Wednesday, December 31, 2014
இலங்கை::பொது எதிரணியினது நாடக தொடரில் தமிழ்
தேசியக் கூட்டமைப்பின் பங்குபற்றலானது எதிர்பார்த்த ஒன்றே என
குறிப்பிடும் ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, பொது
எதிரணியிடம் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அமைவாகவே தமிழ்த்
தேசிய கூட்டமைப்பின் ஆதரவு பெறப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட அந்த உடன்படிக்கை தொடர்பிலான இரகசியங்களை பொது
எதிரணியினர் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் எனவும்
தெரிவித்தது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைமை காரியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
பொது எதிரணியினால் மிக சூழ்ச்சிகரமான முறையில் கொண்டு நடத்தப்படும் நாடகத் தொடரின் இறுதியாக அங்கத்துவம் பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமது கோரிக்கைகளுக்கு தலை சாய்க்கும் தரப்பினருக்கே ஆதரவு வழங்குவதாக கடந்த காலங்களில் தொடர்ச்சியாக கூறி வந்ததை நாம் அறிந்திருந்தோம். அதன் அடிப்படையில் எமது கட்சி அவர்களின் ஈழ கனவுகளுக்கோ உடன்படிக்கைகளுக்கோ தலை சாய்க்க தவறியமையினாலேயே இன்று பொது எதிரணியுடன் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்துள்ளது.
இவர்களின் இம் முடிவானது நாம் எதிர்பார்த்த ஒன்றே.
எனவே பொது எதிரணியினரால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெற மேற்கொண்ட உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் மக்களுக்கு தௌிவுபடுத்த வேண்டும்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச கருத்து தெரிவிக்கையில்;

சுகாதார துறையில் சில செயற்பாடுகளை மேற்கொள்ள இருப்பதாக தமது
தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ள பொது வேட்பாளர்
மைத்திரிபால சிறிசேன ஏன் அவர் சுகாதார அமைச்சராக பதவி வகித்த
காலங்களில் செய்யத் தவறினார் என்பதனை மக்களுக்கு தெளிவுபடுத்த
வேண்டும். வெறுமனே தேர்தலை இலக்காகக் கொண்டு அதை செய்வோம் இதை செய்வோம்
என குறிப்பிடுவது அர்த்தமற்ற செயல்.
சிங்கள பௌத்த மக்களின் வாக்குகள்
இன்று பொது எதிரணிகளின் செயற்பாடுகளானது மும்முரமான வாக்குகளை பெறுவதே ஆகும். அதனடிப்படையிலேயே தமிழ் மக்களை இலக்கு வைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பை தன் வசப்படுத்தியுள்ளது. மறுபுறம் முஸ்லிம் வாக்குகளை பெற முஸ்லிம் கட்சிகளை வசப்படுத்தியுள்ளது. சிங்கள வாக்குகளை பெறவே சம்பிக்க ரணவக்கவை தன்வசப்படுத்தியுள்ளார்கள். எனவே மக்கள் இவர்களின் சூழ்ச்சி வலைகளில் சிக்கிவிட கூடாது என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment