ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க தனது
பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு
இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக ஊழல் விசாரணை ஆணைக்குழு
வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அண்மையில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்ரிபால சி
றிசேன ஊழல் விசாரணை
ஆணைக்குழுவினால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உட்பட
மூன்று கடற்படை தளபதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டதைக்
கண்டிப்பதாகத் தெரிவித்தார்.
அந்த ஆணைக்குழு அரசியல் நிகழ்ச்சி
நிரல்களுக்கு அமைய செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டிய ஜனாதிபதி, இவ்வாறு
செயல்பட்டால் அந்த ஆணைக்குழுவிற்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க
நேரிடுமென்றும் என்று எச்சரித்திருந்தார்.
இந்த பின்னணியில், ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் பதவியை தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க இராஜினாமா செய்துள்ளார்.
No comments:
Post a Comment