Sunday, September 30, 2012
சென்னை::தமிழ்நாட்டிலுள்ள அகதி முகாம்களில் வாழ்ந்துவரும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசாங்கம் எடுக்க வேண்டுமென வாழும் கலையமைப்பின் ஸ்தாபகரும் ஆன்மீகத் தலைவருமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நேற்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சுமார் 25 – 30 வருடங்களாக இலங்கைத் தமிழர்கள் வாழ்ந்துவருகின்ற நிலையில், இதனையிட்டு தமிழ்நாடு பெருமையடைவதற்கு ஒன்றுமில்லையெனவும் அவர் கூறினார்.
பெருமளவான பங்களாதேஷ் மற்றும் நேபாள பிரஜைகளுக்கு குடியுரிமை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். இலங்கையைச் சேர்ந்த தமிழர்களுக்கு எங்களால் ஏன் குடியுரிமை வழங்க முடியாது? எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.
No comments:
Post a Comment