Tuesday, February 24, 2015
50 இராணுவப் படையணிகள் வடக்கிலிருந்து
வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. 2009ம் ஆண்டு
யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் இவ்வாறு வடக்கில்
நிலைநிறுத்தப்பட்டிருந்த படையணிகள் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகத்
தெரிவித்துள்ளது.
2009ம் ஆண்டு மே மாதம் யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்ட போது மொத்தமாக 152 இராணுவப் படையணிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாககவும், இதில் சுமார் 50 படையணிகள் இதுவரையில் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் வன்னியின் கிழக்குப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் பாரியளவில் காணிகளை சுவீகரித்து வைத்திருந்தனர் என சுட்டிக்காட்டியுள்ளது. எனினும், இந்தக் காணிகளை விடுவிக்குமாறு எவரும் கோரவில்லை என இராணுவம் தெரிவித்துள்ளது.
யுத்த நிறைவின் பின்னர் இதுவரையில் வடக்கில் இராணுவம் வசமிருந்த 27000 ஏக்கர் காணிகள், பொதுமக்களின் பயன்பாட்டுக்காக விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. யுத்த நிறைவின் பின்னர் 2010ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் முதல் இவ்வாறு இராணுவத்தினர் காணிகளை விடுவித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment