Saturday, September 29, 2012
இலங்கை::இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்க புலி ஆதரவாளர்கள் மீளவும் முனைப்பு காட்டி வருவதாக ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அகில கால மீளாய்வு அமர்வுகளில் இவ்வாறு இலங்கைக்கு எதிரான சர்வதேச யுத்தக் குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
க்ளோபல் தமிழ் போரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல தரப்பினர் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, க்ளோபல் தமிழ் போரம் அமைப்பை புலி ஆதரவு அமைப்பாக வெளிக்காட்ட இலங்கை அரசாங்கம் முயற்சிப்பதாக அமைப்பின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் 15 நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்டு இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தியமைக்காக இலங்கைத் தலைவர்களை தண்டிக்க சிலர் முயற்சித்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார். சில தரப்பினர் போலியான பிரச்சாரங்களை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்ட காரணத்தினால் தமிழ் மக்கள் சுதந்திரத்தை அனுபவித்து வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment