Sunday, December 2, 2012

தமிழ்ப் பெண்களைத் தரக்குறைவாகப் பேசிய தமிழ்த் தேசியப் (புலி)பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு எதிராக பெண்கள் அமைப்புகள் பல போர்க்கொடி:பகிரங்க மன்னிப்புக் கோரி வாபஸ் பெறாவிடின் கிளிநொச்சியில் முற்றுகைப் போராட்டம் நடத்தப் போவதாக மிரட்டல்!

Sunday, December 02, 2012
இலங்கை::தமிழ்ப் பெண்களை இராணுவத்தில் இணைத்துக் கொள்வது தொடர்பாக தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் உலக வானொலி ஒன்றிற்குத் தெரிவித்த கருத்திற்கு பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும், புத்திஜீவிகளும், பொதுமக்களும் தமது பலத்த கண்டனங்களைத் தெரி வித்துள்ளனர்.
குறிப்பாக இவர் பிரதிநிதித்துவப்படுத்தும் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து பல தமிழ்ப் பெண்கள் இவரது கருத்திற்குத் தமது எதிர்ப்பை நேரடியாகத் தெரிவித்துள்ளனர். பெண் குலத்தினை அவமானப்படுத்தும் விதத்தில் இவர் தெரிவித்த கருத்து இராணுவத்தில் தொழில் நிமித்தம் தாமாக இணைந்து கொண்ட தமிழ்ப் பெண்களை மட்டு மல்லாது மேலும் இணையவுள்ள பெண்களையும் இழிவுபடுத்துவதாக அமைந்துள்ளதாகவும் இவ்வமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
 
பொறுப்பு வாய்ந்த தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினராகவும், சமுதாயத்தை நல்வழிப் படுத்தும் ஆசிரிய சமூகத்தைச் சார்ந்தவருமாக இருந்துகொண்டு இவர் தெரிவித்த கருத்தினால் இராணுவத்தில் இணைந்து கொண்ட குறிப்பிட்ட தமிழ்ப் பெண்கள் சமூகத்தில் முகங்கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமது அரசியல் இருப்பிற்குப் பிரசாரம் தேடுவதற்காக தமிழ்ப் பெண்களின் புனிதத் தன்மைக்கு இவர் களங்கம் ஏற்படுத்தியுள்ளதாகவும், உடனடியாக இவர் தனது கருத்தினை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் பல பெண்கள் அமைப்புக்கள் குரல் கொடுத்துள்ளன.
 
இவர் தனது கருத்தை பகிரங்க மன்னிப்புக் கோரி வாபஸ் பெறாவிட்டால் கிளிநொச்சி நகரில் மாபெரும் சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்தவுள்ளதாகவும் இப்பெண்கள் அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. தற்போது கொழும்பில் தங்கியிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பகிரங்க மன்னிப்புக் கேட்காது கிளிநொச் சிக்கு வருகை தந்தால் அவரது அலுவல கத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தவுள்ளதாகவும் கிளிநொச்சி பெண்கள் அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப் படும் தமிழ்ப்பெண்கள் இராணுவத் தினரின் இச்சைகளுக்குப் பயன்படுத்தப் படலாம் எனும் தரக்குறைவான கருத்துப்பட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உலக வானொலி ஒன்றிற்குப் பேட்டி கொடுத் திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் தமிழ் சிங்கள மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது!

Sunday, December 02, 2012
இலங்கை::சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் தமிழ் சிங்கள மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இந்த மொழிபெயர்ப்பு பிரதிகளை பிரசூரிக்க உள்ளன.
சர்வதேச மனிதாபிமான சட்டங்களின் மிக முக்கியமான சட்டங்கள் இவ்வாறு இரண்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட உள்ளது. இந்த மொழி பெயர்ப்பு பிரதிகள் எதிர்வரும் வாரமளவில் பிரசூரிக்கப்பட உள்ளது.
சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் தொடர்பான தெற்காசிய பிராந்திய நாடுகள் மாநாட்டின் போது இந்தப் பிரதிகள் வெளியிடப்பட உள்ளன.

புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பியனுப்பும் நடவடிக்கை தொடரும் - அவுஸ்திரேலியா!

Sunday, December 02, 2012
அவுஸதிரேலியா::சட்டவிரோதமாக வரும் புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பியனுப்பும் நடவடிக்கை தொடரும் என அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

அண்மைக்காலமாக சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா சென்ற 700ற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த வருடத்தில் மாத்திரம் கடற்பரப்புக்கு ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பியனுப்பும் திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த நாட்டின் குடிவரவுத்துறை அமைச்சர் கிறிஸ் போவன் தெரிவித்துள்ளார்.

உயிரை பணயமாக வைத்து பெருந்தொகை பணத்தை செலவிட்டு அவுஸ்திரேலியாவுக்கு வரும் அனைத்து புகலிடக் கோரிக்கையாளர்களுக்கும் உடனடியாக வீசாக்களோ அல்லது விசேட சலுகைகளோ வழங்கப்படமாட்டாது என அவுஸ்திரேலியா அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது...

அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கையர்கள் தொடர்சியாக நாடுகடத்தப்படுகின்ற போதும், அங்கு அகதி அந்தஸ்த்து கோருவோரின் எண்ணிக்கை குறையவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸதிரேலியா ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரையில் அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்ட 700 பேர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

எனினும் இந்த ஆண்டு 6000 இலங்கையர்கள் அங்கு அகதி அந்தஸ்த்து கோரி சென்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

3000 பேர் வரையில் இலங்கையில் இருந்து செல்லும் போதே கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், தமது அரசாங்கம் இலங்கை அகதிகளை நாடுகடத்தும் நடவடிக்கைகளை கைவிடப் போவதில்லை என்றும் கட்டம் கட்டமாக அவர்கள் நாடுகடத்தப்படுவர் என்றும் அவுஸ்திரேலிய குடிவரவுத் துறை அமைச்சர் கிறிஸ் போவன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் கடந்த வெள்ளிக்கழமை 147 அகதிகளைக் கொண்ட இரண்டு படகுகள் கிறிஸ்மஸ் தீவுப் பகுதியில் மீட்கப்பட்டுள்ளன.

அவர்கள் சுகாதார மற்றும் பாதுகாப்பு பரிசோதனைகளின் பின்னர் கிறிஸ்மஸ் தீவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காங்கோ பகுதியில் விமானம் விழுந்து 32 பேர் பலி!

Sunday, December 02, 2012
பிரேசாவில்லி::காங்கோ நாட்டில் வீடு மீது சரக்கு விமானம் விழுந்து நொறுங்கியதில் 32 பேர் பரிதாபமாக இறந்தனர். ஆப்ரிக்க நாடான காங்கோ நாட்டின் தலைநகர் பிரேசாவில்லியில் நேற்று முன்தினம் கடும் மழை பெய்து கொண்டிருந்தது. இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மாலையில் மேகங்கள் திரண்டு இருள் சூழ்ந்திருந்தது. அப்போது சரக்கு விமானம் ஒன்று பிரேசாவில்லி அருகில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்கியது. திடீரென விமானம் கட்டுப்பாட்டை இழந்து குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதில் 32 பேர் பலியாகி உள்ளனர். பலர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து காங்கோ செஞ்சிலுவை சங்க அதிகாரிகள் கூறுகையில், Ôஇதுவரை 32 பேரின் உடல்களை மீட்டுள்ளோம். மற்றவர்களை மருத்துவமனையில் சேர்த்துள்ளோம்Õ என்று உறுதிப்படுத்தினர். விபத்தில் சிக்கிய விமானம் பாய்ன்டி நோயிர் பகுதியில் இருந்து வந்தது. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

President Mahinda Rajapaksa opens Sri Lanka's 38th National Sports Festival!

Sunday, December 02, 2012
Srilanka::President Mahinda Rajapaksa yesterday ceremonially inaugurated the 38th National Sports Festival at the Sugathadasa Stadium complex in Colombo.
The President said that he was extending his greetings to all athletes who are participating in the Sports Festival representing all the provinces in the country and called on them to promote brotherhood.
Eastern Province's A A Karunawansa set a new Sri Lanka record in the women's pole vault event on the first day of the 38th National Sports Festival held at the Sugathadasa Stadium yesterday.
Nearly 1200 athletes representing all the Provinces, including the North and East are participating in the Sports Festival.
Sports Minister Mahindananda Aluthgamage also participated at the colourful opening ceremony.
The Olympic torch was lit by the Sri Lanka's ace middle-distance runner Jayamini Illeperuma and Javalin thrower Pradeep Nishantha.
Several ministers, parliamentarians, chief ministers of provinces and many other distinguished guests were present.
Ten final events are scheduled for today, the second day of the three-day national games starting with the men's pole vault event at 8.30am.

Sri Lanka

Sri Lanka

யாழ்.பல்கலைக் கழக சம்பவம் தொடர்பில் நியாயமான விசாரணை வேண்டும் - ஜனாதிபதியிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள்!

Sunday, December 02, 2012
இலங்கை::கடந்த 27ம் திகதி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நியாயமான விசாரணை நடாத்த நடவடிக்கை எடுக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கேட்டுள்ளார்.

கடந்தகால அழிவுயுத்தம் காரணமாக எமது மாணவர்களின் கல்விநிலை பாதிக்கப்பட்டு மிகவும் பின்னடைவு கண்டிருந்தது. தற்போது அது படிப்படியாக சீர்செய்யப்பட்டு முன்னேறி வரும் நிலையில், அமைதிச் சூழலில் மேற்கொள்ளப்பட்டு வந்த யாழ்.பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை குழப்பும் செயற்பாடுகள் எதிர்காலத்தில் இனிமேலும் நடக்கக் கூடாது என்பதை அமைச்சர் அவர்கள் ஜனாதிபதி அவர்களுக்கு எடுத்து கூறியிருந்தார்.

எமது மக்களின் பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக தீர்க்கப்பட்டு வரும் நிலையில் அப்பிரச்சினைகள் தீர்க்கப்படக்கூடாது என்பதில் சில விஷமிகள் திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றனர். இல்லாத பிரச்சினைகளை உருவாக்குவதும் தீர்க்கப்பட்டு வரும் பிரச்சினைகளை தீர்க்கப்படாத பிரச்சினைகளாக்குவதும் அவற்றின் மூலம் அரசியல் இலாபம் தேடுவது இந்த சமூக நலன் விரோத சக்திகளின் தொடரும் செயற்பாடுகளாகி உள்ளன.

இவ்வாறான விசமிகளின் தூண்டுதல்கள் காரணமாகவே யாழ்.பல்கலைக்கழகத்திலும் பதற்றநிலை திட்டமிட்டு தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் அதுவும் எமது எதிர்கால சந்ததியினர் அறிவு பெறும் இடத்தில் இத்தகைய செயற்பாடுகளுக்கு தூண்டி எமது மக்களையும் எதிர்கால அறிவு ஜீவிகளையும் கருவறுத்துவரும் இவ்வாறான சமூக நலன் விரோத சக்திகள் தங்களுக்குரிய இடங்களில் தங்களது சொந்தங்களை வைத்து இத்தகைய காரியங்களில் ஈடுபடுவதில்லை என ஜனாதிபதியுடனான சந்திப்பையடுத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

தென் இலங்கை போன்று வட இலங்கை கடற்றொழிலாளர்களும் எவ்வித அழுத்தங்களுமின்றி தொழில் செய்ய வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

தென் இலங்கை போன்று வட இலங்கை கடற்றொழிலாளர்களும் எவ்விதமான இடையூறுகளோ, அழுத்தங்களோ இன்றி சுதந்திரமாகவும், கௌரவமாகவும் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற யாழ்.மாவட்டக் கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போது யாழ்.மாவட்டத்தில் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகள், இடர்பாடுகள் தொடர்பாக அமைச்சர் இதன்போது கவனம் செலுத்தினார்.

இதன்போது குறிப்பாக தொழில் அனுமதி (பாஸ் நடைமுறை), உள்ளூர் மற்றும் வெளியூர் கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய தொழில் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தல், வெளிச்சக் கூடுகள் மற்றும் வெளிச்ச வீடுகளை அமைத்தல், வான் அகழ்வு, இறங்குதுறைமுகங்களை அமைப்பது மற்றும் தொழில் அனுமதிக்கு படைத்தரப்பால் மறுக்கப்பட்டுள்ள பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

அங்கு உரையாற்றிய அமைச்சர் அவர்கள், கடற்றொழில்துறையை மேம்படுத்துவதற்கும், நவீனப்படுத்துவதற்கும் வங்கிகள் ஊடாக இலகு கடன்களை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதிமொழி வழங்கினார்.

அதன்பிரகாரம் கடற்றொழிலாளர் சங்கங்களை ஒன்றிணைத்து நிறுவனம் ஒன்றை அமைக்க வேண்டியதன் அவசியத்தையும் இதன்போது வலியுறுத்தினார்.

அத்துடன் தடைசெய்யப்பட்ட தொழில்துறைகளை தடுத்து நிறுத்துவதற்கு எதிர்வரும் 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், தென் இலங்கை கடற்றொழிலாளர்கள் எவ்விதமான இடையூறுகளும், அழுத்தங்களும் இன்றி எவ்வளவு சுதந்திரமாகவும், கௌரவமாகவும் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனரோ அதேபோன்றுதான் வட இலங்கை கடற்றொழிலாளர்களும் ஈடுபடவேண்டுமென்பதே தமது விருப்பமாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இதன்போது ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்), ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்), யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களப் பணிப்பாளர் கணேசமூர்த்தி, யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் தலைவர் அ.எமிலியாம்பிள்ளை ஆகியோர் உடனிருந்தனர்.