உலகின் மிகக் கொடூரமான புலிகள் அமைப்பை இலங்கை இராணுவம் தோற்கடித்துள்ளது. இந்த போரில் 29 ஆயிரம் இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன், 14 ஆயிரம் இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர் என ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்ட தொடர் ஜெனிவாவில்
இடம்பெற்று வரும் நிலையில், அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர்
இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
மனித
உரிமைகள் ஆணையமானது போர் குற்ற நடவடிக்கைகள் என்ற பெயரில் இராணுவத்தின்
மீது குற்றம் சுமத்தியுள்ளது. இது ஒசாமா பின்லேடனை கொலை செய்த அமெரிக்க
கடற்படைக்கு எதிராக வழக்கு பதிவு செய்தது போன்று அமைந்துள்ளது.
அத்துடன்,
புலிகள் ஆதரவு அமைப்புகள் அனைத்தும் ஐக்கிய நாடுகள் மன்றத்தை தவறான
கருத்துகளால் திசைத்திருப்பியுள்ளது. தமிழர்களின் தற்போதைய நிலைக்கு காரணமே
புலிகள் அமைப்பு மட்டுமே.
புலிகள் ஆதரவு அமைப்புகள் கொணர்ந்துள்ளவை
அனைத்துமே ஆதாரமற்றவை. இதை இலங்கையில் வந்து பார்வையிட்டாலே உண்மை நிலையை
தெரிந்து கொள்ளலாம்.
இலங்கை அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தந்துவவேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment