தேசிய கடனை குறைப்பதற்கான ஐரோப்பிய விதிமுறைகளுக்கு சவால் விடுகின்ற வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்த ஒரு வாரத்திற்கு பிறகு, ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது கடுமையான தாக்குதல் ஒன்றை இத்தாலிய நிதி அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
இத்தாலி மீதான நடவடிக்கைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் இன்னும் ஆலோசித்து வருகிறது.
ஆனால்,
இத்தாலியின் தேசிய கடனில் மிதமான அதிகரிப்பை பிரஸல்ஸ் ஏற்றுகொள்ளவில்லை
என்றால், அது ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவுக்கு தொடக்கமாக இருக்கும் என்று
பியர் கார்லோ பாதுவான் கூறியிருக்கிறார்.
சமீபத்திய
நிலநடுக்கத்தின் செலவுகளையும், ஐரோப்பாவிற்கு வந்துள்ள புதிய குடியேறிகள்
மற்றும் அகதிகளை ஏற்பதனால் ஏற்படும் செலவுகளையும் இத்தாலி உள்ளடக்க
வேண்டியிருப்பதாக, ல ரிப்பபிளிக்கா என்ற செய்தித்தாளுக்கு அளித்த
பேட்டியில் பாதுவான் தெரிவித்திருக்கிறார்.
சுவர்கள் கட்டுவதென இன்னொரு வழியை ஹங்கேரி தெரிவு செய்திருப்பதாக அவர் கூறினார்.
No comments:
Post a Comment