கேப்பாப்பிலவில் பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டாலும் அங்குள்ள
இராணுவ முகாம்கள் ஒருபோதும் அகற்றப்படாது என்று முடியாது என்று இராணுவப்
பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பிலுள்ள
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் நடைபெற்றது. இன்றைய ஊடகவியலாளர்
சந்திப்பில் மக்களுடைய காணிகள் விடுவிக்கப்படுவதைப் போன்று அங்குள்ள
இராணுவ முகாம்கள் தொடர்பிலும் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த
இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரட்ன -
அன்று இந்தக் கேள்வி எழுப்பப்பட்டபோது இதே பதிலைத்தான் வழங்கியிருந்தேன்.
இராணுவ முகாம்கள் அங்கிருந்து அகற்றப்பட
மாட்டாது. இங்கு விமானப்படை முகாம்
விமான ஓடுபாதையும் உண்டு. பலாலி இராணுவ முகாம்பகுதியில் மக்கள் எவ்வாறு
குடியமர்ந்துள்ளார்களோ அவ்வாறே இப்பகுதியிலும் மீளக்குடியமர்வார்கள்.
இப்பிரதேச மக்களின் காணிகள் இன்று கையளிக்கப்படுவதற்கான நடவடிக்கை
இடம்பெற்று வருகிறது. இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள கிளிநொச்சி மத்திய மகா
வித்தியாலயத்திற்கு சொந்தமான காணியை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளும்
முன்னெடுக்கப்பட்டுள்ளது” - என்றார்.
No comments:
Post a Comment