Saturday, June 01, 2013
சென்னை::நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதி,
தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., சாந்தி. இவர், கடந்த, 29ம் தேதி, முதல்வர் ஜெயலலிதாவை
சந்தித்தார். அதன்பிறகு, அவருக்கு போனில் மிரட்டல்கள் வந்தபடி உள்ளன. அவரது
வீட்டிற்கு, போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டாலும், மிரட்டல்களால், அவர்
பீதியடைந்துள்ளார்.
இது குறித்து அவர்,அளித்த சிறப்பு பேட்டி:
இது குறித்து அவர்,அளித்த சிறப்பு பேட்டி:
பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்து விடுவதாக, மர்மநபர்கள் போன் மூலம் தொடர்ந்து
மிரட்டி வருகின்றனர். தே.மு.தி.க.,வில், மேலும் பலர் அதிருப்தியில் உள்ளனர்.
அவர்களும் வெளியேறுவது நிச்சயம்,'' என முதல்வரை சந்தித்த, தே.மு.தி.க., -
எம்.எல்.ஏ., சாந்தி தெரிவித்தார்.
கடந்த, இரண்டு ஆண்டுகளாக, கட்சியில் நான் சந்திக்காத, அவமானங்கள்
இல்லை. நாமக்கல் மாவட்டத்தில், எந்த விழாவிற்கும், கட்சியினர் என்னை அழைக்கவில்லை.
அவ்வாறு அழைத்தாலும், மற்ற நிர்வாகிகள், அங்கு செல்லக் கூடாது என, உத்தரவு
போட்டனர்.இதற்கு, நாமக்கல் மாவட்டச் செயலரும், திருச்செங்கோடு எம்.எல்ஏ.,வாகவுமான
சம்பத்குமார், மாநிலப் பொருளாளர் இளங்கோவன், ஆகியோர் தான் காரணம். ஜாதி
அடிப்படையில், என்னை ஓரங்கட்ட பார்த்தனர்.
அனுமதி மறுப்பு:
அனுமதி மறுப்பு:
இது
குறித்து, கட்சி தலைவர் விஜயகாந்திடம் புகார் தெரிவிக்க முயன்ற போது, மாநில
நிர்வாகி சந்திரகுமார், அனுமதி கொடுக்கவில்லை. "விரைவில், பிரச்னையை தீர்த்து
வைக்கிறேன்' என்று சமாளிப்பதிலேயே குறியாக இருந்தார். விஜயகாந்த் மனைவி
பிரேமலதாவிடம் புகார் தெரிவித்தேன். "யாரும் வராவிட்டாலும், மகளிர் அணி
ஆர்ப்பாட்டத்தில், நீங்கள் தனியாக சென்று, கலந்து கொள்ளுங்கள்' என, அவர்
கூறினார்.
மாவட்ட நிர்வாகம் மட்டுமின்றி, மாநில நிர்வாகமும், என்னை புறக்கணித்ததால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளா னேன். இரண்டு ஆண்டுகள் பொறுமையாக இருந்த, நான், முதல்வரை சந்திக்க வேண்டும், என்ற முடிவை, மூன்று நாட்களுக்கு முன்பு தான் எடுத்தேன். இதற்காக, யாரையும் அணுகவில்லை.
குற்றச்சாட்டு:

நேரடியாக முதல்வர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு, அனுமதி பெற்றேன். முதல்வரை
சந்திப்பதற்காக, நான் கோடி, கோடியாக, பணம் பெற்றதாக சொல்கின்றனர்; அதில்
உண்மையில்லை. தொகுதி பிரச்னைக்காக மட்டுமே, முதல்வரை சந்தித்தேன்.
எருமைப்பட்டி மற்றும் சேந்தமங்கலத்தில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்; முள்ளுக்குறிச்சியில் உள்ள மாநிலத்தின், ஒரே பழங்குடியினர் பள்ளியை, மேல்நிலை பள்ளியாக, தரம் உயர்த்த வேண்டும்; கொல்லிமலையில், பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில், சாலையை மேம்படுத்த வேண்டும் என, கோரிக்கை மனு கொடுத்துள்ளேன். அதை பரிசீலிப்பதாக, முதல்வர் கனிவுடன் கூறினார்.
பிரியாணி விருந்து:

நான், அ.தி.மு.க., விசுவாசி என்பதால்
தான், முதல்வரை சந்தித்ததாக கூறுகின்றனர். நான், 2001ம் ஆண்டு சட்டசபை தேர்தலில்
போட்டியிட, அ.தி.மு.க.,வில், "சீட்' கேட்டது உண்மை தான். இது குறித்து
விஜயகாந்திடம் சொல்லியிருக்கிறேன். அதை தெரிந்து தான், அவர் சட்டசபை தேர்தலில்
போட்டியிட, "சீட்' வழங்கினார். சட்டசபை விவாதங்களில், நான் பேசியதை கூட, கட்சி
நிர்வாகிகள் யாரும் பாராட்டவில்லை. நான் முதல்வரை சந்தித்த நிகழ்வை, இளங்கோவனும்,
சம்பத்குமார் எம்.எல்.ஏ.,வும், சென்னையில் பிரியாணி விருந்து வைத்து கொண்டாடி
உள்ளனர்.
அதிருப்தி:
அதிருப்தி:
ஆனால், விஜயகாந்திடம், வருத்தமான முகத்துடன்,
அவர்கள் விளக்கமளித்துள்ளதாக, தகவல் கிடைத்துள் ளது. என்னைப் போலவே, மேலும் சிலரும்
அதிருப்தியில் உள்ளனர். அவர்களும், ஒரு கட்டத்தில், வெளியேறுவது நிச்சயம். முதல்வரை
சந்தித்துவிட்டு வந்த பிறகு, எனக்கு போன் மூலம், தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றன.
"கார் கண்ணாடியை உடைத்து, பெட்ரோல் குண்டு வீசி கொன்று விடுவோம்' என்கின்றனர்.
"எவ்வளவு நாள் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது என்பதை பார்க்கிறோம்' என,
பயமுறுத்துகின்றனர். இவ்வாறு, சாந்தி தெரிவித்தார்.
முதல்வரை சந்தித்து பேசிய சேந்தமங்கலம் தொகுதி தேமுதிக எம்எல்ஏ சாந்திக்கு கொலை மிரட்டல் வந்ததால் அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரது வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதி தேமுதிக எம்எல்ஏ சாந்தி, கடந்த 3 நாட்களுக்குமுன் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். தனது தொகுதி பிரச்னைகள் தொடர்பாக முதல்வரை சந்தித்து மனு அளித்ததாக கூறினார். இந்த சம்பவம் தேமுதிகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.முதல்வருடனான சந்திப்பிற்கு பின்னர் தொகுதிக்கு திரும்பிய அவருக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில் நேற்று காலை 11.30 மணி அளவில் ராசிபுரம் நீதிமன்றத்திற்கு தனது வக்கீல் பழனிசாமியுடன், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சாந்தி வந்தார்.இதுபற்றி எம்எல்ஏ சாந்தி கூறியதாவது: தேர்தல் விதிமீறல் வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜராக வந்தேன். நான் கட்சி மாறி விட்டதாக மாவட்ட தேமுதிக செயலா ளர் சம்பத்குமார் கூறி உள்ளார். இது பொய்யான தகவல். 2001ம் ஆண்டு நான் அதிமுகவில் இருந்தது உண்மைதான். அப்போது எனக்கு தேர்தலில் சீட் கிடைக்கவில்லை. தேமுதிக துவங்கியபோது அதில் இணைந்தேன்.விஜயகாந்த்திடமும் நான் அதிமுகவில் இருந்தது பற்றி தெரிவித்துள்ளேன்.
நான் தேமுதிக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆன பிறகும் அதிமுகவைச் சேர்ந்தவர் என்று கூறி என் மீது விரோத போக்கை கடைபிடித்தனர். நான் அனாதை எம்எல்ஏ ஆக்கப்பட்டேன். பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர் என்பதால் சாதி அடிப்படையில் என்னை மாவட்டசெயலாளர் புறக்கணித் தார். எனக்கு நல்ல பெயர் வந்துவிடக்கூடாது என எனக்கு எதிராக கட்சியினர் செயல்பட்டனர்.2011 தேர்தலின் போது அதிமுகவுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்றுதான் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக அமர்ந்தனர். ஆனால் கூட்டணி சேர்ந்த கட்சிக்கு துரோகம் செய்து விட்டனர்.நான் இப்போது கூட கட்சியை விட்டு போக நினைக்கவில்லை. விஜயகாந்த்தை தெய்வமாக நினைக்கிறேன். என்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு எதுவும் செய்யமுடியவில்லை என்பதால் தான் தொகுதி மக்களின் நன்மை கருதி முதல்வரை சந்தித்தேன்.

நான் முதல்வரை சந்தித்த பின்னர் போன் மூலம் தேமுதிக நிர்வாகிகள் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். நான் எந்த தவறும் செய்யவில்லை. இவ்வாறு எம்எல்ஏ சாந்தி கூறினார்.முதல்வரை சந்தித்த பின்னர் சாந்திக்கு போனில் கொலை மிரட்டல் வந்ததால் ஆயில்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார். இதையடுத்து எஸ்ஐ தலைமையில் 3 போலீசார் புதன்கிழமை மாலை முதல் அவரது வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் எஸ்பி கண்ணம்மாள் உத்தரவுப்படி நேற்று முன்தினம் மாலையில் இருந்து அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment