Saturday, June 1, 2013

ரஷ்ய ஆகாய பாதுகாப்பு ஆயுதங்களைக் கொண்ட முதலாவது தொகுதி சிரியாவை சென்றடைந்துள்ளது!


Saturday, June 01, 2013
சிரியா::ரஷ்ய ஆகாய பாதுகாப்பு ஆயுதங்களைக் கொண்ட முதலாவது தொகுதி சிரியாவை சென்றடைந்துள்ளது.
 
இந்த தகவலை சிரிய ஜனாதிபதி பஷார் அல் அசார், லெபனான் தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
 
மேற்கத்தைய நாடுகளின் கடும் ஆட்சேபனைக்கு இடையே ரஷ்ய இந்த நவீன ஏவுகணை ஆயுதங்களை அனுப்பியுள்ளது.
 
இந்தநிலையில், சிரிய யுத்தத்தின் தாக்கம் குறைவடையும் என தாம் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, குவாசய நகரத்தில் இடம் பெற்று வரும் தாக்குதலில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லெபனான் ஷியா போராளிகளும், சிரிய போராளிகளுடன் இணைந்து செயற்பட்டு வருவதாக போராளிகளின் தளபதி ஜென்ரல் செலிம் இன்றிஸ் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, நீதியை நிலை நாட்டுவதற்கு மேலதிகமான ஆயுதங்கள் தேவைப்படுவதாக  அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
அந்த நகரம் இராணுவத்தின் வசம், வீழ்ச்சியடையும் பட்சத்தில், அங்கு குடியுள்ள ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ரஷ்யா மேலும் வழங்கவுள்ள ஆகாய ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்களில் பூமியிலிருந்து ஆகாயத்தில் செல்லும் வானுர்திகளை துல்லியமாக சென்று தாக்கக் கூடிய தகமைகளை கொண்ட எஸ் 300 ரக ஆயுதங்களும் உள்ளடங்குவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment