கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடக்கும் சிரியாவில் கடந்த மாதம்7 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. எனவே, அரசு ராணுவமும் கிளர்ச்சியாளர்களும் போரிடாமல் அமைதி காத்தனர்.
ஆனால் கடந்த 19-ந் தேதி போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல் ஏற்பட்டது. கிளர்ச்சியாளர்கள் வசம் நீண்ட நாட்களாக இந்த அலெப்போ பகுதியை மீட்க ராணுவம் திடீரென குண்டு வீச்சு நடத்தியது..
அங்கு குண்டு வீச்சு நடத்தப்பட்டது என்பதை விட குண்டு மழை பொ
ழியப்பட்டது என்றே கூறலாம். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அங்கு 1900 குண்டுகள் வீசப்பட்டன.
இதனால் அலெப்போ மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் வீடுகளும், வானுயர்ந்த கட்டிடங்களும் இடிந்து தரைமட்டமாயின. குண்டு வீச்சுக்கு ஆஸ்பத்திரிகளும், மின் நிலையங்களும், குடிநீர் சப்ளை நிலையங்களும் தப்பவில்லை. இவை அனைத்தும் தரைமட்டமாயின.
இத் தாக்குதலில் அலெப்போ நகரில் மட்டும் 320 பேர் பலியாகினர். அவர்களில் 96 குழந்தைகள் அடங்குவர்.இது தவிர அலெப்போ மாகாணத்தில் குண்டு வீச்சில் இடிந்து தரை மட்டமான வீடுகளில் இடிபாடுகளில் சுமார் 3 லட்சம் பேர் சிக்கியுள்ளனர். அவர்களில் 1 லட்சம் பேர் குழந்தைகள் அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது
No comments:
Post a Comment