இந்தியாவில் வசித்து வருகின்ற இலங்கை அகதிகள் நலன் தொடர்பில் இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்கள் உடனடியாக அவதானம் செலுத்த வேண்டும் என்று த ஹிந்து பத்திரிகை வலியுறுத்தியுள்ளது.தற்போது 95 ஆயிரம் இலங்கை அகதிகள் வரையில் தமிழகத்தில் பல்வேறு முகாம்களில் தங்கியுள்ளனர்.அவர்களில் பலர்இலங்கைக்கு திரும்ப விருப்பம் கொண்டுள்ளனர்.ஆனால் தற்போது பலர் இந்திய குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்க ஆரம்பித்துள்ளனர்.இந்தநிலைமையை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.நீண்டகாலமாக குறித்த
ஏதிலிகளின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமலேயே இருக்கின்றன.இந்தவிடயத்தில் இரண்டு அரசாங்கங்களும் இணைந்து ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஏதிலிகளின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமலேயே இருக்கின்றன.இந்தவிடயத்தில் இரண்டு அரசாங்கங்களும் இணைந்து ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment