நியூயார்க்: உலக அளவில் இந்தியர்கள் அதிகளவில் புலம்
பெயர்ந்துள்ளனர், என ஐ. நா. சபை உலகளவில் புலம் பெயர்ந்தவர்களுக்கான
ஆய்வறிக்கையில் வெளியிட்டுள்ளது.
உலகளவில் 2015 ஆண்டு கணக்கு படி சுமார் 1.60 கோடி இந்தியர்கள் மற்ற நாடுகளில் குடியேறியுள்ளனர். இதில் 40 சதவீதம் இந்தியர்கள் குறிப்பிட்ட மூன்று நாடுகளில் மட்டும் குடியேறியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு நாடுகளில் சுமார் 30 லட்சம் இந்தியர்களும், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவில் தலா 20 லட்சம் புலம் பெயர்ந்த இந்தியர்களும் வசித்து வருகின்றனர்.
ஐக்கிய அரபு நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில், புலம்பெயர்ந்த இந்தியர்களின் பங்கு பெருமளவு உள்ளது.அதேபோல் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஐந்து இந்தியர்கள் அமெரிக்க காங்கிரசுக்கு தேர்வாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலிருந்து
பாகிஸ்தானுக்கு புலம்பெயர்ந்தவர்கள் எண்ணிக்கை ஐ. நா.வின் அறிக்கையில்
இருந்தாலும் இந்தியாவில் இதற்கான அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் இல்லை.
மேலும், 2015ல் இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள் நமது நாட்டிற்கு
அனுப்பிய தொகை ரூ 4 லட்சத்து 76 ஆயிரம் கோடியாகும்.
No comments:
Post a Comment