இலங்கை::மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்திலுள்ள பல்வேறு துறைசார்ந்தவர்கள் நேற்று திங்கட்கிழமை கல்முனை வலயக் கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் பாராட்டி கௌரவிக்க
ப்பட்டனர்.
அத்துடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ராஜேந்திரன், கல்முனை விகாராதிபதி ரண்முத்துகல சங்கரத்ன தேரர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின்
அம்பாறை மாவட்ட பொறியியலாளர் ஏ.எம். றிஸ்வி, அமைச்சர் பி.தயாரத்னவின் இணைப்பாளர் வீ.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பல பிரமுகர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மலையக கலை கலாசார சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் செயலாளர் வேலுப்பிள்ளை சண்முகநாதன் தலைமையில் இடம்பெற்ற காந்தி ஜனன தின விழாவில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி வைத்தார்.
அம்பாறை மாவட்டத்தில் இலக்கியம், ஊடகம், கல்வி மற்றும் சமூகசேவை ஆகிய துறைகளில் பணியாற்றியவர்களும் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களும் இதன்போது பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.
பிரபல கல்வியியலாளரும் பிரபல ஊடகவியலாளருமான தேசமான்ய விபுலமாமணி. வி.ரி.சகாதேவராஜா சாஹித்ய சாகரம் என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
No comments:
Post a Comment