Saturday, June 01, 2013
இலங்கை::புலிகளின் நிதி வலையமைப்பு 2012 ஆம் ஆண்டு முழுவதும் தொழிற்பட்டது எனவும், அதிகள் முகாம்களிலிருந்து ஆட்களை கடத்தியதில் புலிகள் கூடுதலாக பங்குப்பற்றினர் என அமெரிக்கா கூறியுள்ளது.
பல்வேறு அறிக்கைகளில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளன எனவும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.
புலிகள் அதன் சர்வதேச தொடர்பாளர்களையும் தமிழ் புலம்பெயர்ந்தோரையும் பயன்படுத்தி ஆயுதங்கள், தொடர்பு சாதனங்கள்,நிதிகள் மற்றும் வேறு தேவைகளுக்கான பொருட்கள் என்பவற்றை பெற்றது என அமெரிக்க இராஜங்க திணைக்களம் வெளியிட்ட பயங்கரவாதம் 2012 எனும் அறிக்கையில் கூறியுள்ளது.
இலங்கையுடனான பயங்கரவாத எதிர் கூட்டுறவும் பயிற்சியும் 2012 இல் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது என்றும் அமெரிக்க இராஜங்க திணைக்களம் கூறியுள்ளது.
புலிகள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி சேர்ப்பதை தடுப்பதிலும் கறுப்புபண சலவைக்கு எதிரான நடவடிக்கையிலும் இலங்கை திருப்திகரமாக செயற்படாமையால் அமெரிக்க நிதி நடவடிக்கைகளுக்கான விசேட செயற்படை இலங்கையை கறுப்புப்பட்டியலில் சேர்த்திருந்தது.
இலங்கை, இப்போது இந்த விசேட செயலணிப்படையின் வேலைத்திட்டதை பெரும்பாலும் பூரணப்படுத்தியுள்ளதால் அது 2013 ஆம் ஆண்டு யூன் மாதத்தில் கறுப்பு பட்டடியலிலிருந்து இலங்கையை நீக்கப்படக்கூடுமென அந்த அறிக்கையில் கூறியுள்ளது.
இதற்கு முன்னர் இலங்கையின் நிலைமை நேரில் வந்து பரிசீலிக்கப்படும் என்றும் அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள 2012 ம் ஆண்டுக்கான தீவிரவாதம் தொடர்பான நாடுகளின் அறிக்கையிலேயே இது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
2009இல் புலிகள் தோற்கடிக்கப்பட்ட போதிலும், புலிகளின் அனைத்துலக நிதி ஆதரவு வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருவது குறித்து இலங்கை கவலை கொணடுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புலிகளினது என்று குற்றம்சாட்டப்படும் நிதி அமைப்புகளை இலக்கு வைத்து பல தீவிரவாத முறியடிப்பு செயற்பாடுகளை இலங்கை மேற்கொண்டுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
போர் நடைபெற்ற பிரதேசங்களில், இலங்கை 2012ம் ஆண்டில் பலமான இராணுவத்தை பராமரித்து வந்ததாகவும், புலிகளின் ஆதரவாளர்கள் மீள எழுச்சி கொள்ளும் சாத்தியம் குறித்து குரல் எழுப்பப்பவதாகவும் அமெரிக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புலிகளின் எச்சங்களை முற்றாக அழிப்பதற்கு தீவிரவாத முறியடிப்பு சட்டங்களைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுவதாகவும், அதில் கூறப்பட்டுள்ளது.
தீவிரவாத முறியடிப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும், அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்களம், உள்நாடு பாதுகாப்புத் திணைக்களம், பாதுகாப்புத் திணைக்களம், போன்றவற்றுடன் இலங்கை தனது கடல்சார் எல்லை பாதுகாப்பில் இணைந்து செயற்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த அறிக்கையில் புலிகள் இயக்கத்தை தொடர்ந்தும் வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்பாகவே இராஜாங்கத் திணைக்களம் பட்டியலிட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment