தமிழகத்தை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவிக்காலம் வரும் 24 – ல் முடிவடைகிறது. புதிய எம்.பி.க்களுக்கான தேர்தல் வரும் ஜூலை 18- ல் நடைபெறுகிறது; இதற்கான வேட்புமனு தாக்கல் துவங்கி விட்டது. அ.தி.மு.க. – தி.மு.க. கட்சிகளின் சார்பில் தலா மூன்று எம்.பி.க்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர்.நாடாளுமன்ற தேர்த
லில் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தி.மு.க. சார்பில் ம.தி.மு.க.வுக்கு ஒரு ராஜ்யசபா எம்.பி. பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். இதனை தொடர்ந்து ம.தி.மு.கவின். மாவட்ட செயலர்கள் கூட்டம் நேற்று சென்னையில்
நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராஜ்யசபா வேட்பாளராக வைகோ ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராஜ்யசபா வேட்பாளராக வைகோ ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
பதவி ஏற்க தடை?
ஆனால் வைகோ மீதுள்ள தேசத் துரோக வழக்கின் தீர்ப்பு வரும் 5 ம் தேதி வெளியாக உள்ளது. இந்த வழக்கில் வைகோவிற்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை வழங்கப்பட்டால் ராஜ்யசபா எம்.பி. பதவி ஏற்க தடை வரும் என கூறப்படுகிறது . கடந்த 2009 ல் ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற நுால் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் வைகோவின் பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராக தீவிரவாத அமைப்பான (The Ltte terrorist organization) புலிகளுக்கு ஆதரவாக இருந்ததாகவும் பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில்
அமைந்ததாகவும் சென்னை ஆயிரம் விளக்கு போலீசாரால் தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கு விசாரணையானது சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி. – எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு வரும் 5 ல் வெளியாகிறது. இதில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் வைகோவிற்கு சிறை தண்டனை வழங்கப்பட்டால் அவர் ராஜ்யசபா எம்.பி. தேர்தலில் போட்டியிடுவதற்கு சட்டரீதியாக தடை ஏற்படும். விடுதலை செய்யப்பட்டால் எந்த தடையும் இருக்காது என சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment