வற்புறுத்தப்படும் என்று தெரிகிறது.

டெசோ(புலிஆதரவு)  மாநாட்டு தீர்மானங்களை ஐ.நாசபையில் வழங்குவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது. இந்த கூட்டத்தை தொடர்ந்து மு.க.ஸ்டாலின், பாராளுமன்ற தி.மு.க. தலைவர் டி.ஆர்.பாலு, ஆகியோர் அக்டோபர் 6-ந்தேதி நியூயார்க் செல்கிறார்கள். அங்கு ஐ.நா.சபையில் டெசோ (புலி ஆதரவு)  மாநாட்டு தீர்மானங்களை அவர்கள் கொடுக்கிறார்கள்.

புலிகளால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல்!

Saturday, September 29, 2012
சென்னை::புலிகள் இயக்கம் இந்தியாவுக்கு இன்னும் அச்சுறுத்தலாகவே இருப்பதாக,  மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

 புலிகள் இயக்கத்துக்கு எதிராக இந்திய அரசாங்கம் இரண்டு வருட தடையை நீடித்துள்ளது.

இது நியாயமானதா? இல்லையா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள தீர்ப்பாயம் நேற்றைய தினம் சென்னையில் கூட்டப்பட்டது.

இதில் கருத்து வெளியிட்ட இந்தியாவின் சர்வதேச பாதுகாப்பு அமைச்சின் பணிப்பாளர் ஆர்.கே.சுமன், புலிகள் தமிழகத்தை தளமாக கொண்டு மீண்டும் ஒன்றிணைய முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழ் நாட்டின் சில ஒழுங்கமைப்புகளின் ஒத்துழைப்புடன்  புலிகள் மீளிணைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பான மாவோயிஸ்ட் இயக்கத்துடன் இணைந்து  புலிகள் செயற்பட்டு வருவதாகவும் மத்திய அரசாங்கத்துக்கு தகவல் கிடைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கையில் புலிகள் தோற்கடிக்கப்பட்ட போதும், தமிழீழத்தை அடையும் அவர்களின் குறிக்கோளை அவர்கள் இன்னும் கைவிடவில்லை என்றும் ஆர்.கே.சுமன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்தியாவுக்கு தொடர்ந்தும்  புலிகள் அமைப்பு அச்சுறுத்தலாகவே இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த தீர்ப்பாயம் இன்றைய தினம் மீண்டும் கூடவுள்ளது.

புலிகளின் சட்டமா அதிபரின் மனைவி வெளிநாடு செல்ல முயற்சித்த போது கைது!

Saturday, September 29, 2012
இலங்கை::புலிகளின் சட்டமா அதிபர் எனக் கூறப்படும் கிளிநொச்சியை சேர்ந்த லங்கேஸ்வரன் கைலாசபதியின் மனைவியான லதாமுனி பாலசிங்கம் என்பவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊடக வெளிநாடு செல்ல முயற்சித்த போது, அரச புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார் என திவயின குறிப்பிட்டுள்ளது.

அவர் போலி ஆவணங்களை தாக்கல் செய்து கடவூச்சீட்டை பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அத்துடன் இந்த பெண்ணுக்கு உதவியாக கூறப்படும் கொழும்பை சேர்ந்த தமிழர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைதுசெய்யப்பட்ட லதாமுனி பாலசிங்கம், இந்தியா சென்று அங்கிருந்து சுவிஸர்லாந்து செல்ல திட்டமிட்டிருந்தாக சந்தேகிப்பதாக பாதுகாப்பு தரப்பினரின் தகவல்கள் கூறியுள்ளன. இந்த பெண் புலிகளின் மலாதி படைப்பிரிவில் பணியாற்றியுள்ளார் எனவும் திவயின குறிப்பிட்டுள்ளது.

இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்க புலி ஆதரவாளர்கள் மீளவும் முனைப்பு!

Saturday, September 29, 2012
இலங்கை::இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்க புலி ஆதரவாளர்கள் மீளவும் முனைப்பு காட்டி வருவதாக  ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அகில கால மீளாய்வு அமர்வுகளில் இவ்வாறு இலங்கைக்கு எதிரான சர்வதேச யுத்தக் குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

க்ளோபல் தமிழ் போரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல தரப்பினர் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, க்ளோபல் தமிழ் போரம் அமைப்பை புலி ஆதரவு அமைப்பாக வெளிக்காட்ட இலங்கை அரசாங்கம் முயற்சிப்பதாக அமைப்பின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் 15 நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்டு இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தியமைக்காக இலங்கைத் தலைவர்களை தண்டிக்க சிலர் முயற்சித்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார். சில தரப்பினர் போலியான பிரச்சாரங்களை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்ட காரணத்தினால் தமிழ் மக்கள் சுதந்திரத்தை அனுபவித்து வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவினூடாக இலங்கைக்கு அழுத்தங்கொடுத்து தீர்வைப் பெறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்குமானால், அதற்கு எதிராக சிங்கள மக்கள் கிளர்ந்தெழுவர் - தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்!

Saturday, September 29, 2012
இலங்கை::இந்தியாவினூடாக இலங்கைக்கு அழுத்தங்கொடுத்து தீர்வைப் பெறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்குமானால், அதற்கு எதிராக சிங்கள மக்கள் கிளர்ந்தெழுவர். சிங்கள மக்களின் அனுமதியின்றி நாட்டில் எதையும் கூட்டமைப்பால் பெறமுடியாது என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்திய விஜயம் தொடர்பாக கருத்து வெளியிடும்போதே அந்த இயக்கத்தின் செயலாளர் கலாநிதி வசந்த பண்டார மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கையாளும் வழிமுறைகள் நாட்டுக்குப் பொருத்தமற்றவையாக இருக்கின்றன. அது சர்வதேச தீர்வையே எதிர்பார்க்கின்றது.

தமிழ் மக்களுக்கு எதையாவது பெற்றுக்கொடுப்பதற்குக் கூட்டமைப்பினருக்கு அக்கறையிருந்தால், அவர்கள் தெரிவுக்குழுவுக்குச் செல்லவேண்டும். அதை விடுத்து இனவாதம் பேசுவதால் நடக்கப்போவது ஒன்றுமில்லை. குறிப்பாக, இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு விஜயம் செய்து தீர்வு தொடர்பில் பேசுவது அரசை வெறுப்படையச் செய்யும். இதுவே யதார்த்தபூர்வமான உண்மையுமாகும்.

இந்தியாவினூடாக இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து தீர்வொன்றைப் பெற்றுக் கொள்வதே கூட்டமைப்பின் நோக்கமாகும். அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால் அதற்கு எதிராக சிங்கள மக்கள் கிளர்ந்தெழுவர்.

இந்தியாவுக்கு கூட்டமைப்பு செல்வதால் தீர்வு முயற்சிகள் உள்நாட்டில் பாதிக்கப்படுவதுடன், மேலும் காலதாமதம் ஏற்படும். இதைக் கூட்டமைப்பு உணரவேண்டும். அதேவேளை, சிங்கள மக்களின் விருப்பத்திற்கு மாறானதொரு தீர்வைக் கூட்டமைப்பால் பெறமுடியாது என்பதையும் கூறிவைக்க விரும்புகின்றோம் என வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.

3,40 கோடி வேட்டி - சேலைகள் பொங்கலின்போது வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு!

Saturday, September 29, 2012
சென்னை::தமிழர் திருநாளாம் பொங்கலின்போது 3 கோடியே 40 லட்சம் வேட்டிகள், சேலைகள் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:-

தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா தலைமையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா வேட்டிகள் மற்றும் சேலைகளின் தற்போதைய உற்பத்தி நிலவரம் மற்றும் விநியோகம் குறித்து நேற்று (28.9.12) தலைமைச் செயலகத்தில் விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

 இந்தக் கூட்டத்தின் முடிவில், நடப்பாண்டில் விநியோகம் செய்யப்பட வேண்டிய வேட்டிகள் மற்றும் சேலைகளை 15.10.12-க்குள் வழங்கிட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும், 2013-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்க வேண்டிய 1 கோடியே 70 லட்சம் விலையில்லா வேட்டிகள் மற்றும் 1 கோடியே 70 லட்சம் விலையில்லா சேலைகள், என மொத்தம் 3 கோடியே 40 லட்சம் விலையில்லா வேட்டிகள் மற்றும் சேலைகளை வழங்கும் பணி 1.1.2013 அன்று ஆரம்பிக்கப்பட்டு பொங்கல் பண்டிகை நாட்களுக்குள் அனைவருக்கும் அளிக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், நிதித்துறை முதன்மைச் செயலாளர், வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மாகாணசபைகளுக்கு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் - தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார!

