Tuesday, April 30, 2013

வட மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் முதன்மை வேட்பாளராக, ஈபிடிபியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா நிறுத்தப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது!

Tuesday, April 30, 2013
இலங்கை::வட மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் முதன்மை வேட்பாளராக, ஈபிடிபியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவே நிறுத்தப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ்  செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள வடக்கு மாகாணத்தில் வெற்றி பெறுவதற்கு டக்ளஸ் தேவானந்தா நல்லதொரு வாய்ப்பைக் கொண்டுள்ளதால், அவரையே முதல்வர் வேட்பாளராக நிறுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மத்திய குழு உத்தேசித்துள்ளதாக கட்சியின் உயர்மட்ட வட்டாரங்கள் கூறியுள்ளன.

டக்ளஸ் தேவானந்தாவை முதல்வர் பதவிக்கு நிறுத்துவதை, இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான மத்திய குழுக் கூட்டத்தில் உறுதிப்படுத்தப்படும் என்றும், அரசாங்கத் தரப்புக்கு டக்ளஸ் தேவானந்தாவை முன்னிறுத்துவதற்கு எந்தத் தயக்கமும் இல்லை என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

சமூக நல்லிணக்க நோக்கம் கருதி, இலங்கையின் உள்விவகாரங்களில் வெளிநாடுகளில் தலையிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்: அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது!

Tuesday, April 30, 2013
இலங்கை::சமூக நல்லிணக்க நோக்கம் கருதி, இலங்கையின் உள்விவகாரங்களில் வெளிநாடுகளில் தலையிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
 
வெளிவிவகார அமைச்சர் ஜீ எல் பீரிஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
 
சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாய கற்கைகளுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்தில், “சமூக ஒருமைப்பாடும் இலங்கையின் தேசிய கொள்கையும் என்ற தலைப்பில் நேற்று ஆரம்பமான விவாதத்தில் பங்குகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
 
பிற நாடுகளில் உள்விவகாரங்களில் இலங்கை தலையிடுவதில்லை.
அவர்களின் இறையாண்மையை இலங்கை மதிக்கின்றது.
இந்த நிலையில், இலங்கையும் இதே பரஸ்பர எதிர்ப்பார்ப்பை கொண்டுள்ளதாகவும் அமைச்சர் ஜீ எல் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
 
 

நைஜீரிய கடல் பரப்பில் கொள்ளையர்களால் கடத்தப்பட்டவர்களில் இலங்கையர்கள் எவரும் இல்லை!

Tuesday, April 30, 2013
இலங்கை::நைஜீரிய கடல் பரப்பில் கொள்ளையர்களால் கடத்தப்பட்டவர்களில்  இலங்கையர்கள் எவரும் இல்லை என்று தெரிவிக்கப்படுள்ளது.
 
எனினும் குறித்த கப்பலில் 14 இலங்கையர்கள் பணிபுரிகின்றனர்.
நைஜீரியாவுக்கு அப்பால் உள்ள கடற்பிராந்தியத்தில் பயணித்துக் கொண்டிருந்த கொள்கலன் தாங்கிக் கப்பல் ஒன்றை கடற்கொள்ளையர்கள் கடந்த 25ஆம் திகதி கைப்பற்றினர்.
 
கப்பலுக்குள் பிரவேசித்த கடற்கொள்ளையர் 5 மாலுமிகளையும் கப்பலில் இருந்த பெருந்தொகையான பணத்தினையும் கைப்பற்றிய நிலையில், தப்பிச் சென்றுள்ளனர்.
 
இந்த நிலையில், கடத்திச் செல்லப்பட்டவர்களில் இலங்கையர்கள் மூவர் இருப்பதாக முன்னர் செய்திகள் வெளியிடப்பட்டன.
எனினும், தற்போது கிடைந்த செய்திகளின் படி கடத்தப்பட்டவர்களில் இலங்கையர்கள் எவரும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

'இது எங்க இடம்' பலகை, நாய்களுடன் சீனா!!

Tuesday, April 30, 2013
புதுடெல்லி::இரண்டு வாரங்களுக்கு முன் காஷ்மீரின் லடாக் பகுதியில் நுழைந்த சீன ராணுவம் தன் வேட்டை நாய்களுடன் மேலும் ஒரு கூடாரம் போட்டு அத்து மீறி வருகிறது, இதனால எல்லையில் பதற்றத்தை அதிகரித்து உள்ளது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் லடாக் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவி டெண்டு போட்டு தங்கியது கண்டு பிடிக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. சீன ஊடுருவலை பற்றி இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஒரு உள்ளூர் பிரச்னை என்று மட்டுப்படுத்தினாலும் இந்திய சீன அதிகாரிகள் மத்தியில் பேச்சுவார்த்தை நடந்தது.

மூன்று சுற்று பேச்சுவார்த்தைகள் எவ்வித முடிவையும் கொடுக்காத நிலையில் சீன ராணுவம் மேலும் ஊடுருவி ஏற்கனவே போட்டிருந்த 4 டெண்டுகளோடு மேலும் ஒரு டெண்ட் என 5 கூடாரங்களை போட்டுள்ளது.

கூடாரங்களின் வெளியே வேட்டை நாய்களை வைத்துள்ள சீன ராணுவம் “நீங்கள் சீன எல்லையில் இருக்கிறீர்கள்” என்ற போர்டையும் மாட்டி வைத்துள்ளது.

சீன மக்ரோவ் துப்பாக்கிகளுடனும் ஏ.கே 47 ரக துப்பாக்கிகளுடன் சீன ராணுவத்தினர் ஊடுருவி நிற்க அதை தடுக்கும் விதத்தில் இந்திய ராணுவ வீரர்களும் நிற்பதால் எல்லையில் பதற்றம் தணியாமல் உள்ளது.
கடந்த சில வாரங்களாக இந்திய எல்லைப்பகுதியான லடக்கில் முகாமிட்டு அத்துமீறிவரும் சீன ராணுவம், தற்போது கூடா ஸரங்களை அதிகப்படுத்தி உடன் குளிர் தாங்க கூடிய நாய்களுடன், நீங்கள் சீன எல்லையில் இருக்கிறீர்கள் என்ற பலாகையுடன் சீன ராணுவம் தனது தொடர் அத்துமீறலை நடத்திவருகிறது.

இவ்வருடம் வடமாகாணத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளமை வெறும் மாயை: முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்!

Tuesday, April 30, 2013
இலங்கை::இவ்வருடம் வடமாகாணத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளமை வெறும் மாயை என முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.  
 
கொழும்பில் நடைபெற்ற தந்தை செல்வா ஞாபகார்த்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
 
இந்த வருடம் வடமாகாணசபைத்
தேர்தல் நடைபெறாது என நான் ஆணித்தரமாக கூறுகிறேன். காரணம், மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் பல நடவடிக்கைகள் வடமாகாணத்தில் நடைபெற்று வருகின்றன. வடமாகாணத்தில் தேர்தல் நடந்தால், அது அரசாங்கத்திற்கு நன்மை பயக்காது என்பதனால்,
 
வெளியாளருக்கு இங்கு தேர்தல் நடைபெறவுள்ளது எனும் மாயையை உருவாக்க, பொதுநலவாய மாநாடு நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளதால் அதற்கு ஏற்ற விதத்தில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகத்தான் நான் கருதுகின்றேன்,' என்றார் முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்.

வாக்குப்பதிவுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளதால் கர்நாடகா தேர்தல் பிரசாரம் உச்சகட்டம் தேர்தல் பாதுகாப்பு பணியில் 56 ஆயிரம் போலீசார் மாநில எல்லை சோதனை சாவடிகளில் ரகசிய கேமரா!

Tuesday, April 30, 2013
பெங்களூர்::கர்நாடகாவில் பாஜ, காங். தலைவர்கள் முற்றுகையிட்டுள்ளனர். வாக்குப் பதிவுக்கு இன்னும் 4 நாட்களே  உள்ளதால், சட்டசபை தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.  கர்நாடக சட்டசபை தேர்தல் ஒரேகட்டமாக மே 5ம்  தேதி நடக்கிறது. வாக்குப் பதிவுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளன. இந்நிலையில், ஆளுங்கட்சியான பாஜ, காங்கிரஸ், மஜத,  எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சி மற்றும் பிஎஸ்ஆர் காங்கிரஸ் (ஸ்ரீராமுலு) ஆகிய கட்சிகள் தேர்தல் களத்தில் உள்ளன.
கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கும் நோக்கத்துடன் காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர்.

பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கர்நாடக தேர்தல்  பிரசார கூட்டங்களில் பங்கேற்று கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினர். பாரதிய ஜனதா ஆட்சியில் கர்நாடகா  வளர்ச்சியில் பின்தங்கி விட்டதாக பிரதமர் பகிரங்கமாக குற்றம்சாட்டி பேசினார். தேர்தல் தேதி நெருங்குவதால், தலைவர்களின்  பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.

ஆட்சியை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்ற முழுமூச்சுடன் பாஜ தலைவர்களும் ஆதரவு திரட்டி வருகின்றனர். பாஜ  தலைவர் ராஜ்நாத் சிங், மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, சுஷ்மாசுவராஜ் மற்றும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி  ஆகியோரும் பெங்களூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நடந்த பிரசார கூட்டத்தில் பங்கேற்றனர்.

தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் பல்வேறு கட்சித் தலைவர்கள் பெங்களூர் உள்ளிட்ட முக்கிய  தொகுதிகளில் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். பாஜ தலைவர் ராஜ்நாத் சிங் ஷிமோகாவிலும்,  முன்னாள் தலைவர் நிதின்கட்கரி பெல்காமிலும், முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் சித்ததுர்கா, தும்கூரிலும், வெங்கைய நாயுடு  பெல்லாரியிலும், முன்னாள் மத்திய அமைச்சர் அனந்தகுமார் வடகனராவிலும், முன்னாள் முதல்வர் சதானந்தகவுடா கோலார்  மற்றும் சிக்மகளூரிலும், மாநிலத் தலைவர் பிரகலாத் ஜோஷி ஹாவேரியிலும் இன்று பிரசாரம் செய்கின்றனர்.

காங்கிரஸ் கட்சித் தலைவர் பரமேஸ்வரா பெங்களூரிலும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா மைசூரிலும்  வாக்கு சேகரிக்கிறார்கள். சித்த துர்கா மாவட்டத்தில் மதசார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர்களுக்காக முன்னாள் பிரதமர்  தேவகவுடா இன்று பிரசாரம் செய்கிறார். மைசூர் மற்றும் சாம்ராஜ் நகரில் எடியூரப்பா வாக்கு சேகரிக்கிறார். பிஎஸ்ஆர்  காங்கிரஸ் தலைவர் ஸ்ரீராமுலு மைசூரில் பிரசாரம் செய்கிறார்.

பாதுகாப்பு பணியில் 56 ஆயிரம் போலீசார்

கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளிலும் 52ஆயிரத்து 410 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன. வாக்குப்  பதிவுக்கு 65 ஆயிரம் மின்னணு வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தப்படுகிறது. வாக்குப் பதிவு உள்ளிட்ட தேர்தல் பணியில் 2  லட்சத்து 50 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். உள்ளூர் போலீஸ், துணை ராணுவம் மற்றும் ஊர்க்காவல் படை என 56  ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

மாநிலம் முழுவதும் முக்கிய சாலை சந்திப்புகள் என 2317 தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநில  எல்லையில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் ரகசிய கேமரா வைத்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேர்தல்  தொடர்பாக 1304 புகார்கள் வந்துள்ளன. இதில் 438 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகள் மற்றும்  போலீசார் நடத்திய சோதனையில் இதுவரை ரொக்கமாக மட்டும் ரூ.16 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர  வாக்காளர்களுக்கு பரிசாக கொடுக்க எடுத்துச் செல்லப்பட்டதாக ரூ.11 கோடி மதிப்புள்ள மதுபாட்டில்கள் உள்ளிட்ட  பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

கைப்பற்றப்பட்ட காணிகளை பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: ஜனக்க பண்டார!

Tuesday, April 30, 2013
இலங்கை::அரசியல் இலாபங்களுக்காக வடக்கிலுள்ள காணிகள் பகிர்ந்தளிக்கப்படவில்லை என காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் தெரிவித்தார்.
 
கலேவெல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
 
வடக்கில் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட 12,000 ஏக்கர் காணிகளை பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பலாலி விமான நிலையத்திற்கு அருகிலுள்ள 5000 ஏக்கர் நிலப்பரப்பை இராணுவத்துடன் கலந்தாலோசித்து மீண்டும் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
போலியான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன. இந்த காணிகள் தொடர்பில் அமைச்சு நியாயமற்ற முறையில் செயற்படாது. யாரேனும் குற்றம் சுமத்துவார்களாயின் அதனை உறுதி செய்யுமாறு சவால் விடுக்கிறேன்,' என்றார் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன்.தெரிவித்துள்ளார்.

நடிகர் ஷாருக்கான் பேட்டி அரசியலில் சேர விருப்பம் இல்லை!

Tuesday, April 30, 2013
மும்பை::அரசியலில் விருப்பம் இல்லை என்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கூறினார். ஷாருக்கான் அளித்த பேட்டி ஒன்றில் அரசியலில் சேருவீர்களா? என்ற கேள்விக்கு, “நினைத்த உடனேயே நான் அரசியல்வாதி ஆக முடியாது. அது ஒரு தொழில். அதற்காக முதலில் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்Ó என்று பதிலளித்துள்ளார். எனினும் உடனடியாக அவர் சுதாரித்துக் கொண்டு தான் கூறியது குறித்து விளக்கம் அளித்தார்.

“அரசியலை ஒரு தொழில்போல மோசமாக நான் பார்க்கவில்லை. அரசியலை நான் தாழ்வாக கூறவில்லை. என்னைக் கேட்டால், அரசியலில் சேர நினைப்பதும், ஒரு விண்வெளி வீரர் ஆக விரும்புவதும் ஒன்றுதான். நடிப்பு ஒன்றுதான் எனக்கு பொருத்தமாக இருக்கும். அதைத்தான் இதுநாள்வரையில் நான் செய்து வருகிறேன். எனக்கு எது பொருந்துகிறதோ அதை மட்டும் செய்வதே நல்லது என்று நினைக்கிறேன். அதுவும் கூட சில சமயங்களில் கேள்விக்குரியதாகி விடுகிறது. உண்மையில் சொல்வதென்றால் அரசியலில் எனக்கு விருப்பமே இல்லைÓ என்றார்.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் முஸ்லிம் அமைப்பு பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து விசாரணை!:-யுத்தம் நிறைவடைந்தத்தின் பின்னர் சகல இனங்கள் மற்றும் மதங்களிடையே ஒன்றுமை: மிசேல் ஜே சிசோன்!

Tuesday, April 30, 2013
இலங்கை::தூதுவர்களுக்காக ஒழுக்க நெறிகளை மீறி, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் சீசோன், கிழக்கு மாகாணத்தை சேர்ந்த முஸ்லிம் அமைப்புகளின் 25 பிரதிநிதிகளை கொழும்பு அழைத்து ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்திய சம்பவம் குறித்து அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 
 
இந்த முஸ்லிம் பிரதிநிதிகளை, அமெரிக்க தூதுவர் சந்திக்கவிருந்தமை தொடர்பான தகவல்கள் இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கும் கிடைத்திருக்கவில்லை. முஸ்லிம் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்திய, தூதுவர்  கிழக்கில் முஸ்லிம்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் பற்றி கேட்டறிந்துள்ளார். 
 
அமெரிக்க தூதுவர் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு இடையிலான நடைபெற்ற ரகசிய பேச்சுவார்த்தை மூலம் தூதுவர், வெளிநாட்டு தூதுவர்கள் தொடர்பான 1961 ஆம் ஆண்டு வியன்னா இணக்கப்பாட்டை மீறியுள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்டத் தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. 
 
இதற்கு முன்னர், அமெரிக்க தூதரகம், மின்சார கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டமை குறித்து அரசாங்கத்திடம் கருத்துக்களை கேட்டிருந்தது. 
 
யுத்தம் நிறைவடைந்தத்தின் பின்னர் சகல இனங்கள் மற்றும் மதங்களிடையே ஒன்றுமை: மிசேல் ஜே சிசோன்!
 
யுத்தம் நிறைவடைந்தத்தின் பின்னர் சகல இனங்கள் மற்றும் மதங்களிடையே ஒன்றுமை மற்றும் சமத்துவம் தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிசேல் ஜே சிசோன் தெரிவித்துள்ளார்.
 
மட்டக்களப்பு – புல்லுமலை பிரதேசத்தில், மக்கள் மீள்குடியமர்ந்த பின்னர், 3 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டொலர் பொறுமதியான 10 வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதனை பார்வையிடும் நோக்கில் நேற்று மட்டக்களப்புக்கு சென்ற மிசேல் ஜே சிசோன், இவ்வாறு குறிப்பிட்டார்.
 
யுத்தத்தின் பின்னர், இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தாம் பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
யுத்தத்தின் பின்னர், இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தாம் பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 

பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்துவதை தடுக்க செனல் 4 தொலைக்காட்சி மற்றும் பி.பி.சியின் முன்னாள் செய்தியாளர் பிரான்சஸ் ஹெரிசன் ஆகியோருடன் கனடா மேற்கொண்ட திட்டம் வெளியாகியுள்ளது: திவயின!

Tuesday, April 30, 2013
இலங்கை::பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்துவதை தடுக்க பிரித்தானியாவின் செனல் 4 தொலைக்காட்சி மற்றும் இலங்கையில் பணியாற்றிய பி.பி.சியின் முன்னாள் செய்தியாளர் பிரான்சஸ் ஹெரிசன் ஆகியோருடன் கனடா மேற்கொண்ட திட்டம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.
 
லண்டனில் கடந்த 23 ஆம் திகதி நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் அமைச்சர்களின் கூட்டத்தில், மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என கனடா முன்வைத்த யோசனைக்கு, சியாரலியோன் மற்றும் ட்ரனிட்டா ஆகிய நாடுகள் மாத்திரமே ஆதரவு தெரிவித்தன.
 
எனினும் செனல் 4 தொலைக்காட்சியின் பணிப்பாளர் கெல்லம் மெக்ரே மற்றும் ஹெரிசன் ஆகியோர் பொதுநலவாய நாடுகளின் அமைச்சர்கள் மத்தியில் உரையாற்றி, மாநாட்டை இலங்கையில் நடத்த வேண்டாம் என கோரிக்கைவிடுத்துள்ளனர்.
 
இதனிடையே இலங்கையில் நடைபெறும் பொநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ள போவதில்லை என கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பேயார்ட் தெரிவித்துள்ளார். 

அவுஸ்திரேலியாலிருந்து 819 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது!

Tuesday, April 30, 2013
அவுஸ்திரேலியாலிருந்து 819 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள்  நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கடந்த ஆகஸ்ட் மாதம் 13ம் திகதி முதல் இதுவரையில் 1029 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
 
புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்புடன் அதிக எண்ணிக்கையிலானவர்கள் அவுஸ்திரேலியாவில் புகலிடம் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.போலியான முறையில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் பிரவேசிப்போரை நாடு கடத்த தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
 
போலி புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்கும் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு புலம்பெயர் தமிழர்களின் வலுவான ஆதரவு காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
எவ்வாறெனினும், அரசாங்கத்தின் குடிவரவுக் கொள்கைகளில் அழுத்தங்களை ஏற்படுத்த முடியாது என அவுஸ்திரேலியா சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக செல்வோரை தடுக்க தீவிர கண்காணி;ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
 
2012 ஜனவரி மாதம் முதல் 2013 ஏப்ரல் மாதம் வரையில் சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 3286 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மிதிவெடி அகற்றும் பணிகள் 95 வீதம் பூர்த்தி!

Tuesday, April 30, 2013
இலங்கை::வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மிதிவெடி அகற்றும் பணிகள் 95 வீதம் நிறைவடைந்துள்ளன. மேலும் 96 கிலோ மீற்றர் பிரதேசத்திலேயே மிதிவெடி அகற்ற வேண்டியுள்ளதோடு இந்தப் பணிகள் இந்த வருட இறுதிக்குள் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு கூறியது.
 
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மிதிவெடி அகற்றுதல் தொடர்பான தேசிய மத்திய நிலையம் வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறது.
2009 ஜூன் மாதமாகும் போது 2,064 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பில் புலி களினால் மிதிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன.
கடந்த 4 வருட காலத்தில் 1,968 சதுர கிலோ மீற்றர் பிரதேசத்தில் இருந்து மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள பிரதேசம் பற்றைக்காடு நிறைந்த பிரதேசம் எனவும் அமைச்சு கூறியது.
மிதிவெடி அகற்றும் பணிகள் வெற்றி கரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதோடு மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பல நிறுவனங்களின் செயற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாகவும் அறிவிக்கப் படுகிறது.
 
இராணுவ பொறியியல் பிரிவு மிதிவெடி அகற்றும் பணியில் முக்கிய பங்காற்றி வருவதோடு அவுஸ்திரேலியா, ஜப்பான், சீனா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, யுனெஸ்கோ ஆகிய நிறு வனங்கள் உட்பட பல உள்நாட்டு வெளி நாட்டு நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு உதவி வருகின்றன.

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெற்றால் 40 எம்.பி.க்களும் ராஜினாமா செய்ய வேண்டும்: பாஜக!

Tuesday, April 30, 2013
சென்னை::இலங்கையில் காமன்வெல்த் நாடுகளின் மாநாடு நடைபெறாமல் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 40 எம்.பி.க்களும் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது.
 
இது குறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன்  வெளியிட்ட அறிக்கையில்:
 
இலங்கைத் தமிழர் பிரச்னையில் தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் மத்திய அரசு புறக்கணித்து வருவது வருத்தம் அளிக்கிறது. காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்த தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.ஆனாலும், இலங்கையில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக செய்திகள் வருகின்றன.அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இலங்கையில் மாநாடு நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
 
எனவே, தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 40 மக்களவை உறுப்பினர்களும் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து இலங்கை காமன்வெல்த் மாநாடு நடைபெறாமல் தடுக்குமாறு வலியுறுத்த வேண்டும். இதனை பிரதமர் ஏற்கவில்லை என்றால் 40 எம்.பி.க்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Monday, April 29, 2013

இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மாறுபட்ட நடவடிக்கைகள் காரணமாக தமது வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை வர்த்தக சமூகம் தெரிவித்துள்ளது!

Monday, April 29, 2013
சென்னை::இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மாறுபட்ட நடவடிக்கைகள் காரணமாக தமது வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை வர்த்தக சமூகம் தெரிவித்துள்ளது
 
இதன் காரணமாக இலங்கையர்கள் தமிழகத்திற்கு வருவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
 
இந்த விடயத்தில் எழும்பூர் மகா போதி மடத்தை சேர்ந்த கலவான மஹானாம தேரர் தலையிட்டு, இலங்கையில் இருந்து அதிகளவிலானவர்களை தமிழகத்திற்கு விஜயம் செய்வதற்கான, அழைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி வர்த்தக சமூகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
 
இது தவிர, விசேட மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக தமிழ்நாடு வரும் இலங்கையர்கள் தற்போது, கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு செல்வதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக சுமார் பத்தாயிரம் இலங்கை பணியாளர்கள் தங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது!

Monday, April 29, 2013
இலங்கை::சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக சுமார் பத்தாயிரம் இலங்கை பணியாளர்கள் தங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும் அங்கிருக்கின்ற இலங்கையர்களுகளை நாட்டுக்கு திருப்பி அனுப்புவது தொடர்பிலான சவுதி அரசாங்கத்தின் நிலைப்பாடு இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.இது தொடர்பில் சவுதி அரேபிய அதிகாரிகளுடன் தொடர்ந்தும் கலந்துரையாடி வருவதாக தூதுவராலயம் தெரிவிக்கின்றது.
 
ஜித்தாவில் மாத்திரம் ஆறாயிரம் இலங்கையர்கள் இருப்பதாக ஜித்தா தூதரகத்தின் முதன்மை செயலாளர் எம்.பீ.சரூக் குறிப்பிட்டுள்ளார்.
சட்விரோதமாக தங்கியுள்ள இலங்கையர்களில் இரண்டாயிரம்பேர்  நாடுதிரும்புவதற்காக தமது அலுவலகத்தில் பதிவு செய்துள்ளதாக ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் அமைச்சு ஆலோசகர் அநுர முத்துமால தெரிவித்துள்ளார்.
 
எவ்வாறாயினும் சவுதி அரேபியாவில் சுமார் ஆறாயிரம் இலங்கையர்கள் மாத்திரமே சட்டவிரோதமாக தங்கியுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொது முகாமையாளருமான மங்கள ரன்தெனிய

நீண்ட இழுபறிக்கு பின்னர் இத்தாலி பிரதமராக லெட்டா பதவியேற்பு துப்பாக்கிச் சூடு நடந்ததால் பதற்றம்!

Monday, April 29, 2013
ரோம்::நீண்ட இழுபறிக்கு பின்னர், கூட்டணி அரசின் பிரதமராக என்ரிகோ லெட்டா நேற்று பதவியேற்றார். பதவியேற்பு நிகழ்ச்சிக்கு சிறிது நேரத்துக்கு முன்னர், வேலைவாய்ப்பு இழந்த வாலிபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.இத்தாலியில் பிரதமராக சில்வியோ பெர்லுஸ்கோனி பதவி வகித்தார். அப்போ கடும் பொருளாதார நெருக்கடி, வரி ஏய்ப்பு, இளம்பெண்களுடன் உல்லாசம் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதையடுத்து கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி பிரதமர் பதவியில் இருந்து பெர்லுஸ்கோனி விலகினார். அதன்பின், இடைக்கால நிர்வாக அரசு பொறுப்பு வகித்தது. இத்தாலியில் கடந்த பிப்ரவரி மாதம் தேர்தல் நடந்தது. இதில் பெர்லுஸ்கோனி மீண்டும் போட்டியிட்டார். தேர்தலில் கன்சர்வேடிவ் மற்றும் அரசுக்கு எதிரான அரசியல் கட்சிகள் களம் இறங்கின. எனினும், எந்த கட்சிக்கும் மெஜாரிடி கிடைக்கவில்லை.

இந்நிலையில் கூட்டணி அரசு அமைக்கப்பட்டது. பிரதமர் தேர்வில் தொடர்ந்து இழுபறி நிலவியது. கன்சர்வேடிவ் கட்சிக்கும் மற்ற கட்சிகளுக்கும் இடையில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தவும், கூட்டணி அரசு அமைக்கவும், டெமாக்ரிட்டிக் கட்சியின் என்ரிகோ லெட்டா (46) தீவிர முயற்சி மேற்கொண்டார். அதன்பின், கூட்டணி அரசு அமைக்க நேற்றுமுன்தினம் முடிவானது. அதன்படி, இத்தாலியின் அடுத்த பிரதமராக லெட்டா தேர்ந்தெடுக்கப்பட்டார். பதவியேற்பு விழா ரோம் நகரில் அதிபர் மாளிகையில் நடந்தது. இதற்கு அதிபர் ஜியார்ஜியோ நேபோலிடானோ தலைமை வகித்தார். பிரதமராக லெட்டாவும், 21 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
பதவியேற்புக்கு சிறிது நேரத்துக்கு முன்பு, பிரதமர் அலுவலகத்துக்கு அருகில் உள்ள கொலானோ சதுக்கத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கூடியிருந்தனர். அங்கு வந்த  ஒருவர் திடீரென போலீஸ்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் 2 பேருக்கு குண்டு காயம் ஏற்பட்டது. அவர்களில் ஒருவருடைய உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இன்னொருவரின் காலில் குண்டு பாய்ந்து எலும்பு முறிந்து தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
குண்டு சத்தம் கேட்டவுடன் சதுக்கத்தில் கூடியிருந்த மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் பதற்றம் ஏற்பட்டது.
இதுகுறித்து ரோம் போலீசார் கூறியதாவது:

அரசியல்வாதிகளை கொல்லவே திட்டமிட்டு துப்பாக்கியுடன் அவர் வந்துள்ளார். அவர்கள் பதவியேற்பு விழாவுக்கு சென்றதால், போலீஸ்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளார். உடனடியாக அவரை மற்ற போலீஸ்காரர்கள் மடக்கி பிடித்தனர். விசாரணையில், அவர் பெயர் லூஜி பிரீட்டி (49) என்பதும், கலாப்ரியா பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. கட்டுமான பணி செய்து வந்த லூஜி வேலையை இழந்துள்ளார். அதனால் மன உளைச்சலில் இருந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது.இவ்வாறு போலீசார் கூறினர்.பிரதமர் அலுவலகம் அருகில் துப்பாக்கிச்
சூடு நடந்தது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

அஸ்வருக்கு கொலை அச்சுறுத்தல்: நோன்புப் பெருநாள் வரை காலக்கெடு!

Monday, April 29, 2013
இலங்கை::ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர், தனக்கு பல தடவைகள் தொலைபேசி மூலம் கொலை அச்சுறுத்தல்விடுக்கப்படுவதாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
 
இவற்றில் அதிகமான கொலை அச்சுறுத்தல்கள் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பகுதியிலிருந்தே விடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
ஜனாதிபதிக்கு ஆதரவாக செயற்படுவதாகவும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராகவும் தான் செயற்படுவதாக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தே இவ்வாறு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ள அவர், இந்த வருடம் ரமழான் பெருநாள் வரை அச்சுறுத்தல்காரர்கள் காலக்கெடு விதித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

"எனக்கு இறுதியாக ஏப்ரல் 19 அன்று வந்த தொலைபேசி அழைப்பு மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. எதிர்வரும் ரமழானுக்குள் உன் கதை முடியும் என மறுமுனையில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. இது தொடர்பில் நான் பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளேன். எனது கையடக்கத் தொலைபேசிக்கும் வீட்டிலுள்ள நிலையான தொலைபேசிக்குமே இவ்வாறு கொலை அச்சுறுத்தல் அழைப்புகள் வந்தன" என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஒடிசாவில் ஏவுகணை சோதனை தளம் அருகே ராணுவ கிடங்கில் திடீர் தீ விபத்து: ராக்கெட் குண்டுகள் வெடித்து சிதறின!

Monday, April 29, 2013
பாலாசூர்::ஒடிசா மாநிலம் சந்திபூர் ஏவுகணை சோதனை தளம் அருகே உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் வெடிபொருள் சோதனை கிடங்கில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. இதில் ராக்கெட் குண்டுகள் வெடித்து சிதறின. தீயை அணைக்கும் பணியில் 12க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன. உயிரிழப்பு எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் உள்ள சந்திபூரில் இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் ஏவுகணை சோதனை தளம் உள்ளது. அக்னி, பிருத்வி போன்ற ஏவுகணைகள் இங்கு சோதனை செய்யப்பட்டு வருகிறது. இது தவிர பீரங்கிகளில் பயன்படுத்தப்படும் குண்டுகள், சிறிய ராக்கெட் லாஞ்சர் மூலமாக ஏவப்படும் ராக்கெட் குண்டுகளும் இங்கு சோதனை செய்யப்படுகிறது. இந்த குண்டுகள் ஏவுகணை தளத்துக்கு சற்று தூரத்தில் உள்ள நிலத்தடி சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்தன.
 
இந்த கிடங்கில் இன்று காலை திடீரென தீப்பிடித்தது. இதில் ராக்கெட் குண்டுகள் வெடித்து சிதறின. இதை தொடர்ந்து ஏவுகணை தளத்துக்கு சீல் வைக்கப்பட்டது. 12 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சம்பவ இடத்தில் வெளியார் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஏவுகணை தளத்தை நோக்கி செல்லும் பாதைகள் அனைத்துக்கும் சீல் வைக்கப்பட்டது. இந்த வளாகத்தில் உள்ள மற்ற மையங்களுக்கு ஆபத்து இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்பு குறித்து தகவல் எதுவும் இல்லை. தீ விபத்துக்கான காரணமும் உடனடியாக தெரியவில்லை.

ஆத்தூர் அருகே அதிகாலை துணிகரம் ஏடிஎம் மெஷினை கடத்தி கொள்ளை முயற்சி சென்னை வாலிபர்கள் உள்பட 5 பேர் கைது பயங்கர ஆயுதங்கள், மினி வேன் பறிமுதல்!

Monday, April 29, 2013
சென்னை::ஆத்தூர் அருகே இன்று அதிகாலை ஏடிஎம் மெஷினை உடைத்து கடத்த முயன்ற சென்னை வாலிபர்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் மற்றும் மினி வேன் பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காட்டுகொட்டாய் கிராமத்தையொட்டி சேலம் & சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் ஏடிஎம் மையம் உள்ளது. இன்று அதிகாலை 3 மணியளவில் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு எஸ்ஐ சம்பத் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது ஏடிஎம் அருகே சந்தேகப்படும் வகையில் மினி வேனுடன் நின்று கொண்டிருந்த 3 வாலிபர்கள், போலீசாரை பார்த்ததும் ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.

அப்போது ஏடிஎம் மையத்தில் இருந்து 2 பேர் வெளியே வந்தனர். அவர்களையும் போலீசார் பிடித்தனர். பின்னர் ஏடிஎம் மையத்துக்குள் சென்று பார்த்தபோது வயர்கள் அனைத்தும் துண்டிக்கப்பட்டிருந்தன. அதனால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
மினி வேனை சோதனை செய்தபோது அரிவாள், கோடாரி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரியவந்தது. ஆயுதங்களையும், மினிவேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட 5 பேரையும் கைது செய்து தலைவாசல் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

அவர்கள் சென்னை ஆவடியை சேர்ந்த காளியப்பன் (25), பாரதிராஜா (24), கோவர்தன் (26), தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்த முருகன் (27), சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த நைனார்பாளையத்தை சேர்ந்த பிபிஏ பட்டதாரி சரவணன் (21) என்பதும், ஏடிஎம் மெஷினை மினி வேனில் கடத்திச் சென்று பாதுகாப்பான இடத்தில் வைத்து உடைத்து பணத்தை கொள்ளையடிக்க திட்டம் போட்டதும் தெரியவந்தது.

இதுபற்றி தகவலறிந்ததும் எஸ்.பி. அஸ்வின் கோட்னீஸ், தலைவாசல் சென்று விசாரணை நடத்தினார். சில நாட்களுக்கு முன்பு ஆத்தூர் அருகே வீரகனூரில் ஏடிஎம் காவலாளியை கொன்று கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மீண்டும் ஒரு கொள்ளை முயற்சி ஆத்தூர் வட்டாரத்தில் நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தற்போது பிடிபட்டவர்களுக்கு வீரகனூர் சம்பவத்தில் தொடர்பு இருக்குமா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

யார் வழக்குத் தொடர்ந்தாலும் எதிர்கொள்ள தயார்: பொதுபல சேனா சவால்!

Monday, April 29, 2013
இலங்கை::பொதுபல சேனாவுக்கு எதிராக எவரும் எத்தனை வழக்குகளையும் தாக்கல் செய்யலாம். அதனை எதிர்கொள்வதற்கு நாம் தயாராகவே உள்ளோம் என பொதுபல சேனாவின் பிரதம நிறைவேற்றதிகாரி டாக்டர் டிலந்த விதானகே தெரிவித்தார்.
பொதுபலசேனாவுக்கு எதிராக அஸாத் சாலி வழக்குத் தொடரவுள்ளதாக தெரிவித்துள்ள கூற்று தொடர்பாகவே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நாட்டுச் சட்டத்தின்படி எவருக்கும் எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியும். அது அடிப்படை உரிமை. இதற்குத் தடை போட எம்மால் முடியாது. முஸ்லிம் மக்களுக்குக்கெதிராக எமது அமைப்பு செயற்படவில்லை. அடிப்படை வாதத்தையே எதிர்க்கின்றோம். அதற்கு இடமளிக்க முடியாது.
தற்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்தி ஒரு சில முஸ்லிம் அரசியல் வாதிகள் அரசியல் இலாபம் பெற முயற்சிக்கின்றனர். பொதுபலசேனாவை வைத்து அவர்கள் பிழைப்பு நடத்துகின்றனர். முஸ்லிம்கள் இது குறித்து விழிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
முஸ்லிம்களின் உரிமைகள் மீறும் வகையிலும் முஸ்லிம்கள் தொடர்பில் இட்டுக்கட்டப்பட்ட தகவல்களை வெளியிடுவது தொடர்பிலும் பொது பலசேனாவுக்கு எதிராக ஆறு வழக்குகளை தாக்கல் செய்யப் போவதாக முன்னாள் கொழும்பு மாநகர சபையின் பிரதிமேயர் அஸாத் சாலி தெரிவித்திருந்தார்.

பெண் குழந்தைகள், விற்பனை செய்யப்படும் உலகின் பிரதான நாடாக இலங்கை? பிரதீப மனமேந்திர!

Monday, April 29, 2013
இலங்கை::பெண், குழந்தைகள் விற்பனை செய்யப்படும் உலகின் மிகப் பிரதானமான நாடாக இலங்கை திகழ்கின்றது என மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் பிரதீப மனமேந்திர தெரிவித்துள்ளார்.
கடற்பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும் தங்காலை கரையின் ஊடாக ட்ரோலர் படகைப் பயன்படுத்தி 35 நாட்களில் அவுஸ்திரேலியாவிற்கு ஆட்களைக் கடத்துகின்றனர்.
 
வரலாற்றுக் காலத்தில் காணப்பட்ட அடிமைச் சேவக முறைமை இன்று சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கையாக மாற்றமடைந்துள்ளது.
இந்தியாவில் இன்னமும் அடிமைச் சேவக முறைமை காணப்படுகின்றது.
மனித உயிருக்கான மரியாதை அற்றுப் போயுள்ளது.
பிறந்த குழந்தையை கைவிட்டுச் செல்கின்றனர், குழந்தையை வீசி எறிகின்றனர்.
 
சந்தேக நபர்களை பொலிஸார் சித்திரவதை செய்ய முடியாது.
இந்த ஆண்டில் இதுவரையில் இவ்வாறான சித்திரவதைகள் தொடர்பில் ஒரு சம்பவமே பதிவாகியுள்ளது.எனினும், ஏதேச்சாதிகரமாக கைது செய்தல் தொடர்பில் 30 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு எதிராக பதிவாகியுள்ளது.
பொலிஸ் நிலையங்களில் ஒரு முறைப்பாட்டை சரியான முறையில் பதிவு செய்யக் கூடிய அதிகாரிகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது.
சட்டவிரோதமான உத்தரவுகளை கடைநிலை அதிகாரிகள் பின்பற்ற வேண்டியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இத
னைத் தெரிவித்துள்ளார்.

உல்லாசப்பயணிகள் பங்கு பற்றிய சித்திரைப்புத்தாண்டு விழா!.

Monday, April 29, 2013
இலங்கை::பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ் இலங்கை உல்லாச பயணிகள் அபிருத்தி பணியகம் ஏற்பாடு  செய்த "Srilanka Hospitality" என்ற தலைப்பிலான  சிங்கள தமிழ் சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா நேற்று முந்தினம் நீர் கொழும்பு கடற்கரையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

முற்றிலும் வெளிநாட்டு உல்லாச பிரயானிகள் கலந்துக் கொண்ட இந்த விழாவில் ,இலங்கையின் தனித்துவமான விளையாட்டுப்போட்டிகள் இடம் பெற்றன. இலங்கை உல்லாச பயணிகள் அபிருத்தி பணியகப் பணிப்பாளரான ரூமி ஜவ்பர் மேல் மாகாண உல்லாச  சபை  தலைவர் கிளாட் தோமஸ் ஆகியோர் இவ்விழாவில் பிரதம அதிதிகளாக கலந்துக் கொண்டனர்.

ரஷ்யாவிலிருந்து வருகை தந்திருந்ந உல்லாச பயணியான செவின்னியா கொடென்கோ  2023ஆம் ஆண்டுக்கான உல்லாச அழகு ராணியாகவும் அதேநாட்டைச் சேர்ந்த சோட்டா கிலாட்சே உல்லாச ஆணழகனாகவும் தெரிவு செய்யப்பட்டனர்.

சித்திரை புத்தாண்டில் இடம்பெறும் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் அனைத்திலும் உல்லாசப்பயணிகள் மிகவும் ஆர்வத்துடன் பங்கு பற்றினர். இவர்களுக்கு இலங்கையின் பாரம்பரிய முறைப்படி  பாற்சோறு பலகாரம் போன்றவையும் பரிமாறப்பட்டன.

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் பங்கேற்கப் போவதாக நியூசிலாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது!

Monday, April 29, 2013
இலங்கை::எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் பங்கேற்கப் போவதாக நியூசிலாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.
 
அவுஸ்திரேலிய பிரதமர் ஜோன் கீ இதனை உறுதி செய்துள்ளார்.
பிரித்தானியா மஹாராணி அல்லது அவரது பிரதிநிதி ஒருவர் இலங்கை அமர்வுகளில் பங்கேற்பார் எனவும், இந்த அமர்வுகளில் பங்கேற்க வேண்டியது அவசியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
கடந்த காலங்களில் இடம்பெற்ற தவறுகளை திருத்திக் கொள்வதற்கு இலங்கை முயற்சித்து வருவதாக நியூசிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த அமர்வுகளில் பங்கேற்கப் போவதாக அவுஸ்திரேலியாவும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
எவ்வாறெனினும், இதுவரையில் எந்தவொரு உறுப்பு நாடும் அமர்வுகளை முழுமையாக புறக்கணிக்கப்பதாக உத்தியோகபூர்வ பகிரங்க அறிவிப்பை வெளியிடவில்லை.

சென்னையில் 40 இடங்களில் கடிகார கோபுரங்கள்: மாநகராட்சி ஏற்பாடு!!

Monday, April 29, 2013
சென்னை::சென்னையில் முக்கியமான இடங்களில் கடிகார கோபுரங்கள் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்த கடிகார கோபுரங்கள் பூங்காக்கள், சாலையோர பூங்காக்கள், முக்கிய சாலை சந்திப்புகளில் அமைக்கப்பட உள்ளது.

முதற்கட்டமாக நேப்பியார் பாலம், மே தின பூங்கா, நடேசன் பூங்கா, திருவான்மியூர் பத்திரிகையாளர் காலனி பூங்கா உள்பட 40 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த இடங்களில் கடிகார கோபுரங்கள் அமைக்க இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர் கூட்டமைப்பு முன் வந்துள்ளது. ஸ்டெய்ன் லெஸ் ஸ்டீல் தூணில் இந்த கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன.
tamil matrimony_INNER_468x60.gif

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு கைதிகள், வெளியில் அழைத்துவரப்பட்டபோது தப்பி ஓட்டம்!

Monday, April 29, 2013
இலங்கை::அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு கைதிகள், வெளியில் அழைத்துவரப்பட்டபோது, தப்பிச் சென்றுள்ளனர்.

மிஹிந்தலை ரஜரட்டை பல்கலைக்கழகத்தில் அடுத்தமாதம் நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவினை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் கட்டட வேலைகளுக்காக 20 கைதிகள் வெளியில் அழைத்துவரப்பட்டனர்.

இவர்கள் இரு ஜெயிலர்களிடம் ஓப்படைக்கப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில், குறித்த இருவரும் நேற்று மதிய உணவின் பின்னர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து சிறைச்சாலை அதிகாரிகளால், மிஹிந்தலை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த இரு கைதிகளையும் கைதுசெய்வது தொடர்பில் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேலியகொடையில் ஒருவரை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி கடத்திச் சென்று கப்பம் கோரியவர் கைது!:-யுவதியை ஒருவரை கடத்திச் சென்று 25 இலட்சம் ரூபா கப்பம் கோரியவர் கைது!:-யாழ்ப்பாணத்தில் பண மோசடியில் ஈடுபட்ட வந்த நபர் ஒருவர் கைது!

Monday, April 29, 2013
இலங்கை::பேலியகொடையில் ஒருவரை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி கடத்திச் சென்று கப்பம் கோரிய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொழும்பு 14 வேல்ஸ் குமார வீதியைச் சேர்ந்த ஒருவரே சந்தேகநபரால் கடத்தப்பட்டிருந்தார்.
 
கடத்தப்பட்டவரை விடுவிப்பதற்காக சந்தேகநபர் எட்டு இலட்சம் ரூபா கப்பம் கோரியிருந்தார்.இதற்கமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினர் 19 வயதான சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் களனி சிங்காரமுல்ல பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
 
யுவதியை ஒருவரை கடத்திச் சென்று 25 இலட்சம் ரூபா கப்பம் கோரியவர் கைது!
 
யுவதியை ஒருவரை கடத்திச் சென்று 25 இலட்சம் ரூபா கப்பம் கோரிய ஒருவரை பேலியகொடை வடக்கு பிரதேச குற்றத் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.வாரியபொல பகுதியில் உள்ள அரச நிறுவனம் ஒன்றில் கடமையாற்றும் யுவதியுடன் தவறான தொடர்பு வைத்திருந்த சந்தேகநபர் அவரை பொத்துவில் பகுதிக்கு அழைத்துச் சென்றிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
பின்னர் யுவதியின் வீட்டுக்கு தொடர்பினை ஏற்படுத்திய சந்தேகநபர் அவரை விடுவிப்பதற்காக 25 இலட்சம் ரூபா கப்பம் கோரியுள்ளார்.
இது தொடர்பில் குறித்த யுவதியின் சித்தி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர் ஆறு இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்ட சந்தர்ப்பத்தில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
 
இரண்டு பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யுவதியுடன் தொடர்பினை வைத்திருந்த காலப் பகுதியில் சந்தேகநபர் அவரது தங்க ஆபரணங்கள் மற்றும் பணம் ஆகியவற்றை அபகரித்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
 
யாழ்ப்பாணத்தில் பண மோசடியில் ஈடுபட்ட வந்த நபர் ஒருவர் கைது!
 
யாழ்ப்பாணத்தில் பண மோசடியில் ஈடுபட்ட வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
பொது மக்கள் மற்றும் முன்னாள் புலிபோராளிகளாக இருந்து புனர்வாழ்வு பெற்றவர்களையும் அணுகி வேலை பெற்றுத்தருவதாகவும், வாகனங்களை வட்டியில்லாக் கடனுக்கு பெற்றுத்தருவதாகவும் கூறி பலரிடம் மோசடி செய்து வந்த நபர் ஒருவர் பாதிக்கப்பட்டவர்களினால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
 
யாழ்.தாவடிப் பகுதியில் பொதுமக்களையும், முன்னாள் போராளிகளையும் ஏமாற்றி பணத்தை பெற்றுக் கொண்டு தலைமறைவாகி இருந்தார்.

குறித்த இளைஞர் யாழ்ப்பாணம் பகுதியில் நிற்பதைக் அறிந்த பாதிக்கப்பட்ட இளைஞர்கள் குறித்த இளைஞரை பிடித்து கிராம அலுவலரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.
 
இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட நபர் சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
 
குறித்த இளைஞரிடம் இருந்து பல கையடக்கத் தொலைபேசிகள், சிம்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த நபரிடம் தொடர் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Commander of the Navy visits China!:-இலங்கைக் கடற்படைத் தளபதி ஜயந்த கொலம்பகே சீனாவிற்கு விஜயம்!

Monday, April 29, 2013
இலங்கை::இலங்கைக் கடற்படைத் தளபதி ஜயந்த கொலம்பகே சீனாவிற்கு விஜயம்!
 
சீனாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள கடற்படை தளபதி ஜயந்த கொலம்பகே, அந்த நாட்டின் மத்திய இராணுவ ஆணையகத்தின் உறுப்பினர் பெங் பங்குயி வை சந்தித்து பேசியுள்ளார்.
 
இதன் போது இலங்கையின் பாதுகாப்பு விவகாரங்கள் மற்றும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து பேசப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையின் பாதுபாப்பு விடயங்களில் சீனா முழுமையான அக்கறை கொண்டிருப்பதாக சீன தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதன்படி இலங்கையின் கடற்படையினருக்கும், இராணுவத்தினருக்கும் பயிற்சிகளை வழங்க சீனா தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கடந்த காலங்களில் இலங்கையின் பாதுகாப்பு நிலைமைகளுக்கு வழங்க ஒத்துழைப்புகளுக்காக சீனாவிற்கு இலங்கை கடற்படை தளபதி நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.
 
Commander of the Navy visits China!
 
At an invitation extended by Commander of the PLA Navy, Admiral Wu Shengli, Commander of the Sri Lanka Navy, Vice Admiral Jayanath Colombage visited China from 21st to 26th April 2013.

During the visit, the Commander of the Navy was able to hold wide ranging discussions on matters of mutual interests and bilateral importance with the Commander of the PLA Navy and officials. He called on The Chief of General Staff PLA, General Fang Fenghui, Commander of the South Sea Fleet Vice Admiral Jiang Weilie and President of Navy Marine Academy, Captain Shen Changfeng. During his stay in South Sea Fleet Headquarters he was able to visit PLA Navy Frigate 569.

The Commander of the Navy and President of the Sri Lanka Navy Seva Vanitha Unit, Mrs. Srima Colombage also attended a dinner hosted by Commander of the PLA Navy Admiral Wu Shengli and Commander of the South Sea Fleet Vice Admiral Jiang Weilie.

The visit has strengthened the relations between Sri Lanka and China which maintain close, cordial and mutually supportive relations in a number of fields. PLA Navy offers advanced and specialized training to SLN personnel and both forces have friendly relations which reflect their camaraderie and professional commitments.

வலி வடக்கில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிராக (புலி)கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இன்று காலை தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு முன்னாள் கண்டன ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது!

Monday, April 29, 2013
இலங்கை::வலி வடக்கில்  காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிராக (புலி)கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இன்று காலை தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு முன்னாள் கண்டன ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது!
 
வலி வடக்கில் மேற்க்கொள்ளப்பட்ட காணி சுவிகரிப்பு நடவடிக்கைக்கு எதிராக இன்று திங்கட்கிழமை காலை கண்டன ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு முன்னாள் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வலி வடக்கிலிருந்து இருந்து இடம்பெயர்ந்து சென்றுள்ள மக்கள் கலந்துகொண்டனர்.

தமிழ்த் தேசிய (புலி)கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினாகளான மாவை சேனாதிராசாஇ எஸ்.ஸ்ரீதரன்இ எம்.ஏ.சுமந்திரன் தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் ஆனந்த சங்கரிஇ தமிழ் மக்கள் தேசிய முன்னனியை சேர்ந்த கஜேந்திரன் மற்றும் வலி வடக்கு பிரதேச சபைத் தலைவர் சுகிர்தன் உட்பட எனப் பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக சுன்னாகம் மதவடியில் இருந்து ஆர்ப்பாட்டம் இடம்பெறும் பிரதேச செயலகம் வரையான பிரதேசத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடாத்தத் தயார்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Monday, April 29, 2013
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடாத்தத் தயார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு காண்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
எனினும், பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்
 
அரசியல் தீர்வுத் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகள் முடங்கியமைக்கு அரசாங்கமே பொறுப்பு என்ற கூட்டமைப்பின் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்தே இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாராளுமன்ற முறைமையின் ஊடாக தீர்வு காண வேண்டும் என கோருவதாகவும், இது தொடர்பில் கூட்டமைப்பு அஞ்ச வேண்டிய அவசியமில்லை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
 
 

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வை இலங்கையில் நடத்தக் கூடாது என்ற நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது என தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்!

Monday, April 29, 2013
இலங்கை::பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வை இலங்கையில் நடத்தக் கூடாது என்ற நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது என தமிழ்த் தேசியக்  (புலி)கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
 
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு இலங்கையில் நடத்தக் கூடாது என சுமந்திரன் லண்டனில் பிரச்சாரம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பொதுநலவாய நாடுகள் ஊடகவியலாளர் அமைப்பின் அழைப்பை ஏற்று தாம் லண்டனுக்கு விஜயம் செய்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
இதன் போது இலங்கையில் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகள் பின்பற்றப்படவில்லை என்பதனை தாம் வலியுறுத்தியதாகத் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பில் அரசாங்கம் உள்நாட்டு மற்றும் சர்வதேச கோரிக்கைகளை உதாசீனம் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
 
வட பகுதிகளில் பாரியளவில் காணிகளை அரசாங்கம் சுவீகரித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு மாறாக யுத்த நிறைவினைத் தொடர்ந்து அரசாங்கம் இராணுவ பலத்தை மேலும் வலுப்படுத்திக் கொள்வதில்  அதிக நாட்டம் காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
 
இதேவேளை, இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வை நடத்தக் கூடாது என தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு, மாற்றுக் கொள்கைகளுக்காக கேந்திர நிலையம் மற்றும் க்ளோபல் தமிழ் போரம் அமைப்பு ஆகியன பிரச்சாரம் செய்ததாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

தமிழக மீனவர் கைது பிரச்னையில் இந்திரா காந்தி எடுத்த நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும்: திமுக தலைவர் (23ம் புலிகேசி) கருணாநிதி!

Monday, April 29, 2013
சென்னை::தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படும் சம்பவங்களை தடுக்க, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கையாண்ட தீவிர நடவடிக்கையை தற்போதும் இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை: 

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து பல ஆண்டுகளாக நடத்தி வரும் தாக்குதல் குறித்து தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சியினரும் மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்லி, இந்தப் பிரச்னை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம். ஏன், தமிழக அரசும் கூட, தமிழக மீனவர்கள் தாக்கப்படுகின்ற போதெல்லாம் உடனடியாக பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

நமது வலியுறுத்துதலைத் தொடர்ந்து இந்திய அரசும் இலங்கை அரசுக்கு முறையீடு செய்துவிட்டு, அதுபற்றி நாடாளுமன்றத்திலேயோ அல்லது அறிக்கை மூலமாகவோ தங்கள் கடமை முடிந்து விட்டதைப் போல விளக்கம் அளிக்கின்றனர். ஆனால் இதனால் எல்லாம் பிரச்னைகள் முடிந்து விட்டனவா என்றால் இல்லை என்றே வேதனையோடு சொல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம். உதாரணமாக நேற்று முன்தினம், நமக்கு வந்துள்ள செய்திப்படி, இலங்கை அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேர், எப்படியும் இந்த முறை விடுவிக்கப்பட்டு விடுவோம் என்ற நம்பிக்கையோடு இருந்த நேரத்தில், மூன்றாவது முறையாக மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் மே 6 வரை இவர்களுக்கு காவல் நீட்டிப்பு  செய்யப்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த இந்த 30 மீனவர்கள் ஏப்ரல் 6ம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, தலைமன்னார் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்கள். அவர்கள் நீதிமன்றத்தில் மூன்று முறை ஆஜர் செய்யப்பட்டு மே 6ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளனர். செய்தியை அறிந்த, ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் சாலை மறியல் செய்துள்ளனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள் மாத்திரமல்ல; ஏப்ரல் 5ம் தேதி கடலில் மீன்பிடித்தபோது, புதுவை , காரைக்காலைச் சேர்ந்த 26 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்து, ஊர்க்காவல் துறை நீதிமன்றத்திலே ஆஜர்படுத்தி,  அவர்களையும் சிறையிலே அடைத்தனர். நீதிமன்றம் அவர்களை மே 29ம் தேதி வரை சிறையிலடைக்க உத்தர விட்டுள்ளது.

எனவே தமிழக மீனவர்களின் அவலம் தொடர்கிறது. ஒவ்வொரு முறையும் மத்திய அரசிடம் இந்தப் பிரச்னைக்காக வேண்டுகோள் விடுப்பதும் தொடர்கதையாக உள்ளது. பல ஆண்டுகளாக நீடித்து வரும் மீனவர்களின் இந்தத் துயரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க இனியும் காலதாமதம் செய்யாமல் விரைந்து தீவிரமான ஒரு நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இத்தாலி கடற்படையினரால் கேரள மீனவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வில் மத்திய அரசு செலுத்திய அக்கறையில் நூற்றில் ஒரு பங்காவது தமிழக மீனவர்களுக்கும் செலுத்திட வேண்டும் என்று தமிழகமே எதிர்பார்க்கிறது.

மேலும் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, சிங்களக் கேப்டன் ஒருவர், அடிக்கடி தமிழக மீனவர்களை, தமிழக எல்லைப் பகுதிக்குள்ளேயே வந்து தாக்கி வருவதைக் கேள்விப்பட்டு, கோபமடைந்த பிரதமர் இந்திரா காந்தி, அந்தக் கேப்டனைக் கைது செய்ய நமது கடற்படைக்கு உத்தரவிட்டார். நமது கடற்படை வீரர்களும் சிங்களக் கேப்டனைப் பிடித்து வந்து, மண்டபத்தில் சிறை வைத்தனர்.

அதன் பிறகு அந்தக் கேப்டனையும், சக இலங்கை வீரர்களையும் மன்னிப்பு கேட்க வைத்து, இலங்கை அரசு திரும்பப் பெற்றது. இந்தச் சம்பவத்தை இந்திய அரசு நினைவிலே கொண்டு, இந்திரா காந்தி அம்மையார் எடுத்த நடவடிக்கையைப் போல தீவிரமான நடவடிக்கை தற்போதும் மேற்கொள்ள வேண்டும் என்பது தான் நமது மீனவர்களின் விருப்பமாகும்.  மத்திய அரசு மேலும் இதிலே தயக்கம் காட்டுமேயானால், தமிழகத்தின் மீதும், தமிழக மீனவர்கள் மீதும் இந்திய அரசுக்கு அக்கறை இல்லை என்பதையே அது தெளிவாக்குவதாக அமைந்து விடும் என்பதை மத்திய அரசு மறந்து விடக் கூடாது. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

பல்லாண்டு காலம் ஒற்றுமையாக வாழ்ந்த தமிழ் சிங்கள மக்களிடையே விஷமிகளே குரோதத்தை ஏற்படுத்தினர்: அமைச்சர் விமல் வீரவன்ச!


Monday, April 29, 2013
இலங்கை::இந்த நாட்டில் வாழும் சிங்கள தமிழ் மக்களது கலை, கலாச்சார தொடர்புகள் பல்லாண்டு காலமாகவே இருந்து வருகின்றன என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
 
 சனிக்கிழமை பம்பலப்பிட்டி அரச தொடர்மாடி வீடமைப்புத் திட்;டத்தில வாழும் தமிழ் குடியிருப்பாளர்கள் இணைந்து ஏற்பாடு செய்த சித்திரைப் புத்தாண்டின் நிகழ்வுகளில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
ஹிந்து மக்களது வழிபாட்டு தெய்வ விக்கிரகங்கள் பௌத்த விகாரைகளிலும் இருக்கின்றன. பௌத்த மக்கள் அந்த தெய்வ விக்கிரகங்களையும் வழிபடுகின்றனர். அந் தெய்வங்களை ஆத்மபூர்வமாக அவர்கள் நம்புகின்றனர்.
அதேபோன்றுதான் ஹிந்து மக்களும் பௌத்த விகாரைக்கும் செல்கின்றனர். அதேபோன்று தான் தமிழ் சிங்கள புதுவருடத்திலும் ஒற்றுமை உண்டு.
ஒரு தினத்தில் சூரியா மீன இராசியில் இருந்து மேச இராசி வரையிலான காலப் பகுதியிலேயே இதனைக் கொண்டாடுகின்றோம்
பல்லாண்டு காலமாக தமிழ் சிங்கள மக்களும்  சகோதரத்துவமாக ஒற்றுமையாக வாழ்ந்தாலும் கடந்த காலங்களில் சில இன விஷமிகளால் இனங்களுக்கிடையே குரோதத்தை வளர்த்தனர்.
இருந்தாலும் கொழும்பு மாவட்டத்தில் உள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் உள்ள தொடர்மாடி வீடுகளில் மூவீனத்தவர்களும் மிகவும் ஜக்கியமாகவும் சகோதரத்துவ முடையவர்களாகவும் வாழ்ந்து வருகின்றனர்.
 
இவ்வாறான நிகழ்வுகளை வருடா வருடம்  நடைமுறைப்படுத்துமாறு எனது அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளேன்.
அடுத்த வருடம் அரச செலவில் கொழும்பில் உள்ள சகல வீடமைப்புத் திட்டங்களில் வாழும் சகல இனத்தையும் பிரநிதித்துவப்டுத்தி அவர்களது கலை கலாச்சார விழுமியங்களை பிரதிபலிக்கும் தமிழ் சிங்கள முஸ்லீம் நிகழ்வுகளை நடாத்த வேண்டும்.
 
இதற்கான அனுசரனையை சம்பந்தப்பட்ட அதிகார சபையின் ஊடாக நடைமுறைப்படுத்தல் வேண்டும் என அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளேன்” என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் முகம்மத் முசம்மில், ஐனாதிபதியின் இணைப்பாளர் இராகுலன், கூட்டாதன முகாமைத்துவ அதிகார சபை தலைவர் சட்டத்தரணி கபில கமகே, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர் பிரிகேடியர் மஹிந்த முதலிகே உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
 
கோலம்போடுதல், பரதநாட்டியம், பூமாலைகோர்த்தல், கிடுகு பின்னுதல், திருக்குரல் மனப்பாடம், விபுலாநந்தர் அடிகள் வேடம், கையிறு இழுத்தல், தமிழ் இசை,நிகழ்ச்சிகளும்  முழு நாள் நிகழ்வாக இடம்பெற்றன.
இந்நிகழ்வுக்கு வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் கீழ் உள்ள வீடமைப்புத் திட்டங்களை பராமரிக்கும் கூட்டாதான முகாமைத்துவ அதிகார சபை அனுசரணை வழங்கியது.

விமானப்படை வேலைக்கு முழுக்குப் போட இங்கிலாந்து இளவரசர் முடிவு!

Monday, April 29, 2013
லண்டன்::இங்கிலாந்து இளவரசர் வில்லியம், 'ராயல் ஏர் ஃபோர்ஸ்' எனப்படும் அந்நாட்டின் விமானப்படையின் 'சீ கிங்' மீட்பு மற்றும் தேடுதல் பிரிவில் ஹெலிகாப்டர் விமானியாக உள்ளார். ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளை வேட்டையாடிய 'நேட்டோ' படையில் இவர் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 3 ஆண்டுகளாக இப்பணியில் உள்ள வில்லியம், கடந்த ஆண்டு தனது காதலி கேட் மிடில்டனை திருமணம் செய்துக்கொண்டார். இளவரசி கேட் மிடில்டன் தற்போது கர்ப்பிணியாக உள்ளார். வரும் ஜுலை மாதம் இத்தம்பதியருக்கு குழந்தை பிறக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனது முதல்வாரிசு பிறக்கும் வேளையில் குடும்பத்தை விட்டு வெகு தொலைவில், வெகு நாட்கள் பிரிந்திருப்பதை விரும்பவில்லை என சில மாதங்களுக்கு முன்னர் ஒரு பேட்டியின் போது வில்லியம் கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்னும் ஓரிரு மாதங்களில் விமானப்படை பணியை விட்டு விலகப்போவதாக வில்லியம் தனது உயரதிகாரியிடம் தெரிவித்துள்ளதாக இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் 'சன்டே டைம்ஸ்' பத்திரிகை, செய்தி வெளியிட்டுள்ளது.
tamil matrimony_INNER_468x60.gif

முஸ்லிம்களால் வஞ்சிக்கப்படும் கல்முனைத் தமிழரை பாதுகாக்க பொதுபல சேனாவுடன் கைகோர்ப்போம்: அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் துண்டுப்பிரசுரம்!

Monday, April 29, 2013
இலங்கை::பொது பல சேனாவை ஆதரிப்பதன் மூலமே அம்பாறை மாவட்ட தமிழர்கள் தங்களின் இருப்பை தக்கவைக்க முடியும் எனக் குறிப்பிடும் துண்டுப்பிரசுரம் ஒன்று நேற்று அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட நமக்காக நாம்’ எனும் அமைப்பின் பெயரில் வெளியிடப்பட்டுள்ள இத் துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
கல்முனையில் தமிழர்களுக்காக இருக்கின்ற ஆதார வைத்தியசாலை, கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் போன்றவற்றை திட்டமிட்டு சதி செய்து அஷ்ரப் வைத்தியசாலையுடனும் முஸ்லிம் பிரிவு பிரதேச செயலகத்துடனும் இணைப்பதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் இஸ்லாமிய கல்விமான்கள் எடுத்துவரும் நடவடிக்கையானது உண்மையிலேயே எமக்கு வேதனையைத் தருகிறது.
வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவது போன்ற நடவடிக்கையே இதுவாகும். எமக்காக இருக்கும் அரசியல்வாதிகளும் புத்திஜீவிகளும் தினம் தினம் இஸ்லாமிய சகோதரர்களுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றனர்.
 
நாங்களும் இதனையே ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் அவர்களோ எம்மை அடக்கி இருக்கின்ற அற்ப சொற்ப சலுகைகளையும் கிடைக்கவிடாமல் செய்ய முனைப்பாக இருக்கின்றனர். இந்த ஆக்கிரமிப்பு விடயத்தில் நாம் எமது அரசியல் தலைமைகளையோ புத்திஜீவிகளையோ நம்பத்தயாரில்லை.இருக்கின்ற இடங்களையாவது காப்பாற்றிக் கொள்ளவும் எமது மதங்களை அழிய விடாமல் பாதுகாக்கவும் ஏதோ ஒரு முடிவுக்கு வர வேண்டியவர்களாக உள்ளோம்.
எனவே இதற்காக இன்றைய நிலையில் பலம்மிக்க பொது பல சேனாவை ஆதரிப்போம்.
 
சிங்கள மக்களுக்கும் எமக்கும் நிறையவே ஒற்றுமை உண்டு. அவர்களுக்கும் எமக்கும் யுத்த காலத்தில் இருந்த மனக்கசப்பை விட வேறு எந்த முரண்பாடும் இல்லை. கலாசாரத்திலும் வணக்க முறைகளாலும் ஒற்றுமையாக இருக்கின்ற நாம் பொது பல சேனாவுடன் இணைந்து எமது பிரதேசத்தில் எஞ்சியுள்ளவற்றையாவது காப்பாற்றுவோம்” என இத்துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
கல்முனை பிரதேசத்தில் பொதுபல சேனாவின் கிளைக் காரியாலயம் ஒன்றை திறக்குமாறு அப்பகுதியைச் சேர்ந்த தமிழர்கள் சிலர் அவ்வமைப்பின் தலைமையகத்துக்குச் சென்று வேண்டுகோள் விடுத்திருந்ததாக பொதுபல சேனாவின் பேச்சாளர் கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்

அமெரிக்காவில் இஸ்லாம் வேகமாக பரவுகிறது: இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்செல் ஜே.சிசன்!

Monday, April 29, 2013
இலங்கை::எனது நாடான அமெரிக்காவில் அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டிருக்கிறது. அங்கு முஸ்லிம்கள் அனைத்து உரிமைகளுடனும் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும். அது மாத்திரமன்றி எமது நாட்டில் மிக வேகமாக வளர்ந்து வருகின்ற மார்க்கமாக இஸ்லாம் மார்க்கம் தான் உள்ளது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்செல் ஜே.சிசன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை ஜமாலியா கிராமத்துக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டு அங்கு இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
 
திருகோணமலைக்கு விஜயம் செய்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்செல் ஜே.சிசன் நேற்று  குறித்த ஜமாலியா கிராமத்திற்கு விஜயம் செய்திருந்தார்.
 
திருகோணமலை வை.எம்.எம்.ஏ கிளை ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்து கொண்டு பிரதேசத்தின் நிலமைகள் குறித்து கேட்டறிந்து கொண்டதுடன் அங்கு கேட்கப்பட்ட கேள்விக்கு ம் பதிலளித்தார். இதன் போதே அமெரிக்காவில் இஸ்லாம் வேகமாக பரவி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதன் போது ஜமாலியா முஸ்லிம் மஹா வித்தியாலய நூலகத்திற்கு நூல் அன்பளிப்பு பொதியினை பாடசாலையின் உதவி அதிபர் ஜனாப் பரீடிடம் தூதுவர் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்கா தூதுவராலயத்தின் அதிகாரிகள், ஜமாலியா ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் மஹ்ரூப், ஓய்வு பெற்ற பாடசாலை அதிபர் அல்ஹாஜ் முஸ்தபா, திருகோணமலை அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் அல்ஹாஜ் வலீத், பிரதேச முஸ்லிம் விவாகப் பதிவாளர் அல்ஹாஜ் சிஹார்தீன் மற்றும் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.