ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு முதுகெலும்பு இருந்தால், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பிலான யோசனையின் ஆறாவது பிரிவை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் இன்று ஏற்பாடு செய்துள்ள ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மனித உரிமைகள் ஆணையாளரால் நாளை இலங்கை தொடர்பிலான விடயங்கள் ஆணைக்குழு அமர்வில் முன்வைக்கப்படவுள்ள நிலையில், இது குறித்த இறுதி முடிவு வௌ்ளிக்கிழமை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
2015இல் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட யோசனை மிகவும் தௌிவாக, வௌிநாட்டு நீதிபதிகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என, தெரிவித்துள்ள நிலையில், அது இரண்டாவது முறையும் உறுதிப்படுத்தப்படும் எனவும், இதற்கு இணை பங்களிப்பு வழங்க வேண்டாம் என, ஜனாதிபதியிடம் கோருவதாகவும், பீரிஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment