Wednesday, December 31, 2014

one nation one flag one srilanka!!! Sri Lanka Maatha | Bhathiya, Santhush, Ashanthi, Umaria with CentigradZ!!!




SLEME Repaired Heavy Vehicles & Ambulances back On Track!

Wednesday, December 31, 2014
Troops of the 6 Sri Lanka Electrical and Mechanical Engineers (SLEME) repaired 10 tractors, 11 trailers, 3 trailers Bowsers, 2 Ambulances of  several Divisions and Brigades of the Security Force Headquarters-Mullattivu (SFHQ-MLT) within a short period of time, at the request  of Major General Jagath Dias, Commander of  (SFHQ-MLT) On Monday (29).

Major General Jagath Dias appreciated the commitment of the Commanding Officer of 6SLEME, officers, other ranks, some of who were from the newly recruited Tamil Soldiers who supported to complete this task within 3 months reducing heavy cost generally made for such purpose.

Those heavy vehicles and ambulances which have been serving those areas for the last 4-5 years needed an overhaul plus a complete repair due to their overused nature in view of the requirement in those remote areas. Some of those vehicles have also been used for public work on request due to lack of such facilities.

These newly repaired vehicles were distributed to respective divisions and Brigades by the Commander, SFHQ (MLT) during a brief ceremony.

நடவடிக்கைகளின் போது உயிர் தியாகம் செய்த யுத்த வீரர்களின் குடும்பத்தினருக்கு வீட்டு உதவிகள்!

 Wednesday, December 31, 2014
இலங்கை::பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. அயோமா ராஜபக்ஷ அவர்களால் யுத்த வீரர்களின் குடும்பத்தினருக்கு வீட்டு நிரமானத்திற்கான நிதியுதவிகள் இன்று (டி. 30) இடம் பெற்ற நிகழ்வில் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் இவர் பிரதம அதிதியாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் 1995 ஆம் ஆண்டு யுத்த நடவடிக்கைகளின் போது உயிர் தியாகம் செய்த இலங்கை கடற்படையைச் சேர்ந்த லெப்டினன் கொமாண்டர் நலின் வஜேசிங்கவின் மகளான செல்வி வெனுரி என்பவரால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வுக்கு வருகை தந்த திருமதி.அயோமா ராஜபக்ஷ அவர்கள் காலம் சென்ற லெப்டினன் கொமாண்டர் விஜேசிங்கவின் மனைவி திருமதி ருக்ஸானி டி சில்வா மற்றும் வெனுரி ஆகியோரினாரல் வரவேற்கப்பட்டார்.
இந்நிகழ்வில் ஶ்ரீலங்கா ரெலிகொமின் தலைவர் திரு. லலித் டி சில்வா, பாதுகாப்புப் படை அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரரகளின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.

அஸான் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு ஜனாதிபதியின் கரங்களால் பரிசில்கள்!

Wednesday, December 31, 2014
இலங்கை::
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை நடத்திய மாபெரும் அஸான் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நேற்று மாலை கொழும்பு தாமரைத்தடாகம் மஹிந்த ராஜபக்ஷ கலையரங்கில் நடைபெற்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த விழாவில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்துடன் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசில்களையும்  வழங்கினார்.

மேல் மாகாண ஆளுநர் அஷ்ஷெய்க் அலவி மௌலானா, சவுதி அரேபிய ரியாத் இமாம் செயித் பல்கலைக்கழக வேந்தர் அஷ்ஷெய்க் ஸஹத் அல் கரணி ,அமைச்சர் ஏ.எச்.எம் பவுஸி ,ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஏ.எச்.எம்.அஸ்வர் ,முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள், உலமாக்கள் உட்பட பெரும் எண்ணிக்கையானோர் இந்த விழாவில் கலந்துக் கொண்டனர்.

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தலைவர் ஹட்சன் சமரசிங்க, இன நல்லுறவு தொடர்பான தேசிய வேலைதிட்டத்தின் தலைவரும் ஜனாதிபதியின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஆலோசகருமான அஷ்ஷெய்க் அப்துல் காதர் மசூர் ஆகியோரும் இந்த விழாவில் உரை நிகழ்த்தினர்.

வெல்லப்பிட்டிய சாலவத்த வீதியைச்சேர்ந்த மொஹமட் நவுஸர் மொஹமட் ஹிஷாம் இந்த போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டார்.அவ்வாறே கொழும்பு, மட்டக்குளியைச் சேர்ந்த மொஹமட் ஸரீர் மொஹமட் ஸகீ இரண்டாம் இடத்தையும், பேருவளையைச் சேர்ந்த அஹ்ஹான் அஸாத் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவிகள் வரவேற்பு கீதம் இசைத்தனர். ஈழத்து இசைமுரசுகளான மருதமுனை கமால்தீன், கொழும்பு கலைக்கமல், ஸைபுல்லாஹ் மஹ்தூம், இலங்கை வானொலியின் அறிவிப்பாளரும் பாடகருமான எம்.இர்பான் ஆகியோரின் இஸ்லாமிய கீதங்களும் இவ்விழாவை மேலும் அலங்கரித்தன .

இலங்கை வானொலி முஸ்லிம் சேவை யின் சிரேஷ்ட ஆலோசகரான எம்.இஸட் அஹமட் முனவ்வர் ,அஹமட் நஸீர், எம்.இல்யாஸ் ஆகியோர் விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர்.

ஜனாதிபதியின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஆலோசகருமான அஷ்ஷெய்க அப்துல் காதர் மசூரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த அஸான் போட்டியில், அகில இலங்கை ரீதியில் சுமார் இரண்டாயிரம் பேர் இந்த அஸான் போட்டியில் கலந்துக்கொண்டனர்.
HE-Azaan Prize Giving-1
HE-Azaan Prize Giving-2
HE-Azaan Prize Giving-3
01 4HE-Azaan Prize Giving-5

புலிகளுக்கு சொந்தமான கனடா - டொரன்டோ கடைகளில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் படங்கள்!

Wednesday, December 31, 2014
டொரன்டோ::புலிகளுக்கு சொந்தமான டொரன்டோ கடைகளில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக கனடாவிற்கான இலங்கையின் முன்னாள் கொன்சோல் அதிகாரி பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்த பின்னர் இவ்வாறு பாடங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

புலிகளின் தலைவர் பிரபாகரனின் படங்கள் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்ட கடைகளில் இவ்வாறு மைத்திரிபாலவின் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

புலிகளின் வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வரும் பல இடங்களிலும் இவ்வாறு மைத்திரிபாலவிற்கு ஆதரவளிப்பதற்கு மகிழ்ச்சி வெளியிடப்பட்டுள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

லண்டனிலும் இவ்வாறு படங்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவை பயன்படுத்தி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸசவை தோறகடிக்க முயற்சிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்
.

தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கவில்லை: பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜபக்ஷ!

Wednesday, December 31, 2014
இலங்கை::எதி­ர­ணியின் வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு ஆத­ரிப்­ப­தற்கு ஏதா­வது ஒரு காரணம் இருக்­க­வேண்டும். பொது­வான கார­ணங்­களை
 
இதற்கு சொல்ல முடி­யாது. தென்­ப­குதி வாக்­கு­களைப் பாது­காப்­ப­தற்­கா­கவே ஒப்­பந்தம் செய்­ய­வில்லை என்று கூறப்­ப­டு­கின்­றது.

தமிழ் வாக்­குக்­களை வெல்­லு­வ­தற்­காக மைத்­தி­ரிக்கு ஆத­ரவு என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. மைத்­தி­ரியை ஆத­ரிக்கும் கூட்­ட­மைப்பு ஏன் ஜனா­தி­பதி மஹிந்­த­ரா­ஜ­ப­க்ஷ­வுக்கு ஒரு சந்­தர்ப்­பத்தை வழங்­க­வில்லை என்று பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜபக்ஷ கேள்வி எழுப்­பினார்.

எந்­த­வித இணக்­கமு­மின்றி ஒப்­பந்­த மும் இன்றி எப்­படி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு கூட்­ட­மைப்பு ஆத­ரவு அளிக்­கலாம். இதன் மூலம் உண்­மைநி­லை­யினை தெற்கு மக்க­ளுக்கும் கூறாது வடக்கு மக்­க­ளுக்கும் கூறாதநிலையே காணப்­ப­டுகின்றது. இவ்வா­றான அர­சியல் தலை­வர்கள் சிறந்த தலை­வர்­களா? தெற்கு மக்­க­ளையும்,வடக்கு மக்­க­ளையும் இவர்கள் ஏமாற்­று­கின்­றனர். மைத்­தி­ரி­பால சிறி­சேன அர­சாங்­கத்தில் அமைச்­ச­ராக இருந்­தவர். கட்­சியின் செய­லா­ள­ரா­கவும் செயற்­பட்­டவர். இவ­ரது கொள்­கையும் ஜனா­தி­ப­தியின் கொள்­கையும் ஒன்­றா­கவே இருந்­தது. இந்த நிலையில் ஜனா­தி­ப­திக்கு கூட்­ட­மைப்­பினர் சந்­தர்ப்­பத்தை வழங்­கி­யி­ருக்­கலாம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

மைத்­தி­ரி­யுடன் ஒப்­பந்­தமும் இல்லை. பேச்­சு­வார்­ததை நடத்­தவும் இல்லை என்று கூட்­ட­மைப்­பினர் கூறு­கின்­றனர். அப்­ப­டி­யானால் அவர் தேர்­தலில் வெற்­றி­பெற்றால் என்ன நடக்கும். அவர் வெற்றி பெற்ற பின்னர் பேசுவோம் என கூட்­ட­மைப்பு சிந்­தித்­தி­ருந்தால் ஏன் அந்த சந்­தர்ப்­பத்தை ஜனா­தி­பதி மஹிந்­த­ரா­ஜ­ப­க்ஷ­வுக்கு வழங்­க­வில்லை. சிங்­கள, தமிழ் மக்­களை ஏமாற்றும் வகை­யி­லேயே கூட்­ட­மைப்பின் செயற்­பாடு அமைந்­துள்­ளது. இது குறித்தும் மக்கள் சிந்­திக்­க­வேண்டும் என்றும் பாது­காப்பு செய­லாளர் எடுத்­துக்­கூ­றினார்.
தேசிய தமிழ் பத்­தி­ரி­கை­களின் ஆசி­ரி­யர்­களை நேற்று பாது­காப்பு அமைச்சில் சந்­தித்து பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ கலந்­து­ரை­யா­டினார். இதன் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இந்தக் கலந்­து­ரை­யா­டலில் அவர் மேலும் கூறி­ய­தா­வது,

கேள்வி:- ஜனா­தி­பதி தேர்தல் தொடர்பில் உங்­களின் கருத்து என்ன?

பதில்:- ஜனா­தி­பதி வெற்­றி­பெ­றுவார்.

கேள்வி:- வட­ப­கு­தியின் தற்­போ­தைய நிலை குறித்து திருப்­தி­ய­டை­கின்­றீர்­களா?

பதில்:- வடக்கில், இன்று மக்­க­ளுக்கு சுதந்­திரம் உள்­ளது. 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டதன் பின்னர் யாழ். குடா­நாட்டில் இரா­ணுவப் பிர­சன்னம் அதி­க­மாக இருந்­தது. தற்­போது அந்த நிலை இல்லை. பெரு­ம­ள­வான இரா­ணுவ முகாம்கள் அகற்­றப்­பட்­டுள்­ளன. பெரு­ம­ள­வான காணிகள் மீளவும் மக்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளன. வடக்கில், இரா­ணு­வத்­தினர் நிலை­கொண்­டி­ருப்­ப­தா­கவும், காணிகள், சுவீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் குற்­றம்­சாட்­டப்­பட்­டுள்­ளது. இவற்றை ஒரே இரவில் செய்து விட முடி­யாது.
இரா­ணு­வப்­பி­ர­சன்­ன­மா­னது நிரந்­தர சமா­தானம் ஏற்­படும் வரையில் வடக்கில் அவ­சி­ய­மா­ன­தாகும். முப்­பது வருட யுத்­தத்தின் பின்னர் ஒரே இரவில் சக­ல­வற்­றையும் அகற்­றி­விட முடி­யாது. மீண்டும் 1980 ஆம் ஆண்­டு­க­ளுக்கு நாம் செல்ல முடி­யாது. வடக்கில் சட்டம், ஒழுங்­கு­பொ­லி­ஸா­ரிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. தமிழ் பேசும் பொலி­ஸாரை பொலிஸ் நிலை­யங்­களில் நிய­மித்து வரு­கின்றோம். இதற்­கென விசேட பயிற்­சிக்­கல்­லூ­ரி­களை ஆரம்­பித்து வரு­கின்றோம். இரா­ணு­வத்­தி­ன­ருக்கும் தமிழ் பேசு­வ­தற்கு பயிற்சி அளிக்­கப்­ப­டு­கி­றது.

வடக்கில் அபி­வி­ருத்­திகள் இடம் பெறு­கின்­றன. வீதிகள், புகை­யி­ரத வீதிகள், அமைக்­கப்­ப­டு­கின்­றன. மின்­சாரம், குடிநீர் வச­திகள், மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. இறுதி யுத்­தத்தின் போது கைப்­பற்­றப்­பட்ட தங்க நகை­களை நாம் மீளவும் கைய­ளித்து வரு­கின்றோம். தங்க நகை­க­ளுக்­கு­ரி­ய­வர்­களின் விப­ரங்­களை பெறு­வதில் சிரமம் ஏற்­பட்­ட­மை­யி­னா­லேயே இவற்­றை­மீள வழங்­கு­வதில் காத­ல­தா­மதம் ஏற்­பட்­டி­ருந்­தது.

படை­யினர் வச­மி­ருந்த காணி­களில் பெரும்­பான்­மை­யான காணிகள் மீளவும் வழங்­கப்­பட்­டுள்­ளன. பலாலி, முகாமை அண்­மித்த காணிகள் கூட மீள கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன. 2009 ஆம் ஆண்­டுக்கு முன் யாழ்ப்­பா­ணமே முகா­மாக இருந்­தது. தற்­போது அந்த நிலை மாற்­றப்­பட்­டுள்­ளது. மக்­களின் சுதந்­தி­ரத்தை நாம் உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்றோம்.

கேள்வி:- வேறு என்ன நட­வ­டிக்­கை­களை நீங்கள் மேற்­கொண்­டி­ருந்­தீர்கள்?

 பதில்:- யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட பின்னர் ஈ.பி.டி.பி., பு.ௌாட், ஈ.பி.ஆர்.எல்.எப். போன்ற குழுக்­க­ளி­ட­மி­ருந்து ஆயு­தங்­களை நாம் மீளப்­பெற்றோம். வடக்கில் ஜன­நா­ய­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே மிகுந்த சிர­மத்தின் மத்­தியில் இந்தப் பணி­யினை மேற்­கொண்டோம். ஆனால் இந்த செயற்­பாட்டை கூட தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு அங்­கீ­க­ரிக்­க­வில்லை. அர­சாங்­கத்­திற்கு உத­விய இந்த இயக்­கத்­தி­ன­ரி­ட­மி­ருந்து ஆயு­தங்­களை நாம் பெற்­றி­ருந்தோம். வடக்கில் முன்னர் தேர்­தல்­களை நடத்­தினால் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு ஆயுத தாரி­களின் விடயம் தொடர்பில் குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்தும். ஆனால் இப்­போது அந்த நிலை இல்லை.

 இந்த விட­யத்தில் நாம் நேர்­மை­யான தீர்­மா­னத்தை எடுத்­தி­ருந்தோம்.
தற்­போது வடக்­கிற்கு யாழ்­தேவி செல்­கின்­றது. இது முக்­கிய விட­ய­மாகும். 1970 களில் நான் படையில் கட­மை­யாற்­றி­ய­போது இரவு ரயி­லேயே காங்­கே­சன்­துறை சென்று வந்தேன். இப்­போது மீண்டும் அந்த நிலை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

கேள்வி:- அர­சாங்கம் எத­னையும் செய்­யா­மை­யினால் ஜனா­தி­பதி தேர்­தலில் எதி­ரணி வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஆத­ரிப்­ப­தாக கூட்­ட­மைப்பு அறி­வித்­துள்­ளது. இது குறித்து உங்­களின் கருத்து என்ன?

பதில்:- இந்த முடிவில் கூட்­ட­மைப்பில் உள்ள சிலர் உடன்­ப­ட­வில்லை என்று தெரி­கின்­றது. அர­சாங்கம் யுத்தம் முடி­வ­டைந்து ஐந்து வரு­டங்­களில் செய்­த­வற்றை பார்க்­க­வேண்டும். யுத்தம் முடி­வ­டைந்த நிலையில் 3 இலட்சம் மக்கள் அக­தி­க­ளாக இருந்­தனர். கண்­ணி­வெ­டிகள் புதைக்­கப்­பட்­டி­ருந்­தன. 13 ஆயிரம் விடு­த­லைப்­பு­லிகள் சர­ண­டைந்­தி­ருந்­தனர். 5 ஆயிரம் புலி உறுப்­பி­னர்கள் தடுப்பு முகாம்­களில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­தனர். ஐந்து வரு­டங்­க­ளுக்குள் 3 இலட்சம் மக்­களை மீளக்­கு­டி­யேற்றி புலி­க­ளுக்கு புனர்­வாழ்வு அளித்து சமூ­கத்­துடன் இணைத்து தடுப்பு முகாம்­களில் வைக்­கப்­பட்­டி­ருந்­த­வர்­களை விடு­வித்து கண்­ணி­வெ­டி­களை அகற்றி மக்­களை இயல்பு வாழ்க்­கைக்கு கொண்­டு­வந்­துள்ளோம். இதேபோல் ஆயு­தக்­கு­ழுக்­க­ளி­ட­மி­ருந்து ஆயு­தங்­க­ளையும் களைந்­துள்ளோம். அத்­துடன் அபி­வி­ருத்­தி­க­ளையும் நாம் மேற்­கொண்டு வரு­கின்றோம்.
 
வடக்கில் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தல்கள், மாகா­ண­சபைத் தேர்­தல்கள் என்­ப­வற்றை நீதி, நியா­ய­மாக நடத்­தினோம். இவ்­வாறு அர­சாங்கம் மேற்­கொண்ட சேவை­களை கூட்­ட­மைப்பு கூற­வில்லை. வட­மா­கா­ண­சபைத் தேர்­தலில் கூட்­ட­மைப்பு வெற்­றி­பெறும் என்று தெரிந்­தி­ருந்தும் நாம் தேர்­தலை நடத்­தினோம். இவ்­வா­றன நிலையில் கூட்­ட­மைப்­பினர் தெரி­விக்கும் குற்­றச்­சாட்டு நியா­ய­மா­னதா? நாம் மக்­க­ளுக்கு . தேவை­யா­ன­வற்றை செய்­துள்ளோம்.
 
யாழ். நூல­கத்தை எரித்­தது யார்? மாவட்ட அபி­வி­ருத்தி தேர்­தலில் குழப்­பத்தை உரு­வாக்­கி­யது யார்? 1983 ஆம் ஆண்டு இனக்­க­ல­வ­ரத்­திற்கு பொறுப்பு யார்? என்­பது பற்றி நாம் சிந்­திக்­க­வேண்டும். தற்­போது அளுத்­கம, வன்­முறை சம்­பவம் தொடர்பில் சிலர் பேசு­கின்­றனர். இந்தச் சம்­பவம் தொடர்பில் தகவல் கிடைத்­ததும் பொலிஸ்மா அதி­பரை அங்கு அனுப்­பினேன். பொலி­ஸாரை அங்கு அனுப்­பினோம், விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரை அனுப்­பினேன். பின்னர் இரா­ணு­வத்­தி­னரை அனுப்பி உட­ன­டி­யா­கவே வன்­மு­றையைக் கட்­டுப்­ப­டுத்­தினேன்.
 
ஆனால் 1983 ஆம் ஆண்டு நடந்­தது என்ன? கப்­பலில் ஏற்றி தமி­ழர்­களை யாழ்ப்­பா­ணத்­திற்கு அனுப்­பி­வைத்­தனர். இதனை இந்த மக்கள் மறக்க முடி­யுமா?
 
ஜனா­தி­பதி ராஜ­ப­க்ஷவின் ஆட்­சியில் இப்­படி நடக்­க­வில்லை. மக்கள் இதனை மறந்­து­வி­டக்­கூ­டாது.

கேள்வி:- ஜனா­தி­பதி தேர்­தலில் கூட்­ட­மைப்பு எடுத்­துள்ள நிலைப்­பாடு சரி­யா­னதா?

பதில்:- இந்தத் தேர்­தலில் எதி­ரணி வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஆத­ரிப்­ப­தற்கு கூட்­ட­மைப்­பிற்கு ஏதா­வது ஒரு காரணம் இருக்­க­வேண்டும். பொது­வாக கார­ணங்­களை சொல்ல முடி­யாது. தென்­ப­குதி வாக்­கினை பாது­காப்­ப­தற்­காக மைத்­தி­ரி­யுடன் ஒப்­பந்தம் இல்லை என்றும், தமிழ் மக்­களின் வாக்­குக்­களைப் பெறு­வ­தற்­காக மைத்­தி­ரிக்கு ஆத­ரவு என்றும் கூட்­ட­மைப்பு கூறி­யுள்­ளது.

மைத்­தி­ரியை ஆத­ரித்­த­மைக்­கான காரணம் என்ன என்­பதை கூற­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். காரணம் இன்றி ஆத­ரித்து விட்டு தேர்­தலில் வெற்றி பெற்ற பின்னர் கூட்­ட­மைப்பின் கோரிக்­கையை அவர் ஏற்­றுக்­கொள்­ளா­விட்டால் பின்னர் யுத்தம் செய்­வதா? ஆயுதம் ஏந்தி போரா­டு­வதா?

ஜனா­தி­பதி மஹிந்­த­ரா­ஜ­பக்ஷ செயற்­பாட்டில் பல விட­யங்­களை காண்­பித்­துள்ளார். சமா­தானம், ஸ்திரத்­தன்­மையை அவர் செயற்­பாட்டில் ஏற்­ப­டுத்­தி­யுள்ளார். அர­சியல் வேறு­பா­டுகள் இருந்தால் பேசித் தீர்த்­தி­ருக்­கலாம். இந்த நிலையில் அவ­ருக்கு ஒரு சந்­தர்ப்­பத்தை அளித்து கூட்­ட­மைப்­பினர் பார்த்­தி­ருக்­கலாம்.

மைத்­தி­ரியை எந்­த­வொரு இணக்­க­மு­மின்றி பேச்­சு­வார்த்தை இன்றி ஒப்­பந்தம் இன்றி எப்­படி கூட்­ட­மைப்பு ஆத­ரித்­தி­ருக்க முடியும். தெற்கு மக்­க­ளி­டமும் வடக்கு மக்­க­ளி­டமும் உண்­மையை மறைத்து கூட்­ட­மைப்ப செயற்­ப­டு­கின்­றது. இத்­த­கை­ய­வர்­களை எவ்­வாறு சிறந்த தலை­வர்­க­ளாவர். இத்­த­கைய செயற்­பாடு ஒப்­பந்தம் செய்து கொள்­வ­தை­விட மோச­மா­ன­தாகும். தெற்கு மக்­க­ளையும் வடக்கு மக்­க­ளையும் ஏமாற்றும் வகையில் செயற்­பட்­டுள்ள கூட்­ட­மைப்பு மைத்­தி­ரிக்கு வழங்­கிய சந்­தர்ப்­பத்தை ஏன் ஜனா­தி­ப­திக்கு வழங்­க­வில்லை.

அர­சாங்­கத்தில் மைத்­தி­ரி­பால சிறி­சேன அமைச்­ச­ராக இருந்­தவர், கட்­சியின் செய­லா­ள­ராக செயற்­பட்­டவர். அவரின் கொள்­கையும், ஜனா­தி­தியின் கொள்­கையும் ஒன்­றா­கவே இருந்­தது. ஜனா­தி­ப­தியின் கொள்­கையில் நின்ற மைத்­தி­ரி­யிடம் இதனை எதிர்­பார்க்­கிறோம் என கூட்­ட­மைப்பு கூற­வேண்டும். ஆனால் அவ்­வாறு இல்­லாமல் மக்­களை இவர்கள் ஏமாற்­று­கின்­றனர்.

மைத்­தி­ரி­யுடன் ஒப்­பந்தம் செய்­ய­வில்லை என்று கூறி இரு பகுதி மக்­க­ளையும் ஏமாற்­றவே இவர்கள் முயற்­சிக்­கின்­றனர். இவர்கள் அனை­வ­ரி­டமும் பழி­வாங்கும் எண்­ணமே காணப்­ப­டு­கின்­றது.

கேள்வி:- ஜனா­தி­பதி தேர்­தலின் போது வட­ப­குதி வாக்­க­ளிப்பை தடுப்­ப­தற்கு முயற்சி மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக குற்றம் சாட்­டப்­ப­டு­கின்­றதே. இது குறித்து என்ன கூறு­கின்­றீர்கள்.
பதில்:- ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் ஆட்­சிக்­கா­லத்­தி­லேயே அவ்­வாறு நடை­பெற்­றது. ஜனா­தி­பதி மஹிந்­தவின் கீழ் இடம் பெற்ற உள்­ளூ­ராட்சி தேர்­தல்கள், வட­மா­கா­ண­சபை தேர்­தல்கள் மற்றும் பாரா­ளு­மன்ற ஜனா­தி­பதி தேர்­தல்­களின் போது வாக்­க­ளிப்­ப­தற்கு எங்­கா­வது தடுக்­கப்­பட்­டதா? ஜனா­தி­ப­தியின் ஆட்­சியில் தான் வடக்கு மக்கள் நீதி­யா­கவும், சுதந்­தி­ர­மா­கவும் வாக்­க­ளிப்­ப­தற்கு அனு­ம­திக்­கப்­பட்­டனர். இதனை தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு நிரா­க­ரிக்க முடி­யுமா?

கேள்வி:- கூட்­ட­மைப்பின் ஆத­ர­வினை அர­சாங்கம் கோரி­யி­ருந்­ததா?

பதில்:- அதற்கு சம்­பந்­தனை பிடிக்­க­வேண்­டுமே, ஜனா­தி­பதி வட­ப­குதி மக்­க­ளு­டன்தான் பேசினார்.

கேள்வி:- மைத்­தி­ரியை ஆத­ரிக்கும் முடி­வடை அறி­விக்கும் போது சர்­வா­தி­கார ஆட்­சியை நோக்கி இலங்கை செல்­வ­தாக கூட்­ட­மைப்பு குற்றம் சாட்­டி­யுள்­ளது. இது தொடர்பில் உங்­களின் பதில் என்ன?


பதில் :- 2005 ஆம் ஆண்­டுக்கு முன்னர் இருந்த நிலை­யுடன் ஒப்­பிட்­டுப்­பார்த்தால் கேலிக்­கு­ரி­ய­தாகும்.

கேள்வி:- அர­சாங்­கத்தில் அங்கம் வகித்த ரிஷாத் பதி­யு­தீனின் கட்சி விலகி எதி­ர­ணிக்கு ஆத­ரவு அளித்­துள்­ளது. இது குறித்து என்ன கூறு­கின்­றீர்கள்.?

பதில்:- ரிஷாத் பதி­யுதீன் தொடர்பில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு என்ன நிலைப்­பாடு எடுக்­க­வுள்­ளது. வன்­னிப்­ப­கு­தியில் மன்னார், வவு­னியா, முல்­லைத்­தீவு பகு­தி­களில் தமி­ழர்­க­ளது காணிகள், சுவீ­க­ரிக்­கப்­பட்­ட­தா­கவும், இவ­ரினால் முஸ்­லிம்கள் அங்கு குடி­ய­மர்த்­தப்­பட்­ட­தா­கவும், குற்­றச்­சாட்­டுக்கள் எழுந்­தி­ருந்­தன. மீன்­படி தொழி­லுக்கு தடைகள் ஏற்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கவும், குற்­றம்­சாட்­டப்­பட்­டி­ருந்­தது. இப்­போது ரிஷாத் எதி­ர­ணியில் இடம் பெற்­றுள்ளார். இந்த நிலையில் முஸ்­லிம்­களின் குடி­யேற்­றத்தை நிறுத்­து­மாறு கூட்­ட­மைப்பு மைத்­தி­ரி­யிடம் கோருமா? சுவீ­க­ரிக்­கப்­பட்ட காணி­களை மீள வழங்­கு­மாறு கூட்­ட­மைப்பு கூற முடி­யுமா?
 
ஜனா­தி­ப­தி­யுடன் ரிஷாட் இருக்கும் போது காணி சுவீ­க­ரிப்பு தொடர்பில் குற்­றச்­சாட்­டுக்கள் எழுப்­பப்­பட்­டன. இன்று மைத்­தி­ரி­யிடம் அவர் சென்ற பின் அவ­ருக்கு புனர்­வாழ்வு அளிக்­கப்­பட்டு விட்­டதா?

கூட்­ட­மைப்பு இந்த விட­யத்தில் என்ன செய்யப் போகின்­றது. இதற்கு கூட்­ட­மைப்பு பத­ல­ளிக்­க­வேண்டும்.
 
கிழக்கில் அம்­பா­றை­யி­லும தமிழ் மக்­களின் காணிகள் சுவீ­க­ரிக்­கப்­பட்­டி­ருந்­த­தாக குற்­றம்­சாட்­டப்­பட்­டி­ருக்­கின்­றது. இந்த நிலையில் ஹக்கீம், தற்­போது எதி­ர­ணியில் நிற்­கின்றார். இந்தப் பிரச்­சி­னைக்கு தீர்வு காண கூட்­ட­மைப்பு என்ன செய்­யப்­போ­கின்­றது. மட்­டக்­க­ளப்­பிலும் தமிழ் மக்­களின் காணிகள் சுவீ­க­ரிக்­கப்­ப­டு­கின்­றன. இதனை கூட்­ட­மைப்­பி­னரால் மீளப்­பெற முடி­யுமா?

ஜனா­தி­ப­தி­யுடன் இருக்கும் போது இவர்கள் கெட்­ட­வர்­க­ளாக இருந்தனர். தற்போது மைத்திரியுடன் இணைந்ததும் நல்லவர்களாக மாறிவிட்டனரா? இது குறித்தும் கூட்டமைப்பு பதிலளிக்கவேண்டும்.

கேள்வி:- மலையகத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகளைஅமைத்துக்கொடுக்கும் பணி ஆரம்பித்துள்ளதா?

பதில்:- ஜனாதிபதி செயற்பாட்டு ரீதியில் எதனையும் செய்து காண்பிக்கின்றார். அங்கு வீடமைப்புத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கேள்வி:- காணாமல் போனோர் விவகாரம் தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்:- யுத்தத்தின் போது மூவாயிரம் இராணுவம் வரை காணாமல் போயிருந்தனர். அவர்களது சடலங்கள் கூட கைப்பற்றப்பட்டிருக்கவில்லை. 2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரை 6 ஆயிரம் இராணுவத்தினர் வரை பலியாகியிருந்தனர். இராணுவத்தினரிலேயே மூவாயிரம் பேரைக்காணவில்லை என்றால் புலிகள் தரப்பிலும் இவ்வாறான நிலை ஏற்பட்டிருக்கும். காணாமல் போனவர்கள் சண்டைகளில் இறந்திருக்கலாம். ஆனால் அதனை அறியமுடியாது. இதுதான் நிலைப்பாடாக உள்ளது. இருந்தபோதிலும் காணாமல் போனவர்களுக்கு மரண அத்தாட்சிப்பத்திரங்களை வழங்குவதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

யுத்தகாலத்தின் போது படைவீரர்களது தாய்மார் என்னை வந்து சந்திப்பார்கள், தான் சாத்திரம் பார்த்ததாகவும், காணாமல் போன தனது மகன் கிளிநொச்சியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஒரு தாயார் தெரிவித்தார். ஆனால் அந்த வீரர் சண்டையில் உயிரிழந்தமை எமக்குத் தெரியும். இவ்வாறு காணாமல்போனோரது நிலைமை இருக்கின்றது. இவர்கள் யுத்தத்தில் உயிரிழந்திருப்பர். ஆனால் அதனை நாம் நிரூபிக்க முடியாத நிலை இருக்கின்றது.

பொது எதி­ர­ணி­யி­னது நாடக தொடரில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­கு­பற்­ற­லா­னது எதிர்­பார்த்த ஒன்றே: அமைச்சர் டலஸ் அழ­கப்­பெ­ரும!

Wednesday, December 31, 2014
இலங்கை::பொது எதி­ர­ணி­யி­னது நாடக தொடரில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­கு­பற்­ற­லா­னது எதிர்­பார்த்த ஒன்றே என குறிப்­பிடும் ஆளும் கட்­சி­யான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்னணி, பொது எதி­ர­ணி­யிடம் மேற்­கொள்­ளப்­பட்ட உடன்­ப­டிக்­கையின் அமை­வா­கவே தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் ஆத­ரவு பெறப்­பட்­டுள்­ள­து.

குறிப்­பிட்ட அந்த உடன்­ப­டிக்கை தொடர்­பி­லான இரக­சி­யங்­களை பொது எதி­ர­ணி­யினர் மக்­க­ளுக்கு வெளிப்­ப­டுத்த வேண்டும் எனவும் தெரி­வித்­தது.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் தலைமை காரி­யா­ல­யத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த ஊட­க­வி­ய­லாளர் மாநாட்­டி­லேயே அமைச்சர் டலஸ் அழ­கப்­பெ­ரும மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இதன் போது அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

பொது எதி­ர­ணி­யினால் மிக சூழ்ச்­சி­க­ர­மான முறையில் கொண்டு நடத்­தப்­படும் நாடகத் தொடரின் இறு­தி­யாக அங்­கத்­துவம் பெற்­றுள்ள தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பா­னது தமது கோரிக்­கை­க­ளுக்கு தலை சாய்க்கும் தரப்­பி­ன­ருக்கே ஆத­ரவு வழங்­கு­வ­தாக கடந்த காலங்­களில் தொடர்ச்­சி­யாக கூறி வந்­ததை நாம் அறிந்­தி­ருந்தோம். அதன் அடிப்­ப­டையில் எமது கட்சி அவர்­களின் ஈழ கன­வு­க­ளுக்கோ உடன்­ப­டிக்­கை­க­ளுக்கோ தலை சாய்க்க தவ­றி­ய­மை­யி­னா­லேயே இன்று பொது எதி­ர­ணி­யுடன் மேற்­கொள்­ளப்­பட்ட உடன்­ப­டிக்­கையின் அடிப்­ப­டையில் அவர்­க­ளுக்கு ஆத­ரவு தெரி­விப்­ப­தாக தெரி­வித்­துள்­ளது.

இவர்­களின் இம் முடி­வா­னது நாம் எதிர்­பார்த்த ஒன்றே.

எனவே பொது எதி­ர­ணி­யி­னரால் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் ஆத­ரவை பெற மேற்­கொண்ட உடன்­ப­டிக்­கையில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள விட­யங்கள் தொடர்பில் மக்­க­ளுக்கு தௌிவு­ப­டுத்த வேண்டும்.

குறித்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு உரை­யாற்­றிய தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான விமல் வீர­வன்ச கருத்து தெரி­விக்­கையில்;
சுகா­தார துறையில் சில செயற்­பா­டு­களை மேற்­கொள்ள இருப்­ப­தாக தமது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் குறிப்­பிட்­டுள்ள பொது வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஏன் அவர் சுகா­தார அமைச்­ச­ராக பதவி வகித்த காலங்­களில் செய்யத் தவ­றினார் என்­ப­தனை மக்­க­ளுக்கு தெளிவு­ப­டுத்த வேண்டும். வெறு­மனே தேர்­தலை இலக்­காகக் கொண்டு அதை செய்வோம் இதை செய்வோம் என குறிப்­பி­டு­வது அர்த்­த­மற்ற செயல்.

சிங்­கள பௌத்த மக்­களின் வாக்­குகள்

இன்று பொது எதி­ர­ணி­களின் செயற்­பா­டு­க­ளா­னது மும்­மு­ர­மான வாக்­கு­களை பெறு­வதே ஆகும். அத­ன­டிப்­ப­டை­யி­லேயே தமிழ் மக்­களை இலக்கு வைத்து தமிழ் தேசிய கூட்­ட­மைப்பை தன் வசப்படுத்தியுள்ளது. மறுபுறம் முஸ்லிம் வாக்குகளை பெற முஸ்லிம் கட்சிகளை வசப்படுத்தியுள்ளது. சிங்கள வாக்குகளை பெறவே சம்பிக்க ரணவக்கவை தன்வசப்படுத்தியுள்ளார்கள். எனவே மக்கள் இவர்களின் சூழ்ச்சி வலைகளில் சிக்கிவிட கூடாது என அவர் மேலும் தெரிவித்தார்.
 

Minuwangoda Public Rally | මිනුවන්ගොඩ මහජන රැළිය | மினுவங்கொட மக்கள் பேரணி!


Wednesday, December 31, 2014
இலங்கை::President Mahinda Rajapaksa will address an election campaign rally in Veyangoda, Dec. 30, 2014. ජනාධිපති මහින්ද රාජපක්ෂ මැතිතුමා අද (30) මිනුවන්ගොඩ දී මහජන රැළියක් අමතනු ඇත. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் அவர்கள் இன்று மினுவாங்கொடையில் தேர்தல் பிரச்சார பேரணியில்

றிசாத் பதியுத்தீன் மன்னார் நீதிமன்றத்திற்கு கல் எரிந்து மற்றும் நீதிபதிக்கும் ஏசிய அந்தப் செல்லப்பிள்ளை, அதுமட்டுமல்ல புத்தளத்தில் ஒரு மரணத்திலும் அவர் சம்பந்தப்பட்டவர். மன்னார் வணவள காட்டுப்பகுதிகளிலும் சம்பந்தப்பட்டவர். இவர் இந்தப் பக்கம் இருக்குமபோது இவர் பற்றி பாராளுமன்றத்தில் மேற்படி விடயங்களை எதிர்க்கட்சியினர், ரீ.என்.ஏ. பாரளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார்கள். அரசு மீது மாசுபடுத்தினார்கள். இப்போது அவர் எங்கு இருக்கின்றார்.?
 
மேற்கண்டவாறு விமல் வீரவண்ச நேற்று இரவு பத்தரமுல்லை, மாலபே கடுவளையில் பகுதியில் நடைபெற்ற ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தெரவித்தார்.

விமல் வீரவன்ச அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
 
ஹக்கீம் – சம்பந்தன் இணைந்து வடகிழக்கை இணைத்து அதில் முஸ்லீம் அரபு வசந்த பிராந்தியத்தை பெற்றுக்கொள்வர்கள். டயஸ்போரா மற்றும் வெளிநாட்டு தூதுவர்களது நிகழ்ச்சி நிரலுக்கு ஹக்கீம் சம்பந்தன் இயங்குவார்கள். இவர்கள் மஹிந்த ராஜபக்சவுடன்இருந்து குழிபறிப்பார்கள் என்று கடந்த 6 மாதங்களுக்கு முன்னரே இந்த நாட்டுக்கும் சொல்லியிருந்தேன்.
 
அதேபோன்று மைத்திரிபால சிறிசேனா தனது தனிப்பட்ட செயலாளரை பொலன்னருவையில் வைத்து திட்டமிட்டு கொலை செய்த சம்பவம் உள்ளதாகவும் விமல் தெரிவித்தார்.
 
மைத்திரியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 13வது சரத்து, வடக்கில் உள்ள இராணுவம், தேசிய பாதுகாப்பு மற்றும் இந்த நாட்டின் பிரிவினைவாதம், வட கிழக்கு மீள ஒன்றிணைப்பது பற்றி பொலிஸ், காணி அதிகாரம் பற்றி என்ன சொல்லியிருக்கின்றார். இதனை இவர் உடன் இந்த நாட்டுக்கு வெளிப்படுத்தல் வேண்டும். இதற்கு மைத்திரி அந்தரங்க ஒப்பந்தம் கைச்சாத்திட்டாரா?
 
இந்த கூட்டமைப்பில் உள்ள சிகல உருமைய சம்பிக்க ரணவக்கவும், ரத்துலெயத் தேரோவும் இந்த நாட்டு பௌத்த மக்களுக்கு என்ன பதில் கூறப் போகின்றார்கள்.
 
ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஒருபோதும் இந்த நாட்டில் ஹக்கீமுக்கு ஒரு பிராந்தியம், சம்பந்தனுக்கு ஒரு பிராந்தியம் என இந்த நாட்டை காட்டிக் கொடுக்கவில்லை. அவர் தோல்விபெற்றாலும் சரி அவர் ஒரு போதும் இந்த நாட்டை பிரிவிணைக்கு துணைபோகமாட்டார்.
 
இதே போன்று தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச யுத்தத்தினை செய்யும்போது உலகில் உள்ள எத்தணை நாடுகள் யுத்தத்தினை நிறுத்தும்படியும், அழுத்தம் கொடுத்தனர். எத்தனை நாட்டு பிரதம மந்திரிகள் இந்த நாட்டுக்குள் வந்து அழுத்தம் கொடுத்தனர். இவர்களை கணக்கில் எடுக்காது யுதத்தினை வெற்றி பெற்றார். அதே போன்று 9ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே மீள ஜனாதிபதியாக வெற்றிபெறுவது பெரும்பாண்மை பௌத்த மக்கள் தீர்மானித்து விட்டனர்.
 
மைத்திரி சிறிசேனவின் குடும்பத்தில் 12 சகோதரர்கள் உள்ளனர். பொலன்னருவையில் உள்ள மஹா ஹோட்டல், இன்னொரு சகோதரர் நுவரேலியாவில் ஒரு ஹோட்டல், பொலன்னருவையில் உள்ள சகல அரிசி ஆலைகள், நெல்வயல்கள், மிண்நேரியா வாவியில் உள்ள சகல மண் பேமிட் அனைத்தையும் உருமையாக்கியுள்ளனர்.
 
செங்கல் உற்பத்தி, சிறிசேனா இறுதியாக நடைபெற்ற கபினட்டில் கூட ஒரு சகோதருக்கு ஹோமகவில் 10 ஏக்கரை கொள்வனவு செய்ய பத்திரிகை சமர்ப்பித்தனர். அதனை அமைச்சர் வாசுதேவா நானயக்கார தடுத்து நிறுத்தினார்.
 
கொள்ளுப்பிட்டி பம்பலப்பிட்டியில் உள்ள கெசினோ கிளப்பில் ஏறி சூதாடுபவர்தான் டட்லி சிறிசேன. இதுதான் சிறிசேனாவின் குடும்ப பாலாணய” என விமல் வீரவண்ச தெரிவித்தார்.

மகிந்த ராஜபக்ஷவை ஆதரித்து சாய்ந்தமருது பிரதான வீதியில் தோ்தல் பிரச்சார கூட்டம்!

Wednesday, December 31, 2014
இலங்கை::
மகிந்த ராஜபக்ஷவை ஆதரித்து  சாய்ந்தமருது பிரதான வீதியில் தோ்தல் பிரச்சார கூட்டம்!
 
சாய்ந்தமருது மக்களின் நீண்ட நாள் அவாவாக இருக்கின்ற உள்ளுராட்சி சபைக் கோரிக்கை மிக விரைவில் நகர சபை என்ற அந்தஸ்த்துடன் சாய்ந்தமருதுக்கு மகுடம் சூட்டப்படும் என உள்ளுராட்சி மாகாண சபை அமைச்சரும், தேசிய காங்கிரஸின் தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.
 
ஜனாதிபதி வேட்பாளா் மகிந்த ராஜபக்ஷவை ஆதரித்து நேற்று இரவு சாய்ந்தமருது பிரதான வீதியில் தோ்தல் பிரச்சார கூட்டம் கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வரும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் விஷேட ஆலோசகருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் இடம்பெற்றது. இதில் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவா் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
 
அவா் அங்கு தொடா்ந்து உரையாற்றுகையில்,
 
சாய்ந்தமருது மக்களினால் மிக நீண்ட நாட்களாக முன்வைக்கப்பட்டு வரும் உள்ளுராட்சி மன்றக் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றித் தருவதுடன் அதனை பிரதேச சபையாக அல்லாது சாய்ந்தமருதிற்கு நகர சபை என்ற அந்தஸ்துடன் வழங்கப்படும்.
 
இதேவேளை கடந்த காலங்களில் கல்முனைப் பிரதேசம் இருந்தது போல் நான்கு சபைகளாக பிரிக்கப்படவுள்ளன. அதாவது கல்முனை மாநகர சபை, மருதமுனை பிரதேச சபை, தமிழ் மக்களுக்கான பிரதேச சபை, சாய்ந்தமருது நகர சபை என பிரிக்கப்படவுள்ளது.
 
இதனால் இவ் ஊர்களுக்கு குட்டி அரசியல் அதிகாரம் கிடைக்கவுள்ளன. இதன் மூலம் இப்பிரதேசங்களின் அபிவிருத்திற்கு கூடுதல் நிதிகள் கிடைக்கப் பெறும்.
 
புதிதாக உருவாக்கப்படும் இந்த உள்ளுராட்சி சபைகளினால் கல்முனைப் பிரதேச எந்த ஊருக்கோ சமூகத்துக்கோ அநீதியாக இருக்காது எனவும் தெரிவித்தார்.
 
இப்பிரச்சார கூட்டத்தில் கிழக்கு மாகான வீதி அபிவிருத்து அமைச்சர் எம்.எஸ். உதுமாலெவ்வை, கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான இஸட்.ஏ, ரகுமான், ஏ.எம்.றியாஸ் உள்ளிட்ட பொது மக்களும் கலந்து கொண்டனர்.
 
 
 
Wednesday, December 31, 2014
இலங்கை::
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வழிகாட்டலில் ஜெய்க்கா திட்டத்தின் நிதியொதுக்கீட்டின் கீழ் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் சாய்ந்தமருது பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட 6 வீதிகள் மக்கள் பாவனைக்காக  (29) திறந்து வைக்கப்பட்டன.
 
சாய்ந்தமருது பிரசேத்தில் காணப்படுகின்ற அதிகமான வீதிகள் குறித்த திட்டத்தின் மூலம் நிர்மாணிக்கப்பட்டது. இதன் மூலம் பிரதேசவாழ் மக்கள் குன்றும் குழியுமான வீதிகளினால் எதிர்கொண்ட பல்வேறுபட்ட அசௌகரிகங்கள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளன.   
 
தேசிய தலைவரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா பிரதம அதிதியாக கலந்து கொண்டு சாய்ந்தமருது மாளிகைக்காடு வீதி, கல்யாண வீதி, அல்-ஹிலால் வீதி, ஜி.எம்.எம்.எஸ் வீதி, வைத்தியசாலை வீதி, மற்றும் ஒஸ்மன் வீதி ஆகியவற்றை மக்கள் பாவனைக்கா திறந்து வைத்தார்.
இதன்போது அதிதிகளாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் விஷேட ஆலோசகருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சீரற்ற காலநிலை பாதுகாப்பு படையினர் அனர்த நிவாரண சேவையில்! Army Troops Continue to Take Care of Flood Victims

Wednesday, December 31, 2014
இலங்கை::
சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, மண்சரவு மற்றும் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள மக்களை பாதுகாப்பாக மீட்டெடுத்தல், நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகளுக்கென சுமார் 20 ஆயிரம் முப்படை வீரர்கள் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தின் பணிப்பாளரும்இ பேச்சாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு உட்பட நாட்டிலுள்ள 22 மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு, மண்சரிவு மற்றும் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள சுமார் 409 தற்காலிக முகாம்களிலுள்ள சிவில் அதிகாரிகளுடன் இணைந்தே 20 ஆயிரம் முப்படை வீரர்களும் நடவடிக்கைகளில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நிவாரண மற்றும் மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ளும் பொருட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் நியமிக்கப்பட்ட விஷேட குழுவினதும் மாவட்ட செயலாளர்களினதும் வேண்டுகோள்களுக்கு அமைய முப்படை வீரர்கள் தமது பணிகளை முன்னெடுத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இயற்கை அனர்த்தம், வெள்ளப் பாதிப்பு மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் முப்படையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விஷேட செய்தியாளர் மாநாடு கொள்ளுப்பிட்டியிலுள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் இடம்பெற்றது.

பிரிகேடியர் ருவன் வணிகசூரிய இங்கு மேலும் விளக்கமளிக்கையில் :-

வெள்ளப் பெருக்கு, மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை வீரர்கள் சிவில் அதிகாரிகளுடன் இணைந்து பாரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பது வழக்கமான ஒன்றாகும்.

அந்த அடிப்படையில் பாதுகாப்பு படையினர் தமது பணிகளை முன்னெடுத்து வரும் அதேசமயம், நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்ட ஜனாதிபதி அவர்கள் நிவாரண பணிகளை மேலும் துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்ததுடன்இ அது தொடர்பிலான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு விஷேட குழு ஒன்றையும் நியமித்துள்ளார்.

விஷேட குழு நியமனம்

ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இக்குழுவில் பாதுகாப்பு படைகளின் பிரதானி, முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், அனர்ந்த முகாமைத்துவ மற்றும் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர்கள் ஆகியோர் அடங்கிய குழுவே ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தேசிய மட்டத்தில் இடம்பெற்றுள்ள அனர்த்தத்தை முகாமைத்துவம் செய்யதல், நிவாரணங்களை வழங்குதல் போன்றவை தொடர்பாக விரிவாக ஆராய்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் இதற்கு தேவையாள நிதியும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கு அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது.

முப்படை வீரர்களின் நடவடிக்கைகள்

இந்நிலையில் மாவட்ட, பிரதேச செயலாளர்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் சிவில் நிர்வாக நடவடிக்கைகளுக்கு உதவும் பொருட்டு 5000 முப்படை வீரர்களும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவும் பொருட்டு 15 ஆயிரம் முப்படை வீரர்களும் முன்னெடுத்து வருகின்றனர்.
இராணுவம்

முதற்கட்டமாக அனர்த்தத்தில் சிக்கி தவிப்பவர்களை பாதுகாப்பாக மீட்டெடுத்தல்இ பிறகு அவர்களை பாதுகாப்பான இடங்களில், முகாம்களில் தங்க வைத்தல், நிவாரண உதவிகள், மருத்துவ மற்றும் போக்குவரத்து வசதிகளை பெற்றுக் கொடுத்தல் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

படையணிகளும் முகாம்களும்

மொத்தமாக 409 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் ஜந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு படையணிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஒரு படையணியில் சுமார் 500 தொடக்கம் 800 பேர் வரை அங்கம் வகிக்கின்றனர். இதற்கமைய கிழக்கு மாகாணத்தில் 147 தற்காலிக முகாம் அமைக்க்ப்பட்டுள்ளதுடன் கிழக்கு பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தலைமையகத்தின் கீழ் 7 படையணிகள் நடவடிக்கைகளில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். வன்னி பிரதேசத்தில் 86 தற்காலிக முகாம் அமைக்க்ப்பட்டுள்ளதுடன் வன்னி பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தலைமையகத்தின் கீழ் 6 படையணிகள் நடவடிக்கைகளில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பிரதேசத்தில் 13 தற்காலிக முகாம் அமைக்க்ப்பட்டுள்ளதுடன் கிளிநொச்சி பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தலைமையகத்தின் கீழ் 2 படையணிகள் நடவடிக்கைகளில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோன்று மத்திய பிரதேசத்தில் 105 தற்காலிக முகாம்களும் மேற்கு பிரதேசத்தில் 58 தற்காலிக முகாம்களும் அமைக்க்ப்பட்டுள்ளன.

கடற்படை

இராணுவத்தினர் தரைவழியாக மீட்பு பணிகளை மேற்கொண்டு வரும் அதேசமயம் கடற்படையினர் படகுகள் மூலம் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சுழியோடிகள் அடங்கிய 29 மீட்புக்குழுக்களும் 67 படகுகளும் மீட்பு பணிகளில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன. கடற்படையினர் மாத்திரம் இதுவரை 314 பொது மக்களை மீட்டெடுத்துள்ளதுடன் சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்று தங்க வைத்துள்ளனர்.

விமானப் படை

பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு மீட்பு பணிகளுக்கான செல்லும் படைவீரர்களின் போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தேவை ஏற்படும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக ஹெலிகொப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

நிவாரண பொருட்களை பெற்றுக் கொள்ள ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிலையங்கள்

அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான சகல நடவடிக்கைகளை ஏற்கனவே மேற்கொண்டுள்ள போதிலும் நல்லெண்ண அல்லது மனிதாபிமான முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கவென நட்டின் பல மாகங்களிலுள்ள பொது மக்கள் பொது அமைப்புக்கள் நிவாரண பொருட்களுடன் மக்கள் சென்ற வண்ணம் உள்ளனர் இது மிகவும் வரவேற்க தக்கது எனினும் இந்த பொருட்கள் உரிய முறையில் சம்பந்தப்பட்ட மக்களை சென்றடைவதில்லை, சில சமயம் தூர பிரதேச மக்களுக்கு கிடைப்பதில்லை இதனை கருத்திற் கொண்டு இதுபோன்று கொண்டுவரப்படும் நிவாரண பொருட்களை முறையாக கொண்டுச் சேர்க்கும் நோக்குடன் ஐந்து பிரிவுகளில் நிவாரண பொருட்களை சேகரிக்கும் நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவென இணைப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.

அவர்களின் விபரம், தொலைப்பேசி இலக்கங்கள் தொடர்பான விபரங்கள் பினவருமாறு :-

பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தலைமையகம் கிழக்கு

லெப். கேர்ணல் ரவீந்திர மார்காவிட்ட (மின்னேரிய) 0765303515, மேஜர் உபுல் பண்டார (22வது படைப் பிரிவு – திருகோணமலை) 0773049878, 0263266266, லெப். கேர்ணல் ரொணி பெர்ணான்து (23வது படைப் பிரிவு – பூணானை) 0771916387, 0273278973, லெப். கேர்ணல் ஹரேண் வீரசிங்ஹ (24வது படைப் பிரிவு – அம்பாறை) 0775371151, 0113090718.

பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தலைமையகம் வன்னி

கேர்ணல் சந்திர பண்டார (21வது ப
 
 
டைப் பிரிவு – அநுராதபுரம்) 0766907226.
 

 
பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தலைமையகம் மத்தி

லெப். கேர்ணல் இளங்ககோன் (112வது படையணி – பதுளை) 077800470

பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தலைமையகம் மேற்கு

மேஜர் துஷார குசும்சிறி (மாவட்ட செயலகம் – சிலாபம்) 0718470933

மேஜர் சம்பத் நல்லப்பெரும (மாவட்ட செயலகம் – குருநாகல்) 0773487588

பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தலைமையகம் கிளிநொச்சி

லெப். கேர்ணல் ஷாந்த ஜயசூரிய (பாதுகாப்பு படை தலைமையகம் – இரனமடு) 0765303526
 
Army Troops Continue to Take Care of Flood Victims in Wanni, Kilinochchi, East, Central and West!
 
Sri Lanka Army troops under the Security Force Headquarters (SFHQs) Wanni, Kilinochchi, East, Central and West, are continuing their rescue and relief operations with commitment for the benefit of flood victims by assisting the conduct of medical clinics, restoration of disrupted roads, threatened and burst tank bunds, provision of security and administrative support for surveys, transport of victims and relief items, coordination of Navy and Air Force services for emergencies, etc in the past two days (Dec 28-29).

In the Wanni, more than 49,816 displaced and affected people, belonging to 15,200 families in Anuradhapura and Mannar areas, have been housed in alternative public places with supply of cooked meals, medical and sanitary facilities after housing them in 86 relief centres in both districts.

Nearly 3000 troops of 6 Battalions are deployed to take care of them at present and another contingent of troops, is on standby for any emergency at Anuradhapura although the floods were now fast receding.

Similarly, troops of the Security Force Headquarters - Kilinochchi (SFHQ-KLN) are attending to the needs of the flood victims from Paliarupalam area after relocating them in 13 relief centres. A total of 2,571 victims are receiving the protection of about 400 Army troops as at present.

In the eastern theater, a total of 57,995 flood victims from Morawewa, Kanthalai, Serunuwara, Verugal, Thambalagamuwa, Kinnia, Mutur, Lankapura, Thamankaduwa, Medirigiriya, Eraurpattu, Vellaveli and Koralaipattu South, have been accommodated in 147 relief centres with the services, provided by about 3,500 troops of the Security Force Headquarters - East (SFHQ-E). As per the statistics, 7 houses were completely destroyed in the area and 99 more houses were partly or slightly damaged, turning them unsuitable for living.

On Friday (26), SFHQ-E organized 4 medical clinics inside those relief centres and provided medical assistance to some 240 affected people. 5 Sri Lanka Army Medical Corps members on the directions of the Forward Maintenance Area (FMA) Headquarters, held those mobile clinics at Novodya School in Medirigiriya, Viharagama temple in Medirigiriya, Nawahirigama community hall and Thabala Alhidiya Vidyalaya with a view to ensuring their best health standards.  

Meanwhile, a total of 26,300 flood victims from Kandy, Matale, Badulla, Nuwara Eliya, Hambantota and Moneragala districts that come under the responsibility of the Security Force Headquarters - Central (SFHQ-C) have been housed in 105 relief centres with the support of the Disaster Management Centre. Around 1000 troops of the SFHQ-C are taking care of those victims whose some 1,288 houses have been affected in the floods.

Meanwhile, troops of the Security Force Headquarters - West (SFHQ-West) has deployed about 500 troops to take care of about 13,094 flood victims, now relocated inside 58 relief centres in Puttalam and Kurunegala Districts.

Those troops during Dec 22 - 28, repaired and restored Surukkulama and Pahalakulama tank bunds and rescued a large number of affected people including some in the Wariyapola area.

On the directions and close supervision of the Commander of the Army, Lieutenant General Daya Ratnayake, Major General Boniface Perera, Commander, SFHQ-W, Major General Sudantha Ranasinghe, Commander, SFHQ-KLN, Major General Lal Perera, Commander, SFHQ-E, Major General Mano Perera, Commander, SFHQ-C and Major General U.A.B Medawela, Commander, SFHQ-West are spearheading all those relief projects in close cooperation with Disaster Management Centre, District Secretariats, Provincial authorities, Navy, Air Force and Police personnel, representatives of civil organizations, etc.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு போர்க்குற்றம் இடம்பெற்றதாகக் கூறுகிறது. அப்படியென்றால் போர்க்குற்றத்தை இழப்பதற்குப் பொறுப்பாக இருந்த இராணுவத் தளபதிக்கு முன்பு நடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏன் ஆதரவு வழங்கியது?- கோத்தபாய ராஜபக்‌ஷ!

Wednesday, December 31, 2014
இலங்கை::
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொது எதிரணி வேட்பாளர் மைத்திபாலவுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளவில்லை எனில் அவர்களுக்கு எதற்காக ஆதரவளிக்கவேண்டும். இருதரப்புக்கும் இடையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமை வெளியிடப்பட்டால் சிங்கள மக்களின் வாக்குகளை இழக்க நேரிடும் என எதிரணி அஞ்சுகிறதா? அப்படி ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ளவில்லை எனில் ஏன் அவர்கள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவளித்திருக்கக்கூடாது.
 
மைத்திரிக்கு ஆதரவளிப்பதன் மூலம் மீண்டும் ஒரு முறை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு துரோகம் செய்கிறது. – இவ்வாறு தெரிவித்துள்ளார் பாதூகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷ. தமிழ்ப் பத்திரிகைகளின் ஆசிரியர்களுடன் நேற்று செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- நாம் பொய்சொல்லி வாக்குக் கேட்கவில்லை. யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து வடக்கு, கிழக்கில் எவ்வளவோ அபிவிருத்திகளைச் செய்திருக்கிறோம். இது அந்த மக்களுக்குத் தெரியும். அந்தக் கடந்த கால அனுபங்களை நாங்கள் இப்போது
 
பேசவிரும்பவில்லை. ஆனால் அந்த மக்கள் அனுபவித்த துயரங்களை நாம் இல்லாமல் செய்திருக்கிறோம். அந்த நிலங்களில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளை அகற்றியிருக்கிறோம். சரணடைந்த போராளிகளைப் புனர்வாழ்வுக்கு உட்படுத்தி சமூகத்துடன் ஒன்றிணைத்திருக்கிறோம். அபிருவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருக்கிறோம். போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம்.
 
அங்கு விவசாயகம் முன்னேற்றமடைந்திருக்கிறது. முன்னெப்போதும் இல்லாதவாறு கல்வி மேம்பாடடைந்திருக்கிறது. தற்போது வெளியாகியிருக்கும் உயர்தரப் பரீட்சை முடிவுகளை வைத்து இதனை நீங்கள் அறிந்துகொள்ள முடியும். ஆனால் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்களுக்கு என்ன செய்திருக்கிறார்? அவர் சுகாதார அமைச்சராக இருந்துகூட தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றதாகக் கூறுகிறது. அப்படியென்றால் போர்க்குற்றத்தை இழப்பதற்குப் பொறுப்பாக இருந்த இராணுவத் தளபதிக்கு முன்பு நடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏன் ஆதரவு வழங்கியது? இது அவர்களது இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது. நாம் செய்தவற்றைக் கூறியே வாக்குக் கேட்கிறோம். இல்லாத பொய்களை சொல்லவில்லை.
 
அமைச்சர்களான ஹக்கீமும் ரிசாத் பதியுதீனும் அரசுடன் இணைந்திருந்து அனைத்தையும் பெற்று உழைத்துக்கொண்டு அரசின் முதுகில் குத்தியிருக்கின்றனர். இதனையா இஸ்லாமிய மதம் போதிக்கிறது என எண்ணத் தொன்றுகிறது. இவர்கள் முஸ்லிம் மக்களுக்கு துரோகம் இழைத்திருக்கின்றனர். முன்னரெல்லாம் ஐ.தே.க. அரசினாலேயே தமிழருக்கெதிரான கொடுமைகள் இழைக்கப்பட்டன. ஆனால் எமது அரசாங்கம் அப்படிச் செய்யவில்லை. இழந்துபோனதாகக் கருதப்பட்ட நகைகளைக் கூட மீள ஒப்படைத்தோம். இதுவே எமது நடவடிக்கையாகும். வடக்கு, கிழக்கு மக்களுக்கு உண்மை தெரியும். அவர்கள் முன்பு அனுபவித்ததுக்கும் இப்போது வாழ்வதற்கும் இடையிலான வித்தியாசத்தை அவர்கள் புரிந்திருப்பார்கள். -

Thanthi TV's Exclusive Interview with Sri Lankan President Mahinda Rajapaksa (29/12/14)



எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முட்டாள் ஒருவரை ஐக்கிய தேசியக் கட்சி தெரிவு செய்துள்ளதது: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ!

Wednesday, December 31, 2014
இலங்கை::எங்கள் பக்க முட்டாள்களை ஐக்கிய தேசியக் கட்சி வாங்கிக் கொண்டது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முட்டாள் ஒருவரை ஐக்கிய தேசியக் கட்சி தெரிவு செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

மினுவன்கொட பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் ஜனாதிபதி இந்த கடுமையான விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.

2010ம் ஆண்டைப் போன்றே இந்தத் தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தமது பெயரைச் சொன்னாலே ஐக்கிய தேசியக் கட்சி நடுங்குவதாகவும், தேர்தல்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சி அஞ்சுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாரையாவது தேர்தலில் போட்டியிட வேண்டுமென நினைத்த ஐக்கிய தேசியக் கட்சி எமது பக்கமிருந்த முட்டாள் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்து கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன முதல் நாள் இரவில் தம்முடன் இணைந்து அப்பம் சாப்பிட்டு அடுத்த நாள் காலையில், எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்வாறு துரோகம் இழைக்கும் நபர்களை நம்பி எவ்வாறு நாட்டை ஒப்படைக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தாம் இப்போது அப்பம் யாருக்கும் வழங்குவதில்லை எனவும், கோப்பி மட்டுமே தாம் வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் கோப்பி அருந்தக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராக இருக்க வேண்டும் என்பதனையே விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் பிழை செய்ததாக சிறிசேன குற்றம் சுமத்தியிருந்தால் அந்தப் பிழைக்கான பொறுப்பினை அவரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

Appachchi!



Tuesday, December 30, 2014

ரிஷாத் பதியுதீனின் கபட நாடகம் – அம்பலப்படுத்துகிறார் என்.எ ம்.ஷகீர்! ரிஷாட் காக்காவும், சங்கரி அண்ணாவும் கரணமடிப்பு!

 Tuesday, December 30, 2014      
இலங்கை::ரிஷாத் பதியுதீன் கட்சித் தாவல் கேடு கெட்ட ஒரு செயல் , பச்சை நம்பிக்கைத் துரோகம் எனவும்  இந்த நாட்டிலே கூட இருந்து குழி பறிப்பவர்கள் மற்றும் நயவஞ்சகமாக செயற்படுபவர்கள் இன்று அதிகரித்துள்ளார்கள் எனவும் தேசிய சிறு கைத்தொழில் ஊக்கிவிப்பு அதிகார சபையின் தலைவரும், பணிப்பாளர் நாயகமும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சிரேஸ்ட பிரதி தலைவரும், பிரபல சட்டத்தரணியுமான என்.எ ம்.ஷகீர் பகிரங்கமாக கண்டனம் தெரிவித்துள்ளாா்.
 
யாழ் எவ்.எம் வானொலி நிலையத்தில் நடைபெற்ற மாலை வசந்தம் நிகழ்ச்சியில் கொழும்பில் இருந்து தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் எவ்வாறு கபட நாடகம் ஆடி தங்களை எல்லாம் மைத்திரி பால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்க முயற்சித்தார் என்பது தொடர்பில்  நீண்டதொரு விளக்கத்தையும் அவர் வெளிப்படுத்தினார்.
 
இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் நேற்று அவசரமாக  கூட்டத்தைக் கூட்டி அந்தக் கூட்டத்திலே கட்சியின் பங்காளர்களை, கட்சியின் முக்கியத்தவர்கள் எல்லோரையும் அழைத்து இன்று நாங்கள் ஒரு முடிவை எடுக்க வேண்டும் அந்த முடிவு எந்த வகையில் அமைய வேண்டும் என்று உங்களுடைய கருத்துக்களை சொல்லுங்கள் என்று கேட்ட போது 75 வீதமானவர்கள் நீங்கள் எந்த முடிவை எடுக்கிறீர்களோ நாங்கள் அந்த முடிவை ஏற்றுக் கொள்கிறாம் என்று கூறினார்கள்.
 
அப்பொழுது என்னுடைய சந்தர்ப்பம் வந்த பொழுது நான் கூறினேன் நாம் இன்றும் அரசுடன் தான் இருந்து கொண்டிருக்கிறாம். அரசு தேர்தலை அறிவித்து மூன்று வாரங்கள் ஆகிவிட்டன. ஜனாதிபதியை சந்தித்த போது (அலரி மாளிகையில் சென்ற டிசம்பர்  7ம் திகதி இவ் சந்திப்பு நடை பெற்றது) எங்களுடைய பிரச்சினைகளைப் பற்றிக் கூறி அதற்கான ஒரு ஒப்பந்தத்தை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஜனாதிபதியோடு சாப்பிட்டுவிட்டு அவருக்கு வாக்களிப்பதாகவும் கூறிவிட்டு வந்தோம். அதனை நம்பிய ஜனாதிபதியும் ஏனைய ஊடகங்களும்  ரிஷாத் பதியுதீனுடைய கட்சியும், ரிஷாத் பதியுதீனும் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். ஆனால் அதன் பின்னர் என்ன நடந்தது என்று தெரியவில்லை. கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீன் சொன்னார் நாங்கள் இன்னும் முடிவு எடுக்கவில்லை என்ற கதையை அவிழ்த்து விட்டார்.
 
அது எனக்கு தர்ம சங்கடமான  நிலையை ஏற்படுத்தியிருந்தது. இருந்தாலும் கூட அவர் அரசிலிருந்து விலகியதாகவோ அல்லது ஆட்சியில் இருந்து விலகியதாகவோ இருக்கவில்லை. அவர்கள் அமைச்சிலிருந்து செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்தார்கள். எனவே அவ்வாறான நடவடிக்கைகளை பார்த்த போது நாங்கள் அவருடன் சந்தேகத்தோடு பார்க்க வேண்டிய தேவைப்பாடு இருக்கவில்லை. ஆனால் இன்று நடந்தது என்னவென்றால்? எல்லோரையும் கூட்டிவிட்டு நீங்கள் எடுக்கின்ற முடிவை எடுங்கள் என்று சொன்ன போது என்னால் அதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
 
நான் அக்கட்சியின் ஆரம்பகால தலைவர். நாங்கள் முதல் எமது கட்சியை ஆரம்பிக்கும் போது அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் என்று ஆரம்பித்தோம். பின்னர் அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் என்ற பெயரை மாற்றி அகில இலங்கை மக்கள் காங்கிஸ் என்று செயற்பட தொடங்கினோம். ஆரம்பத்தில் ரிஷாத் பதியுதீன், அமீர் அலி (அலி சிகிப்த்டீன் அமீர்) போன்றவர்கள் சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியை விட்டு அரசுடன் இணைந்ததனால் இக் கட்சியில் சட்டரீதியாக அங்கம் வகிக்க முடியவில்லை.
 
அப்பொழுது அகில இலங்கை முஸ்லீம் காங்கிரசின் தலைவராக நான் இருந்து வந்தேன். வை.எல்.எப் ஹமீட் செயலாளராக இருந்து வந்தார்.  ரிஷாத் பதியுதீன் தெரிவு செய்யப்பட்டு அமைச்சராக வந்த பின்னர் அவரிடம் தலைமைப் பதவியை கொடுத்துவிட்டு நான் ஒதுங்கினேன். பின்னர் அவர்களை என்னை சிரேஸ்ட பிரதி தலைவராக தேர்ந்தெடுத்தார்கள். இக் கட்சியில் ஏழு பேர்கொன்ட ஆட்சி மன்றக் குழு தான் எல்லா முடிவுகளை எடுக்கும் ஆட்சி மன்ற குழுவிபரம்
வருமாறு.
 
• கட்சியின் தலைவர் – ரிஷாத் பதியுதீன்
• சிரேஸ்ட பிரதித் தலைவர் – என். எம். ஷகிர்
• கட்சித் தவிசாளர் – அமீர் அலி
• செயலாளர் – வை.எல்.எப் கமீட்
• கொள்கைப் பரப்பு செயலாளர் – குடைஸ் பாறூக் (ஏற்கனவே அவர் எதிர்கட்சியில்இணைந்துள்ளார்)
• தேசிய இணைப்பாளர் – ஹிஸ்புல்லா
• பிரதித் தலைவர் நஐிப் அப்துல் மஐிட் (ஏற்கனவே கட்சியை விட்டு விலகி சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் சேர்ந்து கிழக்கு மாகாண சபை முதலமைச்சராக உள்ளார்)
 
ஏற்கனவே கட்சியில் இருந்து குடைஸ் பாறூக்கும், நஐிப் அப்துல் மஐிட் விலகி விட்டார்கள். ஜனாதிபதி கிழக்கு மாகணத்திற்க்கு பிரச்சாரம் செய்யச் சென்ற போது நாங்கள் அவருக்காக பாடுபடுவோம் என்று கூறியதிலிருந்து அவர் இதய சுத்தியோடு ஜனாதிபதியின் வெற்றிக்காக மட்டக்களப்பு மாவட்டம், காத்தான் குடியில் தனது பணிகளை முன்னெடுத்தார்.
 
அதற்கிடையிலே கட்சிக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதியின் படி ஒரு தேசிய பட்டியலில் இருந்து ஒருவரை நியமிக்க வேண்டும். என்ற அடிப்படையில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் அது சற்று தாமதமானது ஒரு சில பிரச்சினைகள் அரசிலும் இருந்தது. தேர்தலுக்கு முன்பே செய்ய வேண்டும் என்பதற்காக தேசிய பட்டியலில் இருந்து எ.எச்.எம்.அஸ்வர் அவர்களை இராஜினாமா செய்ய வைத்து (சென்ற 12ம் திகதி வழங்கப்பட்டது) அமீர் அலிக்கு அப் பதவி வழங்கப்பட்டது.
 
இதற்க்கு முன்னர் இப் பதவியை ஏற்க வேண்டுமா? அல்லது ஏற்க்கக் கூடாதா? ஏன்று மக்களின் கருத்தை கேட்டார். ஆப்போது மக்கள் அரசுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்றும் பதவி தந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள் என்றும் கூறினார்கள். பின்னர் அவர் அப்பதவியினை ஏற்றார். அப்போது அவர்கள் அரசாங்கத்துக்கு நம்பிக்கையாக செயற்பட்டார்கள். இன்று தீடீர் என்று ஒரு கூட்டத்தை வெள்ளவத்தை மறையின் கிறான்ட் என்ற வரவேற்பு மண்டபத்தில் பகல் உணவுடன்  நடாத்தினார்கள்.
அப்போது நான் கூறினேன் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவழிப்பதற்க்கு முஸ்லீம்களுக்கு ஏதும் தேவைப்பாடு இருப்பாதாக தெரியவில்லை. பொது பல சேனா பற்றி இன்று பேசுகிறார்கள். சிங்கள பௌத்த பிக்குமார் அமைப்பை கட்டுப்படுத்துவதில் தவறு இழைத்திருந்தார்கள். இச் செயல் எம்மை பாதித்தாலும் பாராளுமன்றத்தில் எமது எதிர்ப்பை தெரிவிக்க முடிந்தது. அமைச்சரவையில் டிலான் பெரேரா,  நிமால் சிறீபால டி சில்வா போன்றோர் ஆவேசமாக குரல் கொடுத்தார்கள. ஆனால் மைத்திரிபால சிறிசேன எதிர்க்கவில்லை.
 
மேலும் இன்று பொலநறுவையில் 40,000 முஸ்லீம் குடும்பங்கள் இருக்கின்றனர். முஸ்லீம் மக்களின் முன்னேற்றம், கல்வி செயற்பாடுகளில் என்ன முயற்சிகளை மைத்திரிபால சிறிசேன செய்தார்.
பொலநறுவையில் 400க்கு மேற்ப்பட்ட அரிசி ஆலைகள் இருக்கின்றன. இவற்றில் 300 இற்கு மேற்ப்பட்டவை முஸ்லீம் வர்த்தகர்களுக்கு உரியவை. கடந்த நான்கு,  ஐந்து வருடங்களாக மைத்திரிபால சிறிசேனவின் சகோதர் ‘அனகொண்டா’ பாம்பு போன்று இவர்களின் அரிசி ஆலைகளை மூடிவித்தார். வங்கிகள் வழங்கும் கடனுதவிகளை தடுத்து நிறுத்தியும், அவர்களுக்கு வரும் நெல் மூட்டைகளையும் தடுத்து நிறுத்தி அவர்களது பொருளாதாரத்தை சீரற்ற நிலைக்கு கொண்டு வந்தாா்.
 
1000பாடசாலைகள், இசுறு பாடசாலை திட்டம் வந்த போது ஒரு உதவி கூட மைத்திரிபால சிறிசேன செய்யவில்லை. முதலில் அவருடன் பேச வேண்டும். அதன் பின்னரே முடிவு எடுக்க முடியும் என்றேன். மைத்திரிபால சிறிசேன இன ரீதியாக அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் எதனையும் சொல்லவில்லை இதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பும் கூட குழம்பியுள்ளது. அவரின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழில் கூட வெளியாகவில்லை. இன்னும் இரு வாரகாலம் மட்டுமே தேர்தலுக்கு இருக்கும் நிலையில் அரசாங்கத்தில் குறை கூறிகொண்டு வெறு கட்சியொன்றில் சென்று இனணவது ஒரு கட்சிக்கு சிறந்த பண்பாக அமையாது. இக் கூட்டத்தில் ஆட்சி மன்றக் குழுவின் நான்கு பேர் மட்டுமே இருந்தோம்.
நாம் வேறு ஒரு கட்சிக்கு ஆதரவு வழங்க தீர்மானித்தால் அமீர் அலி தனது பதவியை துறக்க வேண்டும் அது தான் தார்மீகம். நான் கேட்டேன் நீங்கள் ஜனாதிபதியோடு பேசும் போது பல நிபந்தனைகளை முன்வைத்தீர்கள். ஆனால் மைத்திரியிடம் இவர்களிடம் பேசும் போது அவர்கள் என்ன தருவதாக கூறினார்கள்?என்று நான் கேட்டேன். அவர் சொன்னார் இன்னும் நாங்கள் பேசவில்லை என்றார்.
 
அப்படியென்றால் நாம் அவரிடம் சென்று முதலில் பேச வேண்டும். அவர்களது கருத்துக்களின் பிற்பாடு நாம் முடிவு எடுக்கலாம் என்றேன். அதற்கு றிசாட் சரி நாம்  ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்க்கு சென்று அங்கே பேசுவோம் அதன் பிற்பாடு இதனைப்பற்றி ஒரு முடிவு எடுப்போம் என்று கூறினார்.
 
ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்க்கு பேசுவதற்காக செல்லும் போது என்னுடைய வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்றேன் அப்போது நான் எதிர்பார்க்க முடியாத நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு றிசாட் ஊடக சந்திப்பு ஒன்றினை ஏற்கனவே எமக்கு தெரியாமல் ஒழுங்கு செய்து இருக்க வேண்டும் அங்கு முன்னாள் ஐனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கா, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சி பிரதித்தலைவர் ரவி கருணாநாயக்கா ஆகியோர் கூட இருந்தார்கள். அக் கூட்டத்திற்க்குள் நான் செல்லும் பொது அப்போது ஊடகங்களுக்கு ரிஷாத் பதியுதீன் சொன்னார்
 
நாங்கள் அரசாங்கத்தை விட்டு விலகி மைத்திரி பால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கப் போகிறோம். என்னை முன் ஆசனத்திலே அமரச் சொன்னார்கள் நான் அமரவில்லை. பின் ஆசனத்தில் இருந்துவிட்டு மெதுவாக வெளியே வந்துவிட்டேன். இது எனக்கு மிகுந்த வருத்தத்தை தந்தது. நான் ஒன்றையொன்றை மட்டும் மன வருத்தத்துடன் கூறுகிறேன்.
 
இவர்கள் நம்பிக்கை துரோகிகளாக இருக்கிறார்கள். முஸ்லீம்களது பிரச்சினைகளை அரசிடம் கூறி அவை தீர்க்கப்படவில்லை என்றால் எப்போதே வெளியேறி விட வேண்டியிருக்க வேண்டும். இவ்வளவு நாட்களும் அவர்களுடன் பேசி பழகிவிட்டு இவ்வாறு ஏமாற்று வேலைகளில் ஈடுபடுவது ஒரு அரசியல்வாதிக்கு உகந்தது அல்ல. எமது கட்சியின் ஆட்சி மன்றத்தினரை
 
கலந்தலோசிக்காமல் முடிவெடுத்தார். இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என்றுதெரிவித்தாா்.
 
ரிஷாட் காக்காவும், சங்கரி அண்ணாவும் கரணமடிப்பு!
 
இதேவேளை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரியும் எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாகதெரிவித்து இன்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.