Saturday, June 29, 2013

13ஆவது அரசியலமைப்பு திருத்தம தொடர்பான பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பதில்லை: தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பு!

Saturday, June 29, 2013
இலங்கை::தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பு பிரதிநிதிகள் கொழும்பில் சந்திப்பு- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்றுமாலை 5மணியளவில் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
 
தமிழரசுக் கட்சி சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், சுமந்திரன், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன், சர்வேஸ்வரன், ரெலோ சார்பில் சிறீகாந்தா, ஹென்ரி மகேந்திரன், பிரசன்னா, புளொட் சார்பில் அதன் தலைவர் த.சித்தார்த்தன் மற்றும் பத்மநாதன் ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
 
இதன்போது 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக விவாதிப்பதற்கென அண்மையில் நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், மேற்படி தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்குகொள்வதில்லையென முடிவெடுக்கப்பட்டது.
 
இது சம்பந்தமாக விரிவான ஓர் அறிக்கையினை விரைவில் வெளியிடுவதென்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் அடுத்தவாரம் கூடிப் பேசுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

No comments:

Post a Comment