Thursday, July 4, 2019

நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த ரணில் தலைமையிலான அரசாங்கம் முயற்சி: தினேஸ் குணவர்தன!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டத்தை நீக்கி நாட்டில் மீண்டும் குழப்பங்களை ஏற்படுத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் முயற்சித்ததாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன குற்றம்சாட்டியுள்ளார்.எனினும் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பிரதான எதிர்க்கட்சி அவசரகாலச் சட்டத்தை நீடித்து நாட்டினதும் நாட்டு மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தியிருப்பதாக தினேஷ் குணவர்தன பெருமிதம் வெளியிட்டிருக்கின்றார். .அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள்

காங்., கட்சி தலைவர் பதவி ராஜினாமா விளக்கம்: ராகுல் உருக்கம்!

காங்., கட்சி தலைவர் பதவியை நேற்று
முறைப்படி ராஜினாமா செய்துள்ள ராகுல், தனது ராஜினாமா முடிவுக்கு காரணம் என்ன என்பது பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமாக அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.அதில் அவர், லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். காங்., கட்சியை மறுசீரமைக்க கடினமான முடிவுகளை எடுக்க வேண்டி உள்ளது. கட்சியின் தலைவர் முறையில் 2019 தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று நான் ராஜினாமா செய்ய முடிவு செய்தேன். தோல்விக்கு நான் உட்பட பலர் பொறுப்பேற்க வேண்டி உள்ளது.சுமூகமான தலைமை மாற்றத்திற்கு நான் முழு

Wednesday, July 3, 2019

வைகோவின் எம்.பி கனவு அம்போவா? தேச துரோக வழக்கால் சிறைக்கு செல்வாரா இல்லை ராஜ்யசபாவிற்கு செல்வாரா?

தமிழகத்தை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவிக்காலம் வரும் 24 – ல் முடிவடைகிறது. புதிய எம்.பி.க்களுக்கான தேர்தல் வரும் ஜூலை 18- ல் நடைபெறுகிறது; இதற்கான வேட்புமனு தாக்கல் துவங்கி விட்டது. அ.தி.மு.க. – தி.மு.க. கட்சிகளின் சார்பில் தலா மூன்று எம்.பி.க்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர்.நாடாளுமன்ற தேர்த
லில் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தி.மு.க. சார்பில் ம.தி.மு.க.வுக்கு ஒரு ராஜ்யசபா எம்.பி. பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். இதனை தொடர்ந்து ம.தி.மு.கவின். மாவட்ட செயலர்கள் கூட்டம் நேற்று சென்னையில்

இலங்கை தமிழ் பெண் அவுஸ்திரேலியாவில் கொலை!

அவுஸ்திரேலியாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணொருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குயின்ஸ்லாந்து பகுதியில் வசித்து வந்த 52 வயதான தேவகி என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.சந்தேகத்தின் பேரில் தேவகியின் கணவர் குயின்லாந்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.வெளிநாட்டுக்கு விடுமுறையில் சென்றுவிட்டு வீடு திரும்பிய பெண்ணே இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.நேற்று முன்தினம் குறித்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையில் ஏற்பட்ட

இலங்கை அகதிகள் நலன் குறித்து இரு நாடுகளும் அவதானம் செலுத்த வேண்டும்!

இந்தியாவில் வசித்து வருகின்ற இலங்கை  அகதிகள் நலன் தொடர்பில் இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்கள் உடனடியாக அவதானம் செலுத்த வேண்டும் என்று த ஹிந்து பத்திரிகை வலியுறுத்தியுள்ளது.தற்போது 95 ஆயிரம் இலங்கை  அகதிகள்  வரையில் தமிழகத்தில் பல்வேறு முகாம்களில் தங்கியுள்ளனர்.அவர்களில் பலர்இலங்கைக்கு திரும்ப விருப்பம் கொண்டுள்ளனர்.ஆனால் தற்போது பலர் இந்திய குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்க ஆரம்பித்துள்ளனர்.இந்தநிலைமையை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.நீண்டகாலமாக குறித்த

தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி! சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார்!

பிரதமர் நரேந்திர மோடி, இம்மாதம் 3 – வது வாரத்தில் தமிழகம் வர உள்ளார். இதற்கான தேதி இன்னும் வெளியாகவில்லை.இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின்னர் தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, சென்னை ஐஐடியில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார்
.இது குறித்து சென்னை ஐஐடி நிர்வாகி ஒருவர் கூறுகையில், “சென்னை ஐஐடி, இந்த ஆண்டு வைர விழாவை கொண்டாடுகிறது. இந்த ஆண்டில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடியை அழைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த அழைப்பை, பிரதமர் மோடி ஏற்று கொண்டுள்ளதாக மத்திய மனித வளத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. விழாவிற்கான தேதி விரைவில் முடிவு செய்யப்படும்” என்றார்.