Sunday, October 23, 2016

ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்க்கும் இத்தாலி!

தேசிய கடனை குறைப்பதற்கான ஐரோப்பிய விதிமுறைகளுக்கு சவால் விடுகின்ற வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்த ஒரு வாரத்திற்கு பிறகு, ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது கடுமையான தாக்குதல் ஒன்றை இத்தாலிய நிதி அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
 
இத்தாலி மீதான நடவடிக்கைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் இன்னும் ஆலோசித்து வருகிறது.
ஆனால், இத்தாலியின் தேசிய கடனில் மிதமான அதிகரிப்பை பிரஸல்ஸ் ஏற்றுகொள்ளவில்லை என்றால், அது ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவுக்கு தொடக்கமாக இருக்கும் என்று பியர் கார்லோ பாதுவான் கூறியிருக்கிறார்.
 
சமீபத்திய நிலநடுக்கத்தின் செலவுகளையும், ஐரோப்பாவிற்கு வந்துள்ள புதிய குடியேறிகள் மற்றும் அகதிகளை ஏற்பதனால் ஏற்படும் செலவுகளையும் இத்தாலி உள்ளடக்க வேண்டியிருப்பதாக, ல ரிப்பபிளிக்கா என்ற செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் பாதுவான் தெரிவித்திருக்கிறார்.
சுவர்கள் கட்டுவதென இன்னொரு வழியை ஹங்கேரி தெரிவு செய்திருப்பதாக அவர் கூறினார்.
 
 

தற்போதைய அரசாங்கம் படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருகிறது: குமார வெல்கம!

Image result for kumara welgama
தற்போதைய அரசாங்கம் படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
 
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தலைமையல் அமைக்கப்படும் கூட்டணிக்கு மக்களின் ஏகோபித்த ஆதரவு கிடைத்து வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
 
புளத்சிங்கள பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய குமார வெல்க, மகிந்த ராஜபக்ச தலைமையிலான புதிய கூட்டணியின் சின்னம் பற்றியும் கருத்து வெளியிட்டுள்ளார்.
 
மேலும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் அண்மையில் தனது தோட்டத்தில் இரண்டு டிப்பெண்டர் வண்டிகளை தேடி சோதனை நடத்திய சம்பவம் தொடர்பாகவும் வெல்கம கருத்து வெளியிட்டுள்ளார்.

Monday, October 17, 2016

சீன விஞ்ஞானிகள் இருவருடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‛ஷெங்ஸோ-11!

சீனா, இரண்டு விஞ்ஞானிகளுடன் ‛ஷெங்ஸோ-11' என்ற ராக்கெட்டை இன்று(அக்., 17) காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. விண்வெளியில் நிரந்தரமான ஆய்வு நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ள
 
சீனா, கடந்த 2013ம் ஆண்டு மூன்று சீன விஞ்ஞானிகளுடன் 'டியாங்காங்-1' என்ற ஆய்வு விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. 15 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து, பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளை நடத்தி முடித்து, வெற்றிகரமாக அவர்கள் பூமிக்கு திரும்பினர்.
 
இந்நிலையில், வடக்கு சீனாவில் உள்ள ஜியோசுவான் செயற்கைக்கோள் ஏவுகணை மையத்திலிருந்து, சென் டாங் மற்றும் ஜின் ஹயெ்பெங்க் என்ற இரு விஞ்ஞானிகளுடன், 'ஷெங்ஸோ-11' ராக்கெட் இன்று வெற்றிகரமான விண்ணில் ஏவப்பட்டது. விண்வெளியில் சுமார் ஒருமாத காலம் தங்கியிருக்கும் இரு விஞ்ஞானிகளும், அங்கு ஆய்வுப்
பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க இராஜினா!

ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக ஊழல் விசாரணை ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
அண்மையில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்ரிபால சி
றிசேன ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உட்பட மூன்று கடற்படை தளபதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டதைக் கண்டிப்பதாகத் தெரிவித்தார்.
 
அந்த ஆணைக்குழு அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைய செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டிய ஜனாதிபதி, இவ்வாறு செயல்பட்டால் அந்த ஆணைக்குழுவிற்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடுமென்றும் என்று எச்சரித்திருந்தார்.
 
இந்த பின்னணியில், ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் பதவியை தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க இராஜினாமா செய்துள்ளார்.

Saturday, October 1, 2016

சிரியாவில் தீவிரவாதிகள் மீது குண்டு வீச்சு 96 குழந்தைகள் பலி; போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ராணுவம் திடீரென குண்டு வீச்சு!

கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடக்கும் சிரியாவில்  கடந்த மாதம்7 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தம்  ஏற்பட்டது. எனவே, அரசு ராணுவமும் கிளர்ச்சியாளர்களும் போரிடாமல் அமைதி காத்தனர்.
 
ஆனால் கடந்த  19-ந் தேதி போர்  நிறுத்த ஒப்பந்தம் மீறல் ஏற்பட்டது. கிளர்ச்சியாளர்கள்  வசம் நீண்ட  நாட்களாக இந்த அலெப்போ   பகுதியை மீட்க ராணுவம் திடீரென குண்டு வீச்சு   நடத்தியது..
அங்கு குண்டு வீச்சு நடத்தப்பட்டது என்பதை விட குண்டு மழை பொ
ழியப்பட்டது என்றே  கூறலாம். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அங்கு 1900  குண்டுகள் வீசப்பட்டன.
இதனால் அலெப்போ மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் வீடுகளும், வானுயர்ந்த கட்டிடங்களும் இடிந்து  தரைமட்டமாயின.  குண்டு வீச்சுக்கு ஆஸ்பத்திரிகளும்,  மின் நிலையங்களும்,  குடிநீர் சப்ளை  நிலையங்களும் தப்பவில்லை.  இவை அனைத்தும் தரைமட்டமாயின.
 
இத்  தாக்குதலில் அலெப்போ நகரில் மட்டும் 320 பேர் பலியாகினர். அவர்களில் 96 குழந்தைகள் அடங்குவர்.இது தவிர  அலெப்போ மாகாணத்தில்  குண்டு வீச்சில் இடிந்து தரை மட்டமான  வீடுகளில்  இடிபாடுகளில் சுமார் 3 லட்சம் பேர் சிக்கியுள்ளனர். அவர்களில்  1 லட்சம் பேர் குழந்தைகள்  அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது

இந்தியாவும், பாகிஸ்தானும் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ளவேண்டும்: ஐ.நா. வேண்டுகோள்!

எல்லையில் இந்தியாவும், பாகிஸ்தானும் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ளவேண்டும் என்று ஐ.நா.வும், அமெரிக்காவும் வற்புறுத்தின.
 
காஷ்மீரில் உரி ராணுவ முகாம் மீது கடந்த 18-ந்தேதி தாக்குதல் நடத்தியதற்கு இந்திய ராணுவம் 28-ந் தேதி. பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து 7 முகாம்களை இந்திய ராணுவம் துவம்சம் செய்தது. இதில் 38  பேர்கள் கொல்லப்பட்டனர்.
 
இதனால் காஷ்மீரில் எல்லையில் உள்ள குப்வாரா, பூஞ்ச் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
 
இதுதொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனின் செய்தித் தொடர்பாளர் ஸ்டிபானே துஜாரிக் கூறியதாவது:-
 
எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நிலவி வரும் பதற்றமான நிலையை ஐ.நா. தொடர்ந்து மிகவும் கவலையுடன் உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தப்படுவதை நாங்கள் அறிவோம். எல்லையில் பதற்றத்தை தணிக்க இந்தியாவும், பாகிஸ்தானும் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ளவேண்டும்.
 
இதேபோல் இரு நாடுகளும் தங்களுக்கு இடையே உள்ள பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் அமைதியான முறையில் தீர்த்துக் கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
 
அமெரிக்க வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், “இரு நாடுகளுமே எல்லையில் அடக்கத்துடன் நடந்து கொள்ளவேண்டும். இந்திய-பாகிஸ்தானிய ராணுவ அதிகாரிகள் எல்லையில் தொடர்பில் இருப்பார்கள் என்று நம்புகிறோம். எல்லையில் பதற்றத்தை தணிப்பதற்கு இதுபோன்ற தொடர்புகள் மிகவும் அவசியம்” என்றார்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை கைது செய்ய வேண்டும் :ஜனாதிபதிக்கு மனு!

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, வவுனியா அரசாங்க அதிபர் ஊடாக ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு மகஜர் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சருக்கு எதிராக வவுனியாவில் நேற்று அணிதிரண்ட பொது பலசேனா உள்ளிட்ட பௌத்த சிங்கள அமைப்புக்கள் ஒன்றிணைந்து குறித்த மகஜரை கையளித்துள்ளன.
 
‘எழுக தமிழ்’ பேரணிக்கு தலைமை தாங்கிய விக்னேஸ்வரன் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும், கலாபோபஸ்வெவ பிரதேசத்தை உள்ளடக்கிய தனிப்பிரதேச செயலக பிரிவு உருவாக்கப்பட வேண்டும், மீள்குடியேறிய சிங்கள மக்களுக்கு மத்திய அரசாங்கம் உதவி வழங்க வேண்டும், வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற முடியாது, விகாரைகளுக்கு
பாதுகாப்பு வழங்கவேண்டும், உள்ளூராட்சி சபை எல்லைகளை சரியாக மேற்கொண்டு தேர்தல் நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
 
நேற்றைய எதிர்ப்பு பேரணியில் சிங்கள ராவய, சிங்கள பெரமுன, பொது பலசேனா, வடக்கை காத்து நாட்டை பாதுகாக்கும் தேசிய இயக்கம், கலாபோபஸ்வெவ மக்கள் உள்ளிட்ட பௌத்த சிங்கள அமைப்புக்கள் என்பன கலந்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.