இலங்கை::முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் அணிகளை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால், அவருக்கு எதிராக உடனடியாக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட வேண்டும் என அந்த கட்சியின் அமைச்சர்கள் சிலர், ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 13வது அரசியல் அமைப்புத் திருத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டை வெளியிட்டிருக்கும் சந்தர்ப்பத்தில், கட்சியின் ஆலோசகரான சந்திரிகா, அந்த நிலைப்பாட்டுக்கு புறப்பான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். அந்த அறிக்கைகளை ஆராய்ந்து பார்க்க அமைச்சர்கள் சிலர் நியமிக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.
அதேபோல் முன்னாள் ஜனாதிபதியை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் ரகசியமான முறையில் சந்தித்து வருவதாகவும் அது கட்சியின் எதிர்காலத்தை நேரடியாக பாதிக்கும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
No comments:
Post a Comment