Sunday, December 2, 2012

தமிழ்ப் பெண்களைத் தரக்குறைவாகப் பேசிய தமிழ்த் தேசியப் (புலி)பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு எதிராக பெண்கள் அமைப்புகள் பல போர்க்கொடி:பகிரங்க மன்னிப்புக் கோரி வாபஸ் பெறாவிடின் கிளிநொச்சியில் முற்றுகைப் போராட்டம் நடத்தப் போவதாக மிரட்டல்!

Sunday, December 02, 2012
இலங்கை::தமிழ்ப் பெண்களை இராணுவத்தில் இணைத்துக் கொள்வது தொடர்பாக தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் உலக வானொலி ஒன்றிற்குத் தெரிவித்த கருத்திற்கு பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும், புத்திஜீவிகளும், பொதுமக்களும் தமது பலத்த கண்டனங்களைத் தெரி வித்துள்ளனர்.
குறிப்பாக இவர் பிரதிநிதித்துவப்படுத்தும் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து பல தமிழ்ப் பெண்கள் இவரது கருத்திற்குத் தமது எதிர்ப்பை நேரடியாகத் தெரிவித்துள்ளனர். பெண் குலத்தினை அவமானப்படுத்தும் விதத்தில் இவர் தெரிவித்த கருத்து இராணுவத்தில் தொழில் நிமித்தம் தாமாக இணைந்து கொண்ட தமிழ்ப் பெண்களை மட்டு மல்லாது மேலும் இணையவுள்ள பெண்களையும் இழிவுபடுத்துவதாக அமைந்துள்ளதாகவும் இவ்வமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
 
பொறுப்பு வாய்ந்த தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினராகவும், சமுதாயத்தை நல்வழிப் படுத்தும் ஆசிரிய சமூகத்தைச் சார்ந்தவருமாக இருந்துகொண்டு இவர் தெரிவித்த கருத்தினால் இராணுவத்தில் இணைந்து கொண்ட குறிப்பிட்ட தமிழ்ப் பெண்கள் சமூகத்தில் முகங்கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமது அரசியல் இருப்பிற்குப் பிரசாரம் தேடுவதற்காக தமிழ்ப் பெண்களின் புனிதத் தன்மைக்கு இவர் களங்கம் ஏற்படுத்தியுள்ளதாகவும், உடனடியாக இவர் தனது கருத்தினை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் பல பெண்கள் அமைப்புக்கள் குரல் கொடுத்துள்ளன.
 
இவர் தனது கருத்தை பகிரங்க மன்னிப்புக் கோரி வாபஸ் பெறாவிட்டால் கிளிநொச்சி நகரில் மாபெரும் சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்தவுள்ளதாகவும் இப்பெண்கள் அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. தற்போது கொழும்பில் தங்கியிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பகிரங்க மன்னிப்புக் கேட்காது கிளிநொச் சிக்கு வருகை தந்தால் அவரது அலுவல கத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தவுள்ளதாகவும் கிளிநொச்சி பெண்கள் அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப் படும் தமிழ்ப்பெண்கள் இராணுவத் தினரின் இச்சைகளுக்குப் பயன்படுத்தப் படலாம் எனும் தரக்குறைவான கருத்துப்பட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உலக வானொலி ஒன்றிற்குப் பேட்டி கொடுத் திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment