Tuesday, October 30, 2012
இலங்கை::மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்குவதற்கு அரசாங்கம் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுப்பதாக ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளது. சிறுபான்மை மக்களின் எந்தவொரு பிரச்சினைக்கும் அரசாங்கம் தீர்வுகளை வழங்க முனைப்பு காட்டுவதில்லை என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கில் இந்தியா உள்ளிட்ட சில தரப்பினர் பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். சிறுபான்மை மக்களுக்கு சம உரிமைகளை வழங்காது மீண்டும் பயங்கரவாம் தலைதூக்க அரசாங்கம் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற விவகாரங்களிலும் அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டை பின்பற்றி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கத்திற்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பளித்தால் அது நியாயம் எனத் தெரிவிக்கும் அரசாங்கம், விரோதமாக தீர்ப்பளித்தால் அதனை ஏற்றுக்கொள்ள மறுப்பதாக ரில்வின் சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment