Monday, February 23, 2015
இது கரும்புலிகளுக்கு விடுதலை கிடைக்கும், புலி பயங்கரவாதத்தை இல்லாதொழித்த தலைவர்களுக்கு, அதற்காக அர்ப்பணித்த மனிதர்களுக்கு அவர்களின் குடும்பம் பிள்ளைகளுக்கு சிறைவாசம் கிடைக்கும் யுகம். இதுவே இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் அளித்துவிட்டு வெளியில் வந்த விமல் வீரவன்ச ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
2011ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்கே நான் இன்று குற்றப்புலனாய்வு பிரிவிற்கு வந்தேன். எனது வாக்கு மூலங்களை குறித்த அதிகாரிகளிடம் நான் முன்வைத்தேன். இருந்தாலும் என்னை மீண்டும் அழைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. தேர்தல் நடைபெற்ற காலத்தில் பேரணியொன்றை நடத்தியமை குறித்தே இன்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. எனக்கும் முறைப்பாடுகள் செய்துள்ளார்கள் எனது மனைவிக்கும் முறைப்பாடுகள் செய்துள்ளார்கள். எதிர்காலத்தில் எனது பிள்ளைகளுக்கும் முறைப்பாடுகள் செய்யலாம்.
18ம் திகதி நுகேகொடையில் இடம்பெற்ற கூட்டத்திற்கு பின்னர் நல்லாட்சி அதிகாரிகள் அவநம்பிக்கையுடன் காணப்படுகின்றனர். நல்லாட்சி அதிகாரிகளின் இதயம் அதிகமாக துடிக்கும் சந்தர்ப்பங்களில் எங்களை இவ்வாறு அதிகமாக விசாரணைக்கு கொண்டுவர வேண்டிய அவசியமும் உள்ளது. எங்களுக்கு எதிராக சட்டத்தை பலப்படுத்த வேண்டிய அவசியமும் அதிகமாக உள்ளது. என்னையும் என் மனைவியையும் அல்லது பிள்ளைகளையும் எப்படியாவது சிக்க வைத்து எங்களது அரசியல் பயணத்தை நிறுத்துவதற்கான முயற்சியை இவர்கள் மேற்கொள்கின்றனர். ஆனால் கீழ்படிந்து மண்டியிட மாட்டோம். நாங்கள் தேர்ந்தெடுத்த முறையிலே எதிர்வரும் காலங்களில் அரசியல் பயணத்தை மேற்கொள்வோம்.
மனைவி மீதான போலியான கடவுச்சீட்டு குறித்து குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது. எமது அரசியல் பயணத்தை நிறுத்துவதற்காகவே இவ்வாறான போலிக்குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். இந்த குற்றச்சாட்டுக்கள் போலியானவை என நாம் விரைவில் நீதிமன்றத்தில் நிரூபிப்போம்´ என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
No comments:
Post a Comment