Friday, February 27, 2015

புலி பினாமிகளின் வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரதிகள் ஐ.நாவுக்கு அனுப்பி வைப்பு!

Friday, February 27, 2015
வடக்கு மாகாணசபையில் புலி பினாமிகளால் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தீர்மானத்தின் பிரதிகள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் ஐ.நா பொதுச்செயலாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக புலி பினாமிகளின் வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
 
இதுதொடர்பாக புலி பினாமிகளின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் மேலும் தெரிவிக்கையில்,
 
புலிகளின்  மீது நடத்தப்பட்டது இனப்படுகொலையே என்றும் இதற்கு சர்வதேச விசாரணையே அவசியமென்றும் புலிகளின் வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் அத் தீர்மானப் பிரதிகள் ஐ.நா. மனித உரிமை ஆணையகத்தின் ஆணையாளர் மற்றும் செயலாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி தம்மீது சுமத்திய குற்றச்சாட்டு அடிப்படையற்றது: கோத்தபாய ராஜபக்ச!

Friday, February 27, 2015
அவுஸ்ரேலியாவில் இருந்து நேற்று நாடு திரும்பிய முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி தம்மீது சுமத்திய குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்று முன்னாள பாதுகாப்புச் செயலாளரான கோத்தபாய ராஜபக்ச நிராகரித்துள்ளார்.
 
அதேவேளை, வெள்ளைவான் கடத்தல்களின் பின்னணி குறித்த தகவல்கள் தம்மிடம் உள்ளதாகவும், அதுபற்றிய விசாரணை ஒன்று நடத்தப்பட்டால், அதில் தொடர்புடையவர்களின் பெயர்களை வெளியிடத் தயாராக இருப்பதாகவும், முன்னாள் பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி தெரிவித்தார். அவுஸ்திரேலியாவில் இருந்து நேற்று நாடு திரும்பிய அவர், கலதாரி விடுதியில் ஊடகவியலாளர்களைச சந்தித்தார்.
 
அங்கு கருத்து வெளியிட்ட அவர், வெள்ளைவான் கடத்தல்கள் மற்றும் கொலைகளின் பின்னணியில் சில இராணுவ அதிகாரிகளே இருந்தனர். இந்தக் குற்றங்களில் பொலிஸார் தொடர்புபட்டிருக்கவில்லை. முன்னைய அரசாங்கம் தமது சட்டவிரோத காரியங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கின்ற ஒரு விளையாட்டுப் பொருளாகவே எம்மை பயன்படுத்த முனைந்தது. அதற்கு நான் உடன்பட மறுத்த போது என்னைப் பழிவாங்க முனைந்தனர்.
 
முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச என்னை பாதுகாப்பு அமைச்சுக்கு அழைத்து, தமது சட்டவிரோத உத்தரவுகளைச் செயற்படுத்தாமல், நியாயமான கடமைகளை ஆற்ற நினைத்தால், மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்று அச்சுறுத்தினார். என்னையும், எனது குடும்பத்தினரையும் கொலை செய்யப் போவதாக பல தொலைபேசி அழைப்புகளின் மூலம் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. அதுகுறித்து விசாரித்த போது, அவை பாதுகாப்புச் செயலரிடம் இருந்தே வந்தன என்பதை கண்டறிந்தேன் என்றும் அவர் கூறினார்.
 
எனினும், பிரசாந்த ஜெயக்கொடியின் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்று நிராகரித்துள்ளார் கோத்தாபய ராஜபக்ச. பல ஆண்டுகளுக்கு முன்னரே பொலிஸ் திணைக்களத்தில் இருந்து வெளியேறி விட்ட அவர், ஒருவேளை மீண்டும் அதில் இணைய விரும்பலாம். எவ்வாறாயினும், இது தற்போது நடந்து வரும் எமது பெயரைக் கெடுக்கும் பரப்புரையின் ஒரு பகுதியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி, ஐக்­கிய தேசியக் கட்சி ஒன்­றி­ணைந்த தேசிய அர­சாங்கம் தொடர்ந்தும் கொண்டு செல்­லப்­ப­டு­மாயின் பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்­சி­யாக தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு உரு­வெ­டுக்கும்: உதய கம்­மன்­பில!

Friday, February 27, 2015
ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி, ஐக்­கிய தேசியக் கட்சி ஒன்­றி­ணைந்த தேசிய அர­சாங்கம் தொடர்ந்தும் கொண்டு செல்­லப்­ப­டு­மாயின் பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்­சி­யாக தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு உரு­வெ­டுக்கும்.
 
அமர்­த­லிங்­கத்­தினால் ஏற்­பட்ட அச்­சு­றுத்தல் இனி ஒரு போதும் இடம்­பெற அனு­ம­திக்­கக்­கூ­டாது என தெரி­விக்கும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பங்­கா­ளிக்­கட்­சி­யான தூய்­மை­யான ஹெல உறு­மய யாருக்கும் திறக்­காத சர்­வ­தேச கத­வுகள் எதிர்க்­கட்­சிக்­காக திறக்கும் அதற்­காக தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு காத்­தி­ருப்­ப­தா­கவும் தெரி­வித்தது.
 
முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவை மீண்டும் அர­சியல் மேடைக்கு கொண்­டு­வரும் முயற்­சியில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பங்­காளிக் கட்­சி­களின் தலை­வர்­களான வாசு­தேச நாண­யக்­கார, தினேஸ் குண­வர்த்­தன, உதய கம்­மன்­பில, மொஹமட் முசம்மில் ஆகி­யோ­ரினால் மேற்­கொள்­ளப்­பட்ட செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று முன்தினம் கொழும்பில் இடம்­பெற்­றது. இதன் போது கருத்து தெரி­வித்த தூய்­மை­யான ஹெல உறு­மய கட்­சியின் பொதுச் செய­லாளர் உதய கம்­மன்­பில கருத்து தெரி­விக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பிட்­ட­தா­வது;
 
அர­சியல் குழப்­பங்கள் நாளுக்கு நாள் அதி­க­ரித்­துக்­கொண்டே செல்­கின்­றன பிர­தான இரண்டு கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து புதிய அர­சாங்­கத்­தினை உரு­வாக்­கி­யுள்­ளன. ஐக்­கிய தேசியக் கட்­சியின் இருக்­க­மான கூண்­டினுள் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி சிக்­கிக்­கொண்­டுள்­ளது. இது நாட்­டிற்கு பாரிய அச்­சு­றுத்­த­லா­கவே அமையும். பிரதா­ன இரு கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து அர­சாங்­கத்­தினை அமைப்­பதால் பாரா­ளு­மன்றில் எதிர்க்­கட்­சி­யாக தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு உரு­வாகும். 1983 இல் தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக சிங்­க­ள­வர்கள் கல­வ­ர­மொன்­றினை நடத்­தினர். இதில் குறிப்­பிட்ட அளவு தமிழ் மக்கள் பாதிக்­கப்­பட்­டனர். அப்­போது பாரா­ளு­மன்றில் எதிர்க்­கட்சி தலை­வ­ராக இருந்த தமிழர் விடு­தலை கூட்­ட­ணியின் அமிர்­த­லிங்கம் இவ்­வி­ட­யத்­தினை சர்­வ­தேசம் வரை கொண்டு சென்றார்.
 
இதனால் ஏற்­பட்ட விளை­வு­க­ளுக்கு இன்­று­வரை எம்மால் பதில் சொல்­ல­மு­டி­யா­துள்­ளது. அவ்­வா­றா­ன­தொரு நிலையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எதிர்­பார்க்கும் விட­யங்­களை சர்­வ­தேசம் வரை கொண்டு சென்று நாட்டை சீர­ழித்­து­விடும்.
 
யாருக்­கா­கவும் திறக்­காத கத­வுகள் எதிர்க்கட்சிக்காக திறக்கும். அதுவும் பிரிவினைவாதிகளுக்காக சர்வதேச கதவுகள் எப்போதும் திறக்கும்.
 
எனவே, நாட்டை பிரிவினைக்குட்படுத்தாது சரியான கட்சி அரசியலை மேற்கொள்ள வேண்டுமாயின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தனித்து இயங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Tuesday, February 24, 2015

தேசிய அரசாங்கம் அமைக்கும் முயற்சிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பில் உள்ள கட்சிகள் எதிர்ப்பு!

Tuesday, February 24, 2015
தேசிய அரசாங்கம் அமைக்கும் முயற்சிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பில் ஈடுபட்டுள்ள சிறிய கட்சிகள் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவே இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியகட்சியின் வேண்டுகோளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஏற்றுக்கொள்கின்றதென்றால் அது சரணடைகின்றது என்பதே அதன் அர்த்தம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக மக்கள் சுதந்திரக்கவட்சியை கைவிட நேரலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தேசிய அரசாங்கம் குறித்து எவ்வாறான முடிவை எடுக்கின்றது என்பதை பார்த்த பின்னரே தாங்கள் தங்களது முடிவை எடுக்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மற்றுமொரு முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார்.

இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அவ்வாறன ஓரு முடிவை எடுத்தால் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு என்பது அழிக்கப்பட்டு விடும், சுதந்திரக்கட்சிக்கும் அது அரசியல் தற்கொலையாக அமையும் என மேல்மாகணசபை உறுப்பினர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அரசாங்கத்தை  அமைப்பது நாட்டில் பிரிவினைவாதத்தை பலப்படுத்தும்,13பிளஸிற்கு வழிவகுக்கும்,சர்வதேச அளவில் புலிகள் மீண்டும் எழுச்சிபெறுவதற்கு உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

50 இராணுவப் படையணிகள் வடக்கிலிருந்து வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது!

Tuesday, February 24, 2015
50 இராணுவப் படையணிகள் வடக்கிலிருந்து வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் இவ்வாறு வடக்கில் நிலைநிறுத்தப்பட்டிருந்த படையணிகள் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

2009ம் ஆண்டு மே மாதம் யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்ட போது மொத்தமாக 152 இராணுவப் படையணிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாககவும், இதில் சுமார் 50 படையணிகள் இதுவரையில் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் வன்னியின் கிழக்குப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் பாரியளவில் காணிகளை சுவீகரித்து வைத்திருந்தனர் என சுட்டிக்காட்டியுள்ளது. எனினும், இந்தக் காணிகளை விடுவிக்குமாறு எவரும் கோரவில்லை என இராணுவம் தெரிவித்துள்ளது.

யுத்த நிறைவின் பின்னர் இதுவரையில் வடக்கில் இராணுவம் வசமிருந்த 27000 ஏக்கர் காணிகள், பொதுமக்களின் பயன்பாட்டுக்காக விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. யுத்த நிறைவின் பின்னர் 2010ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் முதல் இவ்வாறு இராணுவத்தினர் காணிகளை விடுவித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

Monday, February 23, 2015

இது கரும்புலிகளுக்கு விடுதலை கிடைக்கும், புலி பயங்கரவாதத்தை இல்லாதொழித்த தலைவர்களுக்கு, அதற்காக அர்ப்பணித்த மனிதர்களுக்கு அவர்களின் குடும்பம் பிள்ளைகளுக்கு சிறைவாசம் கிடைக்கும் யுகம்: விமல் வீரவன்ச!

Monday, February 23, 2015
இது கரும்புலிகளுக்கு விடுதலை கிடைக்கும், புலி பயங்கரவாதத்தை இல்லாதொழித்த தலைவர்களுக்கு, அதற்காக அர்ப்பணித்த மனிதர்களுக்கு அவர்களின் குடும்பம் பிள்ளைகளுக்கு சிறைவாசம் கிடைக்கும் யுகம். இதுவே இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
 
இன்று கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் அளித்துவிட்டு வெளியில் வந்த விமல் வீரவன்ச ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
 
2011ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்கே நான் இன்று குற்றப்புலனாய்வு பிரிவிற்கு வந்தேன். எனது வாக்கு மூலங்களை குறித்த அதிகாரிகளிடம் நான் முன்வைத்தேன். இருந்தாலும் என்னை மீண்டும் அழைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. தேர்தல் நடைபெற்ற காலத்தில் பேரணியொன்றை நடத்தியமை குறித்தே இன்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. எனக்கும் முறைப்பாடுகள் செய்துள்ளார்கள் எனது மனைவிக்கும் முறைப்பாடுகள் செய்துள்ளார்கள். எதிர்காலத்தில் எனது பிள்ளைகளுக்கும் முறைப்பாடுகள் செய்யலாம்.
 
18ம் திகதி நுகேகொடையில் இடம்பெற்ற கூட்டத்திற்கு பின்னர் நல்லாட்சி அதிகாரிகள் அவநம்பிக்கையுடன் காணப்படுகின்றனர். நல்லாட்சி அதிகாரிகளின் இதயம் அதிகமாக துடிக்கும் சந்தர்ப்பங்களில் எங்களை இவ்வாறு அதிகமாக விசாரணைக்கு கொண்டுவர வேண்டிய அவசியமும் உள்ளது. எங்களுக்கு எதிராக சட்டத்தை பலப்படுத்த வேண்டிய அவசியமும் அதிகமாக உள்ளது. என்னையும் என் மனைவியையும் அல்லது பிள்ளைகளையும் எப்படியாவது சிக்க வைத்து எங்களது அரசியல் பயணத்தை நிறுத்துவதற்கான முயற்சியை இவர்கள் மேற்கொள்கின்றனர். ஆனால் கீழ்படிந்து மண்டியிட மாட்டோம். நாங்கள் தேர்ந்தெடுத்த முறையிலே எதிர்வரும் காலங்களில் அரசியல் பயணத்தை மேற்கொள்வோம்.
 
மனைவி மீதான போலியான கடவுச்சீட்டு குறித்து குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது. எமது அரசியல் பயணத்தை நிறுத்துவதற்காகவே இவ்வாறான போலிக்குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். இந்த குற்றச்சாட்டுக்கள் போலியானவை என நாம் விரைவில் நீதிமன்றத்தில் நிரூபிப்போம்´ என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

வடக்கு அரசியல்வாதிகளின் தேவையைப் பூர்த்தி செய்யவும் சர்வதேச புலி ஆதரவு அமைப்புக்களை திருப்திப்படுத்தவுமே புதிய அரசாங்கம் தீர்மானித்து விட்டது!

Monday, February 23, 2015
வடக்கு அரசியல்வாதிகளின் தேவையைப் பூர்த்தி செய்யவும் சர்வதேச புலி ஆதரவு அமைப்புக்களை திருப்திப்படுத்தவுமே புதிய அரசாங்கம் போர்க்குற்ற விசாரணைகளை பலப்படுத்துவதாகவும், எமது தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷவையும் இராணுவத்தினரையும் தண்டிக்க புதிய அரசு தீர்மானித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா.
 
புலி பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் மனித உரிமை மீறலாகாது. இலங்கையில் இடம்பெற்றது சிறுபான்மை மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் அல்ல. முப்பது வருட காலம் இந்த நாட்டின் ஒற்றுமையினை சீரழித்த பயங்கரவாதிகளுக்கு எதிரான போராட்டமாகும். இதில் தமிழ், முஸ்லிம் சமூகம் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டதுடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன" என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

திருகோணமலையில் கடற்படையின் கட்டுப்பாட்டில் தற்போது எவரும் இல்லை: கோசல வர்ணகுலசூரிய!

Monday, February 23, 2015
திருகோணமலையில் கடற்படையின் கட்டுப்பாட்டில் தற்போது எவரும் இல்லை என்று கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். திருகோணமலையில் 'கோத்தா' தடுப்பு முகாமில் 700 பேர் வரையிலும், திருகோணமலை கடற்படைத்தளத்தில் 35 குடும்பங்களும் தடுத்துவைக்கப்பட்டுள்ளன என்றும் இது தொடர்பில் புதிய அரசு உடன் விசாரணையை ஆரம்பிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தார்.
 
சுரேஷ் எம்.பியின் இந்த உரை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே கடற்படையின் ஊடகப் பேச்சாளர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
நான் அறிந்த வகையில் திருகோணமலை கடற்படை முகாமில் 35 குடும்பங்களோ அல்லது 700 தமிழர்களோ தடுப்பில் இல்லை. ஏனெனில் தற்போது கடற்படையின் தடுப்பில் எந்தவொரு நபரும் இல்லை. அத்துடன் 700 பேரை தடுத்துவைப்பதற்குரிய வசதிகளும் அங்கு இல்லை. திருகோணமலை கடற்படை முகாமில் 'கோத்தா' என்ற பெயரில் இடம் ஒன்று இருப்பதனை நான் அறியவில்லை. கோத்தாபய என்ற பெயரில் எமது கடற்படை முகாம் ஒன்று முல்லைத்தீவில் மட்டுமே உள்ளது. அங்கு 700 பேரையோ அல்லது 35 குடும்பங்களையோ கடற்படையினர் தடுப்பில் வைத்திருக்கவில்லை" என்றார்.

Tuesday, February 17, 2015

இலங்கை - இந்தியாவுக்கிடையில் பாதுகாப்பு, விவசாயம், அணுசக்தி உட்பட நான்கு முக்கிய ஒப்பந்தங்கள்கைச்சாத்து!

Tuesday, February 17, 2015
இலங்கை - இந்தியாவுக்கிடையில் பாதுகாப்பு, விவசாயம், அணுசக்தி உட்பட நான்கு முக்கிய ஒப்பந்தங்கள் நேற்று கைச்சாத்திடப்பட்டன.
 
இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தையையடுத்து இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
 
இரு நாட்டுத் தலைவர்களுக்கிடையிலான உத்தியோகபூர்வ இருதரப்புப் பேச்சுவார்த்தை பிரதமர் நரேந்திர மோடியின் ஹைதராபாத் இல்லத்தில் நேற்று நண்பகல் 12.00 மணியளவில் நடைபெற்றுள்ளது.
 
இதன் போது இரு நாடுகளுக்கு மிடையிலான நல்லுறவு, வர்த்தகம், மீனவர் விவகாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயற்படுவது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இணைந்து செய்தியாளர் மாநாடொன்றைக் கூட்டினர். அதன்போது இலங்கை - இந்தியாவுக்கிடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து ஊடகவியலாளர் களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
 
இதன்போது கருத்துத் தெரிவித்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தியாவுக்கான தமது விஜயமானது இரு நாடுகளுக்குமிடை யிலான உறவைப் பலப்படுத்துவதுடன் எதிர்காலத்திலும் இந்த உறவு பலமானதாகத் தொடரும் என தெரிவித்துள்ளார்.
 
தாம் ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவென்றும் அதற்காகத் தாம் இந்தியாவைத் தெரிவு செய்ததாகவும் குறிப்பிட்டதுடன் இந்திய விஜயம் தமக்குப் பெரும் திருப்திய ளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்குமிடையிலான நல்லுறவு மேலும் வலுவடையும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இரு தலைவர்களும் தீர்மானங்களை எடுத்துள்ளோம் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி மைத்திரிபால, பாதுகாப்பு மற்றும் கலாசார ரீதியில் இரு நாடுகளினதும் உறவு மேலும் பலமடையும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
இரு தரப்பு பேச்சுவார்த்தையின் போது இந்தியப் பிரதமரை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு நான் அழைப்பு விடுத்தேன். அதனை அவர் ஏற்றுக்கொண்டு இணக்கம் தெரிவித்தார். அந்த விஜயம் எமது இரு நாடுகளினதும் உறவுகளை மேலும் பலப்படுத்தும் என்றும் குறிப்பிட்டார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இங்கு கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கையானது இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாக உள்ளது. இலங்கை ஜனாதிபதியுடனான இருதரப்புப் பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு பற்றியும் திருப்தியான வகையில் கலந்துரை யாடியுள்ளோம்.
இந்திய மக்களின் அன்பும் ஒத்துழைப்பும் என்றும் இலங்கை மக்களுக்கு உள்ளது.
நடைபெற்று முடிந்த இலங்கை ஜனாதிபதித் தேர்தல் அந்நாட்டில் ஜனநாயகம் வலுவாக இருப்பதை பிரதிபலிப்பதாகவும் மோடி குறிப்பிட்டார். மைத்திரிபால சிறிசேனவுக்கு இலங்கை மக்கள் அளித்துள்ள வெற்றியின் மூலம் அவர்கள் ஒன்றுபட்ட அமைதியான வளர்ச்சியை விரும்புவதை எடுத்துரைத் துள்ளார்கள் என்றும் மோடி தெரிவித்தார்.

இந்தியா, இலங்கையின் பொருளாதார வளர்ச்சி, தெற்காசிய நாடுகளில் அமைதியை நிலைநாட்டுவது. இரு நாடுகளுக்கும் இடையேயான பகுதியில் உள்ள கடல்வழி பாதுகாப்பு போன்றவை குறித்தும் இந்த சந்திப்பில் விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மீனவர்கள் எடுக்கும் முடிவுக்கு இரு நாடுகளும் கட்டுப்படுவோம் என குறிப்பிட்ட இந்தியப் பிரதமர் இரு நாட்டு மீனவர்கள் விவகாரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து பேசியதாகவும் இருநாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் விவகாரம் இது என்பதால், இருநாட்டு மீனவ அமைப்புகளும் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்த ஊக்குவிப்போம் என்றார்.
 
மீனவர்கள் எடுக்கும் முடிவுக்கு இருநாட்டு அரசாங்கங்களும் செயல்வடிவம் கொடுக்க உறுதிகொண்டுள்ளதாகவும் மோடி இதன்போது குறிப்பிட்டார்.
 
இறுதியாக தன்னை மைத்திரிபால சிறிசேன இலங்கைக்கு வருமாறு விடுத்துள்ள அழைப்பை ஏற்று எதிர்வரும் மார்ச் மாதம் தாம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.
 
இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்திய ஜனாதிபதி மாளிகையான ராஷ்டிரபதி பவனில் இந்திய ஜனாதிபதி மற்றும் பிரதமரால் மகத்தான வரவேற்பளிக் கப்பட்டுள்ளது.
இராணுவ அணிவகுப்பு, மற்றும் 21 பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு இலங்கை ஜனாதிபதி கெளரவிக்கப்பட்டார். அதனையடுத்து இரு நாட்டு ஜனாதிபதிகளுக்குமிடையில் நட்புபூர்வமான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
 
இச் சந்திப்பினையடுத்து புதுடில்லி யிலுள்ள பிராஜ்காட்பீடிலுள்ள மகாத்மா காந்தியின் சமாதிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
 
நேற்றைய தினம் இலங் கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான சிவில் பயன்பாட்டு அணுசக்தி ஒத்துழைப்பு, இந்திய நாளந்தா பல்கலைக்கழகத்தின் கிளைகளை இலங்கையில் ஸ்தாபிப்பது, விவசாயம், வர்த்தகம் மற்றும் கலாசா ரத்துறை கூட்டுறவு மேம்பாடு தொடர் பிலான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப் பட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என கோரிக்கை!

Tuesday, February 17, 2015
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என சில தரப்பினரால் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில், மகிந்த ராஜபக்சவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என அந்த கட்சியின் பியமக தொகுதி மத்திய அதிகார சபை இன்று ஒருமனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
 
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த இந்த கூட்டத்திற்கு பிரதம அதிதியாக அழைக்கப்பட்டிருந்தார். கூட்டத்தில் சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்டிருந்தனர்.

மகிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வரும் நோக்கத்தில்: மகிந்தவுக்கு ஆதரவான கூட்டத்தில் சுதந்திர கட்சியினர் பலர் கலந்து கொள்வர்: உதய கம்மன்பில!

Tuesday, February 17, 2015      
மகிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வரும் நோக்கத்தில் நுகேகொடை பிரதேசத்தில் நாளை நடைபெறும் கூட்டத்தில் சுதந்திரக் கட்சியை சேர்ந்த 40க்கும் அதிகமான மாகாண சபை உறுப்பினர்கள் கலந்து கொள்வது நிச்சயம் என பிவித்துரு ஹெல உறுய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
 
மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தன, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ, பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில ஆகியோர் இணைந்து இந்த கூட்டதை ஒழுங்கு செய்துள்ளனர்.
 
இந்த கூட்டத்திற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அதன் பொதுச் செயலாளர் அனுரபிரிய தர்ஷன யாப்பா ஏற்கனவே கூறியுள்ளார்.
 
அதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மனசாட்சியின்படி செயற்படுமாறு கூறியுள்ளதாகவும் இதனால், தான் நுகேகொடை கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.
 
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பிரதமர் வேட்பாளராக போட்டியிட தகுதியானவர்கள் எவரும் இல்லை என்பதால், மகிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வந்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என அந்த கட்சியினர் சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.

Saturday, February 14, 2015

மைத்திரியின் தெரிவு சட்டவிரோதம்: பேராசிரியர் நளின் டி சில்வா!

