Monday, March 20, 2017

போரின் இறு­திக் கட்­டத்­தில் படை­யி­ன­ரி­டம் சர­ணடை­ந்ததைப் பார்த்தவர்கள் எவரும் இல்லை ; கோத்­த­பாய ராஜ­பக்ச!

போரின் இறு­திக் கட்­டத்­தில் படை­யி­ன­ரி­டம் சர­ணடை­ந்ததைப் பார்த்தவர்கள் எவரும் இல்லை என்று முன்­னாள் பாது­காப்­புச் செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்­கி­ல பத்­தி­ரி­கைக்கு வழங்­கிய செவ்­வி­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,
இலங்கை அரசு உரு­வாக்­க­வுள்ள காணா­மற்­போ­னோர் அலு­வ­ல­கம் யதார்த்­த­பூர்­வ­மற்­றது. காணா­மற்­போ­ன­வர்­கள் குறித்து பல சம்­ப­வங்­கள் உள்­ளன. அதில் ஒரு விட­யத்­தையே நான் நவ­நீ­தம் பிள்­ளை­யி­டம் சுட்­டிக்­காட்­டி­னேன். போரில் தங்­கள் குடும்­பத்­த ­வர்­கள் உயி­ரி­ழந்­ததை ஏற்­ப­தற்கு எப்­படி பெற்­றோர்­கள் தயா­ரில்லை என்­ப­தை­யும் அவர்­கள் உயி­ரு­டன் இருக்­கின்­றார்­கள் என்று அவர்­கள் நம்­பு­வ­தை­யும் நான் சுட்­டிக்­காட்­டினேன்.
 
இளை­யோர் தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் இயக்­கத்­தில் இணை­யும் போது அவர்­க­ளது பெற்­றோர்­கள் அங்கு இருப்­ப­தில்லை.தங்­கள் பிள்­ளை­கள் எங்­கி­ருக்­கின்­றார்­கள் என்­ப­தும் அவர்­க­ளுக்­குத் தெரி­யாது. இதன் கார­ண­மாக அவர்­கள் மோத­லில் கொல்­லப்­பட்­ட­தும், அவர்­கள் உடல்­கள் மீட்­கப்­ப­டாத போது, பெற்­றோர்­கள் தங்­கள் பிள்­ளை­கள் உயி­ரு­டன் இருப்­ப­தா­கக் கரு­து­கின்­ற­னர்.
 
இலங்­கை­யில் இர­க­சிய முகாம்­கள் என்று எவை­யும் இல்­லாத போதி­லும், இந்­தப் பெற்­றோர் தங்­கள் பிள்­ளை­கள் இர­க­சிய முகாம் களில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­னர் என்று நம்­பு­கின்­ற­னர். நவ­நீ­தம் பிள்ளை வடக்­கில் மக்­களை சந்­தித்­த­வேளை, அவ­ரி­டம் பலர் தங்­கள் குடும்­பத்­த­வர்­கள் இர­க­சிய முகாம் க­ளில் வைக்­கப்­பட்­டுள்­ள­னர் என்று தெரி­வித்­தி­ருந்­த­னர். அவ­ரும் அதனை நம்­பி­னார். காணா­மற்­போ­ன­வர்­க­ளில் சிலர் வெளி­நா­டு­க­ளில் வாழ்­கின்­ற­னர்.
 
இதற்­கான உதா­ர­ணத்தை நான் நவ­நீ­தம்­பிள்­ளை­யி­டம் முன்­வைத்­தேன்.காணா­மற்­போ­ன­வர்­கள் விவ­கா­ரம் விசா­ரணை செய்­வ­தற்கு இல­கு­வான ஒன்­றல்ல. அது மிக­வும் குழப்­ப­க­ர­மா­னது. இரா­ணு­வத்­தி­டம் எவ­ரும் சர­ணை­டைந்­த­தற்­கான ஆதா­ரங்­கள் எது­வு­மில்லை. மக்­கள் பல வதந்­தி­களை அடிப்­ப­டை­யாக வைத்து பல கதை­களை முன்­வைத்­த­னர். அவர்­கள் சிலர் சொல்­வ­தா­கவே கதை­க­ளைச் சொல்­கின்­ற­னர். சர­ணை­டை­வ­தைப் பார்த்­த­வர்­கள் எவ­ரும் இல்லை. போரின் யதார்த்­தம் இதுவே. இவற்றை நம்ப முடி­யாது.
வடக்­கில் போர் இடம்­பெற்­ற­வேளை 5 ஆயி­ரம் படை­யி­னர் கொல்­லப்­பட்­ட­னர். வலு­வான இரா­ணு­வத்­தி­லேயே இத்­தனை பேர் கொல்­லப்­பட்­டுள்­ள­னர் என்­றால், விடு­த­லைப் புலி­கள் இயக்­கத்­தில் எத்­தனை பேர் கொல்­லப்­பட்­டி­ருப்­பர் என்­பதை நினைத்து பார்க்க வேண்­டும்.
 
கிரா­மத்­துத் தமி­ழர்­க­ளுக்கு நாட்­டின் அரச தலை­வர், தலைமை அமைச்­சர் ஆகி­யோ­ரின் பெயரே தெரி­யாது. இப்­ப­டி­யா­ன­வர்­கள், இரா­ணுவ அதி­கா­ரி­யைச் சுட்­டிக்­காட்டி, அவ­ரி­டமே தங்­க­ளின் குடும்­பத்­த­வர் கள் சர­ண­டைந்­த­னர் என்று எப்­ப­டித் தெரி­விக்க முடி­யும்> என்று கேள்வி எழுப்­பி­யுள்ளார்.

No comments:

Post a Comment