Saturday, June 1, 2013

முதல்வரை சந்தித்ததால் மிரட்டல்: தேமுதிக பெண் எம்.எல்.ஏ.க்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு!

Saturday, June 01, 2013
சென்னை::நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதி, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., சாந்தி. இவர், கடந்த, 29ம் தேதி, முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார். அதன்பிறகு, அவருக்கு போனில் மிரட்டல்கள் வந்தபடி உள்ளன. அவரது வீட்டிற்கு, போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டாலும், மிரட்டல்களால், அவர் பீதியடைந்துள்ளார்.

இது குறித்து அவர்,அளித்த சிறப்பு பேட்டி:
பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்து விடுவதாக, மர்மநபர்கள் போன் மூலம் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். தே.மு.தி.க.,வில், மேலும் பலர் அதிருப்தியில் உள்ளனர். அவர்களும் வெளியேறுவது நிச்சயம்,'' என முதல்வரை சந்தித்த, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., சாந்தி தெரிவித்தார்.
 
கடந்த, இரண்டு ஆண்டுகளாக, கட்சியில் நான் சந்திக்காத, அவமானங்கள் இல்லை. நாமக்கல் மாவட்டத்தில், எந்த விழாவிற்கும், கட்சியினர் என்னை அழைக்கவில்லை. அவ்வாறு அழைத்தாலும், மற்ற நிர்வாகிகள், அங்கு செல்லக் கூடாது என, உத்தரவு போட்டனர்.இதற்கு, நாமக்கல் மாவட்டச் செயலரும், திருச்செங்கோடு எம்.எல்ஏ.,வாகவுமான சம்பத்குமார், மாநிலப் பொருளாளர் இளங்கோவன், ஆகியோர் தான் காரணம். ஜாதி அடிப்படையில், என்னை ஓரங்கட்ட பார்த்தனர்.

அனுமதி மறுப்பு:
 
இது குறித்து, கட்சி தலைவர் விஜயகாந்திடம் புகார் தெரிவிக்க முயன்ற போது, மாநில நிர்வாகி சந்திரகுமார், அனுமதி கொடுக்கவில்லை. "விரைவில், பிரச்னையை தீர்த்து வைக்கிறேன்' என்று சமாளிப்பதிலேயே குறியாக இருந்தார். விஜயகாந்த் மனைவி பிரேமலதாவிடம் புகார் தெரிவித்தேன். "யாரும் வராவிட்டாலும், மகளிர் அணி ஆர்ப்பாட்டத்தில், நீங்கள் தனியாக சென்று, கலந்து கொள்ளுங்கள்' என, அவர் கூறினார்.

மாவட்ட நிர்வாகம் மட்டுமின்றி, மாநில நிர்வாகமும், என்னை புறக்கணித்ததால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளா னேன். இரண்டு ஆண்டுகள் பொறுமையாக இருந்த, நான், முதல்வரை சந்திக்க வேண்டும், என்ற முடிவை, மூன்று நாட்களுக்கு முன்பு தான் எடுத்தேன். இதற்காக, யாரையும் அணுகவில்லை.

குற்றச்சாட்டு:
 
நேரடியாக முதல்வர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு, அனுமதி பெற்றேன். முதல்வரை சந்திப்பதற்காக, நான் கோடி, கோடியாக, பணம் பெற்றதாக சொல்கின்றனர்; அதில் உண்மையில்லை. தொகுதி பிரச்னைக்காக மட்டுமே, முதல்வரை சந்தித்தேன்.
எருமைப்பட்டி மற்றும் சேந்தமங்கலத்தில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்; முள்ளுக்குறிச்சியில் உள்ள மாநிலத்தின், ஒரே பழங்குடியினர் பள்ளியை, மேல்நிலை பள்ளியாக, தரம் உயர்த்த வேண்டும்; கொல்லிமலையில், பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில், சாலையை மேம்படுத்த வேண்டும் என, கோரிக்கை மனு கொடுத்துள்ளேன். அதை பரிசீலிப்பதாக, முதல்வர் கனிவுடன் கூறினார்.

பிரியாணி விருந்து:
 
 நான், அ.தி.மு.க., விசுவாசி என்பதால் தான், முதல்வரை சந்தித்ததாக கூறுகின்றனர். நான், 2001ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட, அ.தி.மு.க.,வில், "சீட்' கேட்டது உண்மை தான். இது குறித்து விஜயகாந்திடம் சொல்லியிருக்கிறேன். அதை தெரிந்து தான், அவர் சட்டசபை தேர்தலில் போட்டியிட, "சீட்' வழங்கினார். சட்டசபை விவாதங்களில், நான் பேசியதை கூட, கட்சி நிர்வாகிகள் யாரும் பாராட்டவில்லை. நான் முதல்வரை சந்தித்த நிகழ்வை, இளங்கோவனும், சம்பத்குமார் எம்.எல்.ஏ.,வும், சென்னையில் பிரியாணி விருந்து வைத்து கொண்டாடி உள்ளனர்.

அதிருப்தி:
 
ஆனால், விஜயகாந்திடம், வருத்தமான முகத்துடன், அவர்கள் விளக்கமளித்துள்ளதாக, தகவல் கிடைத்துள் ளது. என்னைப் போலவே, மேலும் சிலரும் அதிருப்தியில் உள்ளனர். அவர்களும், ஒரு கட்டத்தில், வெளியேறுவது நிச்சயம். முதல்வரை சந்தித்துவிட்டு வந்த பிறகு, எனக்கு போன் மூலம், தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றன. "கார் கண்ணாடியை உடைத்து, பெட்ரோல் குண்டு வீசி கொன்று விடுவோம்' என்கின்றனர். "எவ்வளவு நாள் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது என்பதை பார்க்கிறோம்' என, பயமுறுத்துகின்றனர். இவ்வாறு, சாந்தி தெரிவித்தார்.

முதல்வரை சந்தித்து பேசிய சேந்தமங்கலம் தொகுதி தேமுதிக எம்எல்ஏ சாந்திக்கு கொலை மிரட்டல் வந்ததால் அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரது வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதி தேமுதிக எம்எல்ஏ சாந்தி, கடந்த 3 நாட்களுக்குமுன் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். தனது தொகுதி பிரச்னைகள் தொடர்பாக முதல்வரை சந்தித்து மனு அளித்ததாக கூறினார். இந்த சம்பவம் தேமுதிகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.முதல்வருடனான சந்திப்பிற்கு பின்னர் தொகுதிக்கு திரும்பிய அவருக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.
 
இந்நிலையில் நேற்று காலை 11.30 மணி அளவில் ராசிபுரம் நீதிமன்றத்திற்கு தனது வக்கீல் பழனிசாமியுடன், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சாந்தி வந்தார்.இதுபற்றி எம்எல்ஏ சாந்தி கூறியதாவது: தேர்தல் விதிமீறல் வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜராக வந்தேன். நான் கட்சி மாறி விட்டதாக மாவட்ட தேமுதிக செயலா ளர் சம்பத்குமார் கூறி உள்ளார். இது பொய்யான தகவல். 2001ம் ஆண்டு நான் அதிமுகவில் இருந்தது உண்மைதான். அப்போது எனக்கு தேர்தலில் சீட் கிடைக்கவில்லை. தேமுதிக துவங்கியபோது அதில் இணைந்தேன்.விஜயகாந்த்திடமும் நான் அதிமுகவில் இருந்தது பற்றி தெரிவித்துள்ளேன்.

நான் தேமுதிக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆன பிறகும் அதிமுகவைச் சேர்ந்தவர் என்று கூறி என் மீது விரோத போக்கை கடைபிடித்தனர். நான் அனாதை எம்எல்ஏ ஆக்கப்பட்டேன். பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர் என்பதால் சாதி அடிப்படையில் என்னை மாவட்டசெயலாளர் புறக்கணித் தார். எனக்கு நல்ல பெயர் வந்துவிடக்கூடாது என எனக்கு எதிராக கட்சியினர் செயல்பட்டனர்.2011 தேர்தலின் போது அதிமுகவுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்றுதான் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக அமர்ந்தனர். ஆனால் கூட்டணி சேர்ந்த கட்சிக்கு துரோகம் செய்து விட்டனர்.நான் இப்போது கூட கட்சியை விட்டு போக நினைக்கவில்லை. விஜயகாந்த்தை தெய்வமாக நினைக்கிறேன். என்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு எதுவும் செய்யமுடியவில்லை என்பதால் தான் தொகுதி மக்களின் நன்மை கருதி முதல்வரை சந்தித்தேன்.
 
நான் முதல்வரை சந்தித்த பின்னர் போன் மூலம் தேமுதிக நிர்வாகிகள் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். நான் எந்த தவறும் செய்யவில்லை. இவ்வாறு எம்எல்ஏ சாந்தி கூறினார்.முதல்வரை சந்தித்த பின்னர் சாந்திக்கு போனில் கொலை மிரட்டல் வந்ததால் ஆயில்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார். இதையடுத்து எஸ்ஐ தலைமையில் 3 போலீசார் புதன்கிழமை மாலை முதல் அவரது வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் எஸ்பி கண்ணம்மாள் உத்தரவுப்படி நேற்று முன்தினம் மாலையில் இருந்து அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

ரஷ்ய ஆகாய பாதுகாப்பு ஆயுதங்களைக் கொண்ட முதலாவது தொகுதி சிரியாவை சென்றடைந்துள்ளது!


Saturday, June 01, 2013
சிரியா::ரஷ்ய ஆகாய பாதுகாப்பு ஆயுதங்களைக் கொண்ட முதலாவது தொகுதி சிரியாவை சென்றடைந்துள்ளது.
 
இந்த தகவலை சிரிய ஜனாதிபதி பஷார் அல் அசார், லெபனான் தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
 
மேற்கத்தைய நாடுகளின் கடும் ஆட்சேபனைக்கு இடையே ரஷ்ய இந்த நவீன ஏவுகணை ஆயுதங்களை அனுப்பியுள்ளது.
 
இந்தநிலையில், சிரிய யுத்தத்தின் தாக்கம் குறைவடையும் என தாம் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, குவாசய நகரத்தில் இடம் பெற்று வரும் தாக்குதலில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லெபனான் ஷியா போராளிகளும், சிரிய போராளிகளுடன் இணைந்து செயற்பட்டு வருவதாக போராளிகளின் தளபதி ஜென்ரல் செலிம் இன்றிஸ் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, நீதியை நிலை நாட்டுவதற்கு மேலதிகமான ஆயுதங்கள் தேவைப்படுவதாக  அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
அந்த நகரம் இராணுவத்தின் வசம், வீழ்ச்சியடையும் பட்சத்தில், அங்கு குடியுள்ள ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ரஷ்யா மேலும் வழங்கவுள்ள ஆகாய ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்களில் பூமியிலிருந்து ஆகாயத்தில் செல்லும் வானுர்திகளை துல்லியமாக சென்று தாக்கக் கூடிய தகமைகளை கொண்ட எஸ் 300 ரக ஆயுதங்களும் உள்ளடங்குவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள தாய்லாந்து பிரதமர் நான்கு ஒப்பந்தங்கள் கைச்சாத்து: ஜனாதிபதி செயலகத்தில் வரவேற்பு!

Saturday, June 01, 2013
இலங்கை::இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள தாய்லாந்து பிரதமர் யின்லக் ஷினவாத்ராவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று செங்கம்பள வரவேற்பளித்து கெளரவித்தார்.
 
இரு நாட்டுத் தலைவர்களுக்குமிடையில் நேற்று இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றதுடன் இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத்துறை, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளின் மேம்பாடு தொடர்பில் நான்கு முக்கிய ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன.
 
தாய்லாந்து பிரதமரின் வருகையையொட்டி ஜனாதிபதி செயலகப் பிரதேசம் இலங்கை, தாய்லாந்து தேசியக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன் பழைய பாராளுமன்ற முன்றலில் அமைக்கப்பட்டிருந்த விசேட மேடையில் வரவேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
நேற்றுக் காலை ஜனாதிபதி செயலகத்தை வந்தடைந்த தாய்லாந்துப் பிரதமர் யின்லக் ஷினவாத்ராவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வரவேற்றார். தாய்லாந்து பிரதமரைக் கெளரவிக்கும் வகையில் 21 கெளரவ பீரங்கி வேட்டுகள் தீர்க்கப்பட்டு இராணுவ அணி வகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.
 
அதனையடுத்து ஜனாதிபதி செயலகத்தில் இரு நாட்டுத் தலைவர்களுக்கிடையில் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் போது இருநாடுகளுக்கும் முக்கியமான பல்வேறு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டன.
 
இரு நாடுகள் தொடர்பிலான பேச்சுவார்த்தைகளில் வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் உட்பட அமைச்சர்களும் தாய்லாந்து பிரதிப் பிரதமர் உட்பட அந் நாட்டின் அமைச்சர்களும் தூதுக்குழுவினரும் கலந்துகொண்டனர்.
இப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இருநாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த நான்கு உடன்படிக்கைகள் இரு நாட்டுத் தலைவர்கள்
முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டன.
 
இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ கடவுச் சீட்டுக்களை வைத்திருப்போருக்கு விசா விலக்களிப்பு சம்பந்தமான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ¤ம் தாய்லாந்து அரசாங்கத்தின் சார்பில் அந் நாட்டின் பிரதிப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான சுரபோங் டொலிச்சாக் சய்ருல்லும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
 
இதனையடுத்து மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
இரு நாடுகளுக்குமிடையில் சுற்று லாத்துறை மேம்பாட்டு ஒத்துழைப் புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ¤ம் தாய்லாந்து அரசாங்கத்தின் சார்பில் அந்நாட்டின் பிரதிப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான சுரபோல் டொலிச்சாக்சய்ருல்லும் கைச்சாத் திட்டனர்.
 
தாய்லாந்து விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சுக்கும் இலங்கை தொழில் நுட்பம், ஆராய்ச்சி மற்றும் அணு சக்தி அமைச்சுக்குமிடையில் விஞ்ஞான தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதில் இலங்கையின் சார்பில் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் தாய்லாந்து அரசாங்கத்தின் சார்பில் அந்நாட்டுப் பிரதிப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான சுரபோல்பொலச்சாக்சக்ருல் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
 
இதனையடுத்து இலங்கையின் வர்த்தக சம்மேளனத்துக்கும் தாய்லாந்தின் வர்த்தக கைத்தொழில் மற்றும் வங்கித்துறை கூட்டிணைந்த குழுவுக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது.
இதில் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பிரதித் தலைவர் சுரேஷ் ஷாவும் தாய்லாந்து வர்த்தக, கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் பெயுர்சட் சர்டி சுட்போலும் கைச்சாத்திட்டனர்.
 
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வுகளில் பிரதமர் டி. எம். ஜயரட்ண, அமைச்சர்கள் பஷில் ராஜபக்ஷ, டக்ளஸ் தேவானந்தா, ரிசாட் பதியுதீன், பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க, பிரியங்கர ஜயரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
 
நேற்றைய தினம் முற்பகல் 11.00 மணியளவில் விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த தாய்லாந்துப் பிரதமர் யின்லக் ஷினவாத்ராவை வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தலைமையிலான குழுவினர் வரவேற்றனர்.
 
தாய்லாந்து பிரதமருடன் அந்நாட்டின் பல்வேறு துறைகள் சார்ந்த தூதுக்குழுவினரும் இலங்கை வந்துள்ளனர். தாய்லாந்துப் பிரதமர் இலங்கையில் தங்கியுள்ள நாட்களில் முக்கிய அரசியல் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தைகளை மேற் கொள்ளவுள்ளார்.
 
அவர் நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்தியமையும் குறிப் பிடத்தக்கது...
 
ஜனநாயகம் மீதான நம்பிக்கை வீழ்ச்சியடைய இடமளிக்காது மக்களின் சுதந்திரத்துக்கும், வாழ்வின் மேம்பாட்டுக்கும் ஜனநாயகத்தைப் பயன்படுத்த வேண்டும். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட நாடுகள் என்ற அடிப்படையில் இலங்கையும் தாய்லாந்தும் அரசியல் ரீதியில் வலுப்பெற்று செயற்பட வேண்டும் என தாய்லாந்து பிரதமர் யின்லக் ஷினவாத்ரா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
 
அரசியல் மற்றும் ஜனநாயகத்தை மதித்து செயற்படுகின்ற இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையே நீண்ட உறவு காணப்படுவதாகவும் கூறிய தாய்லாந்து பிரதமர், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவே தான் இலங்கைக்கு விஜயம் செய்ததாகவும் தெரிவித்தார். தாய்லாந்து பிரதமர் யின்லக் ஷினவாத்ரா இலங்கைப் பாராளுமன்றத்தில் உரையாற்றுவதையிட்டு நேற்று விசேட பாராளுமன்ற அமர்வு இடம்பெற்றது.இங்கு உரையாற்று கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
 
செங்கம்பள வரவேற்பு:-
 
தாய்லாந்து பிரதமரின் வருகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததோடு இருநாட்டு தேசிய கொடிகளினாலும் வீதியின் இருபக்கங்களும் aஅலங்கரிக்கப்பட்டிருந்தன. பாராளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்த தாய்லாந்து பிரதமரை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையிலான குழுவினருக்கு செங்கம்பள வரவேற்பளித்தனர். தாய்லாந்து பிரதமருக்கு சபாநாயகரின் ஆசனத்திற்கு அருகில் விசேட ஆசனமொன்று வழங்கப்பட்டது.
 
சபாநாயகர் தலைமையில் பாராளுமன்றம் கூடியதைத் தொடர்ந்து சபாநாயகர் பாராளுமன்ற நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்தார். மேசையில் தட்டி எம்.பி.க்கள் அவரை வரவேற்றனர். தாய்லாந்து பிரதமர் மேலும் கூறியதாவது,
எனது சகோதரர் உரையாற்றிய 10 வருடங்களின் பின்னர் இலங்கைப் பாராளுமன்றத்தில் உரையாற்ற சந்தர்ப்பம் கிடைத்தது குறித்து பெருமகிழ்ச்சி அடைகிறேன். எமது இரு நாடுகளுக்குமிடையில் மத, அரசியல் சார்ந்த நெருங்கிய உறவு காணப்படுகிறது.
 
இலங்கை மக்கள் தமது ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் வகையில் செயற்படுகின்றனர்.
 
உலகின் முதலாவது பிரதமர் பிறந்த நாட்டில் உரையாற்ற சந்தர்ப்பம் கிடைத்தது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்.
இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்காகவே இலங்கைக்கு விஜயம் மேற்கொண் டுள்ளேன்.
இலங்கையில் புத்த மதத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு தாய்லாந்து உதவியுள்ளது. அந்தளவிற்கு இரு நாடுகளுக்குமிடையிலான உறவு நீண்டு காணப்படுகிறது.
 
உலகில் துரித பொருளாதார வளர்ச்சி ஏற்படுகையில் சமூக அநீதிகளையும் காண்கிறோம். இதற்கு புத்த மதம் சிறந்த வழிகாட்டல் வழங்குகிறது. தாய்லாந்தில் சமாதானத்தை நிலைநாட்ட பெளத்த மதம் பங்களித்தது.
எமது இரு நாடுகளும் அரசியல் ரீதியில் ஜனநாயகத்தை மதித்து நடக்கும் நாடுகளாகும். மக்களின் அபிப்பிராயங்களை ஜனநாயக ரீதியிலான ஆட்சியிலும் வாழ்க்கை முறையிலும் பயன்படுத்த வேண்டும். மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு ஜனநாயகத்தை பயன்படுத்த வேண்டும். ஜனநாயகம் என்பது மக்களின் ஜனநாயகத்தை பாதுகாக்கும் குறிகாட்டியாகும். இருநாடுகளுக்கும் இது தொடர்பில் அனுபவம் காணப் படுகிறது.
 
எமது இருநாடுகளும் காலநிலை மாற்றம் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றன. சுனாமி அனர்த்தமும் எமது இரு நாடுகளையும் பாதித்தது. இயற்கை அனர்த்தங்களினால் எமது மக்களுக்கு ஏற்படும் ஆபத்தில் இருந்து பாதுகாக்க வேண்டியுள்ளது.
 
உலக சனத்தொகையில் 60 வீதமான மக்கள் ஆசியாவிலே வாழ்கின்றனர். இவர்கள் உலக பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகின்றனர். இந்திய சமுத்திரத்தைச் சூழவுள்ள நாடுகளிடையே பொருளாதார உறவு கட்டியெழுப்பப்பட வேண்டியது முக்கியமாகும். ஆசிய நாடுகளுடனான பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கு தாய்லாந்து கரிசனை காட்டி வருகிறது.
உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக நாம் 66 மில்லியன் டொலரை ஒதுக்கியுள்ளோம். இதனூடாக சுற்றுலா மற்றும் வர்த்தக அபிவிருத்திகளை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
 
மியன்மாருடன் இணைந்து அந்தமான் தீவில் ஆழ்கடல் துறைமுகமொன்றை அமைக்க நாம் திட்டமிட்டுள்ளோம். இதனூடாக அண்டிய நாடுகளுடனான பொருளாதார உறவுகளை மேலும் மேம்படுத்த இயலுமாகும். இலங்கைக்கும் இதனூடாக தெற்காசிய நாடுகளுடனான தொடர்புகளை மேம்படுத்த வாய்ப்பு ஏற்படும். ஆசிய வர்த்தக நடவடிக்கைகளை உலகிற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆபிரிக்க நாடுகளுடனும் தொடர்புகளை பலப்படுத்தி வருகிறோம்.
 
உலக நாடுகளுடன் எமது உறவை மேம்படுத்துவதில் இலங்கை முக்கிய கேந்திரமாக காணப்படுகிறது. இதனூடாக இலங்கை பொருளாதாரத்திற்கு உலக பொருளாதாரம் வரை செல்ல வாய்ப்புகள் அதிகரிக்கும்.
இலங்கையின் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன். எமது இரு நாடுகளுக்கும் பொதுவாக பகிர்ந்து கொள்ளக்கூடிய பல விடயங்கள் உள்ளன.
இலங்கைப் பாராளுமன்றத்தில் உரையாற்றக் கிடைத்த இந்த அரிய வாய்ப்பை பெரும் கெளரவமாகவே கருதுகிறேன்.
சபாநாயகர் சமல் ராஜபக்ஷ
 
தாய்லாந்தின் பிரதமராக இருந்த உங்களது சகோதரர் உரையாற்றிய 10 வருடங்களின் பின்னர் நீங்கள் இங்கு உரையாற்றுவது எமது பாராளுமன்றத்திற்கு வரலாற்று முக்கியமான நிகழ்வாகும். தென் ஆசியாவில் உள்ள சிறந்த தலைவிகளில் நீங்களும் குறிப்பிடத்தக்க ஒருவர். நீங்கள் பாராளுமன்றத்தில் உரையாற்றுவதன் மூலம் இரு நாடுகளுக்குமிடையிலான உறவு மேலும் பலமடைகிறது.
 
தாய்லாந்தும் இலங்கையும் பெளத்த கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்ட நாடுகளாகும். எமது நாட்டுக்கு அளித்து வரும் ஒத்துழைப்பு குறித்து நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தாய்லாந்து மற்றும் இலங்கை பாராளுமன்றங் களுக்கிடையிலும் நீண்ட, நெருங்கிய உறவு காணப்படுகிறது.
2012 இல் எமது ஜனாதிபதி தாய்லாந்துக்கு விஜயம் செய்தார். இதனூடாக இருநாடுகளுக்குமிடையிலான உறவு மேலும் வலுவடைந்தது. சர்வதேச மற்றும் வலய மாநாடுகளின் போது தாய்லாந்து வழங்கி வரும் ஒத்துழைப்பையும் வரவேற்கிறோம். 2015 இல் தாய்லாந்தில் பீம்ஸ்டெக் மாநாடு நடைபெறுவது குறித்து வரவேற்கிறோம்.

புலிகள் அமைப்பு: தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில்: அமெரிக்கா அறிவித்துள்ளது!!

Saturday, June 01, 2013
இலங்கை::புலிகளின் நிதி வலையமைப்பு 2012 ஆம் ஆண்டு முழுவதும் தொழிற்பட்டது எனவும், அதிகள் முகாம்களிலிருந்து ஆட்களை கடத்தியதில் புலிகள் கூடுதலாக பங்குப்பற்றினர் என அமெரிக்கா கூறியுள்ளது.

பல்வேறு அறிக்கைகளில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளன எனவும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

புலிகள் அதன் சர்வதேச தொடர்பாளர்களையும் தமிழ் புலம்பெயர்ந்தோரையும் பயன்படுத்தி ஆயுதங்கள், தொடர்பு சாதனங்கள்,நிதிகள் மற்றும் வேறு தேவைகளுக்கான பொருட்கள் என்பவற்றை பெற்றது என அமெரிக்க இராஜங்க திணைக்களம் வெளியிட்ட பயங்கரவாதம் 2012 எனும் அறிக்கையில் கூறியுள்ளது.

இலங்கையுடனான பயங்கரவாத எதிர் கூட்டுறவும் பயிற்சியும் 2012 இல் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது என்றும் அமெரிக்க இராஜங்க திணைக்களம் கூறியுள்ளது.

புலிகள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி சேர்ப்பதை தடுப்பதிலும் கறுப்புபண சலவைக்கு எதிரான நடவடிக்கையிலும் இலங்கை திருப்திகரமாக செயற்படாமையால் அமெரிக்க நிதி நடவடிக்கைகளுக்கான விசேட செயற்படை இலங்கையை கறுப்புப்பட்டியலில் சேர்த்திருந்தது.

இலங்கை, இப்போது இந்த விசேட செயலணிப்படையின் வேலைத்திட்டதை பெரும்பாலும் பூரணப்படுத்தியுள்ளதால் அது 2013 ஆம் ஆண்டு யூன் மாதத்தில்  கறுப்பு பட்டடியலிலிருந்து இலங்கையை நீக்கப்படக்கூடுமென அந்த அறிக்கையில் கூறியுள்ளது.

இதற்கு முன்னர் இலங்கையின் நிலைமை நேரில் வந்து பரிசீலிக்கப்படும் என்றும் அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம்  வெளியிட்டுள்ள 2012 ம் ஆண்டுக்கான தீவிரவாதம் தொடர்பான நாடுகளின் அறிக்கையிலேயே இது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

2009இல் புலிகள் தோற்கடிக்கப்பட்ட போதிலும்,  புலிகளின் அனைத்துலக நிதி ஆதரவு வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருவது குறித்து இலங்கை கவலை கொணடுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புலிகளினது என்று குற்றம்சாட்டப்படும் நிதி அமைப்புகளை இலக்கு வைத்து பல தீவிரவாத முறியடிப்பு செயற்பாடுகளை இலங்கை மேற்கொண்டுள்ளதாகவும்  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

போர் நடைபெற்ற பிரதேசங்களில், இலங்கை 2012ம் ஆண்டில் பலமான இராணுவத்தை பராமரித்து வந்ததாகவும்,  புலிகளின் ஆதரவாளர்கள் மீள எழுச்சி கொள்ளும் சாத்தியம் குறித்து குரல் எழுப்பப்பவதாகவும் அமெரிக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புலிகளின் எச்சங்களை முற்றாக அழிப்பதற்கு  தீவிரவாத முறியடிப்பு சட்டங்களைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுவதாகவும், அதில் கூறப்பட்டுள்ளது.

தீவிரவாத முறியடிப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும், அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்களம், உள்நாடு பாதுகாப்புத் திணைக்களம், பாதுகாப்புத் திணைக்களம், போன்றவற்றுடன் இலங்கை தனது கடல்சார் எல்லை பாதுகாப்பில் இணைந்து செயற்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த அறிக்கையில்  புலிகள் இயக்கத்தை தொடர்ந்தும் வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்பாகவே இராஜாங்கத் திணைக்களம் பட்டியலிட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

 

மகளை வல்லுறவுக்கு உட்படுத்தியவருக்கு 39 வருட சிறைத்தண்டனை!

Saturday, June 01, 2013
இலங்கை::தனது மகளை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய தந்­தை­யொ­ரு­வ­ருக்கு வட­மத்­திய மாகாண உயர் நீதி­மன்றம் 39 வருட கடூ­ழிய சிறைத் தண்­ட­னையும் 75,000 ரூபா அப­ரா­தமும் பாதிக்­கப்­பட்ட புதல்­விக்கு ஒரு இலட்ச ரூபா நஷ்ட ஈடாக வழங்­கும்­ப­டியும் உத்­த­ர­விட்­டது.

மேற்­படி நபர் தமது மூத்த புதல்­வியை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய குற்­றத்­துக்­காக பத்து வருட சிறைத்­தண்­ட­னையை அனு­ப­வித்து வரு­பவர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

குற்­ற­வாளி அப­ரா­தத்­தையும் நஷ்­ட­ஈட்­டையும் வழங்­கா­விட்டால் மேலும் 21 மாத சிறைத்­தண்­ட­னையை அனு­ப­விக்க வேண்­டு­மெ­னவும் தீர்ப்பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

2008 ஜன­வரி 26 ஆம் திகதி முதல் 2008  ஏப்ரல் மாதம் 4 ஆம்­தி­கதி வரை­யி­லான காலப் பகு­தியில் தந்­த­ரி­மலை, நாமல்­வெவ,பகு­தியைச் சேர்ந்த இள வயது மகளை அவ்­வப்­போது கொடூ­ர­மான முறையில்  பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­திற்­குட்­ப­டுத்­தி­ய­தாக இந்த நபர் மீது குற்­றஞ்­சாட்­டப்­பட்­டி­ருந்­தது.

இவர் தனது மூத்த மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியமைக்கு தொடர்பான வழக்கில் ஏற்கெனவே சிறைத் தண்டனை  விதிக்கப்பட்டவராவார்.
 

Home » Sri Lanka is looking forward to thriving Maritime Opportunities under HE the President’s Guidance: - Commander of the Navy!


Saturday, June 01, 2013
Colombo::Commander of the Navy, Vice Admiral Jayanath Colombage delivering the welcome address at The Nautical Institute’s AGM & International Seminar being held at the BMICH stated that this is the best time in expanding the awareness of the maritime profession as Sri Lanka is looking forward to the thriving maritime opportunities. HE the President wishes to develop and drive the island-nation as the “Wonder of Asia” and make it a hub for maritime activities, he emphasized. He further stated that a professional association like The Nautical Institute composes a vital and strong entity in achieving the island-nation’s aspirations and ambitions. As such, he went on to add, we in the profession of nautical affairs, look forward for further strengths in these associations as they offer a whole new future for our future generations.

The Nautical Institute, the leading international professional association for qualified mariners and those associated with the marine profession which counts membership across 110 countries promoting high standards of professionalism through a vibrant network of over 40 branches spread across the globe, held its Annual General Meeting at the BMICH on 31st May 2013. The international seminar themed ‘Maritime Administration - Where at, where to? ’ also got underway to coincide with the high profile event organized and hosted by the Sri Lanka Branch this year under the direction of its incumbent Chairman, Vice Admiral Jayanath Colombage, RSP, VSV, USP, rcds, psc, MSc (DS), MA (IS), Dip in IR, Dip in CR, AFNI.

Senior Minister for International Monetary Co-operation & Deputy Minister of Finance & Planning, Hon. Sarath Amunugama graced the occasion as the Chief Guest. Project Minister of Ports & Highways, Hon. Rohitha Abeygunawardana was also among the distinguished guests present. Commander of the Sri Lanka Navy & Chairman, The Nautical Institute Sri Lanka Branch, Vice Admiral Jayanath Colombage delivered the Welcome Address at the inaugural session. The keynote speech was made by Mr. Andy Winbow FNI, Assistant Secretary General of the IMO, which is the UN body tasked with the responsibility for international maritime matters.

Knowledgeable speakers in their relevant fields are also scheduled to talk on a range of topics that include administration policy, national regulations, port state control, ship owning and management, the shipmaster and never ending paperwork for the ISM code at the seminar which concludes on 01st June. The seminar will also afford participants a chance to engage in open panel discussions giving them an opportunity to interact with the speakers. It is envisaged that a delegate participant resolution for the considered benefit of the maritime profession will be presented at the end of the conference. The full program is available on the event web portal at [http://niagm2013.lk/niagm2013_even_program.pdf].