Tuesday, February 17, 2015

இலங்கை - இந்தியாவுக்கிடையில் பாதுகாப்பு, விவசாயம், அணுசக்தி உட்பட நான்கு முக்கிய ஒப்பந்தங்கள்கைச்சாத்து!

Tuesday, February 17, 2015
இலங்கை - இந்தியாவுக்கிடையில் பாதுகாப்பு, விவசாயம், அணுசக்தி உட்பட நான்கு முக்கிய ஒப்பந்தங்கள் நேற்று கைச்சாத்திடப்பட்டன.
 
இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தையையடுத்து இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
 
இரு நாட்டுத் தலைவர்களுக்கிடையிலான உத்தியோகபூர்வ இருதரப்புப் பேச்சுவார்த்தை பிரதமர் நரேந்திர மோடியின் ஹைதராபாத் இல்லத்தில் நேற்று நண்பகல் 12.00 மணியளவில் நடைபெற்றுள்ளது.
 
இதன் போது இரு நாடுகளுக்கு மிடையிலான நல்லுறவு, வர்த்தகம், மீனவர் விவகாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயற்படுவது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இணைந்து செய்தியாளர் மாநாடொன்றைக் கூட்டினர். அதன்போது இலங்கை - இந்தியாவுக்கிடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து ஊடகவியலாளர் களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
 
இதன்போது கருத்துத் தெரிவித்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தியாவுக்கான தமது விஜயமானது இரு நாடுகளுக்குமிடை யிலான உறவைப் பலப்படுத்துவதுடன் எதிர்காலத்திலும் இந்த உறவு பலமானதாகத் தொடரும் என தெரிவித்துள்ளார்.
 
தாம் ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவென்றும் அதற்காகத் தாம் இந்தியாவைத் தெரிவு செய்ததாகவும் குறிப்பிட்டதுடன் இந்திய விஜயம் தமக்குப் பெரும் திருப்திய ளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்குமிடையிலான நல்லுறவு மேலும் வலுவடையும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இரு தலைவர்களும் தீர்மானங்களை எடுத்துள்ளோம் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி மைத்திரிபால, பாதுகாப்பு மற்றும் கலாசார ரீதியில் இரு நாடுகளினதும் உறவு மேலும் பலமடையும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
இரு தரப்பு பேச்சுவார்த்தையின் போது இந்தியப் பிரதமரை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு நான் அழைப்பு விடுத்தேன். அதனை அவர் ஏற்றுக்கொண்டு இணக்கம் தெரிவித்தார். அந்த விஜயம் எமது இரு நாடுகளினதும் உறவுகளை மேலும் பலப்படுத்தும் என்றும் குறிப்பிட்டார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இங்கு கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கையானது இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாக உள்ளது. இலங்கை ஜனாதிபதியுடனான இருதரப்புப் பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு பற்றியும் திருப்தியான வகையில் கலந்துரை யாடியுள்ளோம்.
இந்திய மக்களின் அன்பும் ஒத்துழைப்பும் என்றும் இலங்கை மக்களுக்கு உள்ளது.
நடைபெற்று முடிந்த இலங்கை ஜனாதிபதித் தேர்தல் அந்நாட்டில் ஜனநாயகம் வலுவாக இருப்பதை பிரதிபலிப்பதாகவும் மோடி குறிப்பிட்டார். மைத்திரிபால சிறிசேனவுக்கு இலங்கை மக்கள் அளித்துள்ள வெற்றியின் மூலம் அவர்கள் ஒன்றுபட்ட அமைதியான வளர்ச்சியை விரும்புவதை எடுத்துரைத் துள்ளார்கள் என்றும் மோடி தெரிவித்தார்.

இந்தியா, இலங்கையின் பொருளாதார வளர்ச்சி, தெற்காசிய நாடுகளில் அமைதியை நிலைநாட்டுவது. இரு நாடுகளுக்கும் இடையேயான பகுதியில் உள்ள கடல்வழி பாதுகாப்பு போன்றவை குறித்தும் இந்த சந்திப்பில் விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மீனவர்கள் எடுக்கும் முடிவுக்கு இரு நாடுகளும் கட்டுப்படுவோம் என குறிப்பிட்ட இந்தியப் பிரதமர் இரு நாட்டு மீனவர்கள் விவகாரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து பேசியதாகவும் இருநாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் விவகாரம் இது என்பதால், இருநாட்டு மீனவ அமைப்புகளும் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்த ஊக்குவிப்போம் என்றார்.
 
மீனவர்கள் எடுக்கும் முடிவுக்கு இருநாட்டு அரசாங்கங்களும் செயல்வடிவம் கொடுக்க உறுதிகொண்டுள்ளதாகவும் மோடி இதன்போது குறிப்பிட்டார்.
 
இறுதியாக தன்னை மைத்திரிபால சிறிசேன இலங்கைக்கு வருமாறு விடுத்துள்ள அழைப்பை ஏற்று எதிர்வரும் மார்ச் மாதம் தாம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.
 
இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்திய ஜனாதிபதி மாளிகையான ராஷ்டிரபதி பவனில் இந்திய ஜனாதிபதி மற்றும் பிரதமரால் மகத்தான வரவேற்பளிக் கப்பட்டுள்ளது.
இராணுவ அணிவகுப்பு, மற்றும் 21 பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு இலங்கை ஜனாதிபதி கெளரவிக்கப்பட்டார். அதனையடுத்து இரு நாட்டு ஜனாதிபதிகளுக்குமிடையில் நட்புபூர்வமான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
 
இச் சந்திப்பினையடுத்து புதுடில்லி யிலுள்ள பிராஜ்காட்பீடிலுள்ள மகாத்மா காந்தியின் சமாதிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
 
நேற்றைய தினம் இலங் கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான சிவில் பயன்பாட்டு அணுசக்தி ஒத்துழைப்பு, இந்திய நாளந்தா பல்கலைக்கழகத்தின் கிளைகளை இலங்கையில் ஸ்தாபிப்பது, விவசாயம், வர்த்தகம் மற்றும் கலாசா ரத்துறை கூட்டுறவு மேம்பாடு தொடர் பிலான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப் பட்டுள்ளன.

No comments:

Post a Comment