Friday, September 28, 2012
நியூயோர்க்::கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை அமுல்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக்காட்ட வேண்டும் என தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜங்க செயலாளர் ரொபர்ட் பிளேக் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் ஷமீர் ரசூல்டினுக்கு நியூயோர்க்கில் பிரத்தியேகமாக வழங்கிய செவ்வியின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட இலங்கை தொடர்பான பிரேணையின் பின்னர் இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து திருப்தி அடைகின்றீர்களா என அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.
இலங்கையின் சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கையுடன் அமெரிக்கா சிறந்த நட்புறவை பேணி வருவதாகவும் தனது விஜயத்தின்போது பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து தான் வலியுறுத்தியதாகவும் இதன்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லிணக்கத்திற்கான பல விடயங்கள் பொறுப்புக்கூறல் மற்றும் வடமாகாண சபைத் தேர்தல் போன்ற மேலும் பல விடயங்கள் குறித்தும் இலங்கைக்கான தனது விஜயத்தின்போது கவனம் செலுத்தியிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பில் கடந்த மார்ச் மாதத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் பின்னர் அண்மைக்காலமாக இங்கு விஜயம் செய்த பல சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் யுத்தத்திற்கு பின்னர் இலங்கையில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் ரொபர்ட் பிளேக்கின் நிலைப்பாடு குறித்தும் வினவப்பட்டது.
சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தான் கருதுவதாக தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் ரொபர்ட் பிளேக் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக மீள்குடியறே்றத்தில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் அகதிகள் தங்கியிருந்த மெனிக் பாம் தற்பொழுது மூடப்பட்டுள்ளதாகவும் வட பகுதியில் அரசாங்கம் உட்கட்டமைப்பு வசதிகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment