Thursday, July 4, 2019

நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த ரணில் தலைமையிலான அரசாங்கம் முயற்சி: தினேஸ் குணவர்தன!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டத்தை நீக்கி நாட்டில் மீண்டும் குழப்பங்களை ஏற்படுத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் முயற்சித்ததாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன குற்றம்சாட்டியுள்ளார்.எனினும் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பிரதான எதிர்க்கட்சி அவசரகாலச் சட்டத்தை நீடித்து நாட்டினதும் நாட்டு மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தியிருப்பதாக தினேஷ் குணவர்தன பெருமிதம் வெளியிட்டிருக்கின்றார். .அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள்
தொடர்பிலான விசாரணைகள் முழுமைப்பெறாத நிலையில் இந்த சட்டத்தை மேலும் நீடித்துக்கொள்வதற்கான விவாதம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. ஆனால் அன்றைய தினம் அரசாங்கம் என்ன செய்தது.
 
அரசாங்கம் தனது ஏமாற்று வேலையை காட்டியது. இந்த விவாதம் மீதான வாக்கெடுப்பின்போது சபையில் பிரதமர் இருக்கவில்லை. அவர் திருகோணமலையில் இருந்தார். இதன் மூலம் அரசாங்கத்தின் கொள்கை வெளிப்பட்டது. வேறு நாட்களில் அவர் 14 இலட்சத்தை செலவு செய்து நாடாளுமன்றத்துக்கு ஹெலிகொப்டர் மூலம் சென்று வாக்களிப்பார். எனினும் அன்றைய தினம் அவர் வரவில்லை. இருவரைத் தவிர வேறு எவரும் நாடாளுமன்றத்தில் இருக்கவில்லை. மெது மெதுவாக அனைவரும் வெளியேறினர். அவசரகால சட்டத்தை எதிர்க்கட்சியே நிறைவேற்ற வேண்டியிருந்தது.
 
நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் தாம் கொண்டுவந்த அவசரகால சட்டத்தை நீக்கி நாட்டில் மீண்டும் அரசாங்கத்துக்கு அமைதியற்ற நிலையை ஏற்படுத்தவேண்டிய தேவை இருந்தது. எனினும் எதிர்க்கட்சி தனது பொறுப்பை நிறைவேற்றியது. வேறொரு நாடாக இருந்தால் அடுத்தநாள் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருப்பார்.
 
அவசரகால சட்டம் இல்லாதொழிக்கப்படுமாயின் அந்த சட்டத்தின் கீழ் கைதான அனைவரும் விடுதலை செய்யப்படும் பாரிய ஆபத்தான நிலைமையொன்று காணப்படுகின்றது. அதற்கான செயற்பாடுகளையே அரசாங்கம் கடந்த வியாழக்கிழமை முன்னெடுத்தது. பிரதமர் அவரது தரப்படன் இணைந்து ஏகாதிபதி போல செயற்படுகின்றார்' என்றார் தினேஸ் குணவர்தன.

No comments:

Post a Comment