Tuesday, October 30, 2012

காந்தி ஜனன தின விழாவில் துறைசார் வல்லுனர்கள் கௌரவிப்பு; சகாதேவராஜாவுக்கு ‘சாஹித்ய சாகரம்’ பட்டம்!

Tuesday, October 30, 2012
இலங்கை::மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்திலுள்ள பல்வேறு துறைசார்ந்தவர்கள் நேற்று திங்கட்கிழமை கல்முனை வலயக் கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் பாராட்டி கௌரவிக்க
ப்பட்டனர்.

அத்துடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ராஜேந்திரன், கல்முனை விகாராதிபதி ரண்முத்துகல சங்கரத்ன தேரர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின்
அம்பாறை மாவட்ட பொறியியலாளர் ஏ.எம். றிஸ்வி, அமைச்சர் பி.தயாரத்னவின் இணைப்பாளர் வீ.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பல பிரமுகர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மலையக கலை கலாசார சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் செயலாளர் வேலுப்பிள்ளை சண்முகநாதன் தலைமையில் இடம்பெற்ற காந்தி ஜனன தின விழாவில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி வைத்தார்.
அம்பாறை மாவட்டத்தில் இலக்கியம், ஊடகம், கல்வி மற்றும் சமூகசேவை ஆகிய துறைகளில் பணியாற்றியவர்களும் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களும் இதன்போது பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.

பிரபல கல்வியியலாளரும் பிரபல ஊடகவியலாளருமான தேசமான்ய விபுலமாமணி. வி.ரி.சகாதேவராஜா சாஹித்ய சாகரம் என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

ஐ.நா.சபையில் மனித உரிமை மீறல் விசாரணை; 90 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகவே பேசும் - கருணதிலக அமுனுகம!

Tuesday, October 30, 2012
இலங்கை::நவம்பர் 1ம் திகதி முதல் ஐ.நா மனித உரிமை பேரவையில் இடம்பெறவுள்ள இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணையை எதிர்கொள்ள தயார் என வெளி விவகார அமைச்சின் செயலாளர் கருணதிலக அமுனுகம தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அகில கால மீளாய்வு அமர்வுகளில் 90 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகவே பேசும் என அவர் தெரிவித்துள்ளார்.

அகில கால மீளாய்வு அமர்வுகளில் சுமார் 99 நாடுகள் இலங்கை தொடர்பில் உரையாற்றவுள்ளதுடன் இதில் 90 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகவே பேசும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அகில கால மீளாய்வு அமர்வுகளின் போது இலங்கை தன்னார்வ அடிப்படையில் எந்தவொரு வாக்குறுதியையும் அளிக்கப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாசிச புலிகள் அழிந்து போனாலும்,அதனது அடிவருடிகள் இன்னும் அழியவில்லை:வடமாகாண முஸ்லிம்களின் இனச்சுத்திகரிப்பின் 22 ஆம் வருட நிறைவு நாள் இன்று!

Tuesday, October 30, 2012
இலங்கை::பாசிச புலிகள் அழிந்து போனாலும்,அதனது அடிவருடிகள் இன்னும் அழியவில்லை,வடமாகாண முஸ்லிம்கள களையெடுக்க புறப்பட வேண்டும்.:  தமது மண்ணுக்காக போராடியதாக கூறிய பாசிச புலிகள் இன்று மண்ணோடு மண்ணாக அழிந்து போயுள்ளனர்.
கடந்த மூன்று தசாப்தங்களாக இந்த நாட்டில் ஏற்படுத்திய அழிவுகள் கொஞ்ச நஞ்சமல்ல சொத்துக்களுக்கு மட்டுமல்ல உயிர்களையும் காவு கொள்ளச் செய்து,அங்கவீனத்தையும் பரிசாக கொடுத்த பாசிச புலிகளின் கொடுமைகளால் பாதிக்கப்பட்டு நாதியிழந்து போன வடபுலத்து மக்களின் கண்ணீர் கதைகள் ஏராளம்.குறிப்பாக பாசிச புலிகள் வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்களை ஒட்டுமொத்தமாக விரட்டியடித்த வருடத்தின் மாதம் இன்று தான் ஒக்டோபர் 30,இலங்கையின் வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்களின் வரலாற்று சான்றுகளை நாமும் அறிந்திருக்க வேண்டும்

ஆயுதத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்டு அனைத்தையும் தம் வசம் படைக்கலாம் என்ற நப்பாசைக் கொண்ட பாசிச விடுதலை புலிகளின் நினைவுகளை இறைவன் துவம்சம் செய்தான் அது தான் உண்மை. அநியாயம் செய்யும் மனிதர்களை இறைவன் நீண்ட நாட்களுக்கு விட்டு வைப்பதில்லை,அநியாயம் இழைக்கப்பட்ட ஒரு முஸ்லிம் மன்னை படைத்த இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யும் போது, அநியாயம் இழைத்தவனுக்கு இவ்வுலகிலும், மறு உலகிலும் தண்டனை கிடைக்கும் என்பதில் உறுதியுடன் இருப்பவர்கள் தான் முஸ்லிம்கள்.
நீண்ட நாட்கள் செய்த பிரார்த்தனையின் வெளிப்பாடு பாசிச புலிகளின் கொட்டம் அடக்கப்பட்டு,அவமானப்படுத்தப்பட்டது தான் யதார்த்தமாகும். நாட்கள், மாதங்களாகி,வருடங்களாகி 22 வருட இலங்கையின் வட புல முஸ்லிம்களின் வரலாறு இன்றைய தினத்தின் மீண்டும் மீட்டிப்பாரக்கப்படுகின்றது.

வடக்கில் உயர்ந்த மினாராக்கல், அவைகள் அல்லாஹ்வை சுஜூது செய்யும் புனித தளங்கள்,இஸ்லாமியர்களின் உள்ளத்தில் ஆழ்ந்து பதிந்து போன உயர் மத ஸ்தாபனம் பள்ளிவாசல்கள், வணங்குவதற்கும், வாழ்க்கைக்கு வழிகாட்டுவதற்கும் புனிதத்துவம் போற்றும் மஸ்ஸிதுகள் எத்தனை,எத்தனை , அனைத்தையும் தமது நீர்த்தடாகங்களாக பாசிச புலிகள் பயன்படுத்தினர். மதங்களை இழிவுபடுத்தும் உச்சகட்ட செயற்பாடுகள் அவர்களது குறுகிய கால ஆட்சியில் அரங்கேற்றப்பட்டன. அ்து மட்டுமல்ல. இன்னும் எத்தனையோ கோர வடுக்கள் முஸ்லிம்களது வரலாற்றில் புலிகள் முத்திரை பதித்துள்ளனர்.

ஒரு சமூகம் தாம் வாழ்ந்த பூமியில் இருந்து வெறுங் கையுடன் வெளியேற்றப்பட்டது. வடக்கில் ,எவருக்கும் அநியாயம் கூட செய்வதில் இருந்து ஒதுங்கியிருக்கும் முஸ்லிம்கள், தமிழீழ விடுதலை போராட்டம் வெற்றிக் கொள்ளாது, இது அநியாயக்காரர்களின் திட்டம் என்பதை அறிந்தும்,அவர்களது போராட்டத்தை மழுங்கடிப்புச் செய்யாமல் இருந்த போதும் கூட,உணர்வர்களை மதிக்கத் தெரியாத சடவாத புலிகள்,செய்த அனர்த்தங்கள் எண்ணிலடங்காதவை.
வயோதிபர்கள்,கற்பிணிகள்,குழந்தைகள்,ஏன் பெண்கள் என்று பாராமல் காலக் கெடு வைத்து விரட்டியடித்து வரலாற்று துரோகத்தை முஸ்லிம்களுக்கு செய்தனர். ஒரு சிறுபான்மை புலிச் சார்ந்த தமிழ் சமூகத்தின் விடியலுக்காக தாம் இரண்டரக் கலந்து வாழ்ந்த மற்றுமொரு சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை அழித்து அதன் மீது தமது ஆட்சியை அமைக்க முற்பட்ட போது,அவர்களுக்கு காலாண் கொடுத்தது மரணப்பரிசுகள்.
$
வடக்கில் 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி மன்னார்,வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி,யாழ்ப்பாணம் ஆகிய 5 மாவட்டங்களிலும் வாழ்ந்த பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் இரவென்றும், பகலென்றும் பாராது, உடுத்த உடையுடன், உடைமைகள் பறித்தெடுக்கப்பட்டு, விரட்டியடித்த கொடுமையான தினம் இன்றைய 30 ஆம் திகதியன்று என்பதை ஒரு போதும் மறக்க முடியாது. எவர் எதை சொன்னாலும் வடக்கு முஸ்லிம்கள் இந்த கறிய ஒக்டோபரை மூச்சிருக்கும் வரை நினைவு கூறுவது தான் பொருத்தமாகும்.

வடக்கு முஸ்லிம்கள் இந்த 22 வருடங்களில் இழந்தவை ஏராளம்,ஒரு
நாட்டின் பிரஜை என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்களில் மிகவும்பிரதானமானது வாக்குரிமையாகும். இந்த வாக்குரிமைகளை கூட பெற்றுக் கொள்வதில் வடக்கில் வாழும் தமிழ் அரச அதிகாரிகள் செய்த குழிப்பறிப்புக்கள் ஏராளம்.தாம் வாழ்ந்த பூமியிலும் உரிமைகளின்றி,தற்காலிகமாக வாழும் பூமியிலும் உரிமைகளின்றி வாழும் ஒரு நிலையினை தோற்றுவித்த புலிகளும்,புலிகளின் அடிவருடிகளும் தான். இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்று குரல்கள் ஒலித்த போதும்,அதற்கு எதிராக அன்று புலிகளை வைத்து வயிறு வளர்த்தவர்களும்,புலிகளின் அரசியல் வாதிகளும்.,இன்றும் அதே நிலையினை தான் செய்கின்றனர்.முஸ்லிம்கள் என்றால் அவர்களை இன ரீதியான நிந்தனைகளுக்கு உட்படுத்துவதும்,சட்ட அதிகாரங்களை வைத்து சிறை வைப்பதும் போன்ற பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றனர்.
இவற்றுக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைத்து,இந்த நாட்டின் வடக்கில் முஸ்லிம் தமது பூர்வீக பிரதேசங்களில் வாழ வேண்டும் என்பதில் அரசியல் தலைமைகள் துணிவுடன் செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற போதும்,சர்வதேச நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுக்கும் சில மத ரீதியான அமைப்புக்களும்,அதற்கு துணை போகும் அரச சார்பற்ற நிறுவனங்களும் கடு கச்சிதமாக காய் நகர்த்தல்களை செய்கின்றன.
புலிப்பயங்கரவாதிகளினால் பறித்தெடுக்கப்பட்ட சொத்துக்களையும்,உரிமைகளையும் பெற்றுக் கொள்ள முடியாமல் பறிதவிக்கும் வடக்கு முஸ்லிம்கள் ,மீ்ண்டும் தற்போதைய இலங்கையின் அமைதிச் சூழலில் தமது தாயகத்தில் மீள்குடியேற முடியாமல் ஏற்படுத்தப்படும் தடைகளுக்கு எதிராக போராட்டங்களை நடத்த வேண்டியது மாற்று வழிகளில் ஒன்றாகும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அகிம்சை ரீதியானதும், பேச்சு வார்த்தைகளின் மூலமான உரிமைப் போராட்டங்கள் தான் வெற்றியளிக்கும் என்ற கோட்பாடுகளும்,யதார்த்தங்களும் இருப்பினும்,வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு தடையாக இருக்கும் காரணிகள் களையெடுக்கப்பட வேண்டும் என்பது தான் நியாயமாகும்.ஆயுதமின்றி அறிவு ரீதியாக இந்த நகர்வுகள் இன்றைய தினத்திலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும்.

தைரியம் இருந்தால் கட்சியை விட்டு நீக்கிப் பாருங்கள் : தேமுதிகவில் இருந்து தாவிய எம்எல்ஏக்கள் ஆவேசம்!

Tuesday, October 30, 2012
சென்னை::தைரியமும், திராணியும் இருந்தால் கட்சியை விட்டு நீக்கி பாருங்கள்’ என்று அதிருப்தி தேமுதிக எம்எல்ஏக்கள், விஜயகாந்துக்கு சவால் விடுத்துள்ளனர். சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் தேமுதிக எம்எல்ஏக்கள் சுந்தர்ராஜன், மைக்கேல் ராயப்பன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: தொகுதி மக்கள் நலனுக்காக முதல்வரை சந்தித்து பேச, விஜயகாந்திடம் அனுமதி கேட்டோம். ஆனால், அதற்கு அவர் மறுத்துவிட்டார். அதையும் மீறி முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து எங்கள் தொகுதி மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை செய்து தருமாறு கேட்டுள்ளோம். முதல்வரும் ஆவன செய்வதாக கூறியுள்ளார். கட்சியை விட்டு செல்வதாக இருந்தால், முறைப்படி செயல்பட்டிருக்க வேண்டும் என்று எங்களை பற்றி தேமுதிக கொறடா சந்திரகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் அதிமுக கூட்டணியை விட்டு வெளியே வரும் போது, முறையாக சொல்லிவிட்டு, அனைத்தையும் ஒப்படைத்துவிட்டுதான் வந்தாரோ?
விஜயகாந்தால் எங்களுக்கு எம்எல்ஏ பதவி கிடைத்ததாக கூறுகிறார்கள். நாங்கள் இப்போதே ராஜினாமா செய்ய தயார். மற்ற தேமுதிக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து விட்டு, தேர்தலை சந்திக்க தயாரா? நாங்கள் முதல்வரை சந்தித்த பின்பு, எங்களுக்கு கொலை மிரட்டல் வருகிறது. முதல்வர் ஜெயலலிதாவை நாங்கள் சந்தித்தது நாடகம் என்றால், நீங்கள் முதல்வரை சந்திக்க அனுமதி கேட்பது கபட நாடகமா? மேலும், 10 தேமுதிக எம்எல்ஏக்கள் முதல்வரை சந்திக்க காத்திருப்பதாக சொல்வது பற்றி எங்களுக்கு தெரியாது. தைரியமும், திராணியும் இருந்தால் எங்களை கட்சியை விட்டு விஜயகாந்த் நீக்கி பார்க்கட்டும். இவ்வாறு சுந்தர்ராஜன், மைக்கேல் ராயப்பன் ஆகியோர் கூறினர்.

மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்குவதற்கு அரசாங்கம் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுப்பதாக ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளது!

Tuesday, October 30, 2012
இலங்கை::மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்குவதற்கு அரசாங்கம் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுப்பதாக ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளது. சிறுபான்மை மக்களின் எந்தவொரு பிரச்சினைக்கும் அரசாங்கம் தீர்வுகளை வழங்க முனைப்பு காட்டுவதில்லை என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கில் இந்தியா உள்ளிட்ட சில தரப்பினர் பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். சிறுபான்மை மக்களுக்கு சம உரிமைகளை வழங்காது மீண்டும் பயங்கரவாம் தலைதூக்க அரசாங்கம் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற விவகாரங்களிலும் அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டை பின்பற்றி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கத்திற்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பளித்தால் அது நியாயம் எனத் தெரிவிக்கும் அரசாங்கம், விரோதமாக தீர்ப்பளித்தால் அதனை ஏற்றுக்கொள்ள மறுப்பதாக ரில்வின் சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

துப்பாக்கி முனையில் 15 இலட்சம் ரூபா பணம் கொள்ளை!

Tuesday, October 30, 2012
இலங்கை::தலங்கம மாலம்பே நகரில் தனியார் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட 15 இலட்சம் ரூபா பணம் இனந்தெரியாதோரால் இருவரால் கொள்ளையிடப்பட்டுள்ளது.

பத்தரமுல்ல நகரிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையமொன்றின் பணமே கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி இன்று காலை ஒன்பது மணியளவில் பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.