Sunday, December 02, 2012
பிரேசாவில்லி::காங்கோ நாட்டில் வீடு மீது சரக்கு விமானம் விழுந்து நொறுங்கியதில் 32 பேர் பரிதாபமாக இறந்தனர். ஆப்ரிக்க நாடான காங்கோ நாட்டின் தலைநகர் பிரேசாவில்லியில் நேற்று முன்தினம் கடும் மழை பெய்து கொண்டிருந்தது. இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மாலையில் மேகங்கள் திரண்டு இருள் சூழ்ந்திருந்தது. அப்போது சரக்கு விமானம் ஒன்று பிரேசாவில்லி அருகில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்கியது. திடீரென விமானம் கட்டுப்பாட்டை இழந்து குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதில் 32 பேர் பலியாகி உள்ளனர். பலர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து காங்கோ செஞ்சிலுவை சங்க அதிகாரிகள் கூறுகையில், Ôஇதுவரை 32 பேரின் உடல்களை மீட்டுள்ளோம். மற்றவர்களை மருத்துவமனையில் சேர்த்துள்ளோம்Õ என்று உறுதிப்படுத்தினர். விபத்தில் சிக்கிய விமானம் பாய்ன்டி நோயிர் பகுதியில் இருந்து வந்தது. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment