Wednesday, December 31, 2014

அஸான் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு ஜனாதிபதியின் கரங்களால் பரிசில்கள்!

Wednesday, December 31, 2014
இலங்கை::
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை நடத்திய மாபெரும் அஸான் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நேற்று மாலை கொழும்பு தாமரைத்தடாகம் மஹிந்த ராஜபக்ஷ கலையரங்கில் நடைபெற்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த விழாவில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்துடன் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசில்களையும்  வழங்கினார்.

மேல் மாகாண ஆளுநர் அஷ்ஷெய்க் அலவி மௌலானா, சவுதி அரேபிய ரியாத் இமாம் செயித் பல்கலைக்கழக வேந்தர் அஷ்ஷெய்க் ஸஹத் அல் கரணி ,அமைச்சர் ஏ.எச்.எம் பவுஸி ,ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஏ.எச்.எம்.அஸ்வர் ,முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள், உலமாக்கள் உட்பட பெரும் எண்ணிக்கையானோர் இந்த விழாவில் கலந்துக் கொண்டனர்.

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தலைவர் ஹட்சன் சமரசிங்க, இன நல்லுறவு தொடர்பான தேசிய வேலைதிட்டத்தின் தலைவரும் ஜனாதிபதியின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஆலோசகருமான அஷ்ஷெய்க் அப்துல் காதர் மசூர் ஆகியோரும் இந்த விழாவில் உரை நிகழ்த்தினர்.

வெல்லப்பிட்டிய சாலவத்த வீதியைச்சேர்ந்த மொஹமட் நவுஸர் மொஹமட் ஹிஷாம் இந்த போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டார்.அவ்வாறே கொழும்பு, மட்டக்குளியைச் சேர்ந்த மொஹமட் ஸரீர் மொஹமட் ஸகீ இரண்டாம் இடத்தையும், பேருவளையைச் சேர்ந்த அஹ்ஹான் அஸாத் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவிகள் வரவேற்பு கீதம் இசைத்தனர். ஈழத்து இசைமுரசுகளான மருதமுனை கமால்தீன், கொழும்பு கலைக்கமல், ஸைபுல்லாஹ் மஹ்தூம், இலங்கை வானொலியின் அறிவிப்பாளரும் பாடகருமான எம்.இர்பான் ஆகியோரின் இஸ்லாமிய கீதங்களும் இவ்விழாவை மேலும் அலங்கரித்தன .

இலங்கை வானொலி முஸ்லிம் சேவை யின் சிரேஷ்ட ஆலோசகரான எம்.இஸட் அஹமட் முனவ்வர் ,அஹமட் நஸீர், எம்.இல்யாஸ் ஆகியோர் விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர்.

ஜனாதிபதியின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஆலோசகருமான அஷ்ஷெய்க அப்துல் காதர் மசூரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த அஸான் போட்டியில், அகில இலங்கை ரீதியில் சுமார் இரண்டாயிரம் பேர் இந்த அஸான் போட்டியில் கலந்துக்கொண்டனர்.
HE-Azaan Prize Giving-1
HE-Azaan Prize Giving-2
HE-Azaan Prize Giving-3
01 4HE-Azaan Prize Giving-5

No comments:

Post a Comment