காங்., கட்சி தலைவர் பதவியை நேற்று
முறைப்படி ராஜினாமா செய்துள்ள ராகுல், தனது ராஜினாமா முடிவுக்கு காரணம் என்ன என்பது பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமாக அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.அதில் அவர், லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். காங்., கட்சியை மறுசீரமைக்க கடினமான முடிவுகளை எடுக்க வேண்டி உள்ளது. கட்சியின் தலைவர் முறையில் 2019 தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று நான் ராஜினாமா செய்ய முடிவு செய்தேன். தோல்விக்கு நான் உட்பட பலர் பொறுப்பேற்க வேண்டி உள்ளது.சுமூகமான தலைமை மாற்றத்திற்கு நான் முழு
ஒத்துழைப்பு அளிப்பேன். கட்சியின் புதிய தலைமையை தேர்வு செய்வதற்கான சரியான ஆள் நான் இல்லை. நான் ராஜினாமா செய்து விட்டதால், உடனடியாக புதிய தலைவரை தேர்வ செய்யும்படி கட்சியினரிடம் கூறி உள்ளேன்.

பா.ஜ., மீது எனக்கு எந்த கோபமும் கிடையாது. அதே சமயம் பா.ஜ.,வின் கொள்கைகள் இந்தியாவை கட்டுப்படுத்த நினைப்பதை எனது உடலின் ஒவ்வொரு செல்லும் தடுக்கும். காங்., கட்சியின் கடைநிலை உண்மை தொண்டனாக எனது கடைசி மூச்சு உள்ளவரை பாடுபடுவேன். அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுவேன்.பிரதமரும், ஆர்எஸ்எஸ்.,ம் நாட்டின் அனைத்து அரசு இயந்திரங்களையும் கைப்பற்ற நினைப்பதை எதிர்த்தே எங்களின் போராட்டம். தேர்தல் நேர்மையாக நடைபெறாமல் ஒரு குறிப்பிட்ட கட்சி ஒட்டுமொத்த அதிகாரத்தையும் கைப்பற்ற நினைக்கிறது. லோக்சபா தேர்தலில் நாங்கள் ஒரு கட்சியை எதிர்த்து போட்டியிடவில்லை. ஜனநாயகத்தின் அடித்தளத்தை பலவீனப்படும் சக்திகளை எதிர்த்தே போட்டியிட்டோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment