Wednesday, July 3, 2019

தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி! சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார்!

பிரதமர் நரேந்திர மோடி, இம்மாதம் 3 – வது வாரத்தில் தமிழகம் வர உள்ளார். இதற்கான தேதி இன்னும் வெளியாகவில்லை.இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின்னர் தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, சென்னை ஐஐடியில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார்
.இது குறித்து சென்னை ஐஐடி நிர்வாகி ஒருவர் கூறுகையில், “சென்னை ஐஐடி, இந்த ஆண்டு வைர விழாவை கொண்டாடுகிறது. இந்த ஆண்டில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடியை அழைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த அழைப்பை, பிரதமர் மோடி ஏற்று கொண்டுள்ளதாக மத்திய மனித வளத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. விழாவிற்கான தேதி விரைவில் முடிவு செய்யப்படும்” என்றார். 

 

No comments:

Post a Comment