Tuesday, October 30, 2012

பாசிச புலிகள் அழிந்து போனாலும்,அதனது அடிவருடிகள் இன்னும் அழியவில்லை:வடமாகாண முஸ்லிம்களின் இனச்சுத்திகரிப்பின் 22 ஆம் வருட நிறைவு நாள் இன்று!

Tuesday, October 30, 2012
இலங்கை::பாசிச புலிகள் அழிந்து போனாலும்,அதனது அடிவருடிகள் இன்னும் அழியவில்லை,வடமாகாண முஸ்லிம்கள களையெடுக்க புறப்பட வேண்டும்.:  தமது மண்ணுக்காக போராடியதாக கூறிய பாசிச புலிகள் இன்று மண்ணோடு மண்ணாக அழிந்து போயுள்ளனர்.
கடந்த மூன்று தசாப்தங்களாக இந்த நாட்டில் ஏற்படுத்திய அழிவுகள் கொஞ்ச நஞ்சமல்ல சொத்துக்களுக்கு மட்டுமல்ல உயிர்களையும் காவு கொள்ளச் செய்து,அங்கவீனத்தையும் பரிசாக கொடுத்த பாசிச புலிகளின் கொடுமைகளால் பாதிக்கப்பட்டு நாதியிழந்து போன வடபுலத்து மக்களின் கண்ணீர் கதைகள் ஏராளம்.குறிப்பாக பாசிச புலிகள் வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்களை ஒட்டுமொத்தமாக விரட்டியடித்த வருடத்தின் மாதம் இன்று தான் ஒக்டோபர் 30,இலங்கையின் வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்களின் வரலாற்று சான்றுகளை நாமும் அறிந்திருக்க வேண்டும்

ஆயுதத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்டு அனைத்தையும் தம் வசம் படைக்கலாம் என்ற நப்பாசைக் கொண்ட பாசிச விடுதலை புலிகளின் நினைவுகளை இறைவன் துவம்சம் செய்தான் அது தான் உண்மை. அநியாயம் செய்யும் மனிதர்களை இறைவன் நீண்ட நாட்களுக்கு விட்டு வைப்பதில்லை,அநியாயம் இழைக்கப்பட்ட ஒரு முஸ்லிம் மன்னை படைத்த இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யும் போது, அநியாயம் இழைத்தவனுக்கு இவ்வுலகிலும், மறு உலகிலும் தண்டனை கிடைக்கும் என்பதில் உறுதியுடன் இருப்பவர்கள் தான் முஸ்லிம்கள்.
நீண்ட நாட்கள் செய்த பிரார்த்தனையின் வெளிப்பாடு பாசிச புலிகளின் கொட்டம் அடக்கப்பட்டு,அவமானப்படுத்தப்பட்டது தான் யதார்த்தமாகும். நாட்கள், மாதங்களாகி,வருடங்களாகி 22 வருட இலங்கையின் வட புல முஸ்லிம்களின் வரலாறு இன்றைய தினத்தின் மீண்டும் மீட்டிப்பாரக்கப்படுகின்றது.

வடக்கில் உயர்ந்த மினாராக்கல், அவைகள் அல்லாஹ்வை சுஜூது செய்யும் புனித தளங்கள்,இஸ்லாமியர்களின் உள்ளத்தில் ஆழ்ந்து பதிந்து போன உயர் மத ஸ்தாபனம் பள்ளிவாசல்கள், வணங்குவதற்கும், வாழ்க்கைக்கு வழிகாட்டுவதற்கும் புனிதத்துவம் போற்றும் மஸ்ஸிதுகள் எத்தனை,எத்தனை , அனைத்தையும் தமது நீர்த்தடாகங்களாக பாசிச புலிகள் பயன்படுத்தினர். மதங்களை இழிவுபடுத்தும் உச்சகட்ட செயற்பாடுகள் அவர்களது குறுகிய கால ஆட்சியில் அரங்கேற்றப்பட்டன. அ்து மட்டுமல்ல. இன்னும் எத்தனையோ கோர வடுக்கள் முஸ்லிம்களது வரலாற்றில் புலிகள் முத்திரை பதித்துள்ளனர்.

ஒரு சமூகம் தாம் வாழ்ந்த பூமியில் இருந்து வெறுங் கையுடன் வெளியேற்றப்பட்டது. வடக்கில் ,எவருக்கும் அநியாயம் கூட செய்வதில் இருந்து ஒதுங்கியிருக்கும் முஸ்லிம்கள், தமிழீழ விடுதலை போராட்டம் வெற்றிக் கொள்ளாது, இது அநியாயக்காரர்களின் திட்டம் என்பதை அறிந்தும்,அவர்களது போராட்டத்தை மழுங்கடிப்புச் செய்யாமல் இருந்த போதும் கூட,உணர்வர்களை மதிக்கத் தெரியாத சடவாத புலிகள்,செய்த அனர்த்தங்கள் எண்ணிலடங்காதவை.
வயோதிபர்கள்,கற்பிணிகள்,குழந்தைகள்,ஏன் பெண்கள் என்று பாராமல் காலக் கெடு வைத்து விரட்டியடித்து வரலாற்று துரோகத்தை முஸ்லிம்களுக்கு செய்தனர். ஒரு சிறுபான்மை புலிச் சார்ந்த தமிழ் சமூகத்தின் விடியலுக்காக தாம் இரண்டரக் கலந்து வாழ்ந்த மற்றுமொரு சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை அழித்து அதன் மீது தமது ஆட்சியை அமைக்க முற்பட்ட போது,அவர்களுக்கு காலாண் கொடுத்தது மரணப்பரிசுகள்.
$
வடக்கில் 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி மன்னார்,வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி,யாழ்ப்பாணம் ஆகிய 5 மாவட்டங்களிலும் வாழ்ந்த பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் இரவென்றும், பகலென்றும் பாராது, உடுத்த உடையுடன், உடைமைகள் பறித்தெடுக்கப்பட்டு, விரட்டியடித்த கொடுமையான தினம் இன்றைய 30 ஆம் திகதியன்று என்பதை ஒரு போதும் மறக்க முடியாது. எவர் எதை சொன்னாலும் வடக்கு முஸ்லிம்கள் இந்த கறிய ஒக்டோபரை மூச்சிருக்கும் வரை நினைவு கூறுவது தான் பொருத்தமாகும்.

வடக்கு முஸ்லிம்கள் இந்த 22 வருடங்களில் இழந்தவை ஏராளம்,ஒரு
நாட்டின் பிரஜை என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்களில் மிகவும்பிரதானமானது வாக்குரிமையாகும். இந்த வாக்குரிமைகளை கூட பெற்றுக் கொள்வதில் வடக்கில் வாழும் தமிழ் அரச அதிகாரிகள் செய்த குழிப்பறிப்புக்கள் ஏராளம்.தாம் வாழ்ந்த பூமியிலும் உரிமைகளின்றி,தற்காலிகமாக வாழும் பூமியிலும் உரிமைகளின்றி வாழும் ஒரு நிலையினை தோற்றுவித்த புலிகளும்,புலிகளின் அடிவருடிகளும் தான். இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்று குரல்கள் ஒலித்த போதும்,அதற்கு எதிராக அன்று புலிகளை வைத்து வயிறு வளர்த்தவர்களும்,புலிகளின் அரசியல் வாதிகளும்.,இன்றும் அதே நிலையினை தான் செய்கின்றனர்.முஸ்லிம்கள் என்றால் அவர்களை இன ரீதியான நிந்தனைகளுக்கு உட்படுத்துவதும்,சட்ட அதிகாரங்களை வைத்து சிறை வைப்பதும் போன்ற பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றனர்.
இவற்றுக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைத்து,இந்த நாட்டின் வடக்கில் முஸ்லிம் தமது பூர்வீக பிரதேசங்களில் வாழ வேண்டும் என்பதில் அரசியல் தலைமைகள் துணிவுடன் செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற போதும்,சர்வதேச நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுக்கும் சில மத ரீதியான அமைப்புக்களும்,அதற்கு துணை போகும் அரச சார்பற்ற நிறுவனங்களும் கடு கச்சிதமாக காய் நகர்த்தல்களை செய்கின்றன.
புலிப்பயங்கரவாதிகளினால் பறித்தெடுக்கப்பட்ட சொத்துக்களையும்,உரிமைகளையும் பெற்றுக் கொள்ள முடியாமல் பறிதவிக்கும் வடக்கு முஸ்லிம்கள் ,மீ்ண்டும் தற்போதைய இலங்கையின் அமைதிச் சூழலில் தமது தாயகத்தில் மீள்குடியேற முடியாமல் ஏற்படுத்தப்படும் தடைகளுக்கு எதிராக போராட்டங்களை நடத்த வேண்டியது மாற்று வழிகளில் ஒன்றாகும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அகிம்சை ரீதியானதும், பேச்சு வார்த்தைகளின் மூலமான உரிமைப் போராட்டங்கள் தான் வெற்றியளிக்கும் என்ற கோட்பாடுகளும்,யதார்த்தங்களும் இருப்பினும்,வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு தடையாக இருக்கும் காரணிகள் களையெடுக்கப்பட வேண்டும் என்பது தான் நியாயமாகும்.ஆயுதமின்றி அறிவு ரீதியாக இந்த நகர்வுகள் இன்றைய தினத்திலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment