Monday, February 27, 2017

6 ஆஸ்கர் விருதுகளை குவித்த ‛லா லா லேண்ட்', ஜாக்கிசானுக்கு கவுரவ ஆஸ்கர் விருது!

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 89வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில், ‛லா லா லேண்ட்' படம் 6 ஆஸ்கர் விருதுகளை குவித்தது. ஹாலிவுட்டின் அதிரடி மன்னன் ஜாக்கி சானுக்கு கவுரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய நடிகர் தேவ் பட்டேல் விருது பெறும் வாய்ப்பை தவறவிட்டார்.
 
சினிமா துறையில் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர். 89வது ஆஸ்கர் விருதுகள், அமெரிக்காவின், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ‛டால்பி' திரையரங்கில் நடந்தது. 24 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டன. ஏராளமான திரைப்பிரபலங்கள் டால்பி திரையரங்கில் குவிந்தனர். அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்திய நடிகை பிரியங்கா சோப்ராவும் கலந்து கொண்டார்.


6 விருதுகளை குவித்த லா லா லேண்ட்

 
89வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ‛லா லா லேண்ட்' திரைப்படம் 14 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதில், சிறந்த நடிகை, இயக்கம், தயாரிப்பு வடிவமைப்பு, இசை, பாடல் மற்றும் ஒளிப்பதிவு என 6 பிரிவுகளில் விருது வென்றது.

தேவ் பட்டேல் ஏமாற்றம் :
 
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய நடிகர் தேவ் பட்டேலுக்கு ஆஸ்கர் கிடைக்கவில்லை. ‛லைன்' படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதுப்பட்டியலில் அவரது பெயர் இடம்பெற்றிருந்தது. ஆனால், ‛மூன்லைட்' படத்தில் நடித்த மஹேர்சலா அலி, சிறந்த துணை நடிகர் விருதை வென்றார்.


ஜாக்கி சானுக்கு கவுரவ ஆஸ்கர் :

 
ஹாலிவுட்டின் அதிரடி மன்னனான ஜாக்கி சான் திரைத்துறையில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருகிறார். அவரது கலைச்சேவையை பாராட்டி, ஜாக்கி சானுக்கு கவுரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.

 
விருதுகள் விபரம்

 
சிறந்த துணை நடிகர் : மஹேர்சலா அலி (மூன் லைட்)சிறந்த ஒப்பனை : அலிசாண்ட்ரோ. ஜியார்ஜியா, கிறிஸ்டோபர் வில்சன் (சூசைட் ஸ்குவாட்)சிறந்த ஆடை வடிவமைப்பாளர் - கொலின் அட்வுட் (பென்டாஸ்டிக் பீஸ்ட் அண்ட் வேர் டூ பைன்ட் தம்)சிறந்த ஆவணப்படம் : ஓ.ஜே. மேட் இன் அமெரிக்காசிறந்த சவுண்ட் எடிட்டிங் : அரைவல்சிறந்த சவுண்ட் மிக்ஸிங் : சிறந்த சவுண்ட் மிக்ஸிங் - கெவின் ஓ கனெல், ஆண்டி ரைட், ராபர்ட் மெக்கென்சி, பீட்டர் க்ரேஸ்(படம்- ஹாக்ஸா ரிட்ஜ்)சிறந்த துணை நடிகை : வயோலா டேவிஸ் (படம் - பென்சஸ்)கவுரவ ஆஸ்கார் விருது : ஜாக்சிசான் (1960 ம் ஆண்டு முதல் கலைத்துறையில் பணியாற்றி வருவதற்காக)சிறந்த வெளிநாட்டு மொழி படம் : தி சேல்ஸ்மேன்
 
(ஈரான் நாட்டு படம்)சிறந்த அனிமேஷன் குறும்படம் : பைபர்சிறந்த அனிமேஷன் படம் : ஜூட்டோபியாசிறந்த தயாரிப்பு வடிவமைப்பு : லா லா லேண்ட்சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ் : தி ஜங்கிள்புக்சிறந்த பட எடிட்டிங் : ஹாக்ஸா ரிட்ஜ்சிறந்த ஆவண குறும்படம் : தி ஒயிட் ஹெல்மெட்ஸ்சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம் : சிங்சிறந்த ஒளிப்பதிவு : லினஸ் சான்ட்கிரின் (லா லா லேண்ட்) சிறந்த இசை : ஜஸ்டின் ஹர்விட்ஸ், (லா லா லேண்ட்) சிறந்த பாடல் : ‛சிட்டி ஆப் ஸ்டார்...' என்ற பாடல் (லா லா லேண்ட்)சிறந்த திரைக்கதை : ‛மான்செஸ்டர் பை தி சீ' - கென்னத் லோனர்கேன் சிறந்த திரைக்கதை தழுவல் : ‛மூன் லைட்' - பேரி ஜேக்கின்ஸ் மற்றும் டேரல் அல்வின் மெகர்னேசிறந்த இயக்குநர் : டேமியன் சால்ஸே (லா லா லேண்ட்)சிறந்த நடிகர் : கேஸி ஆப்லெக் (மான்செஸ்டர் பை தி சி)சிறந்த நடிகை : எமா ஸ்டோன் (லா லா லேண்ட்)
 
சிறந்த படம் : மூன் லைட்விருதில் குளறுபடி : சிறந்த திரைப்படத்திற்கான விருது முதலில் லா லா லேண்ட் படத்திற்கு அறிவிக்கப்பட்டது. பின்னர் அது தவறாக சொல்லப்பட்டுவிட்டது என்றும், சிறந்த படம் ‛மூன் லைட்' என்று பின்னர் அறிவிக்கப்பட்டது. இந்த குளறுபடியால் ஆஸ்கர் விழாவில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment