Sunday, June 30, 2013

தீவிரவாத ஒழிப்பு குறித்து இங்கி. பிரதமர் கேமரூன் ஆப்கனில் பேச்சுவார்த்தை!!

Sunday, June 30, 2013
காபூல்::இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் ஆப்கானிஸ்தான் வந்தார். இங்கு நேட்டோ படையினரையும், அதிபர் கர்சாயையும் சந்தித்து பேசினார்.ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியில் நேட்டோ படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த படையில் இங்கிலாந்து வீரர்களும் ஏராளமானோர் உள்ளனர். இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் 2 நாள் பயணமாக ஆப்கானிஸ்தான் வந்தார். அங்கு அவர் தெற்கு மாகாண பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நேட்டோ படையின் தளபதி நிக் கார்டரை சந்தித்து நிலைமைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்கனில் நடந்து வரும் தீவிரவாத தாக்குதல், தீவிரவாதிகளுடனான அமைதி பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள தடங்கல்கள் குறித்து அதிபர் ஹமித் கர்சாயுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஆப்கனில் இருந்து ஒரு லட்சம் நேட்டோ படைகள் வெளியேற உள்ளன. அதன் பிறகு தீவிரவாத பிரச்னைகளை ஆப்கன் ராணுவம் நேரடியாக எதிர்கொள்ளும். இந்த சூழலில் தீவிரவாதிகளுடன் அமைதி பேச்சு நடத்துவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சு நடத்தினர்.அதன்பின்னர் டேவிட் கேமரூன் பாகிஸ் தான் சென் றார். பாகிஸ்தானில் 2 நாள் தங்கும் கேமரூன், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் ஆப்கன் நிலைமைகள் குறித்து பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று அதிபர் ஆசிப் அலி சர்தாரியை சந்திக்கிறார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட பிரதிநிதியாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்!

Sunday, June 30, 2013
இலங்கை::ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட பிரதிநிதியாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார். எதிர்வரும் 4ம் திகதி அமைச்சர் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
 
இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித் மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரஞ்சன் மாத்தாய் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 13ம் திருத்தச் சட்டம் மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து பேச்சுவார்த்தை நடததப்படவுள்ளது.

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்விற்கு முன்னதாக 19ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்படும்: ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல!

Sunday, June 30, 2013
இலங்கை::பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்விற்கு முன்னதாக 19ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்விற்கு முன்னர் திருத்தச் சட்டம் அமுல்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
 
எதிர்வரும் ஜூலை 9ம் திகதி பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் பணிகள் ஆரம்பமாகும் என குறிப்பிட்டுள்ளார். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக்கொள்வதில் எவ்வித சிக்கல்களும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதாக ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளதாகவும், ஏனைய கட்சி உறுப்பினர்களும் இதற்கு ஆதரவளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 
 

தன்சானியா தார் ஸ் சலாம் நகரில் சர்வதேச ஒத்துழைப்பு மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ!

Sunday, June 30, 2013
இலங்கை::இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தவறானவை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மலேஷிய பிரதமர் நாஜீப் ராஸாக்கிடம் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போது தன்சானியாவிற்கு விஜயம் செய்துள்ள இரு நாட்டு ஜனாதிபதிகளும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
 
இரு தரப்பு விவகாரங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மலேஷிய பிரதமருக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார்.
 
குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நியாயமான மதிப்பீடுகள் செய்யப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
 
 

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸம் இணைந்து செயற்பட திட்டம்!

Sunday, June 30, 2013
இலங்கை::13வது அரசியலமைப்பு திருத்தங்களில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு எதிராக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸஜம் இணைந்து பொது வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
 
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஹசன் அலி ஆகியோரை கோடிட்டு ஆங்கில இதழ் ஒன்றை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதன் அடிப்படையில் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ்.வர்த்தகரிடம் பொலிஸாரைப் பயன்படுத்தி கப்பம் பெற்ற நபர் தொடர்பான விசாரணையினை: யாழில் இருந்து விசேட பொலிஸ் குழு ஒன்று வவுனியா செல்கின்றது!

Sunday, June 30, 2013
இலங்கை::யாழ்.வர்த்தகரிடம் பொலிஸாரைப் பயன்படுத்தி கப்பம் பெற்ற நபர் தொடர்பான விசாரணையினை நடத்துவதற்கான யாழ்ப்பாணப் பொலிஸ் விசேட குழு வவுனியா செல்லவுள்ளதாக யாழ்.பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மொகமட் ஜெப்ரி தெரிவித்துள்ளார்.
 
மேற்படி கப்பம் பெற்ற சம்பவத்தில், பொலிஸ் அதிகாரி பகடைக்காயாக பயன்படுத்தப்பட்டுள்ளாரே தவிர வர்த்தகரிடம் பெறப்பட்ட சம்பவத்திற்கும் பொலிஸ் அதிகாரிக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நேற்றுக் காலை 10.30 மணிக்கு யாழ்.பொலிஸ் நிலையத்தில் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள், யாழ்.நகர்ப் பகுதியில் உள்ள வர்த்தகர் ஒருவரிடம் பொலிஸ் உத்தியோகஸ்தர் என்று அடையாளப்படுத்திக் கொண்ட நபர் ஒருவர் ஈசட் மூலம் கம்பம் பெற்றுள்ளார்.
 
இச் சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் இரண்டு பிரிவாக விசாரணை நடாத்தப்பட்டு வருகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கப்பம் பெற்ற சம்பவம் தொடர்பான விசாரணை எந்தக் கட்டத்தில் உள்ளது.
 
குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளாரா? வர்த்தகரிடம் கப்பம் பெறப்பட்ட சம்பவத்தில் பொலிஸாருக்குத் தொடர்பு உள்ளதா என கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த யாழ்.பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மொகமட் ஜெப்ரி கருத்துத் தெரிவிக்கையில்,
யாழ்.நகரில் வர்த்தகரிடம் கப்பம் பெறப்பட்டது தொடர்பில் இரண்டு பிரிவாக நடாத்தப்பட்டு வந்த விசாரணைகள் தொடர்ந்தும் நடாத்தப்பட்டு வருகின்றது.
இச்சம்பவத்தில் கைத்தொலைபேசியை வர்த்தகரிடம் கொண்டு சென்று கொடுத்ததாகக் கூறப்படும் பொலிஸ் இச்சம்பவத்தில் பகடைக்காயாகப் பயன்படுத்தப்பட்டுள்ளார்.
 
குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தருக்கும் கப்பம் பெற்ற சம்பவத்தில் சம்பந்தம் இல்லை. வவுனியாவில் இருந்து பொலிஸ் பொறுப்பதிகாரி என்று கூறிய நபர் ஒருவர் யாழ்.பொலிஸ் நிலையத்திற்குத் தொடர்பு கொண்டு சம்பவ தினத்தில் யாழ். நகரில் நடமாடும் பொலிஸ் பிரிவில் உள்ள பொலிஸ் அதிகாரியின் கைத் தொலைபேசி இலக்கத்தினை கேட்டுள்ளார்.
இதற்கிணங்க யாழ்.பொலிஸ் நிலையத்தில் உள்ள உத்தியோகஸ்தர்களும் கைத் தொலைபேசி இலக்கத்தினையும் கொடுத்துள்ளனர். இதனைப் பயன்படுத்திக் கொண்ட குறித்த நபர், தான் பெற்றுக் கொண்ட கைத்தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு, தான் பொலிஸ் உயர் அதிகாரி என்று அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்.
 
மேலும் எதிரில் உள்ள வர்த்தக நிலைய உரிமையாளரிடம் தொலைபேசியைக் கையளிக்குமாறு கூறி கப்பம் பெற்றுள்ளார். இதற்கும் கைத்தொலைபேசியினை வர்த்தகரிடம் கொடுத்த பொலிஸாருக்கும் கப்பம் பெற்ற சம்பவத்தில் தொடர்பு இல்லை.
வவுனியாவில் இருந்து தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்திய நபரைக் கண்டுபிடிக்க யாழ்ப்பாணத்தில் இருந்து விசேட பொலிஸ் குழு ஒன்று வவுனியா செல்லவுள்ளது. மிக விரைவில் மேற்படி கப்பம் பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைது செய்யப்படுவார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 

சிறுவர் இல்லங்களில் இருந்து பெற்றோரிடம் இணைக்கப்பட்ட மாணவர்களுக்கு வட மாகாண ஆளுநர் ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி துவிச்சக்கரவண்டிகளை வழங்கினார்!

Sunday, June 30, 2013
இலங்கை::வடமாகாண சிறுவர் நன்நடத்தை பராமரிப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் யுனிசெப் நிறுவனத்தின் நிதியுதவியுடன் சிறுவர் இல்லங்களில் இருந்து பெற்றோரிடம் இணைக்கப்பட்ட மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு 29 யூன் 2013 அன்று நடைபெற்றது.
வடமாகாண சிறுவர் நன்நடத்தை பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளர் எஸ். விஸ்வரூபன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி பிரதம அதிதியாக கலந்து கொண்டு துவிச்சக்கரவண்டிகளை வழங்கினார்.
முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த யுத்தத்தினாலும் குடும்ப வறுமையினாலும் சிறுவர் இல்லங்களில் வாழ்ந்து  பின் பெற்றோரிடம் இணைத்துக்கொள்ளப்பட்ட 150 மாணவர்களுக்கு இந்த துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன.
யாழ் மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ், ஆளுநரின் செயலாளர் திரு.இ.இளங்கோவன், கல்வி அமைச்சின் செயலாளர் திரு.சி.சத்தியசீலன், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு.ஆர்.வரதீஸ்வரன் மற்றும் உயர் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
 

இந்து மகளீர் கல்லூரியில் வடமாகாண தமிழ் மொழித் தின விழா: பிரதமவிருந்தினராக வடமாகாண ஆளுநர் ஜி.எ சந்திரசிறி!

Sunday, June 30, 2013
இலங்கை::வடமாகாண தமிழ் மொழித் தின விழா நேற்று பிற்பகல் 3 மணியளவில் யாழ்ப்பாணம் இந்து மகளீர் கல்லூரி மண்டபத்தில் மாகாண கல்விப் பணிப்பாளர் வ.செல்வராசா தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதமவிருந்தினராக வடமாகாண ஆளுநர் ஜி.எ சந்திரசிறி கலந்துகொண்டு வடமாகன தமிழ்த்தினப் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கு சான்றுதல்களை வழங்கி கௌரவித்தார்.
 
அத்துடன் கவின் மலர் என்னும் நூலினையும் பிரதம விருந்தினர் வெளியீட்டு வைக்க யாழ் பல்கலைக்கழக தமிழ்த் துறைத் தலைவர் கி.விசாகரூபன் பெற்றுக்கொண்டார் மேலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
 
இவ் விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வடமாகாண ஆளுநர் உரையாற்றுகையில்:-
வடமாகணத்தில் தமிழ்மொழித் தின போட்டியில் சிறந்த முறையில் எமது மாணவர்கள் வெற்றியீட்டியுள்ளதுடன் குறிப்பாக கிளிநொச்சி மாவட்த்தில் அதிகளவான மாணவர்கள் வெற்றியீட்டியுள்ளதை இட்டு மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் தெரிவித்தார்
 
அத்துடன் இந்த ஆண்டு இறுதிக்குள் திறமையான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை தெரிவுசெய்து புலமைப் பரிசிலுக்காக இந்தியாவுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளையும் முன்னெடுத்து வருவதாகவும்,
வடமாகாணத்தில் அண்மையில் சிறந்த குறும்படங்களுக்கான விருதுகளையும் வழங்கி இருந்தோம் அத்துடன் குறும்படத்துக்கான சிறந்த தயாரிப்பாளர், நடிகர்கள் மற்றும் இசையமைப்பாளர்களுக்கன விருதுகளைம் வழங்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
 
மேலும் இந் நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன், வடமாகாண பிரதம செயலாளர் திருமதி. விஜயலட்சுமி, ஆளுனரின் செயலாளர் இளங்கோவன் மற்றும் பேராசிரியர்கள்,பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
 

எம்.எல்.ஏக்கள் 7 பேரை சஸ்பெண்ட் செய்தார் விஜயகாந்த்!


Sunday, June 30, 2013
சென்னை::தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 7 பேரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி கட்சித்தலைவர் விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார். அண்மையில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில், கொறடா உத்தரவை மீறி அவர்கள் வாக்களித்தது தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. தே.மு.தி.க.வில் இருந்த 29 எம்.எல்.ஏ.க்களில் மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ. சுந்தர்ராஜன், பேராவூரணி எம்.எல்.ஏ. அருண்பாண்டியன், திட்டக்குடி எம்.எல்.ஏ. தமிழழகன், ராதாபுரம் எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன், செங்கம் தொகுதி எம்.எல்.ஏ. சுரேஷ்குமார் ஆகிய 5 பேர் கடந்த 5 மாதத்திற்கு முன்பு கோட்டைக்கு சென்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தனர். இவர்களைத் தொடர்ந்து சேர்ந்தமங்கலம் தொகுதி பெண் எம்.எல்.ஏ. சாந்தி ராஜமாணிக்கம், விருதுநகர் தொகுதியின் தேமுதிக எம்.எல்.ஏ மாடிபா பாண்டியராஜன் ஆகியோர் முதல்வரை சந்தித்து மனு கொடுத்தனர். தொகுதி வளர்ச்சி தொடர்பாகவே முதல்வரைச் சந்தித்து பேசியதாக அவர்கள் தெரிவித்தனர். சட்டசபைலும் தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்களை அவர்கள் வாபார புகழ்ந்தனர். தமிழகத்தை முன்னேடி மாநிலமாக்க முதல்வர் ஜெயலலிதா எடுத்து வரும் நடவடிக்கையும் அவர்கள் பாராட்டினர்.
 
அப்போது முதலே இவர்கள் அதிமுகவின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களாகவே கருதப்பட்டனர். இருப்பினும் அவர்களை கட்சியை விட்டு நீக்காமலேயே வைத்திருந்தார் விஜயகாந்த். மாநிலங்களவை தேர்தலில் தேமுதிகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று கட்சி எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் அக்கட்சித்தலைவர் விஜயகாந்த் கடிதம் எழுதினார். அதனை மதிக்காமல் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 7 பேரும் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்தனர். 
இதனையடுத்து கட்சி உத்தரவை மீறிய குற்றத்திற்காக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 7 பேரை சஸ்பெண்ட் செய்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார். அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
 
 

59 ஆண்டுகளுக்குப் பிறகு உச்சநீதிமன்ற நீதிபதியாகும் தமிழர்!

Sunday, June 30, 2013
சென்னை::59 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தை சேர்ந்த ஒருவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார். நீதிபதி சதாசிவத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஜூலை 19ஆம் தேதி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
 
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த சதாசிவம் நியமிக்கப்பட்டுள்ளார்.தற்போது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள அல்டமாஸ் கபீரின் பதவிக் காலம் ஜூலை 19ம் தேதியுடன் முடிவடைவதையொட்டி, அடுத்த புதிய தலைமை நீதிபதியாக சதாசிவத்தை நியமித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உத்தரவிட்டுள்ளார். 
 
இதற்கான அரசு அணை வெள்ளிக்கிழமை மாலை வெளியானது.
இதையடுத்து, தமிழகத்தைச் சேர்ந்த சதாசிவம், வரும் ஜூலை 19ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளார்.
சுமார் 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
உச்ச நீதிமன்றத்தில் இதற்கு முன்னர் 1951 - 1954 காலகட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த எம்.பதஞ்சலி சாஸ்திரி தலைமை நீதிபதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
உச்ச நீதிமன்றத்தின் 40வது தலைமை நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்த சதாசிவம் நியமிக்கப்பட்டுள்ளார். 
 
ஈரோடு மாவட்டம் பவானி தாலுகா, கடப்பனல்லூர் கிராமத்தில் விவசாயக்குடும்பத்தில் 1949 ஏப்ரல் 27ல் பிறந்தவர் சதாசிவம். 1973ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியை தொடங்கினார்.
1996ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார். 2007ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக அவர் பொறுப்பேற்றக உள்ளார்.
 
 
 

அமெரிக்க ரைம்ஸ் சங்சிகைக்கு இலங்கையில் தடை!

Sunday, June 30, 2013
இலங்கை::அமெரிக்க ரைம்ஸ் சஞ்சிகையின் ஜூலை மாதம் வெளியீட்டை இலங்கை சுங்க அதிகாரிகளால் தடை செய்துள்ளனர்.
இந்த இதழில் “பௌத்த பயங்கரவாதத்தின் முகம்” என்ற கட்டுரை பிரசுரமனதை அடுத்தே இந்
த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ரைம்ஸ் சஞ்சிகையின் ஜுலை மாத வெளியீடு விமான நிலைய சுங்க அதிகாரிகளால் முடக்கப்பட்டது.
இந்த கட்டுரை தம்மால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாக சுங்க திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார்.
அந்த கட்டுரையில் பொதுபல சேனா அமைப்பை கடுங்கோப்பு அமைப்பாக அந்த கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

தலைமன்னார் கடற்பரப்பில் தத்தளித்துக்கொண்டிருந்த நான்கு இந்திய மீனவர்களை காப்பாற்றிய இலங்கை கடற்படை!

Sunday, June 30, 2013
இலங்கை::தலைமன்னார் கடற்பரப்பில் தத்தளித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் சிலரை கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர்.
 
தலைமன்னாருக்கு சுமார் 10 கட
ல் மைல் தொலைவில் இவர்கள் பயணித்த படகு இயந்திர கோளாறு ஏற்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக கடற்படை பதில் பேச்சாளார் லெப்டினன் கொமாண்டர் ஜானக்க குணவர்தன தெரிவித்துள்ளார்.
 
இந்த படகில் இருந்த மீனவர்கள் நால்வர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இயந்திர கோளாறு ஏற்பட்ட படகு தற்போது தலைமன்னார் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
 
காப்பாற்றப்பட்ட இந்திய மீனவர்கள் தமது பாதுகாப்பில் இருப்பதாக கடற்படை தெரிவித்துள்ளது.ந்த விடயத்தை இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு அறிவித்துள்ளதாகவும் கடற்படை பதில் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Saturday, June 29, 2013

தேசிய பாதுகாப்பு தொடர்பான தகவல்களை பெறும் சட்டவிரோத முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, சம்பந்தப்பட்ட தொலைபேசி நிறுவனத்திடம் முறைப்பாடு!

Saturday, June 29, 2013
இலங்கை::தனது கையடக்க தொலைபேசி உரையாடல்கள் செவிமடுக்கும் திட்டமிட்ட சிலர் தேசிய பாதுகாப்பு தொடர்பான தகவல்களை பெறும் சட்டவிரோத முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, சம்பந்தப்பட்ட
தொலைபேசி நிறுவனத்திடம் முறைப்பாடு செய்துள்ளார்.
 
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசேட விசாரணைகளில் வெளிநாட்டு தூதரகம் ஒன்றும் வெளிநாட்டு புலனாய்வு சேவை ஒன்றும் இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
 
பாதுகாப்புச் செயலாளரை தவிர மேலும் முக்கிய நபர்கள் பலரின் தொலைபேசி உரையாடல்களையும் இவர்கள் செவிமடுத்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்கு தேவையான கருவிகளை அவர்களிடம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட தொலைபேசி நிறுவனமும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 
 
 

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் அணிகளை ஏற்படுத்தும் நடவடிக்கையில்!

Saturday, June 29, 2013
இலங்கை::முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் அணிகளை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால், அவருக்கு எதிராக உடனடியாக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட வேண்டும் என அந்த கட்சியின் அமைச்சர்கள் சிலர், ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 13வது அரசியல் அமைப்புத் திருத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டை வெளியிட்டிருக்கும் சந்தர்ப்பத்தில், கட்சியின் ஆலோசகரான சந்திரிகா, அந்த நிலைப்பாட்டுக்கு புறப்பான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். அந்த அறிக்கைகளை ஆராய்ந்து பார்க்க அமைச்சர்கள் சிலர் நியமிக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.
 
அதேபோல் முன்னாள் ஜனாதிபதியை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் ரகசியமான முறையில் சந்தித்து வருவதாகவும் அது கட்சியின் எதிர்காலத்தை நேரடியாக பாதிக்கும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 
 

13ஆவது அரசியலமைப்பு திருத்தம தொடர்பான பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பதில்லை: தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பு!

Saturday, June 29, 2013
இலங்கை::தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பு பிரதிநிதிகள் கொழும்பில் சந்திப்பு- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்றுமாலை 5மணியளவில் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
 
தமிழரசுக் கட்சி சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், சுமந்திரன், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன், சர்வேஸ்வரன், ரெலோ சார்பில் சிறீகாந்தா, ஹென்ரி மகேந்திரன், பிரசன்னா, புளொட் சார்பில் அதன் தலைவர் த.சித்தார்த்தன் மற்றும் பத்மநாதன் ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
 
இதன்போது 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக விவாதிப்பதற்கென அண்மையில் நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், மேற்படி தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்குகொள்வதில்லையென முடிவெடுக்கப்பட்டது.
 
இது சம்பந்தமாக விரிவான ஓர் அறிக்கையினை விரைவில் வெளியிடுவதென்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் அடுத்தவாரம் கூடிப் பேசுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.