Saturday, September 29, 2012
இலங்கை::மாகாணசபைகளுக்கு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மாகாணசபைகளுக்கு சுயாட்சி அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறெனினும், பெரும்பான்மை சிங்கள மக்கள் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவளிப்பாளர்களா என்பதில் அரசாங்கத்திற்கு சந்தேகம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், மாகாணசபைகளுக்கு சுயாட்சி அதிகாரங்களை வழங்குவது தொடர்பிலான வாக்கெடுப்பை மக்கள் ஆதரிப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

சுயாட்சி அதிகாரங்கள் என்பதன் மூலம் மத்திய அரசாங்கம் செய்யும் கடமைகளை செய்வதனையே தாம் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் தொடர்பில் ஆணைக்குழுக்களை நியமிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமான முறையில், அவுஸ்திரேலியாவிற்கு வரும் எந்தவொரு நபருக்கும் நாட்டினுள் பிரவேசிக்க அனுமதியளிக்கப்பட மாட்டாது - அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது!

Saturday, September 29, 2012
சட்டவிரோதமான முறையில், அவுஸ்திரேலியாவிற்கு வரும் எந்தவொரு நபருக்கும் நாட்டினுள் பிரவேசிக்க அனுமதியளிக்கப்பட மாட்டாது என அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.


இந்த தகவலை, அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ளது.

இவ்வாறு சட்டவிரோதமான முறையில், அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முனைபவர்கள், கைது செய்யப்பட்டு நாவுறு தீவில் உள்ள முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுவர் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சட்ட விரோதமான முறையில் செல்லும் சுற்றுலா பயணிகள் தொடர்பான விசாரணைகள் நாவுறு தீவிலேயே இடம்பெறும் எனவும், அவுஸ்திரேலிய அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் காரணமாக சட்டவிரோதமாக பிரவேசிக்க முனையும் அகதிகள், இது தொடர்பாக அவதானத்துடன் செயல்பட வேண்டும் என அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆலோசனை வழங்கியுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்ட கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்சவை சந்தித்து உரையாடியுள்ளார்!

Saturday, September 29, 2012
இலங்கை::புதிதாக நியமிக்கப்பட்ட கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே  பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்சவை சந்தித்து உரையாடியுள்ளார்.

கடற்படை தளபதியாக பதவியேற்றதன் பின்னர் அவர் மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் இதுவென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது, பாதுகாப்பு தொடர்பான பல விடயங்கள் குறித்து கருத்து பரிமாறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை கடற்படை வரலாற்றின் 18 வது தளபதியாக நேற்று பதியேற்ற வைஸ் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே முன்னர் கிழக்கு பிராந்திய கடற்படை தளபதியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடதக்கது.

மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்தது ஐகோர்ட் கிளை!

Saturday, September 29, 2012
மதுரை::மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க பாதுகாப்பு வழங்கவும், மத்திய அரசு மீது கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடக்கோரி தாக்கலான வழக்கின் மீதான தீர்ப்பை, மதுரை ஐகோர்ட் கிளை ஒத்திவைத்தது.


மதுரை ஐகோர்ட் கிளை வக்கீல் பி.ஸ்டாலின் தாக்கல் செய்த மனு: தமிழக மீனவர்களுக்கு, முப்படை பாதுகாப்பு அளிக்க கோரி ஏற்கனவே நான் மனு செய்தேன். கடலோர காவல் படை தகுந்த பாதுகாப்பு அளிக்க ஐகோர்ட் கிளை இடைக்கால உத்தரவிட்டது. ஆனால், மீனவர்கள் மீது தாக்குதல் தொடர்கிறது. மத்திய கேபினட் செயலாளர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பாதுகாப்புச் செயலாளர், கடலோர காவல்படை துணை இயக்குனர் மீது கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும், என குறிப்பிட்டார்.

மேலும் சிலரும் இதுபோல மனு செய்தனர். மனுக்கள் நீதிபதிகள் வினோத் கே.சர்மா, ஏ.செல்வம் முன் விசாரணைக்கு வந்தன. மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வில்சன், உதவி சொலிசிட்டர் ஜெனரல் செந்தில்வேலன், அரசு சிறப்பு வக்கீல் புகழேந்தி, மனுதாரர்கள் தரப்பில் வக்கீல்கள் பீட்டர் ரமேஷ்குமார், லஜபதிராய் ஆஜராயினர். கடலோர பாதுகாப்புப் படை துணை இயக்குனர் எஸ்.கே.வர்கீஸ் தாக்கல் செய்த பதில் மனு:

பாக்ஜலசந்தி கடல் பகுதியில் நாட்டு மற்றும் இயந்திர மீன்பிடி படகுகள் உட்பட அனைத்து படகுகளுக்கும் ஜி.பி.எஸ்.,கருவிகள் பொருத்தலாம். தகவல் தொடர்புக்கு வயர்லெஸ் வழங்கலாம். அப்பகுதியில் 5 கலங்கரை விளக்குகள் உள்ளன. அவற்றை, சர்வதேச கடல் எல்லை தெரியும் வகையில், மாற்றியமைக்கலாம். பகலில் மீன் பிடிப்பவர்கள் அறியும் வகையில், சர்வதேச கடல் எல்லையில் ஒளிரும் மிதவைகளை மிதக்க விட வேண்டும். ஜி.பி.எஸ்., கருவி மூலம் மீனவர்கள் உள்ள கடல் பகுதி, அவர்கள் சர்வதேச கடல் எல்லையை கடந்துவிட்டனரா? எனவும், வானிலை நிலவரத்தை அறிந்து கொள்ளவும் முடியும். மாநில மீன்வளத்துறை, வயர்லெஸ் கட்டுப்பாட்டு மையத்தை அமைக்க வேண்டும். தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்தி, மீனவர்கள் சர்வதேச எல்லை வரை மொபைல்போன் பயன்படுத்த வழிவகை காணவேண்டும், என குறிப்பிட்டார். பீட்டர் ரமேஷ்குமார்:

சோமாலியா கடற்கொள்ளையர்கள், இத்தாலி கப்பல்படையால் மீனவர்கள் தாக்கப்பட்டனர். மத்திய அரசு சர்வதேச கோர்ட்டை நாடியது. தமிழக மீனவர் பிரச்னையில் பாரபட்சம் காட்டுகிறது.

லஜபதிராய்: பாதிக்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

வில்சன்: இழப்பீடு வழங்குவது மாநில அரசின் பொறுப்பு. எல்லை தாண்டி நடக்கும் சம்பவங்களுக்கு, இந்திய கடலோர காவல்படையை பொறுப்பாக்க முடியாது. மீனவர்களை பாதுகாக்க, மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளை எடுக்கிறது.

புகழேந்தி: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க, அந்நாட்டு கோர்ட்டில் வழக்குத்தொடர தமிழக அரசு 2 லட்சம் ரூபாய் ஒதுக்கியது. மீனவர்களின் குடும்பத்திற்கு தினமும் 250 ரூபாய் நிவாரணம் வழங்கப்படுகிறது. இவ்வாறு விவாதம் நடந்தது. முடிவில் தீர்ப்பை, நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Friday, September 28, 2012

195 அகதிகள் கிறிஸ்மஸ் தீவுக்கு சென்றனர்!

Friday, September 28, 2012
இலங்கையர்கள் உள்ளடங்களாக 195 அகதிகள் நேற்றைய தினம் அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவை சென்றடைந்தனர்.

அவர்கள் அனைவரும் ஒரே படகில் பயணித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலியா, அகதிகளுக்கான பசுபிக் திட்டத்தை அறிவித்ததைத் தொடர்ந்து, அங்கு சென்றுள்ள பாரிய எண்ணிக்கையான அகதிகள் குழு இதுவென்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் தற்போது கிறிஸ்மஸ் தீவிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதே வேளை இந்த வாரத்தின் முற்பகுதியில், கொக்கோஸ் தீவில் 3 அகதிப் படகுகள் மீட்கப்பட்டிருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையுடன் அமெரிக்கா சிறந்த நட்புறவை பேணி வருகிறது - ரொபர்ட் பிளேக்!

Friday, September 28, 2012
நியூயோர்க்::கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை அமுல்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக்காட்ட வேண்டும் என தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜங்க செயலாளர் ரொபர்ட் பிளேக் தெரிவித்துள்ளார்.

 செய்தியாளர் ஷமீர் ரசூல்டினுக்கு நியூயோர்க்கில் பிரத்தியேகமாக வழங்கிய செவ்வியின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட இலங்கை தொடர்பான பிரேணையின் பின்னர் இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து திருப்தி அடைகின்றீர்களா என அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.

இலங்கையின் சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கையுடன் அமெரிக்கா சிறந்த  நட்புறவை பேணி வருவதாகவும் தனது விஜயத்தின்போது பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து தான் வலியுறுத்தியதாகவும் இதன்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லிணக்கத்திற்கான பல விடயங்கள் பொறுப்புக்கூறல் மற்றும்  வடமாகாண சபைத் தேர்தல் போன்ற மேலும் பல விடயங்கள் குறித்தும் இலங்கைக்கான தனது விஜயத்தின்போது கவனம் செலுத்தியிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பில் கடந்த மார்ச் மாதத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் பின்னர் அண்மைக்காலமாக இங்கு விஜயம் செய்த பல சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் யுத்தத்திற்கு பின்னர் இலங்கையில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் ரொபர்ட் பிளேக்கின் நிலைப்பாடு குறித்தும் வினவப்பட்டது.

சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தான் கருதுவதாக தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க  செயலாளர் ரொபர்ட் பிளேக் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மீள்குடியறே்றத்தில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் அகதிகள் தங்கியிருந்த மெனிக் பாம் தற்பொழுது மூடப்பட்டுள்ளதாகவும் வட பகுதியில் அரசாங்கம் உட்கட்டமைப்பு வசதிகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கட்சி இணக்கப்பாடு இருந்தால் முதலமைச்சர் பதவியை பங்குபோடலாம் - கெஹெலிய ரம்புக்வெல!

Friday, September 28, 2012
இலங்கை::கிழக்கு மாகாகண சபை முதலமைச்சர் பதவியை ஐக்கிய மக்கள் சுதநதிர முன்னணியும் -ஸ்ரீலங்க முஸ்லிம் காங்கிரஸும் தலா இரண்டரை வருடங்களுக்கு பங்குபோட்டுக்கொள்ள அரசியலமைப்பில் இடமில்லாதபோதும் இவ்விரு கட்சிகளுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் காரணமாக இது சாத்தியமே என அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று தகவல் ஊடக அமைச்சில் இடம்பெற்றபோது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறுகையில்:
ஐந்து வருடகால முதலமைச்சர் பதவியை பாதி காலத்துக்கு இருவர் பகிரந்து கொள்ள அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை. ஆனால் முதலமைச்சராக நியமிக்கப்பட்ட ஒருவரை இடையில் பதவியில் இருந்து நீக்கவதற்கு சட்டத்தில் இடமுண்டு.
எனினும் இரு கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டால் அதன் மூலம் முதலமைச்சர் பதவியை இருவர் பகிர்ந்துகொள்ளலாம். அதில் பிரச்சினை ஒன்றும் இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.

நெல்லியடியில் நடைபெற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆர்ப்பாட்டத்தின் போது புலிக்கொடியுடன் மோட்டர் சைக்கிளில் சென்றவர்களை விரைவில் கைது செய்வதற்கான நடவடிக்கை!

Friday, September 28, 2012
இலங்கை::நெல்லியடியில் நடைபெற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆர்ப்பாட்டத்தின் போது புலிக்கொடியுடன் மோட்டர் சைக்கிளில் சென்றவர்களை விரைவில் கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.காமினி தெரிவித்தார்.

யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதில் அளிக்கையில் அவர் இவ்விதம் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

புலிக்கொடியுடன் மோட்டர் சைக்கிளில் சென்றவர்கள் தொடர்பாக துரித விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருக்கின்றன. இந்த வழக்கு விசாரணைகளை மேற்கொள்வதற்கான முழுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

புலிக்கொடி விவகாரம் தொடர்பாக இரு சந்தேக நபர்களைத் தேடி வருகின்றோம். அவர்கள் தலைமறைவாக இருப்பதால் கைது செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருந்தும் இவர்களைக் கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, யாழ். அச்சுவெலி கலைமதி புத்தூர் பகுதியில் 15 வயதுச் சிறுமி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர் சிறிக்குகநேசன் தெரிவித்துள்ளர்.

இச்சம்பவத்தில் சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சந்தேக நபரான 22 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இவரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சிறுமியை சிறுவர் நன்னடத்தைப் பரிவில் சேர்க்குமாறு அச்சுவெலி பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் யாழ். குடாநாட்டில் வீடு உடைத்து கொள்ளையிடும் சம்பவங்கள் திடிரென அதிகரித்திருப்பதாக யாழ். பொலிஸ் நிலைய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிறிகுகநேசன் தெரிவித்தார்.

யாழ்.பொலிஸ் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் சென்ற வாரத்தில் மட்டும் 56 கொள்ளைச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுண்டுக்குழிப் பகுதியில் கடை உடைக்கப்பட்டு 17,200 பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன, டக்கா வீதியிலுள்ள கடை ஒன்றில் 21,000 ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன, சுன்னாகம் குப்பிளான் கிழக்கு பகுதியில் வீட உடைக்கப்பட்டு 2,77,500 பெறுமதியான வீட்டுப் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன, சாவகச்சேரியில் முத்துக்குரார் கடை உடைக்கப்பட்டு நிறப்பூச்சு திருடப்பட்டுள்ளது.

கைதடி தொழில் பயிற்சி நிலையத்திலுள்ள கணினி உதிரிபாகங்கள் கொள்ளயிடப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகரப்பகுதியில் பட்டப்பகலில் கடை உடைக்கப்பட்டு 12,000 ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

மானிப்பாய் ஆஸ்பத்திரி வீதியில் சென்று கொண்டு இருந்த பெண்ணின் தங்கச்சங்கிலி மோட்டார் சைக்கிளில் சென்ற இனம் தெரியாத நபர்களினால் அறுத்து எடுக்கப்பட்டுள்ளது. இதன் பெறுமதி 55,000 ரூபா என முறையிடப்பட்டுள்ளது.

கோப்பாய் பகுதியிலுள்ள வீடு ஒன்றுக்குள் நுழைந்த கொள்ளையர் குழு வீட்டைத் தீவைத்து கொழுத்திவிட்டு வீட்டில் உள்ள மோட்டார் சைக்கிள்களைத் திருடிச் சென்றுள்ளது. இச் சம்பவதுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டு யாழ். நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, யாழ். உதயன் முன்னாள் செய்தி ஆசிரியர் குகநாதன் தாக்கப்பட்டமை தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள சட்ட மா அதிபரிடம் இருந்து பதில் எதுவும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என சிறிகுகநேசன் தெரிவித்தார்.

உதயன் குகநாதன் வழக்கு தொடர்பில் நாம் விசாரணைகளை மேற்கொள்வதற்காக சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அனுமதியைப் பெறுவதற்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளோம். ஆனாலும் இதுவரை திணைக்களத்தில் இருந்து நடவடிக்கை எடுப்பதற்கான உரிய பதில் எமக்கு கிடைக்கவில்லை.

அதனால் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதுள்ளதாகவும் பதில் கிடைக்குமிடத்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த தாக்குதல் சம்பவத்துடன் சட்டத்தரணி ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவரை விசாரணை செய்வதற்கும், மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்கும் சட்ட மா அதிபர் திணைக்களமே பதில்தர வேண்டும். ஆனால் அதற்கான பதிலும் எமக்கு இதுவரை கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

புலிகள் மீதான தடை நீட்டிப்பு: தீர்ப்பாயம் முன்பு வைகோ ஆஜர்!

Friday, September 28, 2012
சென்னை::இந்தியாவில்  புலிகள் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. விடுதலைப்புலிகள் மீதான தடை நீட்டிக்கப்படுவதை எதிர்த்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தீர்ப்பாயத்தில் முறையிட்டார்.

ஆனாலும்,  புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டித்து தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதை எதிர்த்து வைகோ சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், நீதிபதி வி.கே.ஜெயின் தலைமையில் தீர்ப்பாயம் சென்னையில் கூடுவதாகவும், ஆட்சேபம் தெரிவிப்பவர்கள் அதில் நேரில் ஆஜராகி தங்கள் ஆட்சேபங்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நீதிபதி வி.கே.ஜெயின் தலைமையில் தீர்ப்பாய கூட்டம் சென்னை எம்.ஆர்.பி.நகரில் `இமேஜ்' அரங்கத்தில் இன்று தொடங்கியது. இன்று காலை வைகோ நேரில் ஆஜர் ஆனார்.