Saturday, February 14, 2015      
முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸின் நியமனம் செல்லுபடியற்றதென அரசாங்கம் முன்வைத்த வாதங்கள் சரியெனின், மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவானதும் சட்டவிரோதமானதே என பேராசிரியர் நளின் டி சில்வா தெரிவித்துள்ளார். “ஜாதிக பலய” அமைப்பினால், நேற்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மகிந்த இல்லாத நாடு என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
 
அரசியலமைப்பின் பிரிவுகளுக்கு அமைய தவறாக நீதியரசர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தால், அவரால் வழங்கப்பட்ட தீர்ப்புகளும் தவறானது என கருத முடியும் என்றால், அவரது நியமனம் தவறு என்றாலும் அது சம்பந்தமாக செயற்படக் கூடிய எதுவும் அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடவில்லை.
 
மொஹான் பீரிஸின் நியமனம் சட்டவிரோதமாயின், அவரது நியமனத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், மகிந்த ராஜபக்ச மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும் என மொஹான் பீரிஸ் வழங்கிய தீர்ப்பும் செல்லுப்படியற்றதாகி விடும் என்பதால், நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலும், மைத்தி்ரிபால சிறிசேனவின் நியமனம் செல்லுப்படியற்றதாகி விடும் எனவும் நளின் டி சில்வா வாததத்தை முன்வைத்தார்.
 
அத்துடன் எதிர்க்கட்சித் தலைவராக ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்து, நிமால் சிறிபால டி சில்வாவை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்ததும் சட்டவிரோதமானதும் செல்லுப்படியற்றதுமான நியமனங்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
அதேவேளை பிரதம நீதியரசர் பதவியில் இருந்து ஷிராணி பண்டாரநாயக்க நீக்கப்பட்ட விதம் குறித்து நாடாளுமன்றத்திற்கே கேள்வி எழுப்ப முடியும், ஜனாதிபதியினால் கேள்வி எழுப்ப முடியாது. இதனடிப்படையில், மொஹான் பீரிஸூக்கே அந்த பதவி இன்னும் உரித்தானது. அத்துடன் மகிந்த ராஜபக்சவின் தலைமைத்துவம் இல்லாத நிலையில், இலங்கை இரண்டாக பிளவுப்படுத்து சமஷ்டி நாடாக மாறும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அப்படி நடக்காமல் இருக்க வேண்டுமாயின் அடுத்த பொதுத் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை மக்கள் பிரதமராக தெரிவு செய்ய வேண்டும் என்றும் நளின் டி சில்வா குறிப்பிட்டுள்ளார். 

Tuesday, February 10, 2015

92 இலங்கைப் பிரஜைகள் சுவிட்சர்லாந்து வங்கிகளில் 58.3 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை வைப்புச் செய்துள்ளனர்!!

Tuesday, February 10, 2015
92 இலங்கைப் பிரஜைகள் சுவிட்சர்லாந்து வங்கிகளில் 58.3 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை வைப்புச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையைச் சேர்ந்த 92 பேருக்கு சொந்தமான 129 சுவிஸ் வங்கிக் கணக்குகளில் இந்தப் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக சர்வதேச புலனாய்வுச் செய்தியாளர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

உலகின் முதனிலை வங்கிகளில் ஒன்றான எச்.எஸ்.பி.சீ வங்கியிடமிருந்து இந்த இரகசிய தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த 92 பேரில் ஒரு தனிப்பட்ட இலங்கையர் 10.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை சுவிட்சர்லாந்து வங்கியில் வைப்புச் செய்துள்ளார்.

சுவிட்சர்லாந்து வங்கிகளில் பணம் வைப்புச் செய்துள்ள நபர்களின் நாடுகளைக் கொண்ட வரிசையில் இலங்கை 112 இடத்தை வகிக்கின்றது.

இந்த 92 இலங்கையர்களில் 88 பேர் 1974ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கணக்குகளை ஆரம்பித்துள்ளனர்.

சுவிட்சர்லாந்து வங்கிகளில் பணம் வைப்புச் செய்த 19000 பேர் தங்களது ஆள் அடையாளத்தை உறுதி செய்யவில்லை என குறிப்பிடப்படுகிறது.

சுவிட்சர்லாந்து வங்கிகளில் பணம் வைப்புச் செய்வது சட்டவிரோதமானது இல்லை என்ற போதிலும், பணம் எவ்வாறு சம்பாதிக்கப்பட்டு வைப்பிடப்பட்டுள்ளது என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.

ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட பலர் சுவிட்சர்லாந்து வங்கிகளில் பணம் வைப்பிலிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுவிட்சர்லாந்து வங்கிச் சட்டங்களின் அடிப்படையில் கணக்கு பேணுவோரின் விபரங்களை இலகுவில் நாடுகளுக்கோ அல்லது நிறுவனங்களுக்கோ வழங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

சிரானி பண்டாரநாயக்க பதவியில் அமர்த்தப்பட்டதனைப் போன்றே தமக்கும் பாராளுமன்ற உறுப்புரிமை வழங்கப்பட வேண்டும்: சரத் பொன்சேகா!

Tuesday, February 10, 2015
சிரானி பண்டாரநாயக்க பதவியில் அமர்த்தப்பட்டதனைப் போன்றே தமக்கும் பாராளுமன்ற உறுப்புரிமை வழங்கப்பட வேண்டும்: சரத் பொன்சேகா!
 
பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க பதவியில் அமர்த்தப்பட்டதனைப் போன்றே தமக்கும் பாராளுமன்ற உறுப்புரிமை வழங்கப்பட வேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தமக்கு எதிராக போலியாக சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றின் உதவியை நாடவும் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க பணி நீக்கம் செய்யப்பட்டமையை அரசாங்கம் எவ்வாறு ரத்து செய்து, மீளவும் பதவியில் அமர்த்தியதோ அதேபோன்று தமது பாராளுமன்ற உறுப்புரிமையையும் வழங்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டதுடன், இராணுவ பட்டங்களும் மீள வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதலில் தமது ஆசனத்தை வழங்குவதாக ஜயந்த கெட்டகொட தெரிவித்த போதிலும் தற்போது சற்று பின்வாங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

ஜயந்த கெட்டகொட தமது ஆசனத்தை வழங்க முடியும் என தேர்தல் ஆணையாளரும், சட்ட மா அதிபரும் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஜயந்த கெட்டகொட பதவியை ராஜினாமா செய்தால், தாம் அந்தப் பதவியை பெற்றுக்கொள்ள முடியும் எனவும், கெட்டகொடவிடம் தாம் பதவியை யாசிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வாகன அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளவோ அல்லது வேறும் பாராளுமன்ற வரப்பிரசாதங்களுக்காகவோ பதவியை மீள அளிக்குமாறு கோரவில்லை எனவும், இந்த பதவி மிகவும் குறுகிய காலத்திற்கே இருக்கும் என்பது தமக்கும் தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் வெற்றிக்காக ஒத்துழைப்பு வழங்கிய தமக்கு பாராளுமன்ற உறுப்புரிமை வழங்கப்பட்டால் கட்சி ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Sunday, February 8, 2015

எதிர்வரும் மார்ச் மாதம் யாழுக்கும் மோடி செல்வார்

Sunday, February 08, 2015
எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு விஜயம் செய் யும் இந் திய பிரதமர் நரேந்திர மோடி, யாழ்ப் பாணத்துக்கும் விஜயம் செய் யவிருப்பதாக த ஹிந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தியாவுக்கான விஜயத்தின் பின்னரே இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு விஜயம் செய்யவிருக் கின்றார்.

இந்திய முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தி 1987 ம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்ததன் பின்னர், இந்திய பிரதமர் ஒருவர் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவிருக்கின்றமை இதுவே முதல்தடவையாகும்.

Monday, February 2, 2015

புலிகளுடன் தொடர்புடைய தமிழ் புலம்பெயர் அமைப்புக்களுக்கு எதிரான தடை நீக்கப்பட மாட்டாது: அரசாங்கம்!

Monday, February 02, 2015       புலிகளுடன் தொடர்புடைய சில தமிழ் புலம்பெயர் அமைப்புக்களுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்பட மாட்டாது என புதிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

புலிகள் இயக்கத்தை மீள ஒருங்கிணையச் செய்ய முயற்சிப்பதாக குற்றம் சுமத்தி மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் சில புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு தடை விதித்திருந்தது.

புலிகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட்ட இயக்கங்களின் தடையை நீக்க எவ்வித திட்டங்களும் கிடையாது என பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

க்ளோபல் தமிழ் போராம், பிரித்தானிய தமிழர் பேரவை, நாடு கடந்த தமிழீழ இராச்சியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்கள் இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளன.

அமைப்புக்களின் தடைகளை நீக்க எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.