இலங்கையின்
அரசியலமைப்பு, அரச கட்டமைப்பு, சட்டத்தொகுதி ஆகியவற்றில் மாற்றங்களை
ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துவரும் முயற்சியானது, மிகவும்
அபாயகரமானது. அதன் ஊடாக, யுத்தத்தினால் பெற்றுக்கொள்ள முடியாததை,
புலிபயங்கரவாதிகளுக்குக் கையளிப்பதற்கு இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது
என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த
விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது- மேற்குறிப்பிட்ட விவகாரங்கள் தொடர்பில்,
கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல், ஒவ்வொரு விடயங்களும் ஊடகங்களின் ஊடாக
வெளியாகியுள்ளன அல்லது உத்தியோகபூர்வமாக அரசாங்கத்தினால்
வெளியிடப்பட்டுள்ளன. இதிலிருந்து அரசாங்கத்தின் உள்நோக்கம்
வெளிப்பட்டுள்ளது. அரசியலமைப்பில், உப-குழுக்களின் அறிக்கைகள் கடந்த
நவம்பர் மாதம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டன. நல்லிணக்கம் மற்றும்
ஒருமைப்பாடு தொடர்பிலான செயலணியின் அறிக்கையானது ஜனவரி மாதம் வெளியானது.
அதில், ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை பெற்றுக்கொள்வதற்காக இலங்கைக்கு
விதிக்கப்பட்ட 58 நிபந்தனைகள், பயங்கரவாதச் தடைச்சட்டத்துக்கு பதிலாக,
பிரதமரினால் முன்மொழியப்பட்ட புதிய சட்டமூலம் ஆகியனவும் ஊடகங்கங்களினால்
பகிரங்கப்படுத்தப்பட்டன.
இவையாவும்,
2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், இலங்கையில் நல்லாட்சிக்கு உதவி மற்றும் இணை
அனுசரனையுடன் ஒபாமா நிர்வாகம், ஐரோப்பிய சக்திகளினால் ஐக்கிய நாடுகள்
சபையின் மனித உரிமைகள் பேரவைக்குள், இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டு,
நிறைவேற்றப்பட்ட யோசனையை அடிப்படையாகக் கொண்டதாகும். தற்போதைய
சூழ்நிலையில், ஒபாமாவின் ஆட்சி நிர்வாகம் துடைத்தெறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புதிய அரசாங்கத்துடன் கலந்துரையாடி, அதில் உள்ள பிரிவுகளை
மாற்றிக்கொள்வதற்கு இந்த அரசாங்கம் எவ்விதமான முயற்சிகளையும்
மேற்கொள்ளவில்லை என்பதனை மக்களுக்கு தெளிவுப்படுத்திக் கொள்கின்றேன்.
தேசத்துரோகமான
நிகழ்ச்சி நிரலினால்தான் இவ்வாறான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.
அதனால்தான், 2015ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்பட்ட
யோசனைக்கு அமெரிக்கா அல்ல இலங்கை அரசாங்கமே தோள்கொடுக்க வேண்டியுள்ளது.
பிரதமரின் நல்லிணக்கம் தொடர்பிலான செயலணியின் பரிந்துரைகளின் பிரகாரம்,
இந்த நாட்டில் ஏற்பட்ட ஆயுதப் போராட்டத்துக்கு, பிரதிவாதிகளிடம்
மன்னிப்புக் கோரவேண்டும். எனினும், பயங்கரவாதிகள் அமைப்பு அல்லது
அவர்களுக்கு உதவி ஒத்தாசை நல்கிய வேறு அரசியல் அமைப்புகளிடம் மன்னிப்பு
கோரவேண்டியதில்லை. அதனடிப்படையில், பயங்கரவாத்தை ஒழிப்பதற்கு இலங்கை
அரசாங்கம் செய்தமை தவறானது என்ற கருத்து உலகத்துக்கு
எடுத்தியம்பப்பட்டுள்ளது.
புலிகளின்
மயானங்கள் முன்பிருந்ததை போலவே மீண்டும் நிர்மாணிக்கப்பட வேண்டும் என்றும்,
மாவீரர் தினத்தைக் கொண்டாடுவதற்கு தேவையான ஏற்பாடுகளுக்கு இடமளிக்க
வேண்டும். புலி உறுப்பினர்களின் உறவினர்கள், உயிரிழந்த புலி
உறுப்பினர்களின் படங்கள், புலிச் சீருடை ஆகியவற்றை தங்களுடைய வீடுகளில்
காட்சிக்கு வைத்திருப்பதற்கு இடமளிக்க வேண்டும் என்றும்
பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனினும், பயங்கரவாதத்துக்கு எதிராக போராடி,
வெற்றிகொண்ட வெற்றியை கொண்டாடுவது தொடர்பில் அந்த செயலணியில் எங்குமே
பரிந்துரைக்கப்படவில்லை.
குற்றச்சாட்டுகள்
முன்வைக்கப்படாத சகல புலிகளும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். எனினும்,
குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படும் இராணுவத்தினர் சிறைவைக்கப்பட
வேண்டும் என்றும் அந்த செயலணி பரிந்துரைத்துள்ளது. நல்லிணக்கத்துக்கு இது
அத்தியாவசியமானதாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2015ஆம்
ஆண்டு ஓபாமா அரசாங்கம், மனித உரிமைகள் பேரவை, ஐரோப்பிய ஒன்றியத்தின்
ஜி.எஸ்.பி பிளஸூக்கான நிபந்தனைகளின் பிரகாரம் எங்களுடைய படையினருக்கு
எதிராக வெளிநாட்டு, நீதிபதிகள் அடங்கிய யுத்தக்குற்ற நீதிமன்றத்தை
நிறுவுவதற்கும் பிரதமரின் இந்த நல்லிணக்க செயலணி பரிந்துரைத்துள்ளது. புலி
உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு உள்ளமையால், நடைமுறையில் உள்ள
சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்
செய்யப்பட்டுள்ளமையால், இந்த யுத்தக் குற்ற நீதிமன்றத்தின் ஊடாக புலி
உறுப்பினர்களுக்கு எதிராக செயற்படக்கூடாது என்றும் யோசனையொன்று
முன்வைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், புலி அமைப்பிலிருந்து விலகி,
அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட புலித் தலைவர்களுக்கு எதிராக
யுத்தக்குற்ற விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் அந்த செயலணி
பரிந்துரைத்துள்ளது.
ஜெனீவா மனித
உரிமைகள் பேரவையின் யோசனையின் பிரகாரம், யுத்தக்குற்றத்தை இழைத்ததாகச்
சந்தேகிக்கப்படும். எனினும், யுத்த நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு
போதியளவான சாட்சிகள் இல்லையாயின், இராணுவத்தினரை நிர்வாக செயற்பாட்டின்
ஊடாக, சேவையிலிருந்து நீக்கப்பட வேண்டும். எனினும், பயங்கரவாத
தடைச்சட்டத்துக்கு பதிலாக பிரதமரினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய
சட்டத்தின் பிரகாரம் பயங்கரவாத சந்தேகநபர்களுக்கு எதிராக போதியளவான
சாட்சிகள் இல்லாவிடின், மன்னிப்பு கோருவதற்கு, மனம்திரும்புதல் அறிக்கையை
கொடுத்தல், புனர்வாழ்வை பெற்றுகொள்ளல், எதிர்காலங்களில் குற்றச்செயல்களை
செய்யாமல் இருப்பதற்கு உறுதிபூணுதல், சமூக சேவையில் ஈடுபடல் ஆகிய
நிபந்தனைகளின் அடிப்படையில் சட்டமா அதிபர் அல்லது மேல் நீதிமன்றமானது அந்த
பயங்கரவாதிக்கு எதிராக கொண்டுவந்த சட்டமுறையை கைவிடமுடியும்.
யுத்தக்குற்றங்களுடன்
தொடர்புடைய இராணுவ உறுப்பினர்களுக்கு எவ்விதமான பொது மன்னிப்பு
வழங்கப்படகூடாது என்றும் அந்த செயலணியினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது,
எனினும், பிரதமரின் புதிய சட்டத்தினால், நீதிமன்றத்தில் குற்றவாளியாக
இனங்காணப்பட்ட பயங்கவாதி, பயங்கரவாதத்தை பகிரங்கமாக கண்டித்தல்,
மனம்திரும்பு அறிக்கையை கொடுத்தல், மேலிருந்து வழங்கப்பட்ட அழுத்தம்
உத்தரவு காரணமாகவே அக்குற்றத்தை புரிய வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
ஆகியவற்றின் ஊடாக சிறை தண்டனை குறைப்பதற்கான உறுப்புரையும் புதிய
சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அனுபவமிக்க
இராணுவத்தினரையும் இராணுவ அதிகாரிகளையும் வீட்டுக்கு அனுப்பி
வைத்துவிட்டு, நாட்டின் தேசிய பாதுகாப்பை எவ்வாறு உறுதிப்படுத்துவது என்று
அந்த செயலணியின் பரிந்துரையில் எவ்விடத்திலும் குறிப்பிடப்படவில்லை.
பிரதமரின் புதிய சட்டத்தின் பிரகாரம், கைது செய்யப்படுகின்ற பயங்கரவாத
சந்தேகநபர்களின் பாதுகாப்பை, அப்பிரதேசத்தின் பொலிஸ் பொறுப்பதிகாரி, மனித
உரிமை ஆணைக்குழு, மாகாணத்தில் உள்ள நீதவான் ஆகியோர் உறுதிப்படுத்தவேண்டும்.
தடுத்துவைத்தல் மூன்று மாதங்களிலிருந்து 30 நாட்களாக குறைந்துள்ளது.
தடுத்துவைக்க கூடிய ஆகக்கூடிய காலமான 18 மாதங்கள் 6 மாதங்களாக
குறைக்கப்பட்டுள்ளது. சந்தேகநபருக்கு எதிராக ஒருவருடத்துக்குள் வழக்கு
தாக்கல் செய்யப்படாது. எனினும், வழக்குகாலம் 2 வருடங்களுக்கு மேல்
நீடிக்கப்படுமாயின் சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்படவேண்டும்.
பயங்கரவாதிகளுக்கு
ஆகக்கூடிய இடம் வழங்கப்பட்டுள்ளதுடன், இராணுவத்தினருக்கு ஆகக்கூடிய
இடையூறுகளும் இந்த புதிய சட்டத்தில் உள்ளக்கப்படும் வகையிலேயே பிரதமரின்
செயலணியினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவசரகாலச் சட்டத்தை
பிரகரனடப்படுத்தும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு இருந்த
அதிகாரங்கள் குறைக்கப்பட்டும் வகையில், செயலணியினால்
பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இவை, சமாதானம் சீர்குலையும் போது, பொலிஸ்,
முப்படைகளின் கைகளை கட்டிவிடுவதாகும். அவ்வாறான நிலைமை ஏற்படுமாயின்,
நாட்டின் சமாதானத்தை எவ்வாறு பாதுகாப்பது.
இலங்கைச்
சட்டத்துக்குள் சர்வதேசம் நுழையும் வகையில், சட்டமுறைமைகளில் மாற்றங்களை
ஏற்படுத்தி, ஜெனீவா மனித உரிமைகள் பேரவை, இலங்கைக்கு மேன்முறையீட்டை
முன்வைப்பதற்கு இடமளிக்கவேண்டும் என்று சட்டம் தொடர்பிலான குழு, யோசனையை
முன்வைத்துள்ளது. இது இலங்கையின் உயர்நீதிமன்றமே என்ற மிக உயர்ந்த
நீதிமன்றம் என்ற நிலைமையிலிருந்து இல்லாமற் செய்யப்பட்டுள்ளது. இலங்கை மதம்
அல்லாத நாடாகவும் பிரகடனப்படுத்துவதற்கான யோசனை, பிரதமரின் செயலணியின்
ஊடாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மாகாண
ஆளுநர்களின் சகல அதிகாரங்களையும் இல்லாமற் செய்வதற்கு யோசனை
முன்வைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், அந்த மாகாணத்தின்
முதலமைச்சர்களால், தங்களுடைய விருப்பத்தின் பிரகாரம், ஆளுநர்களை
நியமித்துகொள்ளமுடியும். அதேபோல, அந்த அமைச்சரவையின் ஆலோசனையின் பிரகாரம்
ஆளுநர் செயற்படமுடியும். இதன் ஊடாக ஒன்றையாட்சி இல்லாமற் செய்யப்பட்டு,
பெடரல் ஆட்சிமுறைமையொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு
அரசாங்கம், நாட்டின் சமாதானத்துக்கும் ஒன்றுமைக்கும் பங்கம் ஏற்படுத்தும்
வகையில், தேசத்துரோகமான வேலைத்திட்டத்தை முன்னெடுக்கின்றது என்பதனை
சகலருக்கும் தெரிவித்து கொள்கின்றேன் என்றும் அவ்வறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